முத்துக்குமார் தீக்குளித்த போது சன் டிவி அவருடய பாஸ்போர்ட் போட்டோவையெல்லாம் தேடி காட்டி செய்தி வெளியிட்டது. அதன் பிறகுதான் அவருடய அறிக்கையில் கலைஞரை பற்றியும், காங்கிரஸ்காரர்களை பற்றியும் அவருடய இறுதி அறிக்கையில் எழுதியிருப்பது தெரிந்ததும் மொத்தமாகவே முத்துக்குமாரின் செய்திகளை சன், கலைஞர், ஜெயா ஆகியவை இருட்டடிப்பு செய்தது. கலைஞருக்கு என்ன ஒரு சந்தோஷமென்றால் கூடவே ஜெயலலிதாவை பற்றியும் திட்டியிருப்பதால் அவர்களும் பெரிதாய் கவர் செய்யவில்லை. திமுகவை சார்ந்த பாபுவை செருப்பால் அடித்ததை மட்டும் திரும்ப, திரும்ப காட்டி ஜெயா டிவிக்காரர்கள் சந்தோஷப்பட்டார்கள்.
இவர்கள் தேவைக்கென்றால் தங்களுடய சில்லறை விஷயங்களை ஊதி பெரிதாக்குவதும், தேவையில்லையென்று நினைத்தால் அதை அப்படியே அமுக்குவதும் மீடியாவை மொத்தமாய் வைத்திருக்கும் நம் தலைவருக்கு அல்வா மாதிரி.
உடனிருக்கும் காங்கிரஸை எதிர்க்க ம்னமில்லை. அதே நேரத்தில் இங்கே இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு அளிப்பதாய் ஜல்லியடிக்க வேண்டியிருக்கிறது. யோசிச்சார்.. நேரே போய் ஹாஸ்பிட்டலில் படுத்து விட்டார்.
ஓய்வெடுக்க போனவர் ஹாஸ்பிடலில் எல்லா கட்சி தலைவர்களை அழைத்து கூட்டம் போட்டார், இதெல்லாம் எதுக்காக,பாவம் தலைவர் அவர் என்ன செய்வார்.. அவரும் முதுகுவலியோட என்ன் செய்ய முடியுமோ அதையெல்லாம் செஞ்சிகிட்டுதானிருக்கிறார் என்று சீனை போடத்தான்.
சரி பந்த் செய்ய அழைப்பு விடுத்ததை பார்த்தார். வழக்கமாய் இம்மாதிரியான பந்த்தையெல்லாம் எதிர்கட்சியாக மட்டும் இருந்திருந்தால் சர்வ சாதாரணமாய் நடத்தியிருப்பார். ஆனால் என்ன செய்வது ஆளும்கட்சியாக்கி விட்டோம் அவர் இரு தலை கொள்ளி எறும்பை போல தவிக்கிறார்.லோக்கல் ஆட்சியையும் விடமுடியாது, மத்திய அரசின் பதவிகளையும் விடமுடியாது. எலெக்ஷன் வேறு வருகிறது.. கூட்டணியை முறிக்க விருப்பமில்லை. அதனால் என்ன சொல்கிறார் பந்த செய்வது சட்ட விரோதம் சுப்ரீம்கோர்ட் சொல்லியிருக்கிறது, வழக்கு இருக்கிறது என்கிறார்.
தானும் படுக்காமல்,தள்ளியும் படுக்காமல் இம்சை செய்வது இவருக்கு கைவந்த கலை. இப்போது தமிழர்கள் ஒன்றுபட வேண்டும் என்று அறிக்கை விட்டிருக்கிறார். ஏற்கனவே ஒன்றுபட்டுதானே இருக்கிறார்கள்.. என்று கேட்பவர்களுக்கு இதில் உள்ள உள்குத்து என்னவென்றால், இவர் பின்னாடி தனியாக ஒன்றுபடுங்கள் என்று அர்த்தம்.
இதை தவிர கட்சி செயற்குழு கூட்டதை கூட்டி ஏதோ பேரவை ஆரம்பித்திருக்கிறாராம். அதன் மூலம் கூட்டம் போட போகிறாராம். பேரணி நடத்த போகிறாராம். இதையெல்லாம் ஆம்புலன்ஸில் வந்திருந்து அவர் எடுத்த நடவடிக்கைகளை பார்த்து பரம்பரை திமுகாரன் கூட ஆடிப் போயிருக்கிறான்.
