ஒரு பக்கா மசாலாவான காதல் கதை. சிம்மாச்சலமும, ஷாயாஜி சிண்டேவுக்கும் மத்திய மந்திரி பதவி கிடைப்பதில் போட்டி. சிம்மாச்சலத்தை ஜெயிக்க முடியாத ஷிண்டே அவரின் முதல் மனைவிக்கு பிறந்த மகள் ஹனிஷ்காவை கடத்தி சிம்மாச்சலத்தின் பழைய வாழ்க்கையை வெளிப்படுத்தி, அவனது மந்திரி சான்ஸை கெடுத்துவிட துடிக்கிறான். சிம்மாச்சலமோ.. தன் சொந்த மகளையே கொலை செய்ய துடிக்கிறான்.
இது ஒரு பக்கம் இருக்க.. கிருஷ் என்கிற ராம் மஞ்சுவை காதலிக்க தன் நண்பனின் மூலம் அவளுடய விருப்பு வெறுப்புகளை தெரிந்து கொண்டு, அவளை மடக்க முயற்சிக்கிறான். அப்படியே தமிழ் வாலியில் அஜித் சொல்லும் எபிசோடை எடுத்து கொள்ளுங்கள்.. அப்படியே போகிறது. ஒரு கட்டத்தில் மஞ்சு கிருஷிடம் தன் காதலை சொல்ல முடிவெடுக்கும் போது.. ராமின் கற்பனை காதலி நேரில் வர.. அப்புறம் ஆரம்பிக்கிறது கூத்து.
ராம் சூப்பராக ஆடுகிறார், பவன் கல்யாணை போல துள்ளலாய் நடிக்கிறார். இயல்பாய் காமெடி வருகிறது. நன்றாக சண்டை போடுகிறார். குறித்து வைத்து கொள்ளுங்கள் இவரை.
மஞ்சுவாய் ஷீலா.. அழகாய் இருக்கிறார். ஹனிஷ்கா வரும் வரை.. ஹனிஷ்கா ஒரு குட்டி பூமிகா போல இருக்கிறார். அழகாய்,மிக அழகாய் இருக்கிறார் ஆனால் நடிக்கத்தான் வரவில்லை. ஷீலா அவருக்கு கொடுத்த பாத்திரத்தில் மின்னுகிறார். இந்த பெண்ணும் ஒரு அண்டர் எஸ்டிமேட்டட் ஆர்டிஸ்ட்.
சேகர் வி.ஜோசப்பின் ஒளிப்பதிவு அருமை. அதிலும் வெளிநாட்டு பாடல் காட்சிகளில் துல்லியம். சக்ரியின் இசை பரவாயில்லை ரகம் ஒன்றும் பழுதில்லை. வழக்கம் போல் இந்த படத்துக்கு எம்.எஸ்.ராஜுவின் திரைக்கதை.. க்ளைமாக்ஸ் வரைக்கும் பரபரவென எடுத்திருக்கிறார்கள். க்ளைமாக்ஸில் கொஞ்சம் மெனக்கிட்டிருக்கலாம்.
இயக்குனர் பி.கோபால் அவர்களுக்கு இது ஒரு கம்பேக் படம்.. நிச்சயமாய் ஒரு கம்பேக் படம் தான்.
மஸ்கா - மஜா..
உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Post a Comment
22 comments:
ராம், சிரஞ்ஜீவி மகன் தானே?
//ராம், சிரஞ்ஜீவி மகன் தானே?//
இல்லை அருண்.. எதோ ஒரு ப்ரொடியூசரின் மகன் என்று நினைக்கிறேன். நிச்சயமாய் சிரஞ்சீவியின் மகன் இல்லை.. அவர் பேர் ஏதோ தேஜா என்று வரும்
நாங்க எல்லாம் டமில்,டெலுகு படமெல்லாம் பாக்க மாட்டோம் ஒன்லி வேல்டு மூவிஸ்தான்..
யப்பா நான்கூட கேப்பிடேய்ஸ்னு ஒரு தெலுங்கு படம் வாங்கி வெச்சிருக்கேன்
பாப்போம் எப்படி இருக்குன்னு
சிரஞ்சீவியின் மகன் பெயர் ராம் சரண் தேஜா
//நாங்க எல்லாம் டமில்,டெலுகு படமெல்லாம் பாக்க மாட்டோம் ஒன்லி வேல்டு மூவிஸ்தான்..//
அப்படியா.. ?????:):):)
குடுகுடுப்பை சார்.. ஹேப்பி டேஸ் படத்தை வாங்கி வச்சிருக்கீங்களா.. உடனே பாருங்க.. அதை பற்றிய பதிவுக்கு http://cablesankar.blogspot.com/2008/10/happy-days.html இங்கே போங்க..
