த நா. 07.அல.4777 - திரைவிமர்சனம்
மூன்று அஸ்கர் விருதுகளை வாங்கி இந்தியாவுக்கு பெருமை சேர்த்த எ.ஆர்.ரகுமானுக்கும், ரசூல் பூக்குட்டிக்கும் நன்றி... நன்றி.. நன்றி.

ஆங்கிலத்தில் Changing Lanes என்கிற பெயரில் சாமுவேல் ஜாக்சனும், பென் அஃலெக்கும் நடித்த படம். அது அப்படியே இந்தியில் டாக்ஸி நெ.9211 என்கிற பெயரில், நானா படேகர் நடித்த வெளிவந்தது, இதனின் தமிழ் பதிப்புத்தான் பசுபதி, அஜ்மல், மீனாட்சி ஆகியோர் நடித்து வெளிவந்துள்ள தநா.07.அல.4777.

வீட்டில் எல்.ஐ.சி. ஏஜெண்டாக இருப்பதாய் பொய் சொல்லிவிட்டு, கால்டாக்ஸி டிரைவராய் வேலை பார்க்கும், முன் கோபக்கார பசுபதி. மிகப் பெரிய கம்பெனியின் வாரிசான கவுதம் ஐய்யங்காருக்கு தன் சொத்தை காப்பாற்றி கொள்ள வேண்டிய கட்டாயத்தில் கோர்டுக்கு போய் கொண்டிருக்கும், திமிர் பிடித்த பணக்கார திமிர் பிடித்த ஒரு முதலாளீத்துவ இளைஞன், அவனின் காதலியாய் மீனாட்சி.
மேற்சொன்ன இருவரும் ஒரு சந்தர்பத்தில் பசுபதியின் காரில் பயணம் செய்ய நேரிடுகிறது. அந்த நிகழ்வு அவர்கள் இருவரது வாழ்கையையும் புரட்டி போட்டு விடுகிறது. அதிலிருந்து அவர்கள் எப்படி மீண்டார்கள்? என்பதை பரபரப்பான ஒரு இரண்டு மணி நேர பயணமாய் கொடுத்திருக்கிறார்கள்.

சாமுவேல் ஜாக்சன், நானாபடேகர், ஆகியோருடன் பசுபதியை கம்பேர் செய்தால் பல மாற்று குறைந்ததாகத்தான் தெரியும். ஆனால் தனியே பார்த்தால் பசுபதி மின்னுகிறார். அஜ்மலுக்கு திமிர் பிடித்த ஹெப்பான வேடம், ஹெப்பாகவே செய்திருக்கிறார். மீனாட்சி குத்தகைக்கு விட்டிருந்த அடக்க ஒடுக்கத்தை விட்டு வெளியேறி மதர்த்த மார்பை, மிதத்தபடி வருகிறார். பசுபதியின் மனைவியாய் சிம்ரன். மேடம் பேசாமல் நீங்கள் சீரியல் பக்கமே இருக்கலாமே.. உங்கள் முகத்தில் அதற்குரிய எல்லா தகுதிகளும் உள்ளது. பாக்க முடியல.. பார்க்கும் போதெல்லாம் உங்க பழைய முகம் நினைவுக்கு வருது.

இயக்குனர் லஷ்மிகாந்தன் ஒரிஜினல ஹிந்தியின் பதிப்பை மறுபதிப்பிட்டிருக்கிறார். பல இடங்களில் கட்டின்யூட்டி மிஸ்ஸிங். மற்றபடி குறை சொல்ல ஏதுமில்லை. நீட்.
இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் பாடலில் ஏற்கனவே ஹிட்டான சுராங்கணியின் மறுபதிப்பான ஆத்திச்சூடி ஹிட்.. பிண்ணனி இசையும் ஓகேதான்.
R.B.குருதேவின் ஒளிப்பதிவு உற்சாகம் அளவுக்கு இல்லையென்றாலும் குறையில்லை, எடிட்டிங் நறுக் என்று எல்லா விஷயங்களீலும் எந்தவித குறையுமில்லாமல் நீட்டான ஒரு டிரைவ்..
தநா.07.அல.4777 - நல்ல வண்டி..
உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

Comments
அப்படியெல்லாம் இல்லை..பாலா.. ஏற்கனவே வெள்ளிக்கிழமையே எழுதி வைத்தாகிவிட்டது.. திரைக்கதையை சொல்லிவிட்டால் படம் பார்பதற்கு இண்ட்ரஸ்ட் இல்லாமல் போய் விடும் என்பதால் டீடெய்லாக சொல்லவில்லை.
போயிருக்கலாமே கார்க்கி...சரி ஊருக்கு போயாச்சா..?
வாழ்த்துக்கள் எ.ஆர்.ரகுமானுக்கும், ரசூல் பூக்குட்டிக்கும்..
Great job guys.
ஆமாம் சார்.. கொஞ்சம் மிதப்பாகவே இருக்கிறது...
ஆமாம் சார்.. திரைக்கதையை முழுசாய் சொல்லிவிட்டால் இம்மாதிரியான் படத்துக்கு பெப் இல்லாமல் போய்விடும் அதனால்தான்.. நன்றி ராமசுப்ரமணியசர்மா சார்..
நிச்சயமாய் பார்க்கலாம் வித்யா..
அதுக்கு அவரை விட்டாஆளில்லை.. நவநீதன்.
கண்டிப்பா பாருங்க ஆனந்த்.. பார்த்துட்டு உங்க விமர்சனத்தை சொல்லுங்க..
அப்படின்னா அவரு உணமையிலேயே எல்.ஐ.சி. ஏஜெண்டா?
/*கால்டாக்ஸி டிரைவராய் வேலை பார்க்கும், முன் கோபக்கார பசுபதி. மிகப் பெரிய கம்பெனியின் வாரிசான கவுதம் ஐய்யங்காருக்கு*/
இதுதான் பசுபதி வேலை பார்க்கும் காரா?
/*தனியே பார்த்தால் பசுபதி மின்னுகிறார்*/
எனக்கு அவரு, என்னை மாதிரி கருப்பா தான் தெரியுறார்.
/* எடிட்டிங் நறுக் */
எடிட்டிங் என்றாலே நறுக் தானே? ஆமா... இது தினமலர் ஸ்டயில் நறுக் இல்லையே????
ஹி...ஹி..குற்றம் கண்டுபிடிச்சே பேர்வாங்கற நக்கீரன்.
அதைத்தான் ஏற்கனவே படம் போட்டு சொல்லிவிட்டேனே அனானி
நன்றி காஞ்சனா ராதாகிருஷ்ணன்..உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும்
முடியல.. எப்படிங்க நைனா.. இப்படி யோசிக்கிறீங்க..
இந்த மாதிரி ஏதாவது போட்டு எங்கள படம் பார்க்க வச்சிருங்களே..தல ;)
தியேட்டர்ல போய் படம் பார்த்தாதானே.. சினிமாவுக்கு நல்லது தலைவரே.. நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.
"தநா.அல.07.4777" - மீனாட்சி குத்தகைக்கு விட்டிருந்த அடக்க ஒடுக்கத்தை விட்டு வெளியேறி மதர்த்த மார்பை, மிதத்தபடி வருகிறார்
சங்கர் - மதர்ப்பு அப்படிங்குறதுக்கு தமிழ்ல சரியான அர்த்தம் என்னான்னு தெரிஞ்சுக்கலாமா ..
தப்பா எடுத்துக்க வேணாம் நண்பா.. உண்மையிலேயே எனக்கு தெரியாது அதான் கேட்டேன்..
கேபிள் சங்கர்