சற்று முன் கிடைத்த தகவல் - திரை விமர்சனம்

சில வருஷங்களுக்கு முன்னால் ராம்கோபால் வர்மா இயக்கத்தில் ஊர்மிளாவும், மனோஜ் பாஜ்பாயும் நடித்து வெளிவந்த “Koun" என்கிற இந்தி படத்தை திரும்ப எடுத்திருக்கிறார்கள். அந்த படமே ஒரு ஒகே படம். மனோஜின், ஊர்மிளாவின் நடிப்பில், ராம்கோபால்வர்மாவின் இயக்கத்தில் சுமாராக இருக்கும்.
அதை எடுக்கிறேன் பேர்விழி என்று முதலில் ஆரம்பித்தவர் தக்காளி சீனிவாசன் என்பவர். இவ்ர் ஏற்கனவே அதிசயமனிதன், ஓமன் படத்தை தமிழில் ஓரளவுக்கு நல்லபடியாய் தந்தவர். முதலில் அவர் ஆரம்பித்ததும் ஓகே ஓரளவுக்கு நன்றாக இருக்கும் என்று நினைத்திருந்தேன். அதற்கப்புறம் என்ன ஆனதோ தெரியவில்லை. அவர் அதிலிருந்து விலகி, தீடீரென்று புது இயக்குனர்.. புவனைகண்ணன், கனல் கண்ணன் என்று சில கண்ணன்கள் சேர்ந்து கொத்திவிட்டார்கள்.
சே.. என்ன இது விமர்சனம் எழுதறதுக்கு பதிலா பிலிம் நியூஸ் கொடுக்க ஆரம்பிச்சிட்டேன்.
மனநல காப்பகத்திலிருந்து தப்பித்த ஒருவன் தனியாய் இருக்கும் பெண்ணின் வீட்டிற்குள் நுழைகிறான். அதற்கு அப்புறம் என்னவாகிறது என்பதே கதை.. லைன் என்னவோ நல்லாத்தான் இருக்குது. இந்தி படத்தில் மனோஜ் பாஜ்பாய், ஊர்மிளாவின் நடிப்பு மிக நன்றாக இருக்கும்
இதில் மனநோயாளியாக கனல் கண்ணன். ஏற்கனவே பல படஙக்ளில் மன நோயாளி போல்தான் நடித்திருப்பார். இவர் பேசாமல் ஸ்டண்ட் மாஸ்டராக் இருப்பதே உசிதம். தனியே இருக்கும் பெண்ணாக பாரதி.. அவருக்கு சொல்லிக்கொள்ளுபடியான கேரக்டர்தான். ஆனால் சரியாய் எக்ஸ்பிளாயிட் செய்யபடவில்லை. க்ளைமாக்ஸ் காட்சியில் மட்டும் ஓகே.
தேவையில்லாத துணை கதைகள், ஹீரோவுக்கு ஒரு கதை, ஹீரோயினுக்கு ஒரு கதை என்று கந்தர் கோளமாக்கியிருக்கிறார்கள். கேமரா மிகவும் ஷேபியாய் உள்ளது. இருப்பதிலேயே ஒரு கொடுமை என்னவென்றால் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் அஸிஸ்டெண்ட் கமிஷனராய் நடிக்கிறார். படம் பூராவும் அவர் காலுக்கு, கண்ணுக்கு, வாய்க்கு, கைக்கு, என்று தனித்தனியாய் காட்டும் பில்டப் அய்யா சாமி பொறுக்க முடியலைப்பா..

அந்த இலந்த பழம் பாட்டுக்கு ஆடும் ”அந்த” பழங்கள் ரொம்ப நல்லாருக்கு.
இந்த லட்சணத்தில குஷ்பு வேற இருக்காஙக.. எல்லா டிபார்ட்மெண்டும் சேர்ந்து சொதப்பியிருக்கறப்ப என்னத்தைன்னு சொல்றது. இந்தியில் க்ளைமாக்ஸ்தான் படத்தை
காப்பாத்தும். இதில் அதை மேலும் சொதப்பியிருக்கிறார்கள்.
சற்று முன் கிடைத்த தகவல் - நல்லாயில்ல.. போயிராதீஙக்..
உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Comments
சூப்பர் கேபிள் உங்க பஞ்ச்..
!!!!!!!!!!!!!!!!!(*(((
நாலு பேருக்கு நல்லது நடக்கும்னா எவ்வளவு சோதனைய வேனும்னா தாங்கலாம் பாலா...
