Thottal Thodarum

Dec 22, 2008

இலவசம்


என்ன எழுதறதுன்னே தெரியல.. அதுவும் இலவசம் பத்தி எழுதறதுன்னு முடிவு செஞ்சப்புறம் இலவசமா எந்த ஐடியாவும் வரமாட்டேங்குது.. நம்மாளுங்க இலவசம்ன்னா பினாயிலை கூட குடிப்பானுங்கன்னு கவுண்டமணி ஓரு படத்துல சொன்னமாதிரி.. அதுக்கு அத்தாச்சியா நம்ம தமிழ்நாட்டுல ஆட்சி அமைச்சிருக்கிறதும் ஓரு இலவச அரசுதான். பாருங்க எங்க பார்த்தாலும் இலவசம் டிவி, இலவச நிலம், இலவச பொங்கல், இலவச தீபாவளின்னு ஒரே இலவச மயம்தான்.

நம்ம ஜெயலலிதா போன ஆட்சியில, என்ன பண்ணாங்க.. கோயில்ல தினமும் மத்யானம் இலவச சாப்பாடு போட்டாங்க. அங்க இங்க கொஞ்சம் நஞ்சம் வேலை பார்த்து சம்பாதிச்சிகிட்டிருந்த அடிப்படை வேலை செய்பவர்கள், வேலை செய்யறத விட்டுட்டு, ஒரு வேளை சாப்பாடு நிச்சயம்க்கிற நிலையில வேலையை விட அவங்களுக்கு வேறு என்ன காரணம் வேண்டும்.

ஒரு காலத்துல குங்குமம் புக் வாங்கினா புக் விலையவிட அவங்க கொடுக்கிற இலவச பொருட்களின் விலை அதிகமா இருக்கும். அதனால அந்த புத்தகம் நம்பர் ஓன்னா வந்திருச்சுன்னு அவங்களே ஏதேதோ சர்வேலிருந்து சொல்றாங்க.. அவங்க சொன்ன பின்னாடி இன்னொரு பத்திரிக்கை நாங்களும் நம்பர் ஒன்னுன்னு சொல்றாங்க. அவங்களும் ஒரு சர்வே ரிசல்ட் வச்சிருக்காங்க. இதுல கடைசியில வாங்குற நமக்கு கிடைக்கிறது என்னன்னா.. அஞ்சு ரூபா புக்கை கொஞ்சம், கொஞ்சமா.. பதினைஞ்சு ரூபாய் ஆக்கிருவானுங்க.. நாமளும் பழக்க பட்டு போய், கொடுத்து தொலைவோம்.

அத விடுங்க நம்ம வூட்டுல, ஒரு மளிகை கடையில மாசம் ஐநூறு ருபாய்க்கு மளிகை வாங்கினா ஓரு கூப்பன் தர்றான். அது மாதிரி ஓரு 25 கூப்பன் சேர்த்தா.. ஓரு ஃபிரையிங் பான் இலவசம்ன்னு சொல்லியிருந்தான்.. அதுக்காக ஒவ்வொரு மாசமும் சரியா ஐநூறுக்கு மளிகை வாங்கறத்துக்குள்ளே நான் பட்ட பாடு எனக்குத்தான் தெரியும்.

இப்படி இலவசம்ங்கிற பேர்ல கிடைச்ச ஃபிரையிங் பான்னோட காதுல சரியா ஹேண்டில் நிக்கமாட்டேங்குது ’பான்’ தனியா ஹேண்டில் தனியா வருது. இத மாத்தறதுக்கு ஓரு நாலு வாட்டி அலைஞ்சதுதான் மிச்சம். கடைசியா நானே அந்த கடையில ஓரு ஸ்குருடிரைவர் வாங்கி டைட் பண்ணி புதுசா மாத்திட்டேன்னு வீட்டுல சொல்லி தப்பிச்சேன்.. இதை முன்னமே ஒழுங்கா பாத்து வாங்கியிருந்தயானா இந்த அலைச்சல் இல்லையில்ல என்று அன்பு அட்வைஸ் வேறு.

இவ்வளவுக்கும் அந்த கடையில் நல்ல தரமான மளிகை குறைந்த விலையில் கிடைக்கிறது. இவ்வளவு இருந்த்தும் ஏன் இலவசம் என்று கூறி விற்கிறான் என்று எனக்கு புரியாமல் இருந்தது.

"இந்த பானை மட்டும் மாத்தாம இருந்திருந்தா நான் அவன் கடை பக்கமே திரும்பமாட்டேன்." என்றாள். கடைபக்கமே திரும்ப மாட்டாளாம்.. மாதாமாதம் கடைக்கு போவது நான் இவள் போகமாட்ட்டாளம்...கடவுளே.. என்ன கூத்துடாது. அந்த ஃபரையிங் பேனோட விலை ஒரு ஐந்நூறு ரூபாய் இருக்குமா..? அதுக்கு 25*500=12500 செலவு. இப்படி எல்லாமே இலவசத்தை நம்பி இருக்கும் மனநிலை உள்ள நம் போன்றவர்களூக்கு எப்படி இலவசத்தை பற்றி எழுதுவது.

