நாட்டின் பொருளாதாரம் சூப்பராய் இருந்த காலத்தில் வீட்டு வாடகை, ரியல் எஸ்டேட், காய்கறிகள், மளிகை சாமான்கள் என்று எல்லாமுமே ஏறுமுகமாய் இருந்தது. அப்போது இதற்கெல்லாம் காரணம் இந்த சாப்ட்வேர் ஆசாமிகள் என்று மற்ற துறையினர்கள் புலம்பிக் கொண்டிருந்தார்கள். அது ஒரு விதத்தில் உண்மையும் கூட. அவர்களால் வீட்டு வாடகை, ரியல் எஸ்டேட் போன்றவைகள் விண்ணை தொடும் அளவுக்கு ஏறியது.
பின்பு நாட்டில் பணவீக்கம் அதிகமாகி பொருளாதாரம் சிக்கலான போது, அதை காரணம் காட்டி விலைவாசி கிடுகிடுவென ஏறியது. ஸ்டார் ஹோட்டலிலிருந்து, கையேந்திபவன் வரை அசுர வேகத்தில் ஏறியது. ஒரு ரூபாய் பரோட்டா 2.50 ஆனது, வாட்டர் பாக்கெட் கெட்ட கேட்டுக்கு 1.50 ஆனது. காய்கறி மற்றும் உணவு பொருட்கள் எல்லாமே ராக்கெட் விலை உயர்வு உயர்ந்தது. அதற்கு காரணம் காட்டியது பெட்ரோல் விலையையும் தான்.
ஹோட்டல்களில் பொதுமக்கள் சாப்பாட்டுக்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருந்த நிலைமையில், அரசே தலையிட்டு மலிவு விலையில் சாப்பாடு கொடுக்க சொல்லி உத்தரவிட்டது தெரிந்ததே.. அது வெறும் உத்தரவாய் போனதும் தெரிந்ததே.
எல்லாம் இப்படியிருக்க, இன்றோ.. பணவீக்கம் மிகவும் குறைந்துவிட்ட நிலையில், பொட்ரோல் விலை உலக மார்கெட்டில் 37 டாலருக்கு குறைந்துவிட, மந்திய அரசு பெட்ரோல்விலையை குறைத்தும் கூட, ஏதோ காய்கறி விலைகளில் மட்டுமே கொஞ்சம் கீழிறங்கி வந்திருக்கிறது நம் நாட்டில் உணவு தானிய விலைகளிலோ, ஹோட்டல்களீலோ, அத்யாவசிய பொருட்களின் விலையிலோ எந்தவிதமான மாற்றமும் வரவில்லை.
எனக்கு தெரிந்து விலைவாசி குறைந்து இருக்கிற ஒரே துறை ரியல் எஸ்டேட் மட்டும்தான்.
இடைதரகர்களாள் ஏற்றிவிடப்பட்ட மார்கெட் இப்போது தள்ளாடிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் ஒரு நண்பர் ஒருவர் என்னிடம் வீடு ஒன்று புதிதாய் கட்டி முழு வீட்டிற்கான பணத்தையும் லோன் போட்டு கொடுக்க ரெடியாய் உள்ளார்கள், உங்களுக்கு வேண்டுமா? என்று கேட்டார் என்றால் பார்த்து கொள்ளுங்கள்.
விலைவாசி உயர்வுக்கு காரணமாய் சொன்ன சாப்ட்வேர் ஆசாமிகளின் நிலை பற்றி இப்போது சொல்ல தேவையில்லை. பணவீக்கம் தான் காரணம் என்றால் அதுவும் குறைந்துவிட்டது, பின் ஏன் இந்த நிலை.. இதற்கெல்லாம் யார் காரணம்?.. இதை கண்ட்ரோல் செய்ய தவறிய அரசாங்கமா..? அல்லது வியாபாரிகளா.. அல்லது நடுவில் இருக்கும் இடைதரகரகளா..?
