அக்னிபார்வையின் கேள்விகளும், என் பதில்களும்

200வது பதிவு. இது என்னுடய 200வது பதிவு.. இதுவரை என் பதிவுகளை படித்து ஆதரவு அளித்தமைக்கு நன்றி.. மேலும் உங்கள் ஆதரவை நல்கி வேண்டுகிறேன். சக பதிவர் நண்பர் திரு. அக்னி பார்வை என்னையும் ஒரு கருத்தாய் கொண்டு பேட்டி எடுத்து பெருமைபடுத்தியமைக்கு நன்றிகள் பல.. அந்த பேட்டியின் cut&Past அக்னியின் கேள்விகள்:பதிவர் கேபிள் சங்கரின் பதில்கள் மீண்டும் ஒருமுறை ‘அக்னியின் கேள்விகள்’ பகுதியில் சந்திப்பதில் மகிழ்ச்சி.இந்த முறை சினிமாவை பற்றி, நம் பார்வையில் சிக்கிக்கொண்டவர் கேபிள் சங்கர்.இவருக்கு அறிமுகம் தேவையில்லை, அந்தளவுக்கு பதிவுகளிள் பிரபலமானவர். சினிமா இயக்கும் முயற்ச்சியில் ஈடுபடுபவர், ஒரு நாள் வெற்றி பெறுவார், அவர் வெற்றி பெற வாழ்த்துக்கள். 1. கேபிள் சங்கர் பற்றி? ஒரு சாதாரண பிஸினெஸ்மேன், நடிகன், திரைக்கதையாசிரியன், வசனகர்த்தா, குறும்பட இயக்குனர், திரைபட இயக்குனராகும் முயற்சியில் இருப்பவன் சமீபகாலமாய் ப்ளாக்குகளில் எழுதியே மற்றவர்களை நோகடிப்பவன். 2. சினிமாவுக்கும் உங்களுக்குமான் தொடர்பு? சினிமா எனக்கு ஒரு Passion. அதனால் சினிமாவில், தயாரிப்பு, நடிப்பு, உருவாக்குதல், தியேட்டர...