ரொம்ப நன்றிங்கோ.... நிஜமா வே அந்த பழங்கள் சூப்பர்.. முடிஞ்சா அதுக்காக மட்டும் பாருங்க.. நல்லா..பளபளன்னு, தள தளனு
....
//ஆனாலும் நீங்க ரொம்பபபபபப்பப் நல்லவரு........//
ரொம்ப நன்றிங்கோ.... நிஜமா வே அந்த பழங்கள் சூப்பர்.. முடிஞ்சா அதுக்காக மட்டும் பாருங்க.. நல்லா..பளபளன்னு, தள தளனு//
வீட்டில சும்மா இருந்தாலே இப்படித்தானோ??? (((((((((
அப்படி என்றால் நம்மை நொந்த "கண்ணன்"களாக ஆக்கி விட்டார்கள் என்று சொல்லுங்கள்
/*சரியாய் எக்ஸ்பிளாயிட் செய்யபடவில்லை.*/
அப்படியும் சினிமா காரங்க இருக்காங்களா?
/*சற்று முன் கிடைத்த தகவல் - நல்லாயில்ல.. போயிராதீஙக்..*/
இது எனக்கு சற்று முன் கிடைத்த தகவல்.
மிக அருமையான ஒன் லைன் கதை. மிக அழகாக படமாக்கி இருக்கலாம்.
இந்த மாதிரி படங்கல் எல்லாம் உங்களுக்கு ஒரு நல்ல பாடம். ஒரு படத்தை எப்படி எடுக்க கூடாது என்பதற்கு... என்ன நான் சொல்வது சரியா?
ஹி...ஹி..ஹி...
சூப்பர் நைனா..
அப்படியும் சினிமா காரங்க இருக்காங்களா?
/*சற்று முன் கிடைத்த தகவல் - நல்லாயில்ல.. போயிராதீஙக்..*/
இது எனக்கு சற்று முன் கிடைத்த தகவல்.//
நான் எக்ஸ்பிளாய்ட் பண்ணலைன்னு சொன்னது பாரதியின் நடிப்பு தெறமய ..
அது சரி எங்க ரொம்ப நாளா ஆள காணோம்.
இந்த மாதிரி படங்கல் எல்லாம் உங்களுக்கு ஒரு நல்ல பாடம். ஒரு படத்தை எப்படி எடுக்க கூடாது என்பதற்கு... என்ன நான் சொல்வது சரியா?//
ஆமாம் ராகவன்.. இப்படி படம் பார்த்துதான் நிறைய கத்துக்கணும்.
avarukku oru repeatee
:-))))))))
ரொம்ப நன்றிகண்ணா..
--ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்
இந்த மாதிரி படங்களயும் பாத்து இருக்கிங்களே.
விமான நிலையம் போகும் வழியில் விளம்பர பலகை பார்த்து என் மனைவி என்னிடம் கேட்ட கேள்வி, இந்த மாதிரி படம் எல்லாம் யார் பார்ப்பர்க்ள என்று?
நீங்கள் தவிர்க்க வேண்டிய படங்கள்:
ஐந்தாம் படை
கந்தசாமி
அயன்.
ஏதோ ஒரு ஆங்கிலப் படத்திலிருந்து தமிழுக்கு வந்தது போல் ஹிந்திக்கும் போயிருக்கும் என்று நினைக்கின்றேன்.
SO without late pls put the review
ஐந்தாம் படை
கந்தசாமி
அயன்.//
நானும் பாக்ககூடாதுன்னுதான் நினைப்பேன்.. ஆனா இழுத்துட்டு போயிருது.. என்ன செய்ய..
ராமசுப்ரமணிய சர்மா சார். அதென்ன அனுப்புங்கன்னு ஒரு பின்னூட்டம் எப்பவும் போடறீங்க.. புரியலையே..
எதுக்கு..? இதெல்லாம் என் கடமையில்லையா..?
ஏதோ ஒரு ஆங்கிலப் படத்திலிருந்து தமிழுக்கு வந்தது போல் ஹிந்திக்கும் போயிருக்கும் என்று நினைக்கின்றேன்.//
உச்சகட்டத்தில் ஒரு ரிவென்ஞ்ச் இருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் இந்தி படத்தில் எந்த விதமான் சம்பந்தமும் இல்லாத இரண்டு பேர் வருவார்கள் ஸ்ரீதர்.
SO without late pls put the review//
என்ன படிச்சாச்சா.. நான் கடவுள் விமர்சனத்தை..?