கவலை படாதே தோழர்களே.. கண்டிப்பாய் சில நாட்கள் கழித்து கண்கள் பனித்தது, மாங்காய் புளீத்தது என்பது போன்ற வசனங்களை பேசி நம்மை நெகிழ வைத்துவிடுவார். நாமும் இதுவரை செய்ததையெல்லாம் மறந்து அவர் பின்னாடி ஓடுவோம்.
கலைஞர் எப்போது மற்ற்வர்களுக்காக யோசித்திருக்கிறார். இவரை மட்டும் ஏன் சொல்வானேன் மற்ற அரசியல் கட்சிகளும் பொதுவாய் அப்படித்தான் இருக்கிறார்கள். ஆட்சியை விட்டு விலகியிருக்க வேண்டும் என்று எதிர்பார்த்த ராமதாஸ் அவர்கள் தங்களுடய பங்காய் ஏன் அன்புமணி ராமதாஸ் அவர்களை தன்னுடய பதவியை விட்டு விலக சொல்லவில்லை. அதை நம் தலைவர் எவ்வளவு அழகாய் கேட்டிருக்கிறார் தெரியுமா.. ப.ம.க, என்க்கும் காங்கிரசுக்கும் இடையே இலங்கை பிரச்சனையை வைத்து விரோதத்தை ஏற்படுத்தும் முயற்சி என்றிருக்கிறார். நன்றாய் பாருங்கள் எனக்கும் என்று சொல்லியிருகிறாரே தவிர திமுகவுக்கு என்று கூட சொல்லவில்லை. இதிலிருந்தே தெரியவில்லையா..?
இத்தனை நாள் இவர் இப்படித்தான் என்று தெரிந்து கொண்டே அவருக்காக அவர் செய்யும் காரியங்களுக்கு எல்லாம் கொஞ்சம் கூட வெட்கப்படாமல் சப்பைகட்டி கொண்டு ஆதரவாய் இருந்துவிட்டு, இப்போது ஒழிக என்று கூச்சல் போடுவதில் என்ன அர்த்தம். துணை போனதுக்கான கூலியை பெற்றுதானே ஆகவேண்டும். அதனால் கலைஞர் வாழ்க
உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Post a Comment
42 comments:
nitharsanam (kathai illai, uNmaingkira arththaththil) thalaivaree.
Hi
We have just added your blog link to Tamil Blogs Directory - www.valaipookkal.com.
Please check your blog post link here
If you haven't registered on the Directory yet, please do so to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.
Sincerely Yours
Valaipookkal Team
கலைஞர் மட்டுமில்லை ஈழம் விசயத்தில் எல்லோருமே நடிக்கிறார்கள். நடிப்பின் விகிதாசாரம் வேண்டுமானால் சற்று மாறுபடலாம்.
//இவர் பின்னாடி தனியாக ஒன்றுபடுங்கள் என்று அர்த்தம்//
:-(
யப்பா; அம்மா; ஐயோ ; நாணே முதுகு வலில இருக்கும்போது இந்த கேபிள் வேரயா? யப்பா மதுரைக்கு ஒரு போன் போடு.
-:) !!!
(:- ???
இயக்குனருக்கு புரியுதா?
இது அந்த பதிவுக்கு எதிர் பதிவா.......!
ஓவர் டு லக்கிலுக்!!!!
நல்ல பதிவு ;-)
ஜால்ரா போட்டே சிலர் பழக்க பட்டு விட்டதை சுட்டி காட்டியது அருமை.
என் பங்குக்கு "கலைஞர் வாழ்க.."
வாழ்த்துக்கள் நண்பரே!
//nitharsanam (kathai illai, uNmaingkira arththaththil) thalaivaree.//
மிக்க நன்றி முரளி.
//கலைஞர் மட்டுமில்லை ஈழம் விசயத்தில் எல்லோருமே நடிக்கிறார்கள். நடிப்பின் விகிதாசாரம் வேண்டுமானால் சற்று மாறுபடலாம்.//
இதுவும் ஒரு நிதர்சனமான உண்மைதான்.
//
:-(//.
நன்றி முகவை மைந்தன்.
