பின்னூட்டம் வாங்குவது எப்படி..?
75,000 ஹிட்ஸ்களை தந்த சக பதிவர்கள், வாசகர்கள் எல்லோருக்கும் நன்றி..

பதிவெழுதி பின்னூட்டம் வாங்குறதுன்னு எப்படின்னு யோசிச்சி, யோச்சி நிறைய பேர் மண்டை காஞ்சி போய் அலையுறது தான் மிச்சம்.. ஏதோ நமக்கு தெரிஞ்ச விஷத்தை உங்களுக்கு சொல்லலாமேன்னு நான் ஓரு ஆராய்ச்சி போல செய்ய ஆரம்பிச்சேன் அப்பத்தான் ஓரு விஷயத்தை கண்டுபிடிச்சேன். தினமும் பதிவெழுதற பல பேர் பின்னுட்டமிடறவங்க எல்லோரும் சனி, ஞாயிறு கிழமைகளில் ஆன்லைனில் வருவதில்லை. அது என்ன பதிவெழுதறத்துக்கு வீக் எண்ட் விடுமுறையா.?
ஏண்டான்னு யோசிச்ச போது பெரும்பாலும் பல பதிவர்கள் தங்கள் அலுவலகத்திலிருந்தே பதிவெழுதுகிறார்கள். கம்ப்யூட்டர் சம்மந்தபட்ட தொழிலில் இருப்பவர்கள் அத்னூடயே இருப்பதால் வேலைக்கு நடுவே (செஞ்சாத்தானே.. என்று கேட்கும் பதிவ்ர்கள் நினைப்பது எனக்கும் கேட்கிறது.) பின்னூட்டமிடுவது, பதிவு எழுதுவது என்று பிசியாய் இருக்கிறார்கள் என்பதை கண்டுபிடித்தேன்.
எப்போதாவது பதிவெழுதுபவர்க்ள் சொந்தமாய் கணினியும், இண்டர்நெட் இணைப்பு வைத்திருப்ப்வர்கள் என்றும் தெரிகிற்து.
பதிவெழுதியே பெரிய பதிவர்கள் ஆனவர்களும் இருக்கிறார்கள், பின்னூட்டமிட்டே பெரிய பின்னூட்டமானவர்களும் இருக்கிறாரிகள்.. சமிபகாலமாய் சில பெரும் பெயர் பெற்ற பதிவர்கள் அவர்களுக்கு வந்த பின்னூட்டத்திற்கு பதிலப்பதே இல்லை. மற்ற பதிவர்களின் பதிவுகளுக்கு பின்னூட்டமிடுவதில்லை.
சரி அவங்க நாமளாவது பின்னூட்டமிடுவோம்னு அவங்க பதிவ படிச்சிட்டு ஏதோ நாம அப்ரண்டீஸாக இருப்பதினால்.. சூப்பர்.. நல்ல பதிவுன்னு போட்டா.. அதை பத்தி பதிவெழுதி நம்ம மானத்தை வாங்குறாங்க..
பதிவுகளில் பொதுவாக அதிகம் படிக்க படுவது சினிமா சம்மந்தபட்ட பதிவுகள் என்பதும் தெரிகிறது.
அதிலும் அதிஷா, லக்கிலுக், பரிசல் போன்றவர்களின் திரைவிமர்சனம் வெகுவாக மக்களை கவர்திருக்கிறது என்பதும், சமீப காலமாய் ஏதோ கேபிள்,வயர் என்ற பெயரில் கிறுக்கி வரும் அவரின் விமர்சனங்களுக்கும் ஹிட்ஸ் வர ஆரம்பித்திருப்பதே.. சாட்சி.
செக்ஸ் சம்மந்தமாய் எதாவது பதிவிட்டாலும் வெகுவாக மக்களிடம் போய் சேருகிறது.. ஆனால் பார்த்துவிட்டு பின்னூட்டம் தான் இடமாட்டார்கள். கிட்டத்தட்ட பிட் படம் பார்க்க போய்விட்டு உள்ளுக்குள் கிளுகிளுப்பதை போல், படித்துவிட்டு போய்விடுகிறார்கள்.. பின்னூட்டமிட்டால் வந்து படிச்சது தெரிஞ்சிருமோ..?
