Thottal Thodarum

Dec 22, 2008

திண்டுக்கல் சாரதி - திரை விமர்சனம்



தாழ்வுமனப்பான்மையுள்ள ஒருவனை பற்றிய கதை. தான் கருப்பாக இருப்பதால் பல பெண்களால் நிராகரிகப்பட்ட சாரதிக்கு திடீரென சிகப்பான ஒரு தேவதை போன்ற வசந்தா மனைவியாகிறார். தனக்கு வந்த அதிர்ஷ்டத்தை வைத்து கொண்டாடமுடியாமல், தன் தாழ்வு மனப்பான்மையால், அவளை சந்தேகித்து, மனநிலை பாதிக்கப்பட்டு அவதிபட்டு பின்பு மருத்துவத்தினால் சரியாகி சந்தோசமாக வாழ்கிறான் சாரதி.

கதை இவ்வளவுதான், ஆனால் அதை சொல்வதற்கு ரொம்ப நேரம் எடுத்து கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே மளையாளத்தில் சீனிவாசன் நடித்து சுமார் பத்து வருடங்களுக்கு முன்னால் வந்த ‘வடக்கு நோக்கி எந்திரம்’ படத்தின் தமிழாக்கம் தான். அதை அப்படியே எடுத்திருப்பதனால் இந்த படமும் ஒரு பத்து வருடம் பின்னோக்கியே இருக்கிறது. காட்சியமைப்புகளில், வசனங்களில், நடிப்பில் என்று எல்லா விஷயங்களிலும்.

பல காட்சிகள் காமெடி என்கிற பெயரில் எரிச்சலூட்டிகிறது. அதிலும் ஆரம்ப காட்சியில் கருணாசை யானை தூக்கி கொண்டு போவது, மிகவும் நீளமான போர் காட்சி, அதே போல் அவர் தன் மனைவியை எப்போது தன் தம்பியுடன் சந்தேகித்தாரோ.. எப்போது நடிகர் அஜித்குமார் தன் மனைவியுடன் தொடர்பு வைத்து கொண்டிருக்கிறார் என்று போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்ளையிண்ட் செய்ய போனாரோ.. அப்பவே அவருக்கு மனநிலை முத்திவிட்டது என்று நமக்கு புரிகிறது. அதற்கு அப்புறம் தேவையில்லாமல், வள,வளவென்று இழுத்து கொண்டு நம்மையும் பைத்தியம் பிடிக்க வைக்கிறார்கள். படத்தில் ஆளாளுக்கு நிறைய நாடக பாணியில் பேசிக் கொண்டேயிருக்கிறார்கள்.

இந்த பாத்திரத்துக்கு சரியான ஆளாய் இருக்கிறார் கருணாஸ்.. பாத்திரம் உணர்ந்து நடித்திருக்கிறார். கார்திகா அழகாய் இருக்கிறார், அவ்வப்போது அழகாய் வெட்கப்படுகிறார். அழுகிறார். அம்மா சரண்யா வழக்கம் போல்.. அதாரது புதுசா தங்கச்சி.. நல்லாத்தான் இருக்காங்க.. எம்.எஸ்.பாஸ்கர் எப்போதாவது காமெடியாய் பேசி, மற்ற நேரங்களில் நிறைய பேசுகிறார்.

தினாவின் இசையில் அவ்வப்போது வரும் குத்துபாடல்கள், சன் டிவி புண்ணியத்தால் நகரு நகரு பாடல் ஹிட்டாகிவிடும்.. அந்த சோகப்பாடல் பரவாயில்லை ரகம். ஒளிப்பதிவு அவ்வளவு ஒன்றும் சொல்லிக் கொள்ளும்படியாய் இல்லை.. அவுட்டோர் காட்சிகளில் ஓரே பிளீச்..

சன் டிவியின் பலம் இம்மாதிரி சராசரி படத்தை அபவ் ஆவரேஜ் படமாக்கும் என்று தெரிகிறது.


Blogger Tips -நிதர்சன கதைகள்-2- தேவர் மாப்பிள்ளை படிக்க இங்கே அழுத்தவும்



உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Post a Comment

16 comments:

அக்னி பார்வை said...

