லாடம் - திரை விமர்சனம்

கொக்கிக்கு பிறகு கொஞ்சம் வித்யாசமான மேக்கிங் உள்ள படங்களையே அளித்து வந்த பிரபு சாலமனின் அடுத்த படம். சென்ற படஙக்ளை போலவே வித்யாசமான ஒரு கதை களத்தை எடுத்து கொண்டிருக்கிறார்.
ஊரிலிருந்து சென்னையில் வேலைக்கு சேருவதற்காக வந்த குஞ்சிதபாதம் என்கிற இளைஞனை, அவன் தங்கியிருந்த ரூமில் உள்ள சுப்ரமணீயத்த்க்கு பதிலாய் “பாவாடை சாமி’ என்கிற ஒரு ரவுடியின் கும்பல் தூக்கி கொண்டு போக, பாவாடை சாமியின் எதிரியான வேம்புலி பாவாடையின் மகனை போட்டு தள்ளிவிட, வேம்புலியை அழிக்க பாவாடையால் அனுப்பப்படும் ஆட்கள் எல்லாம் இறந்து போய் போட்டோவாக வர, தன் ஓட்டை வாயால் ஐடியா கொடுக்கிறேன் பேர்விழி என்று நம்ம குஞ்சிதபாதம் மூளையை யூஸ் பண்ணனும் என்று எதையோ சொல்ல, 16 நாளுக்குள் தன் எதிரி வேம்புலியை அவன் தான் கொல்ல வேண்டும், அப்படி கொல்லாவிட்டால் 17 அவனுக்கு பால் என்கிறான். அடுத்த நிமிஷமே எதிர் வீட்டு வேம்புலியிடமும் மாட்டி விடுகிறான். வேம்புலி அவனை உயிரோடு புதைக்க, அவன் அதிலிருந்து தப்பித்தானே..? 16ஆம் நாள் வேம்புலியின் மகனை கொன்றானா..? இடையில் அவனுக்கு சார்மிக்கு ஏற்படும் காதல் என்னவாயிற்று என்பதை போன்ற பல கேள்விகளுக்கு, பல சமயம் இன்ட்ரஸ்டாகவும், சில சமயங்களில் சொதப்பியும் இருக்கிறார்கள்.
புதுமுகம் அரவிந்தனின் நடிப்பு பாஸ் மார்க் வாங்கிவிடுகிறார், அவரது ஒல்லியான உடம்பும், ரவிகிருஷ்னாவின் குரலும் அவர் மேல் அப்பாவி முத்திரை ஈஸியாய் விழுந்து விடுகிறது. படம் நெடுக ஓடுகிறார், ஓடுகிறார், ஓடிக் கொண்டேயிருக்கிறார், புலம்புகிறார், காதலிக்கிறார்.

சார்மி.. ரொம்ப நாளுக்கு அப்புறம் தமிழில், முன்பு பார்த்ததை விட நல்ல மத, மதர்ப்பாக இருக்கிறார், அதற்க்காகவே அவரை பார்த்து கொண்டிருக்கலாம், படம் முழுக்க அவருக்கான கேரக்டரில் பெரிய ஓட்டையிருப்பதால், பெரிதாய் அவரோடு ஓட்ட முடியவில்லை.
அந்த ஃப்ர்ஸ்ட் நைட்டில் அவர் முந்தனையை அவிழ்த்து போடும் போது, ம்..ஹூம்ம்ம்ம்ம்ம். முடியலை.. ஏசி தியேட்டரில் வேர்த்தது.