சரி எதையாவது எழுதி தொலைத்தோம்னு வச்சிக்க்கங்க.. அதுக்கு தலைப்பை பிடிக்கறதுக்குள்ளே அவனவன் படற அவஸ்தை இருக்கே.. ஸ்...அப்பா.. நினைச்சாலே கண்ணைகட்டும்.. பரங்கிமலை பத்தி எழுதணும்னா “ஜோதியாய் நிற்கும் பரங்கிமலைன்னு” தலைப்பை போட்டாதான் உள்ளேயே வராங்க..
இப்படி கஷ்டப்பட்டு , வேதனைப்பட்டு பதிவெழுதறவங்களை பத்தி நான் என்னனு சொல்ல.. அதெல்லாம் ஓரு தவம்ன்னு தெரிய வருது.. அதனால நான் சொல்ல வரது என்ன்னனா..? நீங்க பாட்டுக்கு எழுதுங்க.. நல்லாயிருந்தா கண்டிப்பா பின்னூட்டம் வரும்.
அப்புறம்.. அவ்வளவுதாங்க.. என்னத்தை எழுதறதுன்னு யோசிச்சி, யோசிச்சி பாத்தப்போ.. தான் புரிஞ்சுது தினம் எதையாவது எழுதறது எவ்வளவு கஷ்டம்னு.. எதோ என்னோட இன்னைய கடமை முடிஞ்சது. ஓரு மொக்கை பதிவை ரி எடிட் பண்ணி பப்ளிஷ் பண்ணிட்டேன். எவ்வளவு கஷ்டம்டா சாமி...
படிக்கிறவங்க எல்லோரும் தயவு செஞ்சு பின்னூட்டம் போட்டுறுங்க.. இல்லேன்னா தலைப்ப வச்சு உள்ளே வந்தவங்க நாக்க பிடிங்கிக்கிற மாதிரி பேசுவாங்க..
உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

Comments
நன்றிங்க நட்பு ஜமால்.. அது சரி நானும் தான்னா எதுக்கு..?
அது தெரிஞ்சா எழுத மாட்டமா? வெச்சிக்கிட்டா வஞ்சனை பண்றாங்க. நல்லா எழுதாம பின்னூட்டம் வாங்கறது எப்படினு ஒரு ஆராய்ச்சி பண்ணி சொல்லுங்க :)
(போட்டாச்சின்னு போட்டிருந்திச்சி அதான் நானும்ன்னு போட்டேன்)
:):):):):):)
அவ்வ்வ் , அதான் நான், ஞாயிற்று கிழமை போட்ட JKR பற்றிய பதிவுக்கு பின்னுட்டம் அதிகம் வரவில்லையோ?
சங்கர் அண்ணே , போட்டாச்சு, போட்டாச்சு.
kaveriganesh.blogspot.com
அது தெரிஞ்சா எழுத மாட்டமா? வெச்சிக்கிட்டா வஞ்சனை பண்றாங்க. நல்லா எழுதாம பின்னூட்டம் வாங்கறது எப்படினு ஒரு ஆராய்ச்சி பண்ணி சொல்லுங்க :)
\\
repeatee
நானும் தெரிஞ்சுக்கலாம்னு ஆசை ஆசையாய் வந்தேன். சன் டிவி வெளியிட்ட படங்கள் மாதிரி ஏமாத்திட்டீங்களே.
நிறைய எழுதுங்க... பின்னூட்டமிட காத்துக்கொண்டிருக்கிறோம்..
நன்றி விக்னேஷ்வரன்
அதனாலததான் இந்த பதிவே.. ரொம்ப நன்றிங்கண்ணா..
ஆமாண்ணே.. ரொம்ப நன்றிங்கண்ணா..
பின்னூட்டம் போடறவங்க.. அப்படியே ஓட்டையும் போட்டுட்டு போங்க; மிக்க நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்
தலைவா இதுல உள் குத்து ஏதுவுமில்லையே..
// சன் டிவி வெளியிட்ட படங்கள் மாதிரி ஏமாத்திட்டீங்களே.//
சூப்ப்ர் பஞ்ச் தலைவா..
