தெலுங்கு ரசிகர்கள் வித்யாசமானவர்கள், ஒரு பக்கம் பக்கா மசாலா படங்களும் ஓடும், இன்னொரு பக்கம் முழுக்க, முழுக்க காமெடி படங்களும், இன்னொரு பக்கம் சங்கராபரணம் போன்ற படங்களும் ஓடும். அவர்களின் ரசனை மிகப் பெரிய விஸ்தீரணம் கொண்டது.
அஸ்தா சம்மா.. சமீபத்தில் சில மாதங்களுக்கு வெளியான சின்ன பட்ஜெட் படம். பட் பெரிய வசூல் பெற்ற படம். நம்ம சுப்ரமணியபுரம் சுவாதிதான் கதாநாயகி.. கதாநாயகர்கள் இருவரும் புதியவர்கள்.
லாவண்யா நடிகர் மகேஷ்பாபுவின் வெறிபிடித்த ரசிகை. மகேஷ்பாபுவுக்கு திருமணம் ஆனதிலிருந்து மிக பெரிய வருத்தத்தில் இருப்பவள். இதனால் அவளது அத்தை பார்க்கும் எந்த வரனையும் தட்டி கழித்து வருபவள். பக்கத்து வீட்டில் அவளுடய நண்பன் ஆனந்த் அவளை கன்வின்ஸ் செய்ய, ஒரு வழியாய் அட்லீஸ்ட் மகேஷ் என்கிற பேர் உள்ளவனாகவாது வேண்டும் என்று கேட்கிறாள். அவளூக்காக ஆனந்த் மகேஷ் என்கிற பெயரில் உள்ள இளைஞர்களை தேட ஒரு வழியாய் மகேஷ் என்கிற ஒருவனை கண்டுபிடித்து லாவண்யாவுக்கு அறிமுகபடுத்த, இருவருக்கும் காதல் பிறக்கிறது. ஆனால் மகேஷின் இயற்பெயரோ ராம்பாபு.. லங்காவரம் என்கிற கிராமத்தின் மிகப்பெரிய மரியாதை கொண்டவன். அது வேறு கதை.
இந்த் சந்தடி சாக்கில் ஆன்ந்த் மகேஷின் கிராமத்துக்கு செல்ல, அங்கே மகேஷின் தங்கை பார்த்ததும் காதல் கொள்கிறான். அவளோ தன்னுடய் அண்ணன் எப்போது மகேஷை பார்க்க போகிறேன் என்று சொல்லி போகும் அண்ணனின் நண்பர் என்று அவனிடம் தன் மனதை பரிகொடுக்கிறார். லாவண்யா, ராம்பாபு என்கிற மகேஷை அடைந்தாளா..? மகேஷ் என்று நினைத்து காதலிக்கும் மகேஷ் என்கிற ராம்பாபுவின் தங்கை, ஆனந்தை ஏற்றாளா.? என்பது மீதி கதை..
சுப்ரமணியபுரத்தில் பார்த்த சுவாதியா.? ஒரே துள்ளலும், ஆட்டமும் , குதூகலமுமாய் மகேஷ்பாபுவின் வெறி பிடித்த ரசிகைகளை வெளிப்படுத்துகிறார். அவருடய காதலராக புதுமுகம் நாநி.. ஓகே. ஆனந்தாக வரும் ஸ்ரீனிவாஸ் தான் மனதில் நிற்கிறார். மிக இயல்பான நடிப்பு, காமெடி பாடி லேங்குவேஜும், டயலாக் டெலிவரியும் சூப்பர். கொஞ்சம் சந்திரபாபுவை ஞாபகப்படுத்தினாலும் மிக இயல்பான நடிப்பு. அவரின் காத்லியாய் பார்கவி..இவர் சமீபத்தில் ஹைதாராபாதில் கொலை செய்யப்படவர். மிகப்பெரிய கேரக்டர் இல்லாவிட்டாலும் ஓகே.
படத்தின் முக்கியமாய் பாராட்ட பட வேண்டியவர் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய மோகனகிருஷணா இந்திராகாந்தி அவர்களை.. மிக சுமாரான கதையை வைத்துக் கொண்டு நகைச்சுவை இழையோடும் ஒன்லைனரர் வசனங்களையும், சுறுசுறுப்பான திரைக்கதையை கொடுத்து உட்கார வைத்துவிடுகிறார். பல இடங்களில் வசனம் சூப்ப்ர்.
கல்யானிமாலிக்கின் இசை ஓகே. ரகம். பி.ஜி.விண்டாவின் ஒளிப்பதிவு உபத்தரவமில்லை.
அஸ்தா சம்மா - A feel good film
உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Post a Comment
19 comments:
எந்வந்டி பிச்சர் பாகுந்தா!
இந்த படத்தை நானும் பார்த்தேன் நல்ல படம். நல்ல விமரிசனம்.
கொஞ்சம் இஷ்டம், கொஞ்சம் கஷ்டம் இன்னும் பாக்கலயா? உங்க review எதிர் பார்த்து காத்திருக்கும் ஒரு தெலுங்கு பட ரசிகன்.