//சிரஞ்சீவியின் மகன் பெயர் ராம் சரண் தேஜா//
என்னா உலக் சினிமா அறிவு..???
:):)_:):):)
படிச்சிட்டேன், அப்பாலிக்கா வாறேன்.
சங்கர்,
திரைப்படம் சார்ந்த பார்வையை அதிகளவு உங்கள் பதிவில் சொல்லி வருகிறீர்கள். நுனிப்புல் மேய்வது போல் இருந்தாலும் என்னையும் சேர்த்து பதிவர்கள் உங்கள் பதிவை ஆவலுடன் படிக்கிறார்கள். ஒன்றிரண்டு முறை இயக்குநராகும் உங்கள் கனவு, ஆசையையும் வெளிப்படுத்தி இருக்கிறீர்கள். வெற்றி பெற வாழ்த்துகள்.
ஆனால், தமிழ் அல்லாத மற்ற மொழி படங்கள் குறித்து கருத்து சொல்லும்போது 'ஃபேக்சுவல் எரர்ஸ்' வந்துவிடுகின்றன. அவற்றை சுட்டிக்காட்டவே இந்தப் பின்னூட்டம்.
உதாரணமாக, இந்தப் பதிவில்,
//வழக்கம் போல் இந்த படத்துக்கு தில் ராஜுவின் திரைக்கதை..//
என குறிப்பிட்டுள்ளீர்கள்.
உண்மையில் 'தில்' ராஜு வேறு, எம். எஸ். ராஜு வேறு. நீங்கள் குறிப்பிட்டுள்ள 'தில்' ராஜு, 'தில்' ('குத்து'), 'ஆர்யா' (தனுஷின் அடுத்த படமான 'குட்டி'), 'பொம்மரிலு' ('சந்தோஷ் சுப்பிரமணியம்'), 'முன்னா', பொகரு', இப்போது 'அபியும் நானும்' படத்தின் தெலுங்கு ரீமேக் (டப்பிங்?), என கலந்து கட்டி அடிப்பவர். அடிப்படையில் விநியோகஸ்தர். 'ஹேப்பி டேஸ்' திரைப்படத்தை மொத்தமாக வாங்கி ஆந்திரா முழுக்க வெளியிட்டவர். இவரது நிறுவனம் ஒரு படத்தை விநியோகிக்க வாங்குகிறது என்றாலே டோலிவுட் பரபரப்பாகிவிடும்.
நிற்க,
'மஸ்கா'வின் தயாரிப்பாளரும், திரைக்கதை ஆசிரியரும் எம். எஸ். ராஜு. தெலுங்கில் இவரை 'சங்க்ராந்தி கிங்' என்கிறார்கள். பல தோல்விப் படங்களுக்கு பின், 'அம்மன்', 'ஒக்கடு', ('கில்லி'), 'வர்ஷம்' ('மழை'), 'உனக்கும் எனக்கும் சம்திங்' என தொடர்ந்து பொங்கல் திருநாளில் வெற்றி பெற்றவர். ஆனால், 'பவுர்ணமி'யில் வாங்க ஆரம்பித்த அடி, சென்ற ஆண்டு வந்த 'ஆட்டா' வரை தொடர்ந்தது. இனி இவர் சங்க்ராந்தி கிங் அல்ல, பொங்கல் ஜோக்கர் என டோலிவுட் சொல்லி வந்த வேளையில், 'மஸ்கா' மூலமாக மீண்டும் சங்க்ராந்தி அறுவடை செய்திருக்கிறார்.
இந்நேரம் கோலிவுட்டில் யாராவது இந்தப் படத்தின் ரீமேக் ரைட்ஸை வாங்கியிருப்பார்கள். அது வேறு விஷயம்.
ஆனால் சங்கர், மற்ற மொழி கமர்ஷியல் படங்கள் குறித்து தமிழ் பதிவர்களுக்கு சொல்ல வேண்டும் என்ற உங்களது ஆசை நியாயமானது. வரவேற்க்கத்தக்கது. அதற்காக தகவல் பிழையுடன் எழுதாதீர்கள்.