நீங்கள் கடவுளை போன்றவர்...என்னை அப்பொழுது, அப்பொழுது ஆபத்தான படடில் இருந்து காப்பாற்றிவிடுகிறீர்கள்

Cable சங்கர் said...

மங்களம் உண்டாகட்டும்..(எந்த மங்களம்..?)

ஆளவந்தான் said...

//
சன் டிவியின் பலம் இம்மாதிரி சராசரி படத்தை அபவ் ஆவரேஜ் படமாக்கும் என்று தெரிகிறது.//
என்ன இப்படி சொல்லீட்டிங்க... மொத இடத்துல வைக்க போறாங்க தெரியாதா

அத்திரி said...

லக்கி, அதிஷா எல்லாம் படம் நல்லாயிருக்குனு சொல்லியிருக்காங்கோ..... நீங்க என்ன இப்படி

Cable சங்கர் said...

//என்ன இப்படி சொல்லீட்டிங்க... மொத இடத்துல வைக்க போறாங்க தெரியாதா//

அது அவங்க டீவில மட்டும் தான்.

Cable சங்கர் said...

//லக்கி, அதிஷா எல்லாம் படம் நல்லாயிருக்குனு சொல்லியிருக்காங்கோ..... நீங்க என்ன இப்படி//

தலைவரே.. படஙக்ளை பொறுத்தவரை நான் யார் எப்படி சேர்ந்தாலும், நான் என் கருத்திலிருந்து மாறுவதில்லை.. நீங்களே படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.. ( இதிலே எதும் உள்குத்து இருக்கா என்ன...?)

அத்திரி said...

//( இதிலே எதும் உள்குத்து இருக்கா என்ன...?)//


ஆமா உள்குத்துனா என்ன??????????????????

Cable சங்கர் said...

அப்படின்னா அது இதுல இல்லையா..? அப்பன்னா சரி அத்திரி..

Raj said...

போன வாரத்திலருந்தே இந்த படம் சன் டிவி டாப் டென்ல நம்பர் 1 சாமியோவ்.

Cable சங்கர் said...

//போன வாரத்திலருந்தே இந்த படம் சன் டிவி டாப் டென்ல நம்பர் 1 சாமியோவ்.//
இதில காமெடி என்னன்னா.. படம் ரிலீசான அன்னைக்கு காலையில 9 மணிக்கே. முத ஷோ கூட ஆரம்பிக்கலை அதுக்குள்ள வெற்றி நடை போடுகிற்துன்னு விளம்பரம்.

அத்திரி said...

//இதில காமெடி என்னன்னா.. படம் ரிலீசான அன்னைக்கு காலையில 9 மணிக்கே. முத ஷோ கூட ஆரம்பிக்கலை அதுக்குள்ள வெற்றி நடை போடுகிற்துன்னு விளம்பரம்//

சேனலை வச்சிக்கிட்டு இது கூட இல்லைனா எப்படி!!!!!!!!!!!!

narsim said...

இதத்தானா "வெற்றி நடை போடுகிறது"னு போடுறாங்க..????

Cable சங்கர் said...

ஆனாலும் உங்க குசும்புக்கு அளவேயில்லை நர்சிம்..

Ganesan said...

லக்கியையும், அதிஷா வையும் திட்டி கொண்டே போன சண்டே படம் பார்த்தேன்.

இதுக்கு மதுரை தியெட்டரில் ஹவுஸ் புல் வேறே .

இந்த படத்துக்கு ஒரு சீரியல் பார்த்திருக்கலாம்.

அன்புடன்
காவேரி கணேஷ்

Cable சங்கர் said...

//இந்த படத்துக்கு ஒரு சீரியல் பார்த்திருக்கலாம்.

அன்புடன்
காவேரி கணேஷ்//

அதுசரி.. எங்க கொஞ்ச நாளா ஆளையே காணோம்.. நம்ம பக்கம்...?/?

venkatx5 said...

சூப்பர் மச்சி..
திண்டுக்கல் சாரதி விமர்சனம் இங்கே..
http://venkatx5.blogspot.com