Thottal Thodarum

Feb 26, 2009

கலைஞர் “டிவி”

அஸ்கர் விருதை வாங்கி இந்தியாவுக்கே பெருமை சேர்த்த, ஏ.ஆர்.ரஹ்மானுக்கும், ரசூல் பூக்குட்டிக்கும் நன்றி..நன்றி.. நன்றி

தமிழக அரசின் தேர்தல் வாக்குறுதியான இலவச கலர் டிவி வழங்கும் திட்டத்தின், நான்காவது கட்டம் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில், அதை பற்றிய செய்தியை தினசரியில் பார்த்து கொண்டிருந்தபோது, எனது நண்பர் ஒருவர் காச் மூச்சென்று கத்த ஆரம்பித்தார். என்னவென்று கேட்டதும் பெரும ஆரம்பித்தார்.

நண்பருக்கும் இலவச டிவி கிடைத்திருக்கிறது. வாங்கி மூன்றே மாதத்தில் வழக்கம் அது தன் வேலைய காட்டி பீஸாகி விட, டிவிக்கு வாரண்டி கார்டு இருக்குமே என்று அதை தேடி பார்த்து, அதிலிருந்த அட்ரஸுகளை தேடியிருக்கிறார். நண்பர் கோடம்பாக்கம் அருகில் உள்ளதால், அருகேயிருந்த கோடம்பாக்கம் அட்ரசுக்கு போய் தேடியிருக்கிறார். தெருமுழுக்க தேடியதில் அதில் குறிப்பிட்டிருந்த 34ஆம் நம்பர் மட்டும் காணவில்லை, மிகுந்த பிரயாசைக்கு பிறகு, தேடியதில் ஒரு குட்டி சந்தினுள், சிறிய பெட்டி கடை போன்ற அமைப்பில் கொஞ்சம் கூட சர்வீஸ் செண்டருக்கான முகாந்திரமும் இல்லாத, ஏதோ துணிகளையெல்லாம், வைத்து ஒரு பெரியவர் வியாபாரம் செய்து கொண்டுருந்திருக்கிறார்.
அட்ரஸ் இதுதானா என்று கேட்டால், ஆமாம் என்று சொல்லி, ஆனால் இங்கு டிவி சர்வீஸ் ஏதும் கிடையாது என்றிருக்கிறார்கள்.

நொந்து போய் சரி அடுத்த சர்வீஸ் செண்டர் எங்கிருக்கிறது என்று பார்த்த போது எக்மோரில் என்றிருக்க, அலைவதற்கு முன் போனில் பேசிவிடுவோம் என்று அதிலிருந்த நமபரில் அழைக்க, எதிர்முனையில் எக்மோர் சர்வீஸ் செண்டர் மாறிவிட்டதாய் சொல்லியிருக்கிறார். புது அட்ரஸ் கேட்டால், வால்டாக்ஸ் ரோடில் ஒரு அட்ரஸ் கொடுத்து வரச் சொல்லியிருக்கிறார். நொந்து போன நண்பர், வேறு வழியில்லாமல், வால்டாக்ஸ் ரோடுக்கு போய் பார்த்தால் வழக்கம் போல் மார்கெட் சந்தில் ஒரு சிறிய பத்துக்கு பத்து அறையில், இரண்டு மூன்று டீவீககள் சர்வீஸுக்கு இருக்க, போனில் பேசியவர் இல்லை, வேறு ஒருவர் டிவியை பார்த்துவிட்டு, ஐசி போய்விட்டதாகவும், நொய்டாவிலிருந்து வரவேண்டியிருப்பதால், வந்தவுடன் சர்வீஸ் செய்து தருவதாகவும் டிவியை கொடுத்துவிட்டு போக சொல்லியிருக்கிறார். சர்வீஸ் கொடுத்தறகான ரசிது கேட்டால் கொடுக்க முடியாதென சொல்லியிருக்கிறார். நண்பரின் பெரும் போராட்டத்திற்கு பிறகு வேறு வழியில்லாமல், ஜாப்கார்ட் நம்பரை கொடுத்திருக்கிறார். டிவி திரும்ப கிடைக்கும் என்ற நம்பிக்கையில்லாமலே சர்வீஸுக்கு கொடுத்துவிட்டு வந்திருக்கிறார் நண்பர்.