//யப்பா; அம்மா; ஐயோ ; நாணே முதுகு வலில இருக்கும்போது இந்த கேபிள் வேரயா? யப்பா மதுரைக்கு ஒரு போன் போடு.//
எனக்கு கூட ஒரு வாரமா முதுகு வலி.. உங்களுக்குமா..? உடம்ப பாத்துக்கங்க.. மதுரையிலேயே இருந்துகிட்டு எதுக்கு போனு..?
//இயக்குனருக்கு புரியுதா?//
புரியுது..புரியுது..
:) :)
//இது அந்த பதிவுக்கு எதிர் பதிவா.......!//
இல்ல ராஜ்.. சக புலம்பல். அவர் மனசு நொந்து போய் ஒழிகன்னு சொல்லியிருக்காரு.. நானும் அதை போலவே நொந்து போய் வாழ்கன்னு சொல்லியிருக்கேன்.. மத்தபடி ரெண்டு பேர் உண்ர்வும் ஒண்ணூதான்.
//ஓவர் டு லக்கிலுக்!!!!//
:):):)
//ஜால்ரா போட்டே சிலர் பழக்க பட்டு விட்டதை சுட்டி காட்டியது அருமை.//
என்னையும் சேர்த்துதான் வீரன் தமிழ்.. அந்த உறுத்தலினால் தான் கலைஞர் வாழ்க..
Shankar, from a very young age, i realized Karuna was no different from the rest. And hence, always resisted from blind support for him. during MGR days, folks found it the "in thing" to support Karuna and JJ gave them enough reason to continue that route. the past decade, Karuna has time and again shown his true self. the beauty is, in his party meetings he still sends out loads of hundy to collect money for the party.. the adacity of the guy..
valka kalinjar. valarka tamilar otthumai
//valka kalinjar. valarka tamilar otthumai//
அதானே பார்த்தேன் சொல்லலைன்னா. அவ்வளவுதான்.
கயவன் கருணானிதி, வப்பாட்டி ஜெயலலிதா, அரசியல் வேசி ராமதாஸ், கோமாளி கோபால்சாமி இவனுங்க அத்தன பேரும் பொறம்போக்கு நாய்ங்கதான். எந்தப் பொறுக்கிகளையும் நம்பவே கூடாது. இவங்களுக்கு தோலுரிக்கிற அதே நேரத்துல சோமாறிகளையும், கொட்டைதாங்கிகளையும் களையெடுக்க வேண்டும்.
ஈழம் நோக்கிப் பயணம் இன்றே ராமேஸ்வரத்திலிருந்து தொடங்க வேண்டும்.
-----------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'09)
இத்தனை நாள் இவர் இப்படித்தான் என்று தெரிந்து கொண்டே அவருக்காக அவர் செய்யும் காரியங்களுக்கு எல்லாம் கொஞ்சம் கூட வெட்கப்படாமல் சப்பைகட்டி கொண்டு ஆதரவாய் இருந்துவிட்டு, இப்போது ஒழிக என்று கூச்சல் போடுவதில் என்ன அர்த்தம். துணை போனதுக்கான கூலியை பெற்றுதானே ஆகவேண்டும். அதனால் கலைஞர் வாழ்க //////////
அவரு வாழனும் அவர தமிழின துரோகி என்பதை அவராலே மக்கள் இன்னும் கூடுதலாக புரிய வேண்டும்
Idhellaam Arasiyalla Sagajam Naina. Evan sethaa engalukennaa? Indha loosu janangalukku engala maadhri katchigala vittaa vera naadhi illa. Election varum podhu sillaraya koduthaa vote poda poraanga. Tamilanukku therinjadehllaam rendu vishayam thaan - Mudhalla Cinema, Next Arasiyal Saakadayila neendhi sandosha paduvadhu.
சங்கர்..
இன்றைய எரியும் சூழ்நிலையில், உங்கள் கட்சி எடுத்த வரலாற்று சிறப்புமிக்க முடிவில் உங்கள் கருத்து வழக்கம்போல்,கலைஞர் முடிவுக்கு சப்பைக்கட்டு கட்டுவதாகதான் இருக்கும் என நினைதத என்னை லக்கிலுக்,மதிபாலா,உண்மைத்தமிழன் என அனைவருமே ஏமாற்றிவிட்டீர்கள்.
ஆனால் இந்த ஏமாற்றமும் ஒருவகையில் மகிழ்ச்சிதான் எனக்கு.
