தெலுங்கில் சந்தமாமா என்று சுமாரய் ஓடியபடம். நவ்தீப்பும், சிவபாலாஜியும் நடித்து இயக்குனர் கிருஷ்ண வம்சி இயக்கிய படம். அதை ரீமேக் செய்திருக்கிறார்கள்.. இந்த படத்தில் என்னத்தை கண்டுவிட்டார்கள் என்று அதை ரீமேக் செய்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை.
அந்த படத்தில் ஒரு பாடல் முழுவதும் முத்தத்தை வைத்து ஒரு சூடான டூயட் எடுத்திருப்பார்கள்.. தமிழில் அதை காணோம்.
தன் தாயில்லாத ஒரே மகள் மீது மிகுந்த அன்பை வைத்திருக்கும் அப்பா பிரபு, தன் மகளுக்கு கல்யாண வயது வந்துவிட்டதால் அவளை பிரியவும் கூடாது, அதே சமயத்தில் அவளுக்கு நல்ல மாப்பிள்ளையையும் தேர்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில், பக்கத்திலேயே ஒரு அராத்து பணக்காரனின் மகனான இளங்கோவை தேர்ந்தெடுக்கிறார்.நிச்சயமும் செய்துவிடுகிறார்கள். அப்போது மோனிகா, அரவிந்திடம் தான் ஏற்கனவே ஒருவனை காதலித்ததாகவும், அவன் தன்னை பயன்படுத்திவிட்டு போய்விட்டான் என்கிற குண்டை போட, அதிர்ந்து போன அரவிந்த, அவனை தேடி கண்டுபிடிக்க, இதற்கிடையில் மோனிகாவின் தங்கை, அரவிந்தை காதலிக்க.. என்று குழப்படியாய் போகிறது.
படம் முழுவதும், ஒவ்வொரு ப்ரேமிலும் முப்பது பேராவது இருக்கிறார்கள். அதிலும் பிரபுவின் வீட்டில், ஏகப்பட்ட வெள்ளைகாரர்கள்.. அங்கும், இங்கும் உலாவியபடியே இருக்கிறார்கள்.
படத்தில் பிரபுவுக்கும், ஹனிபாவுக்கு சரியான கேரக்டர்.. இருவரும் சும்மா அவரவர் ரேஞ்சுக்கு பின்னி எடுக்கிறார்கள். மோனிகா இளைத்திருக்கிறார். சில காட்சிகளில் சூடாயிருக்கிறார். சரண்யா இன்னும் குட்டிப் பெண்ணாகவே தெரிகிறார். அதனால் அவரின் காதல் காட்சிகள் கூட குழந்தைதனமாய் இருக்கிறது.
நவ்தீப் தெலுங்கில் செய்த அதே கேரக்டரை செய்திருக்கிறார். இளமை துள்ளான கேரக்டர் என்று ரொம்பவே பீல் பண்ணி.. ரொம்ப துள்ளியிருக்கிறார். அரவிந்த்தான் பாவம் கொஞ்சமும் செட்டாகாத கிராமத்து இளைஞன் பாத்திரத்தில் திண்டாடுகிறார். படத்தில் சில சமயம் ஆங்காங்கே நகைச்சுவை தென்படுகிறது. இருந்தாலும் வாய்ஸ் ஓவர்லாப்பில் மிஸ்ஸாகிவிடுகிறது.
க்ளைமாக்ஸில் திடுமென திருந்துகிறேன் பேர்விழி என்று ஹனிபா நடிப்பது சூப்ப்ப்ர்ர்.ர்ர் காமெடி..
அருள்தாஸின் ஒளிப்பதிவு ஓகே. விஜய் ஆண்டனியின் பாடல்கள ஆறுதல். படம் பூராவும் எல்லோரும் நாடகம் போல பேசிக் கொண்டேயிருக்கிறார்கள்.
அ.. ஆ.. இ.. ஈ.. எலிமெண்டரி...
உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Post a Comment
18 comments:
:)
நன்றி அனந்தீன் உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்
அது சரி படத்தில பிரபுன்னு ஒரு தமிழ் நடிகராவது இருக்காறே...
அ.. ஆ.. இ.. ஈ.. எலிமெண்டரி...
உ ஊ எ ஏ வுக்கு போகாதுன்னு சொல்றீங்க. சரி, சரி புரிஞ்சுக்கிட்டேன்
அன்புடன்
காவேரி கணேஷ்
//சரி, சரி புரிஞ்சுக்கிட்டேன்
//
நம்ம ஆளூங்க எல்லாம் கற்பூரம்னு தெரியாதா..? நன்றி காவேரி கணேஷ்.. சரி சரி.. எலக்ஷன் காசுல டிரீட் வையுங்க..
// அ.. ஆ.. இ.. ஈ.. எலிமெண்டரி...//
நச்னு ஒரு வரி கமெண்ட் - படம் எப்படின்னு புரிஞ்சுபோச்சு
அ ஆ இ ஈ..........
இந்த மாதிரி படத்தையெல்லாம் பாத்து எங்களை காப்பாத்தினதுக்கு நன்றி
இந்த ரெண்டு பொண்ணுங்களுக்காவாவது ஒரு முறை படம் பாக்கலாம்ல...:)
பிரபு வீட்ல எதுக்குங்க வெள்ளைக்காரர்கள் ?
:))))
விமர்சனம் சூப்பர்...
மோனிகா இளைத்தது பற்றி சொன்னவுடன் ஒரு பழமொழி நியாபகம் வந்து தொலைகிறது...
லாஸ்ட் பஞ்சு டயலாக்கு சூப்பர்
//நச்னு ஒரு வரி கமெண்ட் - படம் எப்படின்னு புரிஞ்சுபோச்சு//
உங்க பாராட்டுதலுக்கு நன்றி ராகவன்.
//இந்த ரெண்டு பொண்ணுங்களுக்காவாவது ஒரு முறை படம் பாக்கலாம்ல...:)//
ஸ்டில் பாருங்க அது போதும்..
நன்றி செந்தழல் ரவி.. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்
அப்ப படம் சுமார்தான்னு சொல்றீங்க.. பாக்கலாம் பொங்கல் படங்கள் எப்படி இருக்குன்னு...
ஆமாங்க வெண்பூ.. ரொம்பவே சுமார்தான். வஹேவ் டு வெயிட் ஃபார் பொங்கல் பிலிம்ஸ்..
இதோட தெலுகு வர்ஷனையே என்னால அரை மணி நேரம் கூட பார்க்க முடியல......தமிழ்லயுமா...வேணாம் சாமி
இந்த மாதிரி படத்தையெல்லாம் பாத்து எங்களை காப்பாத்தினதுக்கு நன்றி
//
மோனிகா இளைத்தது பற்றி சொன்னவுடன் ஒரு பழமொழி நியாபகம் வந்து தொலைகிறது...
//
மா.இ.கொ.இ - தானே..?!!! :-) lol
மொக்கை நோ.3 of the year.... வேற என்ன சொல்ல... :)
ரஃபிக் ராஜா
காமிக்கியல் & ராணி காமிக்ஸ்
Post a Comment