ஒரு அரசு இவ்வளவு விமரிசையாய் இலவச டிவிக்களை வழக்கும் போது, அதற்கான சர்வீஸ் செண்டர்களை மக்கள் எளிதில் அணுகக்கூடிய இடங்களில், நல்ல திற்மையான சர்வீஸ் இன்ஜினியர்களை வைத்து சர்வீஸ் செய்து தர வேண்டியது அரசின் கடமையல்லவா..?

டிஸ்கி:
ஒரு சந்தோஷ செய்தி, இப்படி சர்வீஸ் செண்டருக்காக அலைந்த போது, அண்ணாநகரில் ஒரு சர்வீஸ் செண்டரில், நண்பரது டிவி விடியோகான் கம்பெனியாக இருந்தால், சர்வீஸ் செய்ய முடியாவிட்டால், புதிய டிவி தருவதாய் சொல்லியிருக்கிறார்கள். நண்பரின் விதி. அவரத் டிவி தமிழக அரசின் நிறுவனமான எல்காட்டுடயது.. அரசு நிர்வாக் இயந்திரத்தின் தரம் எவ்வளவு நிதர்சனமாய் தெரிகிறது பாருங்கள்.



Blogger Tips -ஏ.ஆர்.ரஹ்மானின் டில்லி-6, திரைவிமர்சனம் படிக்க


உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Post a Comment

32 comments:

அத்திரி said...

இப்ப சந்தோஷமா அண்ணே

அத்திரி said...

இலவசம்னாலே பிரச்சினைதான் அண்ணே

SurveySan said...

:) நோய்டாலேருந்து சரக்கு வந்துதான்னு விசாரிச்சு சொல்லுங்க.

Vidhya Chandrasekaran said...

தண்ட செலவு அரசுக்கு. உருப்படியா ஏதாவது பண்ணியிருக்கலாம்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//அத்திரி said...

இலவசம்னாலே பிரச்சினைதான் //

repeateyyyyyyyyy

Anonymous said...

PEOPLE SHOULD UNDERSTAND ABOUT FREE AND DO NOT VOTE TO DMK FOR THE COMING ELECTION

MURUGAN
SINGAPORE

Anonymous said...

Vanakkam,

Nallathan Irukkum. Ennaikku Veerasamy Statement parthinkala. Makkal Free TV kuduthathal avangaloda General Knowledge improve aki irukkam.

Solla marantha matter entha program parthu General knowledge improve aki ullathu enpathu than.
1. Manada Mailada
2. Odi vilaiyadu Pappa
3. Appuram ellam serial...
Kalaigar & Maran Groups ethanai TV irunthum athanal 1% kuda makkalukku payan ulla program illai.

Enakku suthamaga Ramadasai pudikkathu, mail reason nan Ariyalur karan appa ungalukku therinthu irukku.

Anal nan maximum time parpathu Makkal TV. Nechiyam entha oru background and well financial support ellatha oru TV but avanga program ethuvum kurai solluvathu mathiri ellai.

Anbudan
Tamil Mahan

முரளிகண்ணன் said...

நான் தலைப்பை பார்த்துட்டு ஏதோ டி ஆர் பி மேட்டர்னு வந்தேன்

நையாண்டி நைனா said...

இதற்கு சொல்ல என்னிடம் ஒன்றும் இல்லை.

இந்த திட்டமே, ஒரு தண்ட திட்டம். இதை நான் குறை கூறினால், கழக கண்மணிகள் யாவரும் கலக கண்மணிகளாய் " நீ மட்டும் கலர் டி.வி. பார்ப்பே? ஏழைகள் யாரும் பார்க்க வேண்டாமா?" அதனாலே தான் இந்த திட்டம் என்று சொல்வார்கள். ஏழைக்கு வருமானம் வரும் நல்ல திட்டம் செய்து வருமானத்திற்கு வழி செய்தால் அவனே அவனுக்கு வேண்டியதை வாங்கி கொள்வான். ஆனால் அதை செய்ய மாட்டார்கள்.