உங்களுக்கு சுயமாகவும் சிந்திக்கத்தெரியும் என்பதை கடைசியாக நிரூபித்து விட்டீர்கள்.மஞ்சள் துண்டின் சாயம் வெளுத்துப்போனது உங்களைப்போன்ற 'கண்மூடித்தனமானபக்தர்'களுக்கும் தெரிந்துவிட்டதே.
திமுக'வின் இன்றைய முடிவுக்கு அவர்களின் 'வரலாற்றுச் சிறப்புமிக்க 'திருமங்கலம்' வெற்றி தந்த அசைக்கமுடியாத நம்பிக்கையே காரணம் என நான் நினைக்கிறேன்.நாம் நடத்தும் ஆட்சி,எடுக்கும் முடிவுகள் என்ன வேண்டுமானாலும் இருக்கட்டும்,ஆனால் தேர்தல் சமயத்தில் கோடிகளைக் களமிறக்கினால்,வெற்றி என்ற துண்டு தானாக தோளில் விழும் என்ற மமதையே இன்று திமுக என்ற இயக்கம் கட்டப்பட்ட அடிப்படை கொள்கைகளையே காற்றில் பறக்கவைக்க காரணமாயுள்ளது.
இலவச டிவி,கேஸ்,1 ருபாய் அரிசி போல,இலவச செல்போன்,இலவச பஸ் பயணம்,1 ரூபாய்க்கு 1 பாட்டில் பியர்,ஓட்டுக்கு காந்திபடம் போட்ட 1000 ரூபாய் நோட்டு,அல்வாவினுள்ளே தங்கநாணயம்,ஆடு,கோழி பிரியாணி,தாகம் தீர்க்க டாஸ்மாக் என ஓடவிட்டால்... அன்னமிட்டவர்களுக்கு துரோகம் இழைக்கத்தெரியாத தமிழ்கூட்டம்,உதயசூரியனில் முத்திரையிட்டு தன்குடும்பத்தினர் மீண்டும் மத்தியமந்திரி சபையில் வேண்டிய பதவியில் அமர்ந்து விடுவார்கள்,பிறகு விட்டதைப் பலமடங்காக பிடிக்கும் மந்திரம்தான் கைவந்தக்கலையாயிற்றே...
இதை எழுதிக்கொண்டிருக்கும் நேரத்தில் சன் செய்தியில் தமிழகத்தில் அனைத்தும் 'வழக்கம்போல' இன்று நடந்ததாக கூறிக்கொண்டிருந்தார்கள்.. போலீஸ் காவலுடன் காலியாக ஓடிய பேருந்தைக் காட்டியப்படி......
//யப்பா; அம்மா; ஐயோ ; நாணே முதுகு வலில இருக்கும்போது இந்த கேபிள் வேரயா? யப்பா மதுரைக்கு ஒரு போன் போடு.//
மேலே நான் போட்ட இந்த கமெண்ட கலைஞர் சொல்ற மாதிரி எடுத்துக்ங்க.
அப்புறம் உங்களுக்கு புரியும்
//உங்களுக்கு சுயமாகவும் சிந்திக்கத்தெரியும் என்பதை கடைசியாக நிரூபித்து விட்டீர்கள்//
சிந்திக்க தெரிந்ததால் தான் இந்த உள் மன குறுகுறுப்பு.. மனசாட்சி விடமாட்டேன்கிறது.
//மேலே நான் போட்ட இந்த கமெண்ட கலைஞர் சொல்ற மாதிரி எடுத்துக்ங்க.
அப்புறம் உங்களுக்கு புரியும்//
அட அப்படியா விஷயம்.. நல்லாத்தான் இருக்கு. காவேரி கணேஷ்.. அது சரி எங்க கொஞ்ச நாளா ஆளையே காணோம்..
See my 'My Bløg List' in the right side of my blog. you go and search blog custom layouts and you can see that ( try to edit the html by layout).
then when you are adding ' my bløg list, u can choose, who ever you are followin.
this is basically a defect in blogger.
the link should come in other posts, only when someone really 'links' it.
but the link tab mistakenly used, who ever add my blog list as the followers, its showing the blog itself.
the same error you can see 'vadakarai Velan'.
his blog also come and link in every posts, but he actually do nothing.
after seeing that, i did the same :)
கலைஞர் வாழ்க.. வாழ்க.. வாழ்க..