இன்னொன்று, தெலுங்குப் படம் குறித்து கருத்து சொல்லும்போது 'ஐடியல்பிரைன்.காம்', 'தெலுங்குசினிமா.காம்', போன்ற ஆங்கில இணையதளத்தில் வெளிவரும் விமர்சனங்களிலுள்ள சில வரிகளை தமிழ்ப்படுத்தி, உங்களது சரக்காக பதிவேற்றாதீர்கள்.
அது, உங்கள் ரசனையையே கேள்விக்குள்ளாக்குகிறது.
//நுனிப்புல் மேய்வது போல் இருந்தாலும் என்னையும் சேர்த்து பதிவர்கள் உங்கள் பதிவை ஆவலுடன் படிக்கிறார்கள். //
நான் நுனிப்புல் மற்ற மொழி படங்களை பற்றி எழுதும்போது நுனிப்புல் தான் மேய்வேன் ஏன் என்றால் தமிழ் கூறும் நல்லுகத்திற்க்கு அவர்களை பற்றி தெரியாது அதனால். முடிந்தால் என்னுடய் ஹாப்பி டேஸ் விமர்சனங்களை படித்து பார்க்கவும்.
//'ஃபேக்சுவல் எரர்ஸ்' //
எனக்கு எப்பவுமே தில் ராஜூவுக்கும், எம்.எஸ்.ராஜூவுக்கு குழப்பம் ஜாஸ்தி.. தவறை சுட்டி காட்டியதற்க்கு நன்றி.. திருத்திவிடுகிறேன். ஆனால் பொத்தாம் பொதுவாய் தவறான தகவல் தருகிறேன் என்று குற்றம் சொல்வது.. சரியில்லை என்றே தோன்றுகிறது.
//இன்னொன்று, தெலுங்குப் படம் குறித்து கருத்து சொல்லும்போது 'ஐடியல்பிரைன்.காம்', 'தெலுங்குசினிமா.காம்', போன்ற ஆங்கில இணையதளத்தில் வெளிவரும் விமர்சனங்களிலுள்ள சில வரிகளை தமிழ்ப்படுத்தி, உங்களது சரக்காக பதிவேற்றாதீர்கள்.//
நான் படம் பார்த்து விட்டுதான் விமர்சனம் எழுதுகிறேன். விமர்சனஙகளை படித்து விட்டு அல்ல.. நான் ஏற்கனவே பல விமர்சனங்களை எழுதி அனுபவப்பட்டவன் ஆதலால்.. மறு மொழியாக்கம் செய்யும் தலைவிதி எனக்கில்லை.. ஒரு படம் நன்றாக இருக்கிறது.. அல்லது கதை பற்றி சொல்லும் விஷயம் போன்றவற்றில் எல்லா விமர்சனங்களிலும் ஒற்றுமை இருப்பது தவிர்க்க முடியாதது என்பது என் தாழ்மையான கருத்து..
//அது, உங்கள் ரசனையையே கேள்விக்குள்ளாக்குகிறத//
என் ரசனையை அவ்வளவு உயர்ந்த இடத்தில் வைத்தமைக்கு நன்றி..
சங்கர்,
எனது பின்னூட்டம் உங்களை அதிகளவு வருத்தப்பட வைத்திருக்கிறது என்பது நீங்கள் அளித்த 3 பதில்களின் மூலமாக தெரிகிறது.
தங்களை சங்கடப்படுத்த வேண்டும் என்பது என் நோக்கமல்ல. முகம் தெரியாத மனிதர்களை நட்பாக்கும் வசதி இணையத்துக்கும், பதிவுகளுக்கும் இருக்கிறது. அந்த வகையில் முன்பின் அறிமுகமில்லாத நாம் இருவரும் தோழமை கொள்வது இப்படியாகத்தான்.
எனவேதான் ஒரு நண்பனுக்கு சொல்வது போல் பின்னூட்டம் செய்தேன். அது உங்களை கோபப்படுத்தியிருக்கிறது.
சரி, விடுங்கள். அப்புறம், நுனிப்புல் குறித்து நீங்கள் குறிப்பிட்டுள்ள பதில் அதிர்ச்சியடைய வைக்கிறது. தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு பிற மொழிப் படங்களை அறிமுகப்படுத்தும் போது நுனிப்புல் மேய்வதில் தவறில்லை என்பதாக சொல்லியிருப்பது ஏற்கும்படி இல்லை.