ஓட்டு குத்தியாச்சு, பின்னூட்டம் போட்டாச்சு ஓகேவா சார்..
\\ஏதாவது சொல்லி கொடுப்பீங்கனு பார்த்தா, நல்லா எழுதுங்க பின்னூட்டம் வரும்னு சொல்றீங்க.
அது தெரிஞ்சா எழுத மாட்டமா? வெச்சிக்கிட்டா வஞ்சனை பண்றாங்க. நல்லா எழுதாம பின்னூட்டம் வாங்கறது எப்படினு ஒரு ஆராய்ச்சி பண்ணி சொல்லுங்க :)
\\
repeatee
நானும் தெரிஞ்சுக்கலாம்னு ஆசை ஆசையாய் வந்தேன். சன் டிவி வெளியிட்ட படங்கள் மாதிரி ஏமாத்திட்டீங்களே.//
ஒரு பெரிய ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டு இட்டுக்கிறேன்...
ஓட்டு குத்தியாச்சு, பின்னூட்டம் போட்டாச்சு ஓகேவா சார்..//
பின்னே கடய காப்பாத்த என்னவெல்லாம் பண்ணவேண்டியிருக்கு..
விஷத்தை சொல்லவே இல்லையே
அணானிகளை ஒதுக்கிய உங்களுக்கு எனது கண்டனங்கள்.
என்னது விஷத்தையா.. விஷயத்தையா..? விஷயம்னா.. தெரிஞ்சாத்தானே சொல்ல்றதுங்கண்ணா..
ஆமா. தமிழர்களாச்சே.... அத்தனையையும் படிச்சிபுட்டு, "தமிழர்கள் சினிமா பின்னாலேயே அலைபவர்கள், திருந்தவே மாட்டார்கள்" என்று வேற பின்னூட்டம் இட்டிருப்பார்களே, அவர்கள் பச்சை தமிழர்கள்.
யாருங்க அவரு?
அட விடுங்க ... பொருளாதார தேக்க நிலை காரணமா வேலை இல்லாம இருந்திருப்பான்... பொழுது போகாம அந்த பக்கம் ஏட்டி பார்த்திருப்பான்.. இதெல்லாம் பெருசா சொல்லிக்கிட்டு
Nalla irunga...
ரொம்ப நன்றி அபு.. நிச்சயமாய் இந்த மாதிரி மொக்கையில்லாம எழுத முயற்சிக்கிறேன்.
நைனா.. நைனாதான்.
நாங்க யார் பாட்டுக்கு? என்ன எழுதணும்?
நல்ல வேளை, எங்களையே நீங்க பாட்டு எழுத சொல்லலை... சொல்லி இருந்தீங்க...! டங்கு டனால் தான்.
அவங்களே தங்களுக்கு பேர் புகழ் வாணாங்கற்பபோ.. நாம எதுக்குங்க..
தன்னடக்கத்தை பாராட்ட யாருமேயில்லையா..?
அட இப்படித்தான் வந்திருக்காய்ங்களோ..// நானும் ரொம்பத்தான் சந்தோசப்பட்டுட்டேன்ன்...
அடப்பாவமே... நானும் என்னமோ ஏதோ சொல்ல போறீங்கன்ணு நினச்சு வந்தா, இப்படி சொல்லீட்டிங்க...
3 மணி நேரம் வெட்டு, குத்து, காட்டன் டையலாக் அதாங்க பஞ்சு வசனம் என்று மொக்கைய போட்டுட்டு, நம்மளை ஹிம்சை செஞ்சிட்டு அஹிம்சை நல்லதுண்னு சொல்ற மாதிரி சொல்லீட்டிங்க...ஹூ....ம்.... நல்ல எதிர்காலம் இருக்கிறது, உங்களுக்கு திரை உலகிலும், அப்புறம் அரசியலிலும். வாழ்க.
Nalla irunga...//
ரொம்ப நன்றி கோவாலு.. நீங்க நம்ம பக்கம் வந்ததுக்கும், உங்க மேலான கருத்துக்கும்.
அது என்னங்க.....? நாங்க சொல்றதையே நீங்களும் சொல்றீங்க...!
