உலக சினிமா - STAR MAKER -

1954 இத்தாலிய கிராமங்களில் டிவிகூட அவ்வளவாக நுழையாத காலம், ஜோமொரிலி என்பவன் ஓரு பழைய லாரி போன்ற வாகனத்தில், ஊர் ஊராக சுற்றி, தான் ரோமில் இருக்கும் கொலப்பியா பிக்சர்ஸின் ஆள் என்றும், சினிமாவில் நடிக்க ஆட்களை தேர்வு செய்வதற்காக வந்திருப்பதாகவும், உங்களில் யார் வேண்டுமானாலும், திரைப்படங்களில் நடிக்க முடியும், அதற்கான ஸ்கிரின் டெஸ்ட் எடுப்பதற்கு ஆயிரம் லியர் வரை வாங்கி கொண்டு, அவன் திருடி கொண்டுவந்த கேமராவும், எக்ஸ்பயரி ஆகிய பிலிம் ரோலை வைத்துக் கொண்டு ஒவ்வொரு கிராமமாய் போய், டேரா போட்டு, பணத்தை வசூலிக்கிறான். இவன் படம்பிடிக்கும் எல்லாருடைய காட்சிகளையும் போட்டு பார்த்துவிட்டு அவர்களில் ஒருவரை கொலம்பியா பிக்சர்ஸ் தேர்தெடுக்கும் என்று சொல்லி ஏமாற்றுகிறான். அப்படி டேரா போட்டிருந்த ஓரு கிராமத்தில் பியாட்டா என்பவள், தன்னை எப்படியாவது பெரிய கதாநாயகியாக்கிவிடுமாறு வ்ந்து கேட்கிறாள். யாருடய ஆதரவில்லாமல் வீடுகளையும், அலுவலகங்களையும், சுத்தம் செய்து பிழைப்பை ஓட்டிக் கொண்டு, ஓரு தேவாலயத்தின் ஆதரவில் இருக்கும் தன்னிடம் அவன் கேட்குமளவுக்கு பணம் இல்லை என்கிறாள். ஓரு கட்டத்தில் அவளின் அழகு அவனை இறங்கி வர...