இதுலே வேற இன்னிக்கு காலை சன் டி.வி. நியூசிலே நம்ம தயாநிதி மாறன் சொல்றார் " ரேஷன் கார்டு வச்சிருந்தாலே, டி.வி. கொடுக்கிற திட்டம், இந்தியாவிலே, இல்லை இல்லை உலகத்திலே எங்கும் கிடையாது, இங்கே தமிழ் நாட்லே மட்டும்தான்" என்று சொல்கிறார் பெருமையாக. அப்பாடி...!!! இதை கேட்டு நான் அப்படியே புல்லரிச்சு போயிட்டேன்.
என்ன ஒரு திட்டம்!
என்ன ஒரு திட்டம்!!
என்ன ஒரு திட்டம்!!!
இதுலே இதை ரிப்பேரு வேறை பார்க்கணுமா? அப்படின்னா.... அடுத்த எலக்சன்லே ஜெயிக்க வையுங்க, பழைய டி.வி.ய மாத்தி வேற ஒரு டி.வி.யும் கூடவே ஒரு டி.வி.டி பிளேயரும் தர சொல்றோம்.

Cable சங்கர் said...

//இலவசம்னாலே பிரச்சினைதான் அண்ணே//

அதெப்படிண்ணே.. இலவசம்னா நாம பினாயிலை கூட குடிப்போம்னு கவுண்டமணி சொன்னது சரின்னு ஆயிரும் இல்ல.

Cable சங்கர் said...

நோய்டாலேர்ந்து வந்தவுடன் சொல்கிறேன் சர்வேசன்

Cable சங்கர் said...

//இதுலே இதை ரிப்பேரு வேறை பார்க்கணுமா? அப்படின்னா.... அடுத்த எலக்சன்லே ஜெயிக்க வையுங்க, பழைய டி.வி.ய மாத்தி வேற ஒரு டி.வி.யும் கூடவே ஒரு டி.வி.டி பிளேயரும் தர சொல்றோம்.//

அத எடுத்துக்கிட்டு அலையுறதுக்கு இவஙக்ளை தோற்கடிக்கலாம்.

Cable சங்கர் said...

//நான் தலைப்பை பார்த்துட்டு ஏதோ டி ஆர் பி மேட்டர்னு வந்தேன்//

அதான் டிவியில ஒரு கொடேஷன் போட்டுருக்கோம்ல.. பாக்கலையா..?

Cable சங்கர் said...

//Nechiyam entha oru background and well financial support ellatha oru TV //

அப்படின்னு யார் சொன்னது தமிழ்மகன்.. அவர்கள் சேனல் வேண்டுமானால் வித்யாசமாய் நடத்துகிறார்கள், ஒத்துக்கொள்கிறேன். ஆனால் பேக் ரவுண்ட் இல்லையென்றுசொல்லாதீர்கள்.

shortfilmindia.com said...

//தண்ட செலவு அரசுக்கு. உருப்படியா ஏதாவது பண்ணியிருக்கலாம்//

நாமளா செய்ய சொன்னோம் வித்யா அரசாங்கத்தை..

நையாண்டி நைனா said...

/*//இதுலே இதை ரிப்பேரு வேறை பார்க்கணுமா? அப்படின்னா.... அடுத்த எலக்சன்லே ஜெயிக்க வையுங்க, பழைய டி.வி.ய மாத்தி வேற ஒரு டி.வி.யும் கூடவே ஒரு டி.வி.டி பிளேயரும் தர சொல்றோம்.//

அத எடுத்துக்கிட்டு அலையுறதுக்கு இவஙக்ளை தோற்கடிக்கலாம்.*/

don't you want a new DVD player?

நவநீதன் said...

இப்போ மார்க்கெட்ல ரெண்டாயிரம் ரூபாய்க்கெல்லாம் டி.வி கிடைக்குது. எல்லாம் கலைஞர் டி.வி தான்.
இலவசம் கொடுத்ததற்கு ஏழை மக்கள் வேலை வாய்ப்புக்கு வாய்ப்புக்கு வழி செய்திருக்கலாம்.

நையாண்டி நைனா said...

/*இப்போ மார்க்கெட்ல ரெண்டாயிரம் ரூபாய்க்கெல்லாம் டி.வி கிடைக்குது. எல்லாம் கலைஞர் டி.வி தான்.
இலவசம் கொடுத்ததற்கு ஏழை மக்கள் வேலை வாய்ப்புக்கு வாய்ப்புக்கு வழி செய்திருக்கலாம்.*/

ஐயா ... சாமி...
நல்ல பிராண்டட் டீ.வி.யே கிடைக்குது, செகண்ட் ஹாண்டில்.