அதானே பார்த்தேன்.. பாருங்க நையாண்டி.. நிசமாவே படிக்கிறாங்களாம். ரொம்ப நன்றிங்க ராஜாராம்.. உங்கள் வருகைக்கும், பின்னூட்டதிற்க்கும், ஓட்டுக்கும், உங்களை போன்றவர்களின் பாராட்டும், தட்டி கொடுத்தலுமே.. எங்களை போன்றவர்களுக்கு டானிக்.
3 மணி நேரம் வெட்டு, குத்து, காட்டன் டையலாக் அதாங்க பஞ்சு வசனம் என்று மொக்கைய போட்டுட்டு, நம்மளை ஹிம்சை செஞ்சிட்டு அஹிம்சை நல்லதுண்னு சொல்ற மாதிரி சொல்லீட்டிங்க...ஹூ....ம்.... நல்ல எதிர்காலம் இருக்கிறது, உங்களுக்கு திரை உலகிலும், அப்புறம் அரசியலிலும். வாழ்க.//
உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி நையாண்டி.. அது சரி எங்கிருந்துய்யா வருது இந்த மாதிரி நையாண்டிங்க எல்லாம். சும்மா பிச்சு உதர்றீங்க..
இப்படி உசுப்பேத்தி... உசுப்பேத்தியே எங்க உடம்ப ரணகளமா ஆக்குறாங்கலே....!
அதே நேரம், இப்போதைய பெரிய வலைபூ எழுத்தாளர்கள் தங்கள் பதிவினில் வரும் பின்னூடத்திற்கு பதில் இடாமல் ஒதுக்குவதும் ஒரு மிக பெரிய குற்றம். அவர்கள் பிரபலமடைந்ததால் வேலை பளூ அதிகமாக இருக்கலாம். ஆனால் அவர்களை பிரபலமடைய வைத்த அந்த பின்னூட்ட அன்பர்களை அவர்கள் ஒடுக்குவது, அவர்கள் புகழ் மங்க ஒரு காரணமாக கூடாது. அந்த விசயத்தில் இவ்வளவு பெயர் வாங்கியும், தாங்கள் இன்னும் ஒவ்வொரு பின்னோடத்திர்க்கும் பதில் இடுவதற்கு பாராட்டுக்களை பெற்று கொள்ளுங்கள்.
// நீங்க பாட்டுக்கு எழுதுங்க.. நல்லாயிருந்தா கண்டிப்பா பின்னூட்டம் வரும்.//
உண்மை உண்மை. இதே கொள்கையுடன் தான் நான் என்னுடைய வலைபயனத்தை சில ஆண்டுகளாக தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறேன்.
ரஃபிக் ராஜா
காமிக்கியல்
ரா.கா. | SDLC
போதுமா அண்ணா!
ரொம்ப அழகாக உள்ளது.
அது சரி பின்னூட்டங்களுக்கு பதிலளிக்காத பிரபல பதிவர்கள் யாருன்னு சொல்லி இருந்தீங்கன்னு சொன்ன இன்னும் ஹிட்ஸ் எகிறி, பின்னூட்டமும் பிச்சுக் கொண்டு போயிருக்கும்.. ;)
:(:(:):)
மென்மேலும் உங்கள் பதிவுகள் தொடர வாழ்த்துக்கள்.. ரபீக்.. நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும். நீங்கள் கூறிய கருத்துகளுக்கு ரிப்பீட்டேய்ய்ய்ய்..
போதுமா அண்ணா!
ரொம்ப அழகாக உள்ளது.//
ரொம்பவும் நன்றி அன்பு.. உங்க அன்புக்கும், ஒட்டுக்கும்,
அதானே.. மோனி.. நல்ல தமாசு.. நன்றி..உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்
பின்னூட்டமிடறவங்க எல்லாருக்கும் அது யாருன்னு தெரியும்.. அங்க தானே நம்ம பதிவை பத்தி வாசகர்கள் யோசிச்சிகிட்டே யிருப்பாங்க.. (அப்பாடி.ஒரு வழியா தப்பிச்சாச்சு)
நன்றி லோஷன். உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்
மிக்க நன்றி சுப்பு.. உங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்கும்
அருமையான.. சரியான பின்னூட்டம் .. நன்றி அக்னி.. அது சரி படம்நல்லாயிருந்துச்சா..?