யாராக இருந்தாலும் சரி.. பாவம் பொதுமக்கள் நாங்க.. முடியல.. வலிக்குது.. எவ்வளவுநாள் தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது.. தயவு செஞ்சு கருணை வையுங்க..
உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Post a Comment
51 comments:
தலவைரே என்ன டிராக் மாறிட்டீங்க?
தலவைரே என்ன டிராக் மாறிட்டீங்க?
//தலவைரே என்ன டிராக் மாறிட்டீங்க?//
சினிமா தவிர நமக்கும் ஏதாவது எழுத வருதான்னு பாக்கத்தான்.. நல்லா எழுதியிருக்கேனா..? தலைவரே..
//முடியல.. வலிக்குது.. எவ்வளவுநாள் தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது.. தயவு செஞ்சு கருணை வையுங்க..//
எக்ஸலெண்ட் தலைவரே!!!
/தலவைரே என்ன டிராக் மாறிட்டீங்க//
அதானே.. ஆனா சினிமா பதிவு மாதிரிதான் இருக்கு.. ம்மொக்கையா சூப்பரான்னு நீங்களே முடிவு செஞ்சுக்கோங்க.. :))
பரவாயில்லையே ஷங்கர்!திடீரென்று பொருளாதாரம்,சென்செக்ஸ் என்று வேறு பாதையில் சிந்திக்கிறீர்கள்!GOOD!
சூப்பர் பதிவு கேபிள் .....
// நமக்கும் ஏதாவது எழுத வருதான்னு பாக்கத்தான்.. நல்லா எழுதியிருக்கேனா..? தலைவரே..
//
குட் கொஸ்ட்டீன்...
ஆன்ஸர் இஸ் ரொம்ப நல்லா இருக்கு
:)
அப்படியே இந்த வீட்டு வாடகை சமாச்சரத்தையும் அரசாங்கம் கவனிச்சா தேவல:(
நானும் சொல்லனும்னு நினைச்சேன்.. மிக பாப்புலரான பதிவை வைத்துக்கொண்டு சினிமா தவிரவும் ஏதாவது எழுதுங்கள். மற்ற படி நன்றாகவே உள்ளது
அது என்ன படம்? பதிவுலே... முந்திய பதிவையும் பின்னூட்டதையும் நீங்க படிச்சிகிட்டு இருந்தப்ப யாரோ போடோ எடுத்துட்டாங்களா?
hee heee heee
வணக்கம் அய்யா.
இந்த விலைவாசி உயர்வுக்கு நாமும் மறைமுகமான காரணமாக உள்ளோம். இனி பொருட்களின் விலையை குறைக்க இயலாது. ஆனால் கட்டுப்படுத்த முடியும். அது நம் அரசாங்க்கத்தின் கையில் தான் உள்ளது. எல்லாவற்றிக்கும் வரி சலுகை, எல்லாம் இலவசம் என்ற நிலை மாறவேண்டும். அரிசி விலையை குறைய்த அரசாங்கம் அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுப்படுத்த தவறிவிட்டது. முதலில் அதை செய்ய வேண்டும். அதற்க்கு ஒத்துழைப்பது வியாபாரிகள் கையில் உள்ளது. மின் சிக்கனம், எரிபொருள் சிக்கனம் ஆகியவற்றை நாம் கடைபிடிக்க வேண்டும். இதுவும் ஒருவிதத்தில் விலைவாசி வுயர்வுக்கு ஒரு காரணம். எல்லோரும் செய்யும் தவறுகளால் பாதிக்கபடுவது என்னவோ சாமானிய மக்கள்தான்என்பது மறுக்கமுடியாத உண்மை. இந்த விலைவாசி உயர்வால் பணக்காரர்கள் மேலும்மேலும் பணம் சேர்க்க ஏழைகள் மென்மேலும் ஏழைகளாக போகிறார்கள்.
நன்றி.
