விகடன்ல நம்ம வலைப்பூ.

என்னுடய் நண்பர் ஒருத்தர் எனக்கு போன் பண்ணி.. நீ எழுதறதையெல்லாம் ஒரு ப்ளாகுன்னு, அதை போய் விகடன்ல ‘குட்’ பளாகில் போட்டிருக்காங்க. போய் பாரு என்றார். எனக்கு மிகவும் ஆச்சர்யமாய் போய்விட்டது.ஜெயிலுக்கு போகும் சென்னை மக்கள்னு எழுதின பதிவை அந்த தலைப்பிலேயே முன் பக்கத்தில் இணைத்திருந்தார்கள்.மனசுக்குள் ஒரு சின்ன சந்தோஷமும் இன்னொரு பக்கம் பயமும் எட்டி பார்த்தது.( இனிமே மொக்கையெல்லாம் எழுதகூடாதோ..?)
ஒரு வழியா குட் ப்ளாகில வந்திட்டோம்.. அடுத்த நம்ம் கதை எதாவது வர்ற் வழிய பாக்கணும். அடுத்து விகடன்ல படம் பண்றதுக்கான வாய்ப்பு கிடைக்கணும், என்று என் மனதினுள் அடுத்த கட்ட நடவடிக்கையை பற்றி யோசிக்க ஆரம்பித்துவிட்டேன்.
என் போன்ற பதிவர்களை ஊக்குவிக்கும் விகடனுக்கு நன்றி..
விகடன் வெளீயிட்டிருக்கும் பக்கத்தை பார்க்க இங்கே அழுத்தவும்
இன்னொரு சந்தோஷம் நம்ம நண்பர் நர்சிமின் பதிவும் குட் ப்ளாக்கில் வந்திருக்கிறது. நம்ம முரளிகண்ணின் வலைப்பூ பற்றி விகடனில் வரவேற்பரை பக்கத்தில் வந்திருக்கிறது. நண்பர் லக்கிலுக்கை பற்றி மடிப்பாக்கம் போஸ்ட் என்று அவருடய படத்துடன் வந்திருக்கிறது.
நம்ம கார்கியின் பதிவொண்ணும் தனியா அவரோட படத்தோட முதல் முத்தம்ன்னு வந்திருக்கு.. அவங்க எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.. எங்கள் எல்லோரையும் அங்கீகரித்த விகடனுக்கு மீண்டும் நன்றி..
உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Comments
ஜஸ்ட் மிஸ்..கார்கி..
உங்களின் நிதர்சன கதைகள் விகடனில் வரவேண்டும் என்பதே என் ஆசை
இன்னும் கேபிள் சங்கர் பக்கங்கள்னு நிரந்தரமா ஒரு பக்கத்தை விகடன் ஒதுக்கணும்னு வாழ்த்துகிறேன்.
/ஒரு வழியா குட் ப்ளாகில வந்திட்டோம்.. அடுத்த நம்ம் கதை எதாவது வர்ற் வழிய பாக்கணும். அடுத்து விகடன்ல படம் பண்றதுக்கான வாய்ப்பு கிடைக்கணும்/
ததாஸ்து!
வாழ்வின் அடுத்த மைல்கல்லை அடைந்துவிட்டீர்கள்.
விரைவில் மிக சிறந்த இயக்குனர் என்று விகடனில் வருவீர்கள் நண்பரே...
உங்க பதிவு விகடனில் பிரசுரமாகியுள்ளது
http://youthful.vikatan.com/youth/bcorner.asp
வாழ்த்துக்கள்///
http://tvmalaionline.blogspot.com/2009/02/blog-post_09.html
என் பிளாக்குந்தான் விகடன்ல வந்திருக்கிறது. அதற்கெல்லாம் பதிவு போட்டா எப்படி? எப்படியோ கிளம்பறேன்.
உங்களின் நிதர்சன கதைகள் விகடனில் வரவேண்டும் என்பதே என் ஆசை//
நானும் அதைத்தான் எதிர்பார்கிறேன். அன்பு.. நன்றி உஙக்ள் வாழ்த்துகளுக்கு.
நன்றி ஷங்கர்
கேட்கும்போதே நல்லாத்தான் இருக்கு. ம்ஹூம்ம்.. நடக்கணும்..
சும்மா ஒரு சந்தோஷத்துக்கு தான்.தலைவா.. என்ன எழுதறதுன்னு தெரியாமா.. இருந்ததுக்கும் ஒரு மொக்கைய போடலாம்னுதான். ஜிம்ஷா
எதுக்கு திட்றீங்க.. ராஜ்..
பின்னூட்டத்திலும், தொலைபேசியிலும், வாழ்த்திய உங்கள் அன்புக்கு மிக்க நன்றி முரளி..
மிக்க நன்றி நர்சிம்.. உங்களுடய பதிவும் வந்தது மிக்க சந்தோசம்
வாழ்வின் அடுத்த மைல்கல்லை அடைந்துவிட்டீர்கள்.
விரைவில் மிக சிறந்த இயக்குனர் என்று விகடனில் வருவீர்கள் நண்பரே...//
உங்கள் வாழ்த்துக்கள் பலிக்கட்டும் தலைவரே..
அச்சிச்சோ அப்ப ”கார்க்கியின் முதல் முத்தம் போட்டோவோட வந்திருக்கா!”
மேட்டர் வீட்டுக்கு தெரிஞ்சா என்ன ஆகும்?
வாழ்த்துக்கள்!
\\.( இனிமே மொக்கையெல்லாம் எழுதகூடாதோ..?)\\
நோ நோ. அதுதான் இவ்ளோ நாளா உங்களை வாழ வைச்சதுன்னு தெரிஞ்சுக்கோங்க:))
அப்பாடா.. இப்பத்தான் நிம்மதியா இருக்கு.. எங்க கஷ்டப்பட்டு எழுதணுமோன்னு பயந்தே போயிட்டேன். நன்றி வித்யா..
அருண் & நையாண்டி..
அடுத்தடுத்து சாதனைகள்!
கலக்குறீங்க!
சிறந்த இயக்குனராக கண்டிப்பா வருவீங்க!
எங்களையெல்லாம் மறந்துடாதீங்க!
(நெறைய பார்ட்டி கொடுக்க வேண்டி இருக்கு நினைவிருக்கட்டும்!!)
அது கார்கி பிரச்சனை.. எழுத தெரிஞ்சவருக்கு சமாளிக்க தெரியாதா..
நானும் நேற்று விகடன் படிக்கும்போது தங்களுடைய பிளாக் லின்க் இருந்தது, எங்கேயோ படிச்சாமாதிரி இருக்கேனு தொறந்தா... வாவ்.
Really Happy to seen ur link into vikatan.. keep it up
‘நண்டு’கண்டிப்பா வரும்னு நினைச்சேன். ‘ஜெயிலை’ செலக்ட் பண்ணிட்டாங்களா?
எங்க அக்கா புதுகைத் தென்றலின் வலைப்பூவும் குட் பிளாக்கில் வந்துருக்கு, அத விட்டுட்டீங்களே :)
Congrats. Treat????
இது ந்ம்முடைய வெற்றி.. அதை கொண்டாடுவோம் காவேரி கணேஷ்.
நன்றி ஓம்கார் ஸ்வாமிகள்..
அதான் வந்து பின்னூட்டம் போட்டமில்ல..
நன்றி வேத்தியன்.. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.
அதென்னவோ உண்மைதான் அக்னிபார்வை.
ஸ்ரீ....