Ok..
present sir...
//எந்வந்டி பிச்சர் பாகுந்தா!//
சால பாககுந்தி..
//இந்த படத்தை நானும் பார்த்தேன் நல்ல படம். நல்ல விமரிசனம்.//
நன்றி அக்னிபார்வை.
//Ok..
present sir...//
வாங்க.. வாங்க்.. எங்க உங்க நையாண்டிய காணம்..?
//கொஞ்சம் இஷ்டம், கொஞ்சம் கஷ்டம் இன்னும் பாக்கலயா? உங்க review எதிர் பார்த்து காத்திருக்கும் ஒரு தெலுங்கு பட ரசிகன்.//
இன்னைக்கு போடணும்னு நினைச்சேன். ஆனா இத எழுதி வச்சு ரொம்ப நாளாச்சு.. நாளைக்கு அல்லது நாளன்னைக்கும் போட்டுருவேன்.
அண்ணே, போன பதிவுக்கு உங்களுக்கு பின்னூட்டம் போட்டத்தை ஒரு பதிவா போட்டுட்டேன்.
பதிவு போடும் முயற்சியில் இருந்ததால், இதற்கு நையாண்டி கமண்ட் எழுதலே. ஒரு அட்டன்டன்சு மட்டும் போட்டுட்டு போய்ட்டேன்.
ஒரு எட்டு நம்ம வீட்டுக்கு வந்துட்டு போங்க.
You missed Thanikala Bharani's name-changing incident.
// படத்தின் முக்கியமாய் பாராட்ட பட வேண்டியவர் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய மோகனகிருஷணா இந்திராகாந்தி அவர்களை.. மிக சுமாரான கதையை வைத்துக் கொண்டு நகைச்சுவை இழையோடும் ஒன்லைனரர் வசனங்களையும், சுறுசுறுப்பான திரைக்கதையை கொடுத்து உட்கார வைத்துவிடுகிறார். பல இடங்களில் வசனம் சூப்ப்ர்.//
உங்களிடம் எனக்கு பிடித்த விசயமே இதுதாங்க...
பாராட்டும் போது வஞ்சனை இல்லாமல், பாராட்டுகின்றீர்கள்.
உங்களின் அனைத்து விமர்சன்ங்களையும் படிக்கின்றேன். படம் பார்க்க இயலாத நிலையை உங்கள் விமர்சனங்கள் தீர்க்கின்றன.
நன்றி சங்கர்.
தமிழ்மணம், தமிழிஷ் இரண்டிலும் ஓட்டு போட்டாச்சுங்க..
//பதிவு போடும் முயற்சியில் இருந்ததால், இதற்கு நையாண்டி கமண்ட் எழுதலே. ஒரு அட்டன்டன்சு மட்டும் போட்டுட்டு போய்ட்டேன்.//
போடுங்க.. தாராளமா பதிவ போடுங்க.. நல்லாருக்கு நண்பரே. உஙக் புது பதிவு..
நன்றி நையாண்டி
//You missed Thanikala Bharani's name-changing incident.//
அட ஆமாம் அனானி.. அந்த ஜோடி பெண்ணின் பேரையு சொன்னால் உடனே இணைத்துவிடுவேன்.
//
உங்களின் அனைத்து விமர்சன்ங்களையும் படிக்கின்றேன். படம் பார்க்க இயலாத நிலையை உங்கள் விமர்சனங்கள் தீர்க்கின்றன. //
மீண்டும்,, மீண்டும் நன்றி ராகவன். ஆனால் ஓட்டுக்கள் விழவில்லை.
//லாவண்யா, ராம்பாபு என்கிற மகேஷை அடைந்தாளா..? மகேஷ் என்று நினைத்து காதலிக்கும் மகேஷ் என்கிற ராம்பாபுவின் தங்கை, ஆனந்தை ஏற்றாளா.? //
ஒரு இழவும் புரியலையே..?!!! டிவிடி-ல பாத்துக்கறேன்.
// Cable Sankar 1:00 AM
//
உங்களின் அனைத்து விமர்சன்ங்களையும் படிக்கின்றேன். படம் பார்க்க இயலாத நிலையை உங்கள் விமர்சனங்கள் தீர்க்கின்றன. //
மீண்டும்,, மீண்டும் நன்றி ராகவன். ஆனால் ஓட்டுக்கள் விழவில்லை.
//
தமிழிஷில் 3 வோட்டு விழுந்திருக்கு.. அதில் இரண்டாவது ஓட்டு என்னோடதுதாங்க...
நாங்கெல்லாம் ஓட்டு போட்டுட்டு, அதுல எங்க பேர் வந்திருக்கான்னு செக் பண்ணிவிடுவோமுங்க
ஆனாலும் ரொம்ப சென்சிடிங்க இராகவன் நீங்க.. இப்படி யா உடனடியா செக் பண்ணி பதில் போடறது.. மிக்க நன்றி இராகவன்..
Post a Comment