க. பாலாஜி
என்ன தல டிராக் மாறி
பொருளாதார வல்லுனர் ஆகிட்டீங்க
நல்ல ஒரு அலசல், மேலும் தொடர வாழ்த்துக்கள்
//தலவைரே என்ன டிராக் மாறிட்டீங்க?//
சினிமா தவிர நமக்கும் ஏதாவது எழுத வருதான்னு பாக்கத்தான்.. நல்லா எழுதியிருக்கேனா..? தலைவரே..
நன்றாக உள்ளது அண்ணா
/எனக்கு தெரிந்து விலைவாசி குறைந்து இருக்கிற ஒரே துறை ரியல் எஸ்டேட் மட்டும்தான்.//
இன்னும் பெங்களுரில் ரியல் எஸ்டேட் விலை குறையல சாமியோவ்வ்வ்வ்வ்வ்
ரியல் ஸ்டேட் விலை குறைந்ததாக பத்திரிக்கைகளிலும் உடககங்களிலும் தான் வருகிறது .உண்மையில் ரியல் ஸ்டேட் குறைந்ததாக தெரியவில்லை .
//ஒரு லட்சம் ஹிட்ஸுகளை வாரி வழங்கிய பதிவர்களுக்கும், வாசக நண்பர்களுக்கும் நன்றி.. நன்றி.. நன்றி..//
வாழ்த்துக்கள்.
//எனக்கு தெரிந்து விலைவாசி குறைந்து இருக்கிற ஒரே துறை ரியல் எஸ்டேட் மட்டும்தான்.//
இதில் எனக்கு பயங்கரக் குழப்பமாக இருக்கிறது.இடத்தின் மதிப்பு குறைகிறது குறைகிறது என்கிறார்கள் ஆனால் அந்த மாதிரித் தெரியவில்லையே. அவுட்டர் ஏரியாவில்கூட இன்னும் அதே விலைதான் தொடர்வதை பார்க்க முடிகிறது.
போனவருடம் 1 கோடிக்கு இருந்த ஒரு நிலத்தின் மதிப்பு இந்த ஜனவரியில் 1.4 கோடிக்கு கேட்டதை நேரடியாக காணும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.ரியல் எஸ்டேட் ஒரு புரியாத புதிராகவே இருக்கிறது.
//எனக்கு தெரிந்து விலைவாசி குறைந்து இருக்கிற ஒரே துறை ரியல் எஸ்டேட் மட்டும்தான்.//
இதில் எனக்கு பயங்கரக் குழப்பமாக இருக்கிறது.இடத்தின் மதிப்பு குறைகிறது குறைகிறது என்கிறார்கள் ஆனால் அந்த மாதிரித் தெரியவில்லையே. அவுட்டர் ஏரியாவில்கூட இன்னும் அதே விலைதான் தொடர்வதை பார்க்க முடிகிறது.
போனவருடம் 1 கோடிக்கு இருந்த ஒரு நிலத்தின் மதிப்பு இந்த ஜனவரியில் 1.4 கோடிக்கு கேட்டதை நேரடியாக காணும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.ரியல் எஸ்டேட் ஒரு புரியாத புதிராகவே இருக்கிறது.
அருமையான பதிவு.
ரஜினியை விட்டுட்டு.. இப்ப சாப்ட்வேர் மக்களை குறி வைக்கறீங்களா??
ஹா.. ஹா.. ஹா.. ஆனா இது உண்மைன்னு கேள்விப்பட்டிருக்கேன். சாப்ட்வேர் மக்கள்தான் கொஞ்சம் டென்சன் ஆகறாங்க.