நானும் சொல்லிவிட்டேன்.. எதுக்கு வம்பு..? அப்புறம் என்னிக்காச்சும் ஒரு நாள் நீ ஒரு நாளாவது தமிழினத் தலைவரை வாழ்த்தியிருக்கியான்னு யாரும் என்னைக் கேட்டிரக் கூடாது பாருங்க.. அதான்..
கேபிள் ஸார்.. அவரே பாவம்.. வெளில, வீட்ல தொல்லை தாங்கலைன்னுதான் ஆஸ்பத்திரில போய் படுத்திருக்கார். அங்கேயும் மனுஷனை நிம்மதியா இருக்கவிடாம இப்படி படுத்துறீங்களே..?
அவர்தான் தன்னால எவ்வளவு முடியுமோ அவ்வளவையும் அவருடைய குடும்பத்துக்கு செஞ்சு முடிச்சிட்டார்.. இதுக்கு மேலயாச்சும் தமிழ் நாட்டு மக்களுக்காக உழைங்கன்னு நீங்க கேக்குறது சரிதான்.. ஆனா அவர் வயசு கேக்க மாட்டேங்குதே..
விட்ருங்கப்பா பாவம்..
////////// திமுக'வின் இன்றைய முடிவுக்கு அவர்களின் 'வரலாற்றுச் சிறப்புமிக்க 'திருமங்கலம்' வெற்றி தந்த அசைக்கமுடியாத நம்பிக்கையே காரணம் என நான் நினைக்கிறேன்.நாம் நடத்தும் ஆட்சி,எடுக்கும் முடிவுகள் என்ன வேண்டுமானாலும் இருக்கட்டும்,ஆனால் தேர்தல் சமயத்தில் கோடிகளைக் களமிறக்கினால்,வெற்றி என்ற துண்டு தானாக தோளில் விழும் என்ற மமதையே இன்று திமுக என்ற இயக்கம் கட்டப்பட்ட அடிப்படை கொள்கைகளையே காற்றில் பறக்கவைக்க காரணமாயுள்ளது.
இலவச டிவி,கேஸ்,1 ருபாய் அரிசி போல,இலவச செல்போன்,இலவச பஸ் பயணம்,1 ரூபாய்க்கு 1 பாட்டில் பியர்,ஓட்டுக்கு காந்திபடம் போட்ட 1000 ரூபாய் நோட்டு,அல்வாவினுள்ளே தங்கநாணயம்,ஆடு,கோழி பிரியாணி,தாகம் தீர்க்க டாஸ்மாக் என ஓடவிட்டால்... அன்னமிட்டவர்களுக்கு துரோகம் இழைக்கத்தெரியாத தமிழ்கூட்டம்,உதயசூரியனில் முத்திரையிட்டு தன்குடும்பத்தினர் மீண்டும் மத்தியமந்திரி சபையில் வேண்டிய பதவியில் அமர்ந்து விடுவார்கள்,பிறகு விட்டதைப் பலமடங்காக பிடிக்கும் மந்திரம்தான் கைவந்தக்கலையாயிற்றே...///////////
இவற்றுடன் அரசு ஊழியர்களுக்கும் 1,00,000 ரூபா அளவு முன் பணம் எனும் பேரில் லஞ்சம் கொடுத்துள்ளதையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
கேபிள் டிவி கார்பொரேசன் சேர்மன் உமாசங்கர் அவர்கள் சன் குழுமத்தின் சுமங்கலி கேபிள் நெட்வொர்க் பண்ணும் அட்டூழியங்களை வெளிப்படுத்தியவுடன் இரவோடு இரவாக ட்ரான்ஸ்பர் செய்யப்பட்டதை எதிர்த்து இந்த நாட்டில் எவனாவது (அரசியல்வாதிகள் உட்பட) கண்டித்தான்களா?..... தான்களா?....
//இதை எழுதிக்கொண்டிருக்கும் நேரத்தில் சன் செய்தியில் தமிழகத்தில் அனைத்தும் 'வழக்கம்போல' இன்று நடந்ததாக கூறிக்கொண்டிருந்தார்கள்.. போலீஸ் காவலுடன் காலியாக ஓடிய பேருந்தைக் காட்டியப்படி......//
இவர்க்ளின் காமெடியின் இன்னொரு உச்சம் செய்திகள் மோகன்.. நன்றி உங்கள் நீண்ட் பின்னூட்டத்திற்கும், வருகைக்கும்
//விட்ருங்கப்பா பாவம்..//
உண்மை தமிழன் சார்.. ஏதோ நீங்க சொன்னதுனால இப்பத்திக்கு விடறேன். ஆமா சொல்லிட்டேன்.
