Thottal Thodarum

Feb 11, 2009

ஜெயிலுக்கு போகும் சென்னை மக்கள்.


நான் ஜெயிலுக்கு போறேன்.. நான் ஜெயிலுக்கு போறேன்னு சென்னை வாழ் மக்கள் எல்லோரும் ஆண் பெண் வித்யாசம் இல்லாம கூட்டம், கூட்டமா ஜெயிலுக்கு போறாங்க..
விஷயம் என்ன்னன்னா.. நம்ம சென்னை சென்ட்ரல் ஜெயிலை புழலுக்கு மாத்திட்டதினால.. பழைய ஜெயில இடிக்க போறாங்க.. அதுக்கு முன்னாடி அதை பொது மக்கள் பார்வைக்காக, திறந்து விட்டுருக்காங்க..

சும்மா சாதாரண் கூட்டமில்ல.. சென்டரல் கிட்ட ஒரே டிராபிக் ஜாம்னா பாத்துக்கங்களேன். தீவு திடல் பொருட்காட்சி கணக்கா மக்கள் சாரி சாரியா போய்கிட்டேயிருக்காங்க.. உள்ளுக்குள்ள டெம்பரவரி கடையெல்லாம் திறந்திட்டாங்கன்னா பாத்துக்கங்க. இன்னைய வரை பொதுமக்கள் பார்வைக்காக திறந்திருக்கும்னு சொல்லியிருக்காங்க..

ஸோ.. சென்னை வாழ் பொதுமக்களுக்கு தெரிவிப்பது என்ன வென்றால் ஜெயிலுக்கு போகனும்னு ஆசை படுறவங்க எல்லாம் ஜெயிலுக்கு போகலாம்.. சாமியோவ்வ்வ்வ்...


Blogger Tips -நான் கடவுள் திரைவிமர்சன பதிவை படிக்க இங்கே அழுத்தவும்


உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Post a Comment

16 comments:

T.V.ராதாகிருஷ்ணன் said...

அதில்...இது கருணாநிதி இருந்த ஜெயில், இது ஜெயலலிதா இருந்த ஜெயில்னு பார்க்கற கூட்டம் வேற..

முரளிகண்ணன் said...

\\அதில்...இது கருணாநிதி இருந்த ஜெயில், இது ஜெயலலிதா இருந்த ஜெயில்னு பார்க்கற கூட்டம் வேற\\


auto shankar also

topical kalakkal

பாலா said...

அடுத்த இந்தியா விசிட்-ல ஏகப்பட்ட ஆச்சர்யம் இருக்கும்போல!!!!!!

இடிக்கறதுக்கு பதிலா.. சூட்டிங்-கு வாடகைக்கு விடலாமே!!

Cable சங்கர் said...

///அதில்...இது கருணாநிதி இருந்த ஜெயில், இது ஜெயலலிதா இருந்த ஜெயில்னு பார்க்கற கூட்டம் வேற../

ஹா..ஹா.. என்ன ஒரு பெருமை.. நம்ம சென்னை வாழ் மக்களுக்கு.. இந்த லட்சணத்துல இன்னும் ரெண்டு நாள் எக்ஸ்டெண்ட் பண்ணனுமாம்..

Cable சங்கர் said...

//auto shankar also
//

இந்த பின்னூட்டத்தில கேபிள் சங்கருக்கு எதும் உள்குத்து இல்லையே..??

Cable சங்கர் said...

//அடுத்த இந்தியா விசிட்-ல ஏகப்பட்ட ஆச்சர்யம் இருக்கும்போல!!!!!!//

எதுக்கும் வரும் போது கேட்டுட்டு வாங்க.. ஆச்சர்யத்துல ஏதாவது வந்திட போகுது.

//இடிக்கறதுக்கு பதிலா.. சூட்டிங்-கு வாடகைக்கு விடலாமே!!////

இல்ல பாலா ஒரு ரெண்டு மூணு ஷூட்டிங் கூட நட்ந்திச்சு.. அதை இடிச்சிட்டு ஜி.எச் ஐ எக்ஸ்டெண்ட் பண்ன போறாங்கலாம்.

கார்க்கிபவா said...

விகடன்லயோ குமுதமோ.. கவர் ஸ்டோர்ரி போட்டு இருந்தாங்க..

Cable சங்கர் said...

நன்றி கார்கி.. இந்த போட்டோ நான் நேத்து ஜெயில் வாசல்ல எடுத போட்டோ.. ஹி.ஹீ.. நானும் ஜெயில் வாசல் வரைக்கும் பொயிட்டேன்.

அப்துல்மாலிக் said...

நல்ல அறிவிப்பு
ஜெயிலுக்கு உள்ளே சில ஃபோட்டோ எடுத்து அப்டேட் பண்ணலாமே

நையாண்டி நைனா said...