Unknown said...

இழவு'வசம்

கார்க்கிபவா said...

:))))

நான் மெளன விரதங்க

Nizar said...

அண்ணா கலைஞர் 2000 ரூபாய் டிவி baby electronics மூலமாக வாங்கமுடியும் என்று அவர் வாயால் ஒரு கூட்டத்தில் சொன்னார் பிறக் t.v தரம் ?
இதைவாங்கும் மக்கள் விரவாக விற்று துட்டு பாரப்பது நல்லது
அதை அப்படியே செய்கிறார்கள் சிலர்

அறிவிலி said...

இந்த இலவசங்கள் எல்லாமே வேஸ்ட்டுதான்.
இதே கலர் டிவி சம்பந்தமாக முன்பு எழுதிய என்னுடைய இந்த பதிவை பாருங்கள்.அரசியல் இலவசங்கள்

ரவி said...

கேபிளாரே

மேலே இருக்கும் விளம்பர பேனரை அகற்றும் முறையை மின்னஞ்சலில் அனுப்பியிருந்தேனே ?

பதிவை பற்றி : தமிழக அரசின் இலவச கலர் டிவி என்னுடய வீட்டில் சிறப்பாக இயங்குகிறது. தமிழக அரசுக்கு நன்றி நன்றி நன்றி

Cable சங்கர் said...

//கேபிளாரே

மேலே இருக்கும் விளம்பர பேனரை அகற்றும் முறையை மின்னஞ்சலில் அனுப்பியிருந்தேனே ?

பதிவை பற்றி : தமிழக அரசின் இலவச கலர் டிவி என்னுடய வீட்டில் சிறப்பாக இயங்குகிறது. தமிழக அரசுக்கு நன்றி நன்றி நன்றி//

இந்த மட்டும் நீர் கொடுத்த வைத்த மனுசன்.. நல்லாருக்கட்டும். அப்புறம் ரிப்பேர் ஆயிட்டா பாவம் என் நண்பர் மாதிரி அலைய வேண்டியது தான்.
ரவி.

Cable சங்கர் said...

//இந்த இலவசங்கள் எல்லாமே வேஸ்ட்டுதான்.//

ஆமாம் அறிவிலி.. மிக்க நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.

Cable சங்கர் said...

//இதைவாங்கும் மக்கள் விரவாக விற்று துட்டு பாரப்பது நல்லது
அதை அப்படியே செய்கிறார்கள் சிலர்//

வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த மாதிரி சோதனைதான் வருகிறது.

Cable சங்கர் said...

வருகைக்கும், கருத்துக்கும், நன்றி கார்க்கி, ஆகாய மனிதன்.

Cable சங்கர் said...

ஆமாம் நவநீதன் இலவசம்,இலவசம்ம்னு எதையாவது கொடுத்து மக்க்ளை சோம்பேறி ஆக்குவதை விட, உருப்படியாய் ஏதாவது செய்யலாம்
நன்றி நவநீதன்.

Cable சங்கர் said...

உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி ராதாகிருஷ்ணன், முருகன் அவர்களுக்கு.

Cable சங்கர் said...

பின்னூட்ட கயமைத்தனம்.

Prabhu said...

நீங்கள் சொல்வது சரியே! இலவசம்னா அலையுற கூட்டமா மக்கள மாத்தி வச்சுருக்காங்க. இந்த இலவசத்துக்கு ஒட்டு போடுற வரைக்கும் இப்டிதான் கண்டதையும் கொடுத்து மக்கள சரிகட்டிடலாம்னு தான் இருப்பாங்க. சீனால இலவசம்னு கொடுத்தா அதுக்கு மக்களிடையே மதிப்பு இருக்காதாம். இங்க இலவசம் கொடுத்தவனெல்லாம் நல்லவன் ஆயிடறான்.

M.VIJAYKUMAR said...

Vanakkam.
All peoples are like ILAVASAM.Intha makkal Free ya urin kudutha kooda kudippanga.Muduguvali nna odane ac room,sogusu bed!!!!!
Inga poor makkal yellam mootta thookki kasta paduraanga.head pain vantha all program cancel.(pannadainga)yennakkavathu VEYIL,MALAI,KULIR ithallam yeppadi irukkunnu paarthurupaangala ivanukellam????paradesinga...
vaayila ketta vaartha than veruthu..