சாருவின் பேரை சொன்னாலே பல பேருக்கு கோபம் வருகிறது.. வக்கிரம் பிடித்தவன், ஆபாசமாய் எழுதுபவன், திமிர் பிடித்தவன் என்று பல பேர் பல விதமாய் கூறுகிறார்கள்..
எனக்கு சாருவை கோணல் பக்கங்கள் மூலமாய்தான் அறிமுகம். பல முறை புத்தக கண்காட்சிகளில் அவரது 0 டிகிரி நாவலை வாங்க எடுத்து வைத்து பின்பு ஏனோ வைத்துவிட்டு வந்திருக்கிறேன். அதன் பிறகு அவரது இணைய பக்கத்தின் மூலம் தொடர்ந்தேன்.
சமீபத்தில்தான் அவரது ராஸ்லீலா புத்தகம் என்னுடய நண்பர் ராஜ் மூலமாய் கிடைத்தது. இதுவரை நாவல் என்ற ஓரு கட்டத்துக்குள் எழுதப்பட்ட பல விஷயங்களை கட்டுடைத்திருக்கிறார். சாரு..
கண்ணாயிரம் பெருமாள் என்கிற கேரக்டர் மூலமாய் ஓரு மனிதனின் வாழ்க்கையில் அவன் காணும், அனுபவிக்கும் பல விஷயங்களின் தொகுப்பை நீங்கள் நாவல் என்று எடுத்து கொள்ள மாட்டீர்கள் என்றால், கட்டுரை தொட்ராய் எடுத்து கொள்ளுங்கள்.. ஒரு முறை படிக்க ஆரம்பித்தால் நிறுத்த மாட்டீர்கள்..
உலகத்தில் மிக போதையான விஷயம் எதுவென்று தெரியுமா..? குடி, சிகரெட், பெண், அபின், கஞ்சா, இன்னும் எத்தனையோ.. அதையெல்லாம் விட போதையானது சாருவின் “ராஸலீலா”. கட்ந்த ஓரு வாரமாய் 655 பக்க நாவலை, நானும் எனது நண்பரும் விடாமல் போட்டி போட்டு கொண்டு எங்கள் அலுவலகத்தில் உட்கார்ந்து படித்து முடித்தோம்.. ராஜ போதை.
போதை என்று வந்த பிறகு நல்லது, கெட்டது என்று பாகுபடுத்த முடியாது. அதுபோலத்தான் சாருவின் எழுத்தும், சிலபல இடங்களில் ‘சரோஜாதேவியை’ மிஞ்சும் பக்கங்கள், இன்னும் சில இடங்களில் கொஞ்சம் அருவருப்பும் தரக்கூடிய விஷயங்கள் இருந்தாலும், பல இடங்களில் ஒரு அருமையான நண்பனை போல நம் கூடவே பேசிக் கொண்டிருக்கிறார்.
வாழ்வில் வெகு ஜனங்கள் அவ்வளவாக சந்திக்காத, அல்லது கவனிக்காத மனிதர்கள், வித்யாசமான கேரக்டர்கள், பெங்குலா, மணி, திவ்யா, பெளசியா, என்று உணர்வுகளின் உச்சபட்சமான கேரக்டர்கள்.
அவர் லா மெரிடியன், பாஷா, போன்ற பார்கள், டிஸ்கோ,தாய்லாந்து பற்றி எழுதியிருக்கும் விஷயங்களை,அங்கே சென்றவர்களிடம் கேட்டு பாருங்கள் அவரின் எழுத்தின் உண்மை புரியும்.. எவ்வளவு ஆழமான, தீர்கமான அப்சர்வேஷன்.
இரண்டு நாட்களுக்கு முன் போஸ்ட் ஆபீசுக்கு போக நேர்தது. அங்கிருந்த பணம் கட்டும் க்யூவில் நின்றபடி எதையோ யோசிக்க ஆரம்பிக்க, சாருவின் ‘ராஸலீலை’யில் வரும் போஸ்டாபீஸ் கேரக்டர்களை தேட ஆரம்பித்தேன். அதுதான் அவரது எழுத்தின் வெற்றி.
சாருநிவேதிதாவின் “ராஸலீலா” புத்தகத்தை ஆன்லைனில் வாங்க இங்கே சொடுக்கவும்
உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Post a Comment
10 comments:
இந்த டோமரு எளுதுன புக்குகெல்லாம் ஓரு விமர்சனம்.. தூ....
//இந்த டோமரு எளுதுன புக்குகெல்லாம் ஓரு விமர்சனம்.. தூ...//
நான் சொல்லல.. சாரு பேர கேட்டாலே இந்த மாதிரி எல்லாம் திட்டு விழுமுன்னு..
//நான் சொல்லல.. சாரு பேர கேட்டாலே இந்த மாதிரி எல்லாம் திட்டு விழுமுன்னு..//
அதானே பாத்தேன்.. அந்த டோமரு கூ.. எழுதின புக்கை விமர்சனம் பண்றவன் ஒழுக்க.. கூ. .. வா இருப்பான்.
இவனெல்லாம ஒரு எழுத்தாளன். சரோஜாதேவிய விட மோசமா எழுதறவன்னு நீங்களே சொல்லியிருக்கீங்க.. தயவு செஞ்சு உங்க மேல இருக்கிற மரியாதைய கெடுத்துக்காதீங்க..
மீண்டும் ஒரு முறை என்னுடய பதிவை தமிழ்மண மகுடத்தில் வரவழைத்த பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும் நனறி/..
//இதுவரை நாவல் என்ற ஓரு கட்டத்துக்குள் எழுதப்பட்ட பல விஷயங்களை கட்டுடைத்திருக்கிறார்.//
கட்டுடைப்புு என்றால் என்ன?
//கட்டுடைப்புு என்றால் என்ன?//
எனக்கு தெரிந்து, ஏற்கனவே ஒரு வறைமுறைக்குட்பட்ட வடிவில் இருந்ததை, விட்டு விலகி செய்வது..
//எனக்கு தெரிந்து, ஏற்கனவே ஒரு வறைமுறைக்குட்பட்ட வடிவில் இருந்ததை, விட்டு விலகி செய்வது..//
அப்படி இருக்காது என நினைக்கிறேன் :)
அப்ப யாராவது ஒரு தமிழறிஞ்சரை கேட்டு சொல்லுங்க சார். நன்றி
கட்டுடைப்பு (Deconstruction): படைப்பை வாசகன் குறிகளாக உடைத்து தனக்குரிய படைப்பை உருவாக்கிப் பொருள் கொள்ளும் முறை. (நன்றி: ஜெயமோகன்)
Post a Comment