நாமெல்லாம் ஏற்கனவே தமிழில் பார்த்த படம் தான் என்றாலும் இந்தியில் அதிலும் அமீர்கான் வேறு நடித்திருப்பதால் பார்த்தே ஆகவேண்டிய கட்டாயம். சென்னையின் எல்லா தியேட்டர்களிலும் ஹவுஸ்புல்..
மும்பையில் மிக்ப் பெரிய செல் கம்பெனியின் முதலாளி சஞ்சய் சிங்கானியாவுக்கு ஷார்ட் டைம் மெமரி லாஸ்.. ஆனால் அவர் ஒவ்வொருவராய் தேடி, தேடி கொல்கிறார். ஏன்..? எதற்காக..? என்று இண்டரஸ்டாக கதை சொல்லியிருக்கிறார்கள்.
அமீர்கானின் உழைப்பு, அவரின் உடலில் மட்டுமல்ல, நடிப்பிலும் தெரிகிறது. அதிலும் அவரின் குள்ளமான உருவத்தை வைத்து கொண்டு, திரையில் ஆஜானுபாகுவான உடலமைப்பு உள்ளவர்களையெல்லாம் தூக்கி பந்தாடுவதை பார்க்கும் போது, நம்மால் நம்பாமல் இருக்க முடியவில்லை.. அந்த அளவிற்கு அவரின் பாடி லேங்குவேஜ். அதே போல் அவருக்கு மெமரி லாஸின் போது நடக்கும் நடை, பார்வைகள், அடிபட்ட புலியாய் சீறும் சீற்றம், படத்தில் அவருக்கு வசனங்கள் மிக குறைச்சல்.. ஆனால் அவர் பேசும் விஷயங்கள் நிறைய..
அசின் இனிமே இந்தி மார்கெட்டில் பிசின் போல் ஒட்டிக் கொள்வார் என்று நினைக்கிறேன். மீண்டும் தமிழ் கஜினி போலவே இம்ப்ரஸிவான நடிப்பு.. அம்மணி சும்மா பின்னி பெடலெடுத்திருக்கிறார்.
ரியாஸ்கான் கூட தமிழில் நடித்த அதே கேரக்டரில் நடித்து, இறக்கிறார்.
ரவி.கே.சந்திரனின் ஒளிப்பதிவு அருமை.. அதிலும் அந்த க்ளைமாக்ஸ் காட்சியில் அந்த குறுகிய சந்துக்குள் நடக்கும் சேஸிங், சண்டைகாட்சிகளிலும், பாடல் காட்சிகளிலும், புகுந்து விளையாடியிருக்கிறார்.
இசை ஏ.ஆர். ரஹ்மான். படத்தின் பாடல்கள் ஏற்கனவே மிகப் பெரிய ஹிட். அதிலும் “பெஹக்கா..” ‘குஜாரிஷ்’ பாடல்கள் படமெடுத்திருக்கும், விதம் அருமை.
இயக்குனர் முருகதாஸ், திரைக்கதையில் பெரிதாக எதையும் மாற்றியமைக்கவில்லை, க்ளைமாக்ஸை தவிர, தமிழ் கஜினி க்ளைமாக்ஸை விட இது ஒகே.
மொத்தத்தில் கஜினி-- எத்தனை முறை எடுத்தாலும் தோற்காதவன்.
உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Post a Comment
19 comments:
ஆமா கிளைமாக்ஸ் தமிழில் அவ்வளவு திருப்தி அளிக்கவில்லை.
பார்ப்போம் ஹிந்தியில் எப்படியென்று ...
//மொத்தத்தில் கஜினி-- எத்தனை முறை எடுத்தாலும் தோற்காதவன்.
//
பொருத்தமான கமெண்ட்...!
//பார்ப்போம் ஹிந்தியில் எப்படியென்று ...//
தமிழைவிட பரவாயில்லை அதிரை.. நல்லாவேயிருக்கு.
//பொருத்தமான கமெண்ட்...!//
நன்றி ராஜ்..
Flash Back காட்சியில் சற்றே வயதானவராக தெரிகிறார் என்று நினைக்கிறேன்! ... இந்த வாரம் ‘ஓ பக்கங்கள்’ படித்தீர்களா?
//மொத்தத்தில் கஜினி-- எத்தனை முறை எடுத்தாலும் தோற்காதவன்.//
அடுத்த வாரம் எந்த புக்குல சுட்டுப் போடப்போறாங்கனு தெரியல.. இந்த வரிகளை.. அருமை..அந்த ரியாஸ்கான் மேட்டரும் சூப்பர்.. நடித்து,இறக்கிறார்..ம்ம் கலக்கல்
//Flash Back காட்சியில் சற்றே வயதானவராக தெரிகிறார் என்று நினைக்கிறேன்! ... இந்த வாரம் ‘ஓ பக்கங்கள்’ படித்தீர்களா//
என்ன பண்றது அக்னி.. குமுதம்காரங்க ரொம்பதான் என் ப்ளாக்கை படிக்கிறாங்க..