என்ன சங்கர் அவர்களெ,
உண்மைத் தமிழன் உங்களை left and right போட்டுதாக்கி இருக்கிறாரறெ அதற்குள் சரியாகி விட்டதா?,, அடி செம பலமாச்செ,,, சத்தியமாய் நான் உங்களை உசுப்பேத்தவில்லை,, உங்கலளின் ரஜினி பற்றிய விமர்சனத்தில் உள்ள அபத்தங்களை அக்குவேரு ஆனிவேராக அவர் பிட்டு பிட்டு வைத்திருக்கிறார் என்பதைச்
சொல்கிறென்.இதை சொல்வதால்
என்னையும் ரஜினி இரசிகர் கூட்டத்தில்
சேர்த்துவிடாதீர்கள்.அறைகுரை தகவலுடனும் ஒருவர்மேலுள்ள அபிமானத்தாலும் அவசரமாய் எதையாவது எழுதுவதை நிறுத்துங்கள்
இப்படி பொதுவான விசயத்தைப் (விலைவாசி) எழுதுங்களென்,,யார்
என்ன சொல்லப் போகிறார்கள்?,,,,
உஙகள்மேலுள்ள அபிமானத்தில்
சொல்கிறென் அவ்வளவுதான்,,,
ஜூப்பர்.
இந்த டிராக்லேயே போங்க நண்பரே.
வெரிகுட்..
You are in the right Track..
வாழ்த்துகள்.
//moulefrite said...
என்ன சங்கர் அவர்களெ,
உண்மைத் தமிழன் உங்களை left and right போட்டுதாக்கி இருக்கிறாரறெ அதற்குள் சரியாகி விட்டதா?,, அடி செம பலமாச்செ,,, சத்தியமாய் நான் உங்களை உசுப்பேத்தவில்லை,, உங்கலளின் ரஜினி பற்றிய விமர்சனத்தில் உள்ள அபத்தங்களை அக்குவேரு ஆனிவேராக அவர் பிட்டு பிட்டு வைத்திருக்கிறார் என்பதைச்
சொல்கிறென்.இதை சொல்வதால்
என்னையும் ரஜினி இரசிகர் கூட்டத்தில்
சேர்த்துவிடாதீர்கள்.அறைகுரை தகவலுடனும் ஒருவர்மேலுள்ள அபிமானத்தாலும் அவசரமாய் எதையாவது எழுதுவதை நிறுத்துங்கள்
இப்படி பொதுவான விசயத்தைப் (விலைவாசி) எழுதுங்களென்,,யார்
என்ன சொல்லப் போகிறார்கள்?,,,,
உஙகள்மேலுள்ள அபிமானத்தில்
சொல்கிறென் அவ்வளவுதான்,,,//
இது தவறானப் பார்வை. அது அந்தப் பதிவோடு போய்விட்டது. மீண்டும் கிளருவது என்பது நல்ல எண்ணமாகப் படவில்லை. ஒவ்வொரு நாளும் ஒரு விஷயம்,ஒரு கருத்து பகிர்வு அப்பொழுதுதான் தெளிவு பிறக்கும்.
//me the first//
நன்றி அன்பு..
//எக்ஸலெண்ட் தலைவரே!!!//
மிக்க நன்றி பரிசல்..
//அதானே.. ஆனா சினிமா பதிவு மாதிரிதான் இருக்கு.. ம்மொக்கையா சூப்பரான்னு நீங்களே முடிவு செஞ்சுக்கோங்க.. :))//
கார்கி.. உள்குத்து,, உள்குத்துன்னு பார்த்திருக்கேன். இது வஞ்சப்புகழ்ச்சி அணியா..? நன்றி கார்கி.
//பரவாயில்லையே ஷங்கர்!திடீரென்று பொருளாதாரம்,சென்செக்ஸ் என்று வேறு பாதையில் சிந்திக்கிறீர்கள்!GOOD!//
ஏதோ ரொம்ப நாளா எழுதணும்னு மனசுல தோணிக்கிட்டேயிருந்தது.. ரொம்ப நன்றி சார்..
//சூப்பர் பதிவு கேபிள் ....//
நன்றி கீர்த்தி. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்..
//குட் கொஸ்ட்டீன்...
