Arundhadhi - Telugu Film Review

லாஜிக் இல்லாத பல உட்டாலக்கடி மாயாஜால ஆங்கில படங்களை அதனுடய பரபரப்பான திரைக்கதைகாக பார்பவரா..? கிராபிக்ஸ் அட்டகாசத்துக்காக பார்பவரா..? அப்படியென்றால் இதோ உங்களுக்காக.. ஒரு அட்டகாசமான படம் “அருந்ததி”
கத்வால் குடும்பத்தின் ஓரே பெண் வாரிசான அருந்ததிக்கு அவளுடய காதலனுக்கும் திருமணம் நிச்சயிக்க படுகிறது. திருமணத்துக்கு முன்னால் தங்களுடய பாரம்பரிய கத்வால் அரண்மனைக்கு வருகிறாள். அங்கு சில நாட்கள் தங்கி இருந்துவிட்டு போக இருக்கும் போது, அங்கே அவளைபோலவே உருவம் கொண்ட அவளது பாட்டியின் உருவ படத்தை பார்த்து அவளை பற்றி கேட்கிறாள். அதே சமயத்தில் அந்த கோட்டையின் அருகில் உள்ள ஒரு பாழடைந்த கோட்டையில் உள்ள ஒரு கெட்ட சக்தி அவளை அடைய நினைக்கிறது. மூன்று தலைமுறைகளுக்கு முன்னால் ஜெஜெம்மா என்கிற அருந்ததியினால் கொல்லப்பட்ட அவளது மாமன் பசுபதியின் ஆவீ, தற்போது இருக்கும் அருந்த்தி பழைய அருந்ததியின் மறுபிறவி என்பதால் பூர்வ ஜென்மத்தில் அடைய முடியாதவளை, பசுபதி அரூப ரூபத்தில் அடைய துடிக்கிறான்.
இதையெல்லாம் படிக்கும் போது, ஏதோ அம்புலிமாமா கதை போல் இருந்தாலும், படம் ஆரம்பித்ததும் நம்மை கட்டி போட்டு விடுகிறார்கள், அந்த அளவுக்கும் இறுக்கமான திரைக்கதை, ஒளிப்பதிவு, கிராபிக்ஸ் என்று போட்டி போட்டு பின்னி எடுக்கிறார்கள்.

அருந்ததியாய் அனுஷ்கா இரட்டை வேடங்களில், மழையிலும், வெளிநாட்டு கடலோரங்களீலும், ஹீரோக்களுடன் உருண்டு புரண்டவரா..? சும்மா அசத்தியிருக்கிறார். அதிலும் அவரது உயரமே பழைய அருந்ததிக்கு “ஜெஜெம்மா” என்று மக்களால் கடவுளை போல வழிபடும் அந்த கேரக்டருக்கு ஒரு கெத்தை கொடுத்திருக்கிறது.
சோனு சூட்.. மாமன் பசுபதியாய்.. அவருடய நடிப்பு படத்திக்கு மிகப்பெரிய பலம்.. சரியான வில்லன்.
அதே போல் முஸ்லிம் மந்திரவாதியாய் வரும் ஷாயாஜி ஷிண்டே.. சரியான தேர்வு.. அவரும் அவருடய பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். இம்மாதிரியான படங்களில் எல்லாம் என்னத்தை நடிக்க இருக்கிறது என்பதை, மோசமான நடிப்பு, மற்றும் திரைக்கதை, டெக்னிகல் அம்சங்கள் உள்ள படஙக்ளை பார்த்தால் புரியும்.
முதல் பாதியில் திரைக்கதை பேய் வேகம்.. பழைய அருந்ததியின் கதையை ஒரேயடியாய் சொல்லாமல், பிரித்து, பிரித்து, படம் முழுவதும் வருவது போல் சொல்லி, படத்தின் வேகத்தை கூட்டியிருப்பது நல்ல உத்தி. என்ன க்ளைமாக்ஸை இன்னும் கொஞ்சம் யோசித்திருந்தால் பிரமாதபடுத்தியிருக்கலாம்.

