27 ஆம் தேதி சென்னை பதிவர் சந்திப்புக்கான நிகழ்ச்சி நிரல்
பதிவர் சந்திப்பு அழைப்பிதழ்
நாள் : டிசம்பர் 27, சனிக்கிழமை
இடம் : நடேசன் பூங்கா, தியாகராய நகர்
மாலை 5 மணி
கலந்து கொள்பவர்களுக் கிடையேயான பரஸ்பர கும்மாங்குத்துகள்
மாலை 5.15மணி
மணமான ஆண்களுக்கு ஏற்படும் மன உளைச்சல்கள் – அதற்க்கான நடைமுறை சாத்தியமான தீர்வு குறித்த விவாதம் நடைபெறும். விவாதத்தை தாமிரா தன் தங்கமணியின் துணையுடன் தைரியமாய் துவக்கி வைக்க பதிவர்களுக்கு இடையே துக்கயுரையாடல் நடைபெறும். டோண்டு ராகவன்,முரளிகண்ணன், கேபிள் சங்கர்,(யாருய்யா என்னை கேட்கமா பேரெல்லாம் போட்டது) அத்திரி போன்ற அனுபவசாலிகள் விவாதத்தில் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார்கள். திருமணமாகாமல் இருக்கும் அனுபவசாலிகளும் கலந்து கொள்ளலாம்.
மாலை 5.45மணி
வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் எந்த மாதிரியான கூட்டணிகள் அமைய வாய்ப்புள்ளது?. அக்கூட்டணிகளின் பலம்/பலவீனம், அமையப் போகும் புது அரசில் தமிழ்நாடு பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்கு என்ன? என்பது பற்றிய கலந்துரையாடல். பாலபாரதி,லக்கிலுக், ஜியோவ்ராம் சுந்தர் மற்றும் பல பதிவர்கள் விவாதத்தில் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார்கள் அதனால் நடுவே தம் அடிக்க போகிறவர்கள் போகலாம்
இரவு 7.00 மணி
ஏதாவதுசெய்யனும் பாஸு என சமூகத்திற்க்கு பதிவர்களின் பங்களிப்பு பற்றிய விவாதத்தையும், சந்திப்பில் கலந்து கொள்பவர்களுக்கு நாம எதாவது செய்யணும் என்று நர்சிம் தொடங்கி வைத்து எதையாவத் செய்ய ஸ்பான்சர் செய்வார்.
இரவு 7.30 மணி
ஆங்கில,தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களையும், பொங்கல் வாழ்த்துக்களையும் பரிமாறிக்கொள்ளல்.
இரவு 7.45 மணி
பூங்கா அருகில் உள்ள தேநீர்க்கடையில் பிஸ்கட்,தேநீர் அருந்தும் வைபவம். பின்னர் அதிஷா,அக்னிபார்வை,ஸ்ரீ போன்ற துடிப்பான பதிவர்கள் ஆரம்பித்து வைக்கும் நியூ இயர் “where is the party" கொலைவெறியுடன் ஆரம்பிக்க படும்
இரவு 8.30 மணி
முக்கியமான நிகழ்வுகள்
லக்கிலுக் தன்னுடய புத்தக வெளீயீட்டினையொட்டி மிகப்பெரிய பார்ட்டி கொடுப்பதாய் உள்ளார்.. அவரின் புத்தகத்தை வாங்குபவர்களுக்கே முன்னுரிமை வழங்கபடும்..
க்டோசி பதிவர் சந்திப்புக்கு எல்லாரும் வாங்க.. வந்து கும்மியடிச்சிட்டு போங்க..
இது முழுவதும் முரளிகண்ணனின் பதிவிலிருந்து சுட்டு எடிட் செய்யபட்டது.. ஒரிஜினல் முரளிகண்ணனின் பதிவை படிக்க.. இங்கே அமுக்கவும்
உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Post a Comment
8 comments:
நான் ஒரு புது பதிவர்.இது அறிமுகமானோருக்கான சந்திப்பா? இல்லை என் போன்றோரும் கலந்து கொள்ளலாமா?
அண்ணாச்சி ... எதுவா இருந்தாலும் பேசித்தீர்த்துருக்கலாம்ல ஏன் இந்த கொலை வெறி என் மேல
//நான் ஒரு புது பதிவர்.இது அறிமுகமானோருக்கான சந்திப்பா? இல்லை என் போன்றோரும் கலந்து கொள்ளலாமா?//
அப்படியெல்லாம் ஒன்றுமில்லை சாமகோடங்கி.. புதிய பதிவர்களூக்கும் கலந்து கொள்ளலாம்.. கண்டிப்பாக உங்களை எதிர்பார்க்கிறேன்.
//அண்ணாச்சி ... எதுவா இருந்தாலும் பேசித்தீர்த்துருக்கலாம்ல ஏன் இந்த கொலை வெறி என் மேல//
எதோ என்னால முடிஞ்சது.. ஹி..ஹி..ஹீ
சங்கர் அண்ணே மதுரையிலுருந்த்து நானும் கலந்து கொள்கிறேன்.
அன்புடன்
காவேரி கணேஷ்
மதுரைலிருந்தேவா..???
சந்திப்பு முடிந்து 2 நாள் ஆகி விட்டது
எங்கப்பா ...
ஏமாத்திபுட்டாங்க.. அண்ணே.. ஏமாத்திபுட்டாங்க.. பார்ட்டி, பார்ட்டின்னாங்க.. டீ பார்ட்டின்னு சொல்லலையே..
Post a Comment