கமலின் அடுத்த படம் A WEDNESDAY...?

கமல தன் அடுத்த படமாக எடுக்க சமீபத்திய சூப்பர் ஹிட்டான ஹிந்தி படமான “A Wednesday" யின் ரைட்ஸை வாங்கியிருப்பதாக தெரிகிறது. ஒரு புதன்கிழமை அன்று ஒட்டு மொத்த மும்பையையும் ஒருவனது பிடியில் வைத்திருந்து, பார்க்கும் நம் மனதை ஒட்டுமொத்தமாக அள்ளிய படம். ஒரு சூப்பர் திரில்லர்.
இந்த படததில் நஸ்ருதீன் ஷா நடித்த கேரக்டரில் கமலும், அனுபம் கேரக்டரில் மம்முட்டியும் நடிப்பார்கள் என்று தெரிகிறது. இன்னும் அதிகாரபூர்வமான அறிவிப்புகள் வரவில்லை.. அந்த அறிவிப்பு வரும் நாளை ஆவலோடு எதிர்பார்க்கும் உலகளாவிய “உலகநாயகனின்” ரசிகர்களில் ஒருவன்.
டிஸ்கி
இது எனக்கு கிடைத்து வந்த் செய்தியல்ல
இங்கிருந்து வந்தது..
Comments
ஆஹா அருமை
வாழ்க நம்ம கேபிள்.. செய்தி சொன்னதுக்கு..
எனக்கென்னவோ சின்ன பட்ஜெட்டுல இது முடியும்னு நினைச்சுதான் இத எடுக்க போறாங்களோன்னு தோணுசு ராஜ்.. பார்ப்போம்.. இந்த செய்தி உண்மையா என்பதை பொறுத்துதான் மற்ற விஷயங்கள் எல்லாம்.
ஆனால் கமலின் ரசிகராக இந்த செய்தியை மகிழ்ச்சியுடன் வரவேற்றிருக்கிறீர்கள் என நினைக்கிறேன்.
ஆனால் நஸ்ருதீன் அந்தப் பாத்திரத்தை செய்த அளவுக்கு கமல் செய்ய முடியுமா என்ற கேள்வி எழுகிறது.காரணம் கமல் ஒரு larger than life hero.
ஆனால் அந்த டெர்ரிஸ்ட் பாத்திரம் ஒரு மிடில் கிளாஸ் அப்பாவின் பாத்திரம்.கமலின் ஸ்டேச்சர் அந்தப் பாத்திரத்துக்குப் பொருந்துமா என்பதில் எனக்குக் கேள்விகள் இருக்கிறது.
கமல் ஒரு மிடில் கிளாஸ் பாத்திரத்தில் நடித்த படம் எதுவும் இருக்கிறதா???? உடன் மகாநதியை சுட்டுவார்கள்.ஆனால் அதிலும் பாத்திரத்தை மீறிய கமல் தெரிந்தார் என்பது என் நினைவு...
நஸ்ருதீன் அந்த பாத்திரத்தில் மிக அருமையாய் நடித்திருந்தார் இல்லையென்று சொல்லவில்லை. நீங்கள் ஹிந்தியில் படம் பார்க்கும்போது பெரிய எதிர்பார்ப்புடன் பார்ககவில்லை. அதோடு இல்லாமல் அவர் ஒன்றும் சூப்பர் மாஸ் ஹீரோ இல்லை. ஆனால் இங்கே கமல் நடிக்கும் போது கொஞ்சம் எதிர்பார்ப்பு இருக்கத்தான் செய்யும் அதை உலகம் போற்றும் சிறந்த நடிகனான கமலுக்கு ஒரு பெரிய விஷயமே இல்லை.. படம் வந்து வெளியானவுடன் பார்த்து கொள்வோம்..