ஆன்ஸர் இஸ் ரொம்ப நல்லா இருக்கு
:)//
மிக்க நன்றி அப்துல்லா அண்ணே..
//அப்படியே இந்த வீட்டு வாடகை சமாச்சரத்தையும் அரசாங்கம் கவனிச்சா தேவல:(//
ஆமாம் வித்யா.. ஆனா அது தானாவே குறையும்னு நினைகிறேன். பார்ப்போம்..
நன்றி..
//நானும் சொல்லனும்னு நினைச்சேன்.. மிக பாப்புலரான பதிவை வைத்துக்கொண்டு சினிமா தவிரவும் ஏதாவது எழுதுங்கள். மற்ற படி நன்றாகவே உள்ளது//
என்னது பாப்புலரான பதிவா.. ??
டிரை பண்ணறேன். தலைவா..
//அது என்ன படம்? பதிவுலே... முந்திய பதிவையும் பின்னூட்டதையும் நீங்க படிச்சிகிட்டு இருந்தப்ப யாரோ போடோ எடுத்துட்டாங்களா?
hee heee heee//
ஹா..ஹா..ஹா..
இதெல்லாம் எதிர்பார்த்துதானே நைனா எழுதவே ஆரம்பித்தேன்.
//எல்லோரும் செய்யும் தவறுகளால் பாதிக்கபடுவது என்னவோ சாமானிய மக்கள்தான்என்பது மறுக்கமுடியாத உண்மை. இந்த விலைவாசி உயர்வால் பணக்காரர்கள் மேலும்மேலும் பணம் சேர்க்க ஏழைகள் மென்மேலும் ஏழைகளாக போகிறார்கள்.//
உண்மைதான் பாலாஜி.. ஆனால் அரசாங்கத்தோடு மக்களூம் சேர்ந்து ஒத்துழைதால்தான் இதிலிருந்து வெளிவருவோம் என்று நினைக்கிறேன். நன்றி
//என்ன தல டிராக் மாறி
பொருளாதார வல்லுனர் ஆகிட்டீங்க
நல்ல ஒரு அலசல், மேலும் தொடர வாழ்த்துக்கள்//
இதையும் தான் எழுதி பார்ப்போமே.. நன்றி அபுஅப்ஸர்.
//இன்னும் பெங்களுரில் ரியல் எஸ்டேட் விலை குறையல சாமியோவ்வ்வ்வ்வ்வ்//
அப்படியா ஷாஜி.. தெரியலை.. தகவலுக்கு நன்றி..
//ரியல் ஸ்டேட் விலை குறைந்ததாக பத்திரிக்கைகளிலும் உடககங்களிலும் தான் வருகிறது .உண்மையில் ரியல் ஸ்டேட் குறைந்ததாக தெரியவில்லை .//
இல்லை மலர்.. நிறைய இடங்களில் வாங்குவதற்கு ஆளில்லை.. நான் பதிவில் சொன்னது உண்மையே.. வேண்டுமானால் பாருங்கள் விரைவில் வெளிப்படையாய் தெரிய வரும். நன்றி
//இதில் எனக்கு பயங்கரக் குழப்பமாக இருக்கிறது.இடத்தின் மதிப்பு குறைகிறது குறைகிறது என்கிறார்கள் ஆனால் அந்த மாதிரித் தெரியவில்லையே. அவுட்டர் ஏரியாவில்கூட இன்னும் அதே விலைதான் தொடர்வதை பார்க்க முடிகிறது.//
விற்கும் நில ஓனர்களும், மீடியேட்ட்ர்களும், நிலைமையை ஒத்துக்கொள்ள முடியாமல் இன்னும் பழைய நிலையிலேயே பேசிக் கொண்டிருக்கிறார்கள். போக,போக நிதர்சன உண்மை தெரிந்துவிடும்..
உங்கள் வாழ்த்துக்கு நன்றி தேனியாரே..
