சாமிடா.. பேப்பரில் வந்த விளம்பரங்களை பார்த்து, ஏதோ காசியில் முழுக்க, முழுக்க, எடுத்த படம் என்கிறார்களே.. வித்யாசமான கதை இருக்கும் என்று எதிர்பார்த்து போகும் ரசிக கண்மணிகளூக்கு ஓர் எச்சரிக்கை. இது சாதாரண ரவுடி கேங்வார் கதை. அதற்கு தேவையில்லாமல் காசி சாயம் பூசியிருக்கிறார்கள்.
படம் ஆரம்பத்தில் ஓரு மகா குண்டு அம்மா ஒருவரை சிறையிலிருந்து விடுதலை செய்கிறார்கள் வாரணாசி ஜெயிலிலிருந்து.. அங்கிருந்து ஆரம்பிக்கிறது ப்ளாஷ்பேக்.. 12 வயதான பெண், சிகப்புவிளக்கு ஏரியா, விபசாரம், நாயக்கருக்கு பதிலாய் முதலியாரின் பையன், எதிர் கும்பலின் சதி, அதனால் கணவன் மரணம், வழியில் தமிழ் சிறுவனை பார்த்து அவனை மகனாய் ஏற்று கொள்வது, அவன் வளர்ந்து வலது கரமாவது.. என்று ஏற்கனவே நாயகன் படத்தில் பார்த்த காட்சிகளை.. சுறுக்கி ஓரு ஓப்பனிங். அதற்கு அப்புறம் வழக்கமான ரவுடி, அவனின் காதல், ரவுடியிஸத்தை விட சொல்வது, என்று எல்லாமே வழக்கமாய். வித்யாசமாய் க்ளைமாக்ஸ் வைக்கிறேன் பேர்விழி என்று தேவையேயில்லாமல் செட் போட்ட மலைக் கோயிலிலிருந்து கதாநாயகி குதித்து தற்கொலை.. எதற்காக.. ?
படத்தின் ஹீரோ அறிமுகம் செம்பி என்று போடுகிறார்கள்.. ஆனால் இவர் பல தமிழ் சினிமாவில் போலீஸாய், ரவுடியாய், என்று பல கேரக்டர்களில் நடித்தவர்.. இவர் பெயர் பாண்டி ரவி.. ரவியின் நடிப்பில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்த போது கூட இருந்தளவுக்கு கூட, இதில் சொல்லி கொள்ளும்படியாய் இல்லை.. பாவம் கடைசி காட்சிகளில் எங்கேயிருந்தும் குதிக்காதவர் எதற்கு சேது போல் நடக்க வேண்டும்? கதாநாயகி தனுஷ்யா.. சில இடங்களில் மிக அழகாகவும், இன்னும் சில இடங்களில் மிக அழகாகவும், சிற்சில இடங்களில் பய்முறுத்துபவராகவும்.. இருக்கிறார். அப்புறம் அந்த குண்டு அம்மா..
படத்தில் பாராட்டபட வேண்டிய ஓரு நபர் ஒளிப்பதிவாள்ர் ஸ்ரீ..ஸ்ரீனிவாசரெட்டி. வித்யாசமான ஆங்கிள்களில் மனிதர் புகுந்து விளையாடியிருக்கிறார்.அதிலும் காசி தெருக்களில் அவரின் கேமரா புகுந்து வெளிவரும் வேகமிருக்கிறதே. சூப்பர்.. ஆனால் டைரக்டர் ஷாட் வைக்கிறேன் பேர்விழி என்று ’எக்ஸ்ப்ரஸ் வேக’ ஸ்லோவாய் ஒவ்வொருவரும் ரெண்டு செகண்ட் கழித்தே,ரியாக்ஷன் செய்வதும், படு அபத்தமான ரியாக்ஷன்களூம் நம்மை ரொம்பவே வெறுப்பேற்றுகிறது.
படத்தில் காமெடிக்கு குறைவேயில்லை.. முழுக்க, முழுக்க காசியிலேயே எடுக்கபட்ட இந்த கதையில் வரும் எல்லோரும் கொஞ்சம் கூட இந்தி கலப்பில்லாமல் தமிழ் பேசி வளையவருகிரார்கள். ரவுடி, அரசியவாதி, வியாபாரி, எதிர்கேங்க், கமிசனர், போலீஸ் என்று.. ஓரே காமெடி போங்கள். பாடல்கள் சொதப்பல் ரகம்.
இந்த படம் முன்பு ஆலயம் என்ற பேரில் எடுக்கபட்டது.. திடீரென்று பேர் மாற்றி சாமிடா என்று வைத்திருக்கிறார்கள். சாமியை ‘டா’ போட்டதாலோ என்னவோ, சாமி கண்ணை குத்திவிட்டது.. பார்த்த நம் கண்களை..
படித்ததில் பிடித்தது
ராட்டடூயி- சிறுகதை..
“ஏய்…கண்ணு !!, இங்க வா, லைட்ட போடு. எலி மாதிரி தெரியுது”, லெதர் சோபாவின் ஒரு பக்கத்தைப் பிடித்துக் கொண்டே சொன்னான் கார்த்தி.
“எலியா?….”, கேட்டுக் கொண்டே கையில் கரண்டியோடு வந்தவள், கார்த்தி லிவ்விங் ரூம் சோபாவின் பின்னால் எட்டிப் பார்ப்பதைப் பார்த்து பயந்து போய் நின்று விட்டாள் தாரிணி.
“ஆமாம்மா, லைட்ட போடேடடடன்….சத்தம் போட வக்கிறடி நீ. இன்னும் எலியான்னு கன்ஃபர்ம் பண்ணல. அதைப் போட்டுட்டு சோபாவை அந்த பக்கம் புடி.”
“ஒரு நிமிஷம்…ஸ்டவ்ல ரசம் வைச்சிருக்கேன். தோ..இறக்கி வெச்சுட்டு வரேன்”, லைட்டைப் போட்டுக் கொண்டே சொன்னாள்.
சமயோசிதமாக, அவன் பக்கத்தில் இருந்த பால்கனி(patio) கதவையும், அதன் பின் இருந்த வயர் கதவையும் திறந்து வைத்தான். குளிர்க் காற்று சுளீர் என்று உள்ளே நுழைந்தது. லுங்கியை மடித்துக் கட்டிக் கொண்டான்.
மேலும் படிக்க இங்கே அழுத்தவும்
Post a Comment
3 comments:
ரொம்ப மரியாதையான படம்
எலியான்னு கன்ஃபர்ம் பண்ணல.
உள்குத்து..............
//ரொம்ப மரியாதையான படம்//
;);):)
//எலியான்னு கன்ஃபர்ம் பண்ணல.//
அத அந்த கதை ஆசிரியரை தான் கேட்கணும்
Post a Comment