தமிழ் சினிமா 2009

வாசகர்கள், சக பதிவர்கள் அனைவருக்கும் இனிய மனம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்கள் சென்ற ஆண்டு தமிழ் சினிமாவுக்கு நல்ல ஆண்டா? கெட்ட ஆண்டா? என்று சொல்ல மிக குழப்பமாகவே இருக்கிறது. சரி போஸ்ட் மார்டத்துக்கு பிறகு வருவோம். ஜனவரி பொங்கலுக்கு ரீலீசான விஜய்யின் வில்லு, சன்பிக்சர்ஸின் படிக்காதவன், ராஜ்டிவியின் செமி டப் படமான காதல்னா சும்மா இல்லை, ஏவிஎம்மின் அ..ஆ..இ..ஈ.., அதே போல தமிழ் தெலுங்கு இரண்டு மொழியில் எடுக்கப்பட்ட என்னை தெரியுமா?, வெண்ணிலா கபடிக்குழு என்று படங்கள் ரிலீஸானதில் விஜயின் வில்லுவை பற்றி நானேதும் சொல்லத் தேவையில்லை.ஏவிஎம்மின் அ..ஆ.. இ… படத்தில் விஜய் ஆண்டனியின் பாடல்கள் மிகப் பெரிய ஹிட் ஆகியிருந்தும் பெரிய தோல்வியை அடைந்தது. ராஜ்டிவியின் காதல்னா சும்மா இல்லை படம் தெலுங்கில் 2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த இயக்குனர், படம் நந்தி விருது பெற்றது. தெலுங்கில் அல்லரி நரேஷ் நடித்த கேரக்டரில் ரவிகிருஷ்ணாவை போட்டு அவர் சம்மந்தபட்ட காட்சிகளை மட்டும் ரீஷூட் செய்து ஒரு மாதிரியாய் ஒப்பேத்தி, வடை போச்சே கதையாகிவிட்டது. தனுஷின் பொங்கல் ரிலீஸான படிக்காதவன் படத்தின் ரிப்போர்ட் படு கேவலமாய் இருந...