//ஹா.. ஹா.. ஹா.. ஆனா இது உண்மைன்னு கேள்விப்பட்டிருக்கேன். சாப்ட்வேர் மக்கள்தான் கொஞ்சம் டென்சன் ஆகறாங்க.//
அந்த மாதிரியான் கூற்று உண்மை மட்டுமல்ல.. அதனால் பாதிக்கபட்ட நிறைய பேர்கள் இருக்கிறார்கள்.
//உண்மைத் தமிழன் உங்களை left and right போட்டுதாக்கி இருக்கிறாரறெ அதற்குள் சரியாகி விட்டதா?,, அடி செம பலமாச்செ,,, //
அவர் அப்படி லெப்ட் ரைட் வாங்க போவதாய் எனக்கு சொல்லிவிட்டுதான் எழுதினார். இதெல்லாம் அரசியல்ல சகஜம்ங்க.. யார் வேண்டுமானாலும் கருத்து சொல்ல உரிமையிருக்கிறது.. அது அது அந்த அந்த பதிவோடு போய்விடும்.. நன்றி
//ஜூப்பர்.//
ரொம்ப நன்றிண்ணே.. ஏன் உங்க போன் ஆப்ல இருக்கு.?
//இந்த டிராக்லேயே போங்க நண்பரே.
வெரிகுட்..
You are in the right Track..
வாழ்த்துகள்.//
மிக்க நன்றி வண்ணத்துபூச்சி அவர்களே..
கேபிள் சங்கருக்கு ஒரு 'O' போட்டுகிறேங்க :)
/யாராக இருந்தாலும் சரி.. பாவம் பொதுமக்கள் நாங்க.. முடியல.. வலிக்குது.. எவ்வளவுநாள் தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது..//
ஏன்னா நாமெல்லாம் ரொம்ப நல்லவங்க அண்ணே...............அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
Congrats for the first lakh.. And many more to come ur way..
Expected a lot better post from you instead of this depthless, nothing new, pagefilling post.
இது எல்லோரையும் போல ஒரு மேலோட்டமான பதிவு தான்...தயவு செய்து நினைத்து பாருங்க....இன்று, சாப்ட்வேர் கம்பெனிகளால் என்ன என்ன பொருளாதார மாற்றங்கள்...டெக்னிக்கல் மாற்றங்கள் நடந்து கொண்டு இருக்கிறன...பொத்தாம் பொதுவாய் சொல்ல வேண்டாம்...
அடுத்த தலைமுறைக்கனா வழி இது...நீங்கள் குறுக்கிடாதீர்கள்
//கேபிள் சங்கருக்கு ஒரு 'O' போட்டுகிறேங்க :)//
நன்றி ஸ்ரீதர் கண்ணன்.. உங்கள் ஓவுக்கும், வருகைக்கும்..
//Congrats for the first lakh.. And many more to come ur way..
Expected a lot better post from you instead of this depthless, nothing new, pagefilling post.//
மிக்க நன்றி கார்த்திகேயன்.. உங்கள் வாழ்த்துக்களுக்கு.. கருத்துக்கும்.. நன்றி
பின்னூட்ட கயமைத்தனம்..
நல்ல கேள்விகளை எழுப்பியிருக்கிறீர்கள்!
இன்றைய யூத்ஃபுல் விகடனின் யூஸ்ஃபுல் ப்ளாக்ஸ் பட்டியலில் [http://youthful.vikatan.com/youth/index.asp] இப்பதிவு இடம் பெற்றிருப்பதற்கும் என் பாராட்டுக்கள்.
//இன்றைய யூத்ஃபுல் விகடனின் யூஸ்ஃபுல் ப்ளாக்ஸ் பட்டியலில் [http://youthful.vikatan.com/youth/index.asp] இப்பதிவு இடம் பெற்றிருப்பதற்கும் என் பாராட்டுக்கள்.//
தெரிவித்தமைக்கு மிக்க நன்றி. ராமலஷ்மி..
Post a Comment