எல்லாம் அவன் செயல் - திரை விமர்சனம்.

இருக்கிற கெட்டவர்களையெல்லாம் சட்டத்தின் உள்ள ஓட்டையை கண்டு பிடித்து அவர்களை விடுதலை செய்து, பின்பு அவர்களை கொல்கிறார் கதாநாயகன் எல்.கே. அவனின் பேருக்கு விளக்கமாய் Licence to Kill என்று சொல்லபடுகிறது.
ஏற்கனவே மலையாளத்தில் வந்து சக்கை போடு போட்ட “சிந்தாமணி கொலை கேஸ்” என்கிற படத்தின் தமிழாக்கம்தான். மளையாளத்தில் சுரேஷ் கோபி நடித்த கேரக்டரில் ஓரு புதுமுகம்.. பார்பதற்கு இவரும் ஆஜானுபாகுவாய்.. மலையாள ஹீரோ போலவே இருக்கிறார். என்ன நடிக்கத்தான் வர மாட்டேன்கிறது.. எப்போது பார்த்தாலும் க்ளோசப் காட்சிகளில் எதிரே யாரோ சிரிப்பு காட்டி கொண்டிருப்பதை அடக்கி கொண்டு சீரியஸாய் பார்பது போலிருக்கிறது.. கொஞ்சம் உங்கள் கற்பனை குதிரையை தட்டிவிடுங்கள்.. அவர் எப்படி இருப்பார் என்று புரியும்..
சிந்தாமணி என்கிற ஓரு ஏழை பெண் மெரிட்டில் மெடிக்கல் காலேஜ் சீட் கிடைத்து வருகிறாள். அங்கே காலேஜில் இருக்கும் ஸ்பைஸ்கேர்ள் என்று அழைக்கபடும் 9 பெண்கள் அவரை ராகிங் செய்து.. நம்ம ஊர் நாவரசன் போல் துண்டு துண்டாய் அறுத்து கொலை செய்துவிடுகிறார்கள். அவர்களை சட்டத்தின் பிடியிலிருந்து எல்.கே எவ்வாறு வெளி கொண்டு வருகிறான். அந்த ஒன்பது பெண்களையும் கொன்றானா..? உண்மையான குற்றவாளி யார்..? என்பதை பரபரப்பாக சொல்லியிருக்கிறார்கள்.
படத்திற்கு தேவையேயில்லாத வடிவேலுவின் காமெடி ட்ராக்.. பார்ட்டிக்கும் சரக்கு குறஞ்சிருச்சோ.. ஹீரோவின் கேரக்டரை சொல்கிறேன் பேர்விழி என்று ஓவர் பில்டப் செய்தற்க்கு பதிலாய் நேராக சிந்தாமணி விசயத்துக்கு வந்திருந்தால் இன்னும் கிரிஸ்பாக படம் இருந்திருக்கும். புது ஹீரோவுக்கு இவ்வளவு பில்டப் அவசியமா..?
என்ன செய்வது பணம் போடுவது அவர்.. படத்துல டுயட், காதல்னு தான் எதுவும் இல்ல.. இது கூட இல்லைன்னா எப்படி.? வடிவேலுவின் காமெடியை விட, கொலை செய்ய போகும் பொது கூட வக்கீல் கோட்டை போட்டு கொண்டு போகும் எல்.கே.. படு காமெடி.
இராஜ ரத்தினத்தின் கேமரா துல்லியம்.. பிண்ணனி இசை ஆங்காங்கே பரபரப்பு, பல இடங்களில் டிவி சீரியல்.. படத்தில் சுகன்யா, மணிவண்ணன், சங்கிலி முருகன், ஆஷிஷ்வித்யார்தி, நாசர், ரகுவரன் என்று நடிகர்கள் கூட்டம் ஏகப்பட்டதாய் இருக்கிறது. யாரும் மனதில் நிற்கவில்லை.. மனோஜ் கே.ஜெயன் மட்டும் பரவாயில்லை.
பிரபாகரின் வசனம் பல இடங்களில் மலையாளத்திலிருந்து டிரான்ஸுலேஷன் செய்தது போல் இருக்கிறது.. ஒரே கொழ.. கொழ.. இயக்குனர் ஷாஜி கைலாஷ் போன்ற சிறந்த டெக்னிஷியன்களின் தயவால்.. இன்னொரு ஜே.கே.ரித்தீஷ் ஆக வேண்டிய ஆர்.கே.. மயிரிழையில் தப்பியிருக்கிறார்.
எல்லாம் அவன் செயல்..
உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Comments
ஒரு ஜேகே ரித்தீஸ்கே டமில் நாடு தாங்கலை..????????????/
//ஆனாலும் நீங்க ரொம்ப நல்லவரு.. இல்லாட்டி எங்களுக்காக, இவ்வளவு கஷ்டப்பட்டு.. படமெல்லாம் பாப்பீங்களா.. ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
//
ரிப்பீட்டேய்!!!!!!!!!!!!!
:-))
நன்றி சரவணகுமாரன்.. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்..
yaaru ivanga ellam
enga irunthu varaanga?
enga irunthu varaanga?//
யாரை கேட்குறீங்க..? கடைசிபக்கம்..?
எல்லாம் ‘கேபிள் சங்கர்’ செயல்..
பணம் இருந்தா யார் வேணும்னா நடிக்கலாம் சார்..
ஹிந்தியில் எடுத்தால் ஓடக்கூடிய படம் தான். திரைக்கதையில் எந்த குறையுமில்லை.. நடிகரை தவிர..