கோட்டியின் இசையில் ஆங்காங்கே பழைய இளையராஜாவின் பாடல்கள் தெரிகிறது. அதிலும் ஒரு பாடலில் பெண் குரலில் “ராஜதீபமே” பாடல். அனுஷ்கா ஆடும் ஒரு டிரம் டான்ஸ் எங்கயோ ஒரு ஜாப்பானோ, சைனீஸ் படத்திலோ பார்த்த மாதிரியிருக்கிறது.. இருந்தாலும் ரொம்ப புவர்.
ஒளிப்பதிவு செந்தில்குமார்.. இம்மாதிரியான படங்களுக்கு ஏற்ற ஒளிப்பதிவு. அதே போல் எடிட்டிங்கும் அருமையாக இருக்கிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு, அம்மன் படத்தை தந்த கோடி ராமகிருஷ்ணாவின் இயக்கத்தில் வெளிவந்திருக்கிற படம். ஆந்திராவில் சுக்கை போடு போடுகிறதாம். சென்னையில் ஒரே ஒரு வாரத்துக்கு வெளியிட்டிருக்கிறார்கள். கண்டிப்பாய் தமிழில் டப்பிங்கில் வரும். வந்தால் மிஸ் செய்யாமல் பார்கலாம்.
இப்புடே.. சூடண்டி.. தப்பக சூடண்டி.. அருந்ததி..
உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Comments
டிவிடி-ல சப் டைட்டிலு வந்தாலு நேனு காணாரண்டி.
//
நிச்சயம் பாருங்க பாலா.. படம் நல்லாவே இருக்கு.
வாங்க அத்திரி. என்ன ஊருக்கு போயிட்டீங்களா..?
நீங்க தெலுங்கு படம் பார்க்கச் சொல்றீங்க..
சரி.. படம் பார்க்கலன்னா என்ன.. உங்க விமர்சனமே படம் பார்த்த திருப்திய தந்துடுத்து..
நல்ல நடுநிலையான விமர்சனம்ங்க..
சந்தோஷமுங்களா?
மிக்க நன்றி இராகவன். உஙக்ளின் வாழ்த்துகள் என்னை மேலும் உற்சாகபடுத்துகிறது.
ரொம்ப சந்தோஷம் சார்.. மிக்க நன்றி
நிச்சயமா ஏதாவது ஒரு டீவில வரும் ஆனா விஜய்ல வர்றது சந்தேகம் தான்.
அத விடுங்க தல.. கொஞ்சம் மூளையெல்லாம் கழட்டி வச்சிட்டு படம் பாருங்க.. சினிமா அதிரிபோயிந்தி..
எதை மாத்தி போடறது.
ம்ஹூம்ம்ம்.. அனுஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்கா... ம்ஹூம்ம்ம்ம்ம்..
ஏன் சார் இப்படி? நீங்க பாத்திங்கனா உங்களோட வச்சுக்க மாட்டீங்களா?.
ஏன் சார் இப்படி? நீங்க பாத்திங்கனா உங்களோட வச்சுக்க மாட்டீங்களா?.//
அதுக்காக எல்லாம் கவலை பட்ட முடியுமா..? கவலைபடாதீங்க.. இந்த படம் கண்டிப்பா ரீமேக் பண்ணமாட்டாங்க.. டப்பிங்தான் ஆகப்போவுது. அதுக்கப்புறம் ஹிந்தியில ரீமேக் பண்ணறாங்க.. அசின் நடிக்கிறாதா கேள்வி.
copied from a chines movie.graphics is excellent.but graphics comes only within first 2 reels.after that no logic ,very ordinary movie.
your review is very true
விமர்சனத்துல ஒரு நடுநிலை தெரியுது.
ஆமா, இத்தன சினிமா பாக்கறதுக்கு உங்களுக்கு எங்கிருந்தைய்யா நேரம் கிடைக்குது. உங்களைப்பார்த்தா பொறாமையா இருக்கு.