//அடுத்த வாரம் எந்த புக்குல சுட்டுப் போடப்போறாங்கனு தெரியல.. இந்த வரிகளை.. அருமை..//
தெரியல..நர்சிம்.. பார்ப்போம்.
//ரவி.கே.சந்திரனின் ஒளிப்பதிவு அருமை..//
தமிழ்ல கேமரா எங்க இருந்ததோ அதே இடத்துல அப்பிடியே வச்சுருக்கிறதா பிரண்டு சொன்னான்...! அதனால் அதிகம் வித்தியாசமில்லை (கிளைமாக்சை தவிர ) என்பது என் நண்பனின் கமென்ட்...!
திரும்ப வந்துட்டோம்ல...!
ஹி.. ஹி..!
/ரவி.கே.சந்திரனின் ஒளிப்பதிவு அருமை.. அதிலும் அந்த க்ளைமாக்ஸ் காட்சியில் அந்த குறுகிய சந்துக்குள் நடக்கும் சேஸிங், சண்டைகாட்சிகளிலும், பாடல் காட்சிகளிலும், புகுந்து விளையாடியிருக்கிறார்.
அவர் சொன்னது உண்மைதான். அதனால் தான் நான் மேலே சொன்ன காட்சிகளை குறிப்பிட்டிருந்தேன்
நன்றி நவநீதன்.. மீண்டும் வந்ததுக்கு நன்றி.. எங்க போயிட்டீங்க.. ஆளையே காணோம்.
அருமை
கேபிள் சங்கரே, Turbo Fast ஆக எப்படி தான் படங்களை பார்த்து விடுகிறீர்களோ. ஏதாவது theatre கலீல் வாழ்கை உறுப்பினர் அட்டை வைத்து உள்ளீர்களா என்ன ? அமீர் கான் வருடத்துக்கு ஒரு படம் மட்டுமே பண்ணும் விதத்திலே அவர் படங்களுக்கு எவ்வளவு மேநேகுடுகிறார் என்று தெரிகிறது. கூடவே முருகதாஸ் சேர்ந்திருபதால் இது தமிழ் கஜினியை விட பெரிய வெற்றி காணும் என்பதில் ஐயம் இல்லை. படம் பார்த்த பின் கருத்துக்களை பதிகிறேன்.
ரஃபிக் ராஜா
காமிக்கியல் & ராணி காமிக்ஸ்
//அருமை//
நன்றி கடையம் ஆனந்த்.. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்..
//படம் பார்த்த பின் கருத்துக்களை பதிகிறேன்.
//
கண்டிப்பாக உங்கள் கருத்துக்களை பதியுங்கள்..ரபீக் நன்றி உஙக்ள் வருகைக்கும், கருத்துக்கும்
பாடல்கள் தமிழ் அளவிற்கு நல்லா இல்லாததாக என்னுடைய தெலுங்கு நண்பர் சொன்னார். உங்க கருத்து என்ன?
தமிழ் படங்களே இப்போது திரைக்கு வருவதில்லையா..
தெலுங்கு, இந்திப் படங்களுக்கு விமர்சனம் எழுதுகிறீர் - கேபிள் சங்கரநாராயணன்.
ம்ம்ம்... கலக்குறீங்க.
பஞ்ச் அருமைங்க
//பாடல்கள் தமிழ் அளவிற்கு நல்லா இல்லாததாக என்னுடைய தெலுங்கு நண்பர் சொன்னார். உங்க கருத்து என்ன?//
தமிழில் எப்படி சுட்டும் விழி சுடரே ஹிட்டோ.. அதே போல் ஹிந்தியில் “பெஹகா” பாடலு, “குஜாரிஷ்’ பாடலும் மிகப்பெரிய ஹிட் அதனால் டோண்ட் கம்பேர்.
//தமிழ் படங்களே இப்போது திரைக்கு வருவதில்லையா..
தெலுங்கு, இந்திப் படங்களுக்கு விமர்சனம் எழுதுகிறீர் - கேபிள் சங்கரநாராயணன்.
ம்ம்ம்... கலக்குறீங்க.
பஞ்ச் அருமைங்க//
எல்லா தமிழ் படங்களையும், பார்த்துவிட்டேன். அதனால் தான் தெலுங்கு, இந்தி.. உங்கள் பாராட்டுக்கு நன்றி.. தமிழ்
நேற்று தான் பார்த்தேன்
பரவாயில்லை
Post a Comment