பாவாடையாய் கோட்டா சீனிவாசராவ்.. மனுசம் வழ்க்கம் போல் பின்னுகிறார். அவரின் வழக்கமான அடிவயிற்றிலிருந்து பேசும் முறையிலேயே பேசியிருந்தாலும், படம் முழுவதும் கலக்கியிருக்கிறார். அவரின் எதிர்வீட்டு எதிரி வேம்புலியாய் தயாரிப்பாளர் ஜெயப்பிரகாஷ்.. சொல்லிக் கொள்ள பெரிசாய் இல்லை. அவரின் அமுல்பேபி உடலுடன் ஒரு மாதிரியான எக்ஸென்டிரிக் கேரக்டராய் வரும் அவரின் மகன் கேரக்டர் சூப்பர். அவர் எதாவது பிகரை பார்த்ததும், மனதுக்குள் கவிதை சொல்வதும், வாயிலிருந்து பால் வழிவதும் நல்ல கற்பனை.
இவரின் அடியாளாய் அடிதடி படத்தின் இயக்குனர் சிவராஜ் நடித்துள்ளார். ஏன் நல்லாத்தானே போயிட்டிருந்தது.
படத்தை தாங்கி நிற்பவர் ஒளிப்பதிவாளர்.. மனுஷன் சும்மா பின்னி எடுத்திருக்கிறார். படம் பூராவும் அவரும் கூடவே ஓடுகிறார், நிற்கிறார், மூச்சு வாங்குகிறார், காதலிக்கிறார், என்று பரவி முழு திறைமையையும் வெளிப்படுத்தியிருக்கும் சுகுமாருக்கு ஒரு சபாஷ்.
அதே போல் எடிட்டிங்கும் அவர் பங்குக்கு அவரும் சிறப்பாகவே செயல் பட்டிருக்கிறார். இசையமைப்பாளர் தரனின் இசை பெரிதாய் எதையும் செய்யவில்லை, மிக, மிக இறைச்சலான பிண்ணனி இசை. அப்புறம் படம் முழுவதும் பல இடங்களில் வசனங்கள் புரியவில்லை, ஒரு வேளை மிக்ஸிங்கில் ப்ராப்ளம் என்றால் ஓரே இரைச்சல்.
இயக்குனர் பிரபு சாலமன் மீண்டும் ஒரு முறை தன்னுடய மேக்கிங், மற்றும் ஒரு ரேசி கருவை வைத்து கொண்டு ஆட்டத்துக்கு வந்திருக்கிறார். வேம்புலியின் மகன் அவன் அடியாட்களுடனும், ஹீரோவிடமும் நடத்துகிற கிறுக்குதனமான காட்சிகள் எல்லாம் ஏதோ ஒரு ப்ரெஞ்ச் படமோம் ஆங்கில படமோ தெரியவில்லை.. சரியாய் உபயோகபடுத்தியிருக்கிறார். ஆங்காங்கே lucky number selvinனின் வாடையும் அடிக்கிறது.. பின் பாதியில் திரைக்கதையிலும், க்ளைமாக்ஸிலும், மொத்ததில் ஒரு சில கேரக்டர்களிலும் கவனம் செலுத்தியிருதால் ஒரு வெற்றி படம் நிச்சயமாகியிருக்கும்.
லாடம் - சரியாய் அடிக்கபடவில்லை.
டிஸ்கி : இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் எடுக்கப்பட்டிருக்கிறது. தெலுங்கில் 16 Days என்கிற பெயரில் வெளிவந்திருக்கிறது.. அதனால் தானோ படத்தின் க்ளைமாக்ஸில் ஹீரோ பேசும் வசனங்களீல் லிப் சிங் மிஸ்ஸிங்..
உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Comments
ரவுடி பேரே வித்தியாசமாக இருக்குதே!
ஐயோ போச்சே போச்சே! இன்னக்கி கண்டிப்பா அந்த தெலுங்கு படத்தை பார்ப்பேன்
)))))))))))))))
OK...
////அவன் அதிலிருந்து தப்பித்தானே..? 16ஆம் நாள் பாவாடையின் மகனை கொன்றானா..?////
??????...
10:07 AM
அப்போ நிச்சயம் தியேட்டர்ல பார்க்க முடியாது. (அங்க தான் பார்வேர்ட் பெசிலிட்டி இல்லையே)
ரீப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்
டிஸ்கில புலம்பல்...
அவ்வளவு ஒண்ணும் மோசமில்லை முரளி..
அப்படியெல்லாம் சொல்ல முடியாது.. சுப்பு.. ஆங்காங்கே இருக்கும் சாயல்கள் மட்டுமே சுடுவதாகாது..( அப்பாடி ஒரு வழியா சமாளீச்சிட்டேன்.)
டிஸ்கில புலம்பல்...//
இலலை வண்ணத்துபூச்சி.. அவர் ஈவினிங் ஷோ கூப்டாரு.. நான் வழக்கமா நைட் ஷோ பாக்குற யூத்.. அதான் செட்டாகல.. டேக்கால்லாம் ஒண்ணு கொடுக்கல.. பாஸ்..
உங்களுக்குமா. தல்.. சேம் பிஞ்ச்.. ஹி..ஹி... எனக்கும் தான்.
திங்கட்கிழமை ரிலீஸ்
லாடம் - சரியாய் அடிக்கப் படவில்லை.-இதுதான் சரி....
\\ஊரிலிருந்து சென்னை வரும் வேலையில் சேருவதற்கான வந்த குஞ்சிதபாதம் என்கிற இளைஞனை\\
இதுக்கு என்ன அர்த்தம்.....(வேலை ஊரிலிருந்து சென்னை வருதா....? ம்!)
\\பல கேட்விகளுக்கு, பல சமயம் இன்ட்ரஸ்டாகவும், சில சமயங்களில் சொதப்பியும் இருக்கிறார்கள்.\\
என்னது கேட்வியா....? அப்டின்னா என்ன ?
மத்தபடி விமர்சனம் சூப்பரு......ப்பா...?!?
நன்றி சார்.
டைரக்டரின் மேக்கிங்குக்காக பார்கலாம் சார்.
டக்ளசண்ணே.. மாத்திட்டேன்ணே.. என்னம்மா கண்ல விளக்கெண்ண ஊத்திகிட்டு பாக்குறாய்ங்கப்பா..
//
In that case, I recommend,
1. Anukokonda Oka Roju (Good performance)
2. Political Rowdy (Good adhethaaan.....!)
3. Mantra (Good thriller)
1. Anukokonda Oka Roju (Good performance)
2. Political Rowdy (Good adhethaaan.....!)
3. Mantra (Good thriller)//
அந்த மூன்று படங்களையும் பார்த்துவிட்டேன். அனானி.. அதிலும் முதல் படமும், மூன்றாவது படமும் சூப்பர்.
இந்த மாதிரி படத்தை எல்லாம் தேடி புடிச்சு பாக்ரிங்க்லே.
இந்த மாதிரி நூறு குப்பை படம் பாக்கிறதை விட பாலு மஹேந்திர, கே விஷ்வநாத், ஷங்கர், பவித்ரன், சிவாஜி, ரங்கராவ், எஸ் பீ முத்துராமன் போன்றோரின் நாலு நல்ல படம் பார்த்தாலே சினிமா சூட்சுமம் புரிந்து விடும்.
குப்பன்_யாஹூ
அதையும்தான் பாக்குறேன் குப்பன்_யாஹூ.. ந்ன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்
ஸாரி ஃபார் த கமெண்ட்... :)) உங்க விமர்சனம் நல்ல விசயங்களை எடுத்துச் சொல்லிருந்தாலும், படம் ரொம்ப மோசம்ங்ற அளவுக்கு மக்கள் புரிஞ்சிக்கிட்டாங்க :)))
-ஷார்மி க்கு ரசிகர் மன்றம் வைக்கலாமான்னு யோசிப்போர் சங்கம்