ஆச்சரியமா நானும் இந்த கமனாட்டிங்கள பத்தி, சாரி, கமண்ட்டாளிங்க பத்தி ஒரு இடுகை இட்டிருக்கிறேன். இஸ்திகினு வந்து படிங்க இங்கே: http://www.sathyamurthy.com/2008/12/21/commenters-how-important-are-they-for-blog-authors/
வந்தேன்,ஆனால் இது மாதிரி கூட எனக்கு எழுத வராது அதனால் பிழைத்து போகட்டும் என்று விட்டு விட்டேன் .ஐயோ ஐயோ !!!!!!!!!!!!!!
நாங்க யார் பாட்டுக்கு? என்ன எழுதணும்?
நல்ல வேளை, எங்களையே நீங்க பாட்டு எழுத சொல்லலை... சொல்லி இருந்தீங்க...! டங்கு டனால் தான்.
ஆனால் பதிவு எழுதுவது மிகவும் கஷ்டமானது என்பது வாஸ்தவ்ம் தான்..
எழுத முன்னம் என்னவோ நிறைய எழுத இருப்பது போல தோன்றும். தட்டச்ச உட்கார்ந்தால் வெட்ட வெளி பொட்டலில் கொண்டு போய் விட்டது போல் வெறிச்சென்று இருக்கும்.. :(
படித்து விட்டு கண்டிப்பாய் பின்னூட்டமிடுகிறேன். வந்து என் மானத்தை காப்பாற்றியதற்கு ந்ன்றிகள் பல சத்யமூர்த்தி
பரிசல் டச்.. மிக்க நன்றி பரிசல்..
வந்தேன்,ஆனால் இது மாதிரி கூட எனக்கு எழுத வராது அதனால் பிழைத்து போகட்டும் என்று விட்டு விட்டேன் .ஐயோ ஐயோ !!!!!!!!!!!!!!//
மிக்க நன்றி முத்து.. நீங்க திட்டினாலும் பரவாயில்லை.. முதல் முறையா வந்து பின்னூட்டமிட்டதக்கு நன்றிகள் பல.
ரொம்ப நன்றிங்க வினோத் கவுதம்..
என்னது போதுமா..? 75,000 ஹிட்ஸ் வந்ததுக்கு, அட்லீஸ்ட் 75 பின்னூட்டமாவது வாணாம்..>?
சதம் உண்மை..!
//சமிபகாலமாய் சில பெரும் பெயர் பெற்ற பதிவர்கள் அவர்களுக்கு வந்த பின்னூட்டத்திற்கு பதிலப்பதே இல்லை. மற்ற பதிவர்களின் பதிவுகளுக்கு பின்னூட்டமிடுவதில்லை.//
அந்த மாதிரி பெரிய பதிவர்களுக்கு நான் பின்னூட்டமே இடுவதில்லை....
For every action there is a opp reaction..
தலக்கனம் கூடிட்டிருக்குமோ!!!!!!!!!!
சேச்சே.. அப்படியெல்லாம் இலலை.. அவர்கள் மற்ற பதிவர்களையெல்லாம் தொடர்ந்து படிப்பதாலும், ஆணிபுடுங்குவதில் பிஸியாய் இருப்பதாலும் கூட இருக்கலாம்.. நான் கேட்பதெல்லாம் எழுதுற நேரத்துல இதுக்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்கணும்னுதான்.
ஒரு பின்னூட்டத்தில் "நமீதாவும் உலக சினிமாவும்" போட்டாதான் மக்கள் உள்ளே வருவாங்கன்னு அப்படின்னு சொல்ல போக அதற்கே ஒரு பதிவிட்டுவிட்டார் ஒருவர்.
இதற்கு பெயர்காரண நன்றி வேற..
வாழ்த்துக்கள்.
இப்போதான் ஆரம்பித்திருக்கிறேன்.
ஒரு சூடான இடுகையுடன்.
பார்க்கலாம் எப்படி போகுதுன்னு.!
பாராட்டுக்கள். :)