//கேபிள் டிவி கார்பொரேசன் சேர்மன் உமாசங்கர் அவர்கள் சன் குழுமத்தின் சுமங்கலி கேபிள் நெட்வொர்க் பண்ணும் அட்டூழியங்களை வெளிப்படுத்தியவுடன் இரவோடு இரவாக ட்ரான்ஸ்பர் செய்யப்பட்டதை எதிர்த்து இந்த நாட்டில் எவனாவது (அரசியல்வாதிகள் உட்பட) கண்டித்தான்களா?..... தான்களா?....//
இதை பற்றி எழுத ஒரு பதிவு போதாது..
எல்லோரும் வாழும் போது, அங்கே என் தமிழனும் சிங்கள குண்டு படாமல், "வாழ்க" என நெஞ்சம் பதறுகிறது....
kalaingar vazhka.. கலைஞர் வாழ்கன்னு நிறைய பேர் சொல்லியிருக்கிறத பார்த்தா.. நிறைய திமுக தொண்டர்கள் மனம் நொந்து போயிருக்காங்க போலருக்கே..
////"""கேபிள் ஸார்.. அவரே பாவம்.. வெளில, வீட்ல தொல்லை தாங்கலைன்னுதான் ஆஸ்பத்திரில போய் படுத்திருக்கார். அங்கேயும் மனுஷனை நிம்மதியா இருக்கவிடாம இப்படி படுத்துறீங்களே..?
அவர்தான் தன்னால எவ்வளவு முடியுமோ அவ்வளவையும் அவருடைய குடும்பத்துக்கு செஞ்சு முடிச்சிட்டார்.. இதுக்கு மேலயாச்சும் தமிழ் நாட்டு மக்களுக்காக உழைங்கன்னு நீங்க கேக்குறது சரிதான்.. ஆனா அவர் வயசு கேக்க மாட்டேங்குதே..""" ////
வாழ்க.. வாழ்க.. வாழ்வாங்கு வாழ்க கலைஞர் ! நானும் சொல்லிபுட்டேன் !
Hellow Sir,
Iam a New commer.
Thansk
ka. balaji
Hellow Sir,
Iam a new commer.
thanks
ka. balaji
Kalaignere neenga nadathunga unga nadagathai - pakkaravanunga ellam muttal than.
- ka. balaji
நன்றாக அலசி விளக்கியிருக்கிறீர்கள்.
உலக தமிழின தலைவனாய் தமிழ் மக்கள் கருதும் தமிழின தலைவர் இதற்கு என்ன பதில் சொல்ல போகிறார்.
உயிர் தமிழுக்கு உடல் மண்ணுக்கு!? . எங்கே இந்த உணர்வு!?.
இத்தனை காலமாக தமிழுக்கு கலைஞர் ஆற்றிய கதை!?.
இத்தனை காலமாக தமிழுக்கு கலைஞர் ஆற்றிய கட்டுரை!?.
இத்தனை காலமாக தமிழுக்கு கலைஞர் ஆற்றிய கவிதை!?.
இத்தனை காலமாக தமிழுக்கு கலைஞர் ஆற்றிய காவியம்!?.
இத்தனை காலமாக தமிழுக்கு கலைஞர் ஆற்றிய உரை!?.
தமிழுக்கு கலைஞர் இத்தனை காலமாக ஆற்றிய தொண்டு!?.
இது எல்லவற்றிக்கும் மேலாக தமிழர்கள் கலைஞர் மிது வைத்திருந்த நம்பிக்கை இன்று கேள்வி குறியாகி விட்டது?
ஆட்சி போனால் என்ன .... தமிழர்கள்கள் மீண்டும் உக்கார வைக்க மாட்டர்களா தமிழர்கள் ?.
தமிழர்கள் மிது நம்பிக்கை இல்லையா? என்ன ?...
தமிழர்கள் இவ்வளவு நன்றி உணர்ச்சி இல்லாதவர்களா என்ன ?...
குழந்தைகள் ... பெண்கள் என துடி துடித்து இறக்கும் இந்த நேரத்தில் பதவி என்ன?.
அரசியல் வேறு ....
கலைஞரின் தமிழறிவை எண்ணி வியக்கதவரே இல்லை ...