ஆவலுடன் உங்கள் பதிவை படிக்க வரும் நண்பர்களுக்கு தெரியாததை சொல்லித்தருவதுதான் முறை. அழகு.
'தில்' ராஜு, எம். எஸ். ராஜு குறித்து எப்போதுமே உங்களுக்கு குழப்பம் இருக்கும் என்றால், அதை தீர்த்துக் கொண்டு பதிவு எழுதலாமே நண்பா?
//எனவேதான் ஒரு நண்பனுக்கு சொல்வது போல் பின்னூட்டம் செய்தேன். அது உங்களை கோபப்படுத்தியிருக்கிறது.//
கண்டிப்பாக கோபமில்லை நண்பரே.. என்னுடய தரப்பை புரிய வைப்பதற்கான முயற்சி..
//'தில்' ராஜு, எம். எஸ். ராஜு குறித்து எப்போதுமே உங்களுக்கு குழப்பம் இருக்கும் என்றால், அதை தீர்த்துக் கொண்டு பதிவு எழுதலாமே நண்பா?/
அந்த குழப்பத்தினால் ஏற்பட்ட தவறு என்று சொன்னேனே தவிர தெரியாது என்று சொல்லவில்லை நண்பா.. அது மட்டுமில்லாமல் தவறை சுட்டிக் காட்டினால் மாற்றி கொள்ளாதவன் அல்ல நான். நீங்க்ள் சுட்டி காட்டிய தவறை ஏற்று மாற்றியிருக்கிறேன். நான் ஒன்றும் என்சைக்ளோபீடியா அல்ல.. எல்லா தகவல்களையும் நூற்றுக்கு நூறு சரியாய் சொல்வதற்க்கு.. அப்படி நீங்கள் என்னை எண்ணியிருந்தால் அந்த பெருந்தன்மைக்கு நன்றி..
அதே போல் நுனிப்புல் மேய்வதை பற்றி நான் சொன்னதும் அதே அர்த்தத்தில்தான். மற்ற மொழி படங்கலை பற்றி நான் எழுதும்போது அதுவும் சுமாரான படமாக இருந்தால், நுனிப்புல் தான் மேய்வேன். அதே என்னை பாதித்த படமாய் இருந்தால் அந்த கலைஞனை பற்றி சொல்லி மற்ற்வர்கள் தெரிந்து கொள்ளவேண்டும் என்று மெனக்கெடுவேன். நீங்கள் என்னுடய் பழைய மற்ற மொழி படங்களை பற்றிய விமர்சனங்க்ளில் தெரிந்து கொள்ளலாம். என்னுடய எ.வ.த.இ.ம. படங்களில் விமர்சனங்களை படித்து விட்டு சொல்லுங்கள்..
எம்.எஸ்.ராஜூ இயக்கிய முதல் ப்டம் வானா.. கன்னடத்தில் முங்காரு மலே.. என்கிற் படத்தின் ரீமேக். தெலுங்கில் வினய் அறிமுகமான படம். மிகப் பெரிய தோல்விபடம் .
இந்த அளவுக்கு எம்.எஸ்.ராஜுவை பற்றி தெரிந்து வைத்திருக்கிறேன்.
நுனிப்புல் மேயும் எனக்கு ஏதோ இந்த அளவுக்கு தெரிந்து வைத்திருக்கிறேன்.
நமக்கு தெரிந்ததை எல்லாம் கொட்டி தீர்க்கும் இடமல்ல பதிவுலகம். கொஞ்சம், கொஞ்சமாய் எல்லா பதிவர்கள், வாசகர்கள் மனதில் பதிய எளிமையான விஷயங்களுக்கு நடுவில், தேவையென்றால் விவரங்களை அளிக்கலாம் என்பது என்னுடய தாழ்மையான கருத்து.
ஆணியெல்லாம் புடுங்கியாச்சா?
//ஆணியெல்லாம் புடுங்கியாச்சா?/
ம்..ம்.. புடுங்கிட்டிருக்கேன். அத்திரி..
superr
///Cable Sankar said...
//ஆணியெல்லாம் புடுங்கியாச்சா?/
ம்..ம்.. புடுங்கிட்டிருக்கேன். அத்திரி..///
பதிவையும், பின்னூட்டங்களையும் படிச்சாலே தெரியுது..
Post a Comment