இப்படித்தான் போனில் ஒரு மிகப்பெரிய பேங்க் ஓன்று எனக்கு கால் செய்து நீங்கள் எங்களது முக்கியமான வாடிக்கையாளர் என்பதால் உங்களுக்கு இலவசமாய் ஓரு இன்சூரன்ஸ் பாலிசி தருகிறோம்.. என்கிறார்கள், சரிம்மா அது பத்தின டீடைல் எல்லாத்தையும் எனக்கு மெயில் அனுப்புங்க..ன்னு சொன்னா.. அதெல்லாம் சொல்ல மாட்டாங்களாம். போன்லதான் சொல்வாங்களாம். நாம அத கேட்டு ஓகேன்னு சொன்னா.. நம்ம கிரெடிட் கார்டிலிருந்து பணத்தை எடுத்துப்பாங்களாம்.. சரின்னு சொன்ன மறு விநாடி நம்ம அக்கவுண்டிலேர்ந்து பணம் எடுத்த அப்புறம் அவ்வளவுதான் அந்த போன் பேசின அம்மணிய எப்படி பிடிக்கிறது.. அவளை பொறுத்த வரைக்கும் ஒரு பாலிசி ஓகேயாயிருச்சு.

எனக்கு தெரிஞ்சு உலகத்தில் இலவசம் என்று எதுவுமே கிடையாது. அப்படி இலவசமாக எதாவது கிடைத்தால் மறைமுகமாக நம்மால் எதாவது அவர்களூக்கு ஆதாயம் இல்லாமல் இருக்காது.இல்லாவிட்டால் அவர்கள் இலவசமாய கொடுப்பதற்க்கு அவர்கள் என்ன மாமனா..? மச்சானா? அவர்கள் கூட நமக்கு இலவசமாய ஏதாவது கொடுத்தால் அது மச்சானாக இருந்தால் தமது சகோதரிக்காகவும்,மாமனாக இருந்தால் தனது மருமகனுக்காகவும்தான். இலவசமாக எது கிடைத்தாலும் அதன் தரத்தை பற்றி கவலைப்படாமல் கிடைத்தால் போதும் என்று நாம் நினைப்பதாலும், எது கொடுத்தாலும் அதை வாங்கிக்கொண்டு ஓரு இலவசத்தை கொடுத்தால் பொருட்களின் தரமில்லையென்றாலும் வாங்குவார்கள் என்று வியாபாரிகள் நினைக்கிறார்கள். இப்படி இலவசம், இலவசம் என்று பழகிப் போய் நாம் போடும் ஓட்டுக்கும் காசு இலவசமாய் தருகிறார்கள் என்று அதையும் வாங்கி கொண்டு ஓட்டை போடுகிறோம்.

காசை தண்ணீர் குடத்துக்குள்ளிருந்தும், பேப்பரின் நடுவிலிருந்தும், கொடுத்தினால் தங்கள் நன்றியுணர்வை வெளிகாட்ட, நாம் அவர்களூக்கு ஓட்டு போடுகிறோம். ஆனால் உங்களால் ஜெயித்து வருபவர்கள் என்ன நினைப்பார்கள், காசை வாங்கிட்டு ஓட்டு போட்டவனுங்களுக்கு என்னத்தை செய்யறது.. வந்த வரைக்கும் அடிக்கத்தான் பாப்பாங்க.. அதனால் வருகிற இடைதேர்தல்ல உங்களுக்கு யாராவது எதையாவது இலவசமாய் கொடுத்தா..??

வாங்கிக்கங்க.. ஆனா யோசிச்சு, வேற ஒரு நல்ல ஆளை செலக்ட் பண்ணுங்க.. இலவசமா எதையாவது கொடுக்கறவனுக்கு நாம ஒன்ணும் நன்றி கடன் பட்டுகிட்டிருக்க வேணாம்.

ஏதோ என்னால முடிஞ்சது இலவசமா ஐடியாத்தான் கொடுக்க முடியும்..


Blogger Tips -நிதர்சன கதைகள்-2- தேவர் மாப்பிள்ளை படிக்க இங்கே அழுத்தவும்



உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Post a Comment

9 comments:

ஷைலஜா said...

இலவசம் பற்றிய பதிவு நன்றாக இருக்கிறது உண்மையில் ஃப்ரீ என்ற சொல் இலவசமாகிப்போனது பற்றி நானும் ஒரு கட்டுரை எழுத இருக்கிறேன்.

Cable சங்கர் said...

நன்றி ஷைலஜா.. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்,.. உங்களின் பதிவும் வெற்றி பெற் வாழ்த்துக்கள்.

VIKNESHWARAN ADAKKALAM said...

//எனக்கு தெரிஞ்சு உலகத்தில் இலவசம் என்று எதுவுமே கிடையாது. //

சுவாசிக்கும் காற்று???

krishnav said...

nice cable sankar, i have one doubt in my blog www.cenimafun.blogspot.com is also tamil blog, how to place google adds in my blogs, i was placed the free adds only , no payment for my blog, do you have intrest means please reply through this mail id krishsm7@gmail.com

அத்திரி said...

//இலவசமா எதையாவது கொடுக்கறவனுக்கு நாம ஒன்ணும் நன்றி கடன் பட்டுகிட்டிருக்க வேணாம். //

இலவசத்தின் உள்குத்து நல்லாவே புரியுது சார்

Cable சங்கர் said...

உள்குத்து என்ன உள்குத்து நல்லா வெளிகுத்தேதான் குத்தியிருக்கேன். நன்றி அத்திரி..

Cable சங்கர் said...

நன்றி கிருஷ்ணவ்..உங்களை மின்னஞ்சலில் தொடர்பு கொள்கிறேன். நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்

ஷாஜி said...

// இலவசமா எதையாவது கொடுக்கறவனுக்கு நாம ஒன்ணும் நன்றி கடன் பட்டுகிட்டிருக்க வேணாம். //

well said matey..

Cable சங்கர் said...

//well said matey..//

நன்றி ஷாஜி.. அதென்ன மாடே.. அப்படின்னா என்னா ???