/*அதை இடிச்சிட்டு ஜி.எச் ஐ எக்ஸ்டெண்ட் பண்ன போறாங்கலாம்.*/
1. Jail
2. G.H.
ரெண்டும் ஒண்ணுதான், சில ஒற்றுமை மற்றும் வேற்றுமைகளுடன். So,மக்களுக்கு பயனுள்ளதா ஒண்ணும் வரலை என்று சொல்லுங்க

1.Jail: சின்ன திருடனா உள்ளே போவான், வரும்போது பெரிய பக்கா திருடனா வருவான் இல்லெ பொணமா வருவான்.
2.G.H: சின்ன வியாதியா போவான், வரும்போது பெரும் வியாதிக்காரணா வருவான் இல்லெ பொணமா வருவான்.

1.Jail: உடல் சார்ந்த சித்திரவதை மட்டும் இருக்கும்.
2.G.H: உடல் மற்றும் மனம் சார்ந்த சித்திரவதை இருக்கும்.

1.Jail: அடைத்து, காவலும் இருக்கும் ஆனாலும் உள்ளே இருப்பவனுக்கு எல்லாம் கிடைக்கும்.
2.G.H:கதவே இருக்காது, காவலும் இருக்காது ஆனாலும் உள்ளே இருப்பவனுக்கு மருந்துக்கும் எதுவும் கிடைக்காது.

.... இவ்ளோ போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?

கணேஷ் said...

ஓ! அதான் நேத்து ஈவினிங் கெட்ட டிராஃபிக் ஜாமா? சேப்பாக் சிக்னலில் இருந்து சிந்தாதிரிபேட்டை சிக்னல் தாண்டுறதுக்குள்ள தாவு தீந்திடுச்சு :(

அப்துல்மாலிக் said...

//நையாண்டி நைனா 11:14 AM
/*அதை இடிச்சிட்டு ஜி.எச் ஐ எக்ஸ்டெண்ட் பண்ன போறாங்கலாம்.*/
1. Jail
2. G.H.
ரெண்டும் ஒண்ணுதான், சில ஒற்றுமை மற்றும் வேற்றுமைகளுடன். So,மக்களுக்கு பயனுள்ளதா ஒண்ணும் வரலை என்று சொல்லுங்க

1.Jail: சின்ன திருடனா உள்ளே போவான், வரும்போது பெரிய பக்கா திருடனா வருவான் இல்லெ பொணமா வருவான்.
2.G.H: சின்ன வியாதியா போவான், வரும்போது பெரும் வியாதிக்காரணா வருவான் இல்லெ பொணமா வருவான்.

1.Jail: உடல் சார்ந்த சித்திரவதை மட்டும் இருக்கும்.
2.G.H: உடல் மற்றும் மனம் சார்ந்த சித்திரவதை இருக்கும்.

1.Jail: அடைத்து, காவலும் இருக்கும் ஆனாலும் உள்ளே இருப்பவனுக்கு எல்லாம் கிடைக்கும்.
2.G.H:கதவே இருக்காது, காவலும் இருக்காது ஆனாலும் உள்ளே இருப்பவனுக்கு மருந்துக்கும் எதுவும் கிடைக்காது.

.... இவ்ளோ போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா
//

ஹா ஹா கலக்கிட்டீங்க தல‌

Cable சங்கர் said...

//1.Jail: சின்ன திருடனா உள்ளே போவான், வரும்போது பெரிய பக்கா திருடனா வருவான் இல்லெ பொணமா வருவான்.
2.G.H: சின்ன வியாதியா போவான், வரும்போது பெரும் வியாதிக்காரணா வருவான் இல்லெ பொணமா வருவான்.//

உங்க நையாண்டிக்கு அளவேயில்லை.. நைனா.. சுப்பர்..

Cable சங்கர் said...

//ஓ! அதான் நேத்து ஈவினிங் கெட்ட டிராஃபிக் ஜாமா? சேப்பாக் சிக்னலில் இருந்து சிந்தாதிரிபேட்டை சிக்னல் தாண்டுறதுக்குள்ள தாவு தீந்திடுச்சு :(//

நீங்களும் மாட்டிக்கீட்டீங்களா..?
:(:(:(

சந்திப்பு said...

வாழ்த்துக்கள் கேபிள் சங்கர்... தொடருங்கள் உங்கள் வெற்றிப் பயணத்தை

goma said...

நையாண்டி நைனா
இன்னொண்ணு சொல்ல மறந்து போனீங்களே.ஜி ஹெச். ஆப்ரேஷன் தியேட்டர் சரியா தூக்குமேடை இருந்த இடத்தில் வந்துச்சுன்னு வச்சிக்கோங்க...ஆவி ஆவியா வரும் .பாவம்.