இப்படி இருக்கையில் ...
இன்று இவர் விரும்பாத, கையில் திணித்த பட்டம் " தமிழின துரோகி "....
இதில் இருந்து தெரியவில்லையா மக்கள் கலைஞரிடம் எதிர்பரப்பு எவ்வளவு இருந்திருக்கிறது என்று?.
அடுத்த வேலை சோறு இல்லாதவன் கூட துடி துடித்து போகிற இந்த நேரம் அறிக்கை விடுற நேரமா என்று சிந்திக்க வேண்டும்.
நான் அப்போது அது செய்தேன்... இது செய்தேன்... என்றால் மக்கள் கேட்கும் அளவில் இல்லை ....
இப்போது என்ன செய்வீர்கள் எனபது தான் முக்கியம் .
உலகம் முழுவதும் தமிழர்கள் குழந்தைகள் கூட கொதித்எழும் இந்த வேளையில் .....
இன்றும் தமிழக தலைவனாக இருக்கும் நீங்கள் .
இப்போது என்ன செய்வீர்கள் எனபது தான் முக்கியம் .
ஆதங்கத்தில் உள்ள பல தமிழனில் ஒருவன் ........
96முதல் 2001 வரையில் ஓரளவிற்கு நேர்மையான ஆட்சியை கருணாநிதி வழங்கினார்.இந்த ஒரு காரணத்திற்காகவே கருணாநிதியை கண்மூடித்தனமாக ஆதரித்தவர்களில் நானும் ஒருவன்.2001ல் திமுக அடைந்த தோல்வி என்னை மிகவும் பாதித்தது.மீண்டும் 2006ல் கருணாநிதி முதல்வரான போது மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.ஆனால் தற்போதைய நிகழ்வுகளை பார்க்கும்போது இதுதான் உண்மையான திமுக,கருணாநிதியின் உண்மையான முகம் இதுதான் என்பது புரிகிறது.மீடியாவை கைகளில் வைத்துக்கொண்டு இவர்கள் அடிக்கும் கூத்து ஹிட்லருக்காக தொடர்ந்து பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த கோயபல்சை நினைவூட்டுகிறது.இன்னும் இரண்டு மாதங்களில் காலாவதியாகப்போகும் மத்திய அமைச்சர் பதவிகளை கூட விட மனமில்லாமல் செயற்குழு பொதுக்குழு என்று இவர்கள் யார் காதில் பூச்சுற்ற நினைக்கிறார்கள்.லட்சக்கணக்கான மக்கள் உயிருக்கு உத்தரவாதமில்லாமல் தவிக்கும் நிலையில் முதன் முதலில் அனைத்துக்கட்சி கூட்டத்தில் எடுத்த முடிவின்படி தமிழக எம்பிக்கள் ராஜினாமா செய்திருந்தால் உலக தமிழர்களின் இதயங்களில் கருணாநிதிக்கு ஒரு உன்னத இடம் கிடைத்திருக்கும்.இந்தியா இது இலங்கையின் உள்நாட்டு விவகாரம் என்று ஒதுங்கியிருந்தால் கூட யாரும் கருணாநிதியை தவறாக எண்ணியிருக்க மாட்டார்கள்.ஆனால் 40 தமிழக எம்பிக்களின் ஆதரவுடன் மத்தியில் நடைபெற்று வரும் ஒரு அரசு இலங்கையில் தமிழர்களை பூண்டோடு அழிக்க நினைக்கும் ஒரு இனவாத அரசுக்கு தார்மீக ஆதரவு தருவதோடு ஆயுதங்களையும் கொடுத்து உதவும் நிலையில் அந்த அரசின் பங்காளியாக தொடரும் கருணாநிதியின் கபடநாடகம் மிகவும் அருவருப்பை தருகிறது.ஜெயா ஆட்சியில் கருணாநிதி கைது செய்யப்பட்டபோது அதிமுக அனுதாபியான எனது நண்பருடன் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பில் போய் முடிந்தது.அதையெல்லாம் இப்போது நினைத்து பார்த்தால் மிகவும் அவமானமாக இருக்கிறது.மனசாட்சி உள்ள தமிழர்கள் வரும் தேர்தல்களில் திமுகவையும் அதன் பங்காளியான காங்கிரசையும் புறக்கணிக்க வேண்டும்.
Post a Comment