வர வர தெலுங்கில இனிமையான, இளமையான படங்கள் வர ஆரம்பித்துவிட்டது. அப்படியான படம் தான் கொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம். படம் முழுவதும் ஒரு இளமை ஜுரம் பரவியிருக்கிறது.
புதுசான கதை கிடையாது. ஆனாலும் சுவாரஸ்யமாய் தெரிவதற்கு நம்ம தமன்னா இருக்கும் போது என்ன் குறை. பொண்ணு ஸ்டாபரரி ஐஸ்கிரீம் மாதிரி சும்மா பார்த்தாலே.. சில்லுன்னுகுது.
ரம்யாகிருஷ்ணனும், பிரகாஷ்ராஜும் கணவன் மனைவி ஆனால் பிரிந்து வாழ்கிறார்கள். இவர்களின் மகனான சித்தார்த் காலேஜில் லெக்சரராய் இருக்கும் தாயுடம் ஹைதராபாத்தில் தனியே இருக்க, அவனின் தந்தை வெளிநாட்டிலிருந்தவர் இந்தியா வருகிறார். கீதா சுப்ரமணீயம் என்கிற தமன்னா வேறு ஊரிலிருந்து ஹைதராபாத்துக்கு மேல் படிப்புக்காக வர, இருவருக்கும் இருக்கும் பொதுவான ஏரியா நண்பர்கள் மூலம் நண்பர்கள் ஆகி, பின்பு காதலர்கள் ஆகிறார்கள். தங்கள் காதலை தமன்னாவின் அப்பா நாசரிடம் சொல்ல, அம்மாவும், அப்பாவும் பிரிந்திருக்கிற குடும்பத்தில், குடும்பத்தின் வேல்யூ தெரியாத வீட்டில், என் பெண்ணை கொடுக்க மாட்டேன் என்கிறார். அவர்கள் இருவரையும், சேர்த்து வைத்துவிட்டு உங்கள் பெண்ணை திருமணம் செய்ய வருகிறேன் என்கிறான் சித்தார்த்.
அவன் அவர்களை சேர்த்தானா... அவர்களின் காதல் நிறைவேறியதா என்பது மீதி கதை..
கிட்டதட்ட நம்ம பூவெல்லாம் உன் வாசம், ஜோடி, காதலுக்கு மரியாதை என்று பல படங்களின் வாசம் அடிக்கிறது.
சித்தார்துக்கும், தமன்னாவுக்கும் இடையே ஒரு இயல்பான கெமிஸ்டிரி ஒர்க் அவுடாகியிருக்கிறது. அவர்களிடயே வருகிற சண்டை ஆகட்டும், ரொமான்ஸ் ஆகட்டும் ஸோ.. ஸூவீட்ட்ட்ட்.. அதிலும் சித்தார்த்தின் பெற்றோர்களை சேர்கிறேன் என்று பேசும் போதே அவர்கள் இருவருக்கும் சண்டை வரும் காட்சிகள், குஷியை ஞாபகபடுத்தினாலும், சுவை.
நம்பிக்கையை பற்றி பேசும்போது திடீரென்று தமன்னா ஒரு மேடை மேல் ஏறி நொடிப் பொழுதில் அப்படியே மல்லாந்தபடி விழ, அதை சற்றும் எதிர்பாராத சித்தார்த் உடனடியாய் ஓடி சென்று தமன்னாவை தாங்கி பிடிக்து, “நான் மட்டும் பிடிக்க்லைன்னா என்ன ஆயிருக்கும்” என்று கேட்க, “நி பிடிப்பே, நான் விழற்தை பார்த்துட்டு இருக்க மாட்டேன் ஒரு நம்பிக்கை” என்று சொல்லுமிடம் அருமை.
வழக்கம் போல பிரகாஷ்ராஜ் தூள் படுத்தியிருக்கிறார் என்பதை சொல்லி சொல்லி அலுத்து விட்டது. அதிலும் அவருக்கு தன் அம்மா கையால் செய்த கத்திரிக்காய் கொண்டு வந்து சித்தார்த அவர் முன்னால் உட்கார்ந்து சப்பு கொட்டி சாப்பிட, அவர் மனது சாப்பிட தூண்டினாலும், அதை மறைத்து மீன் நன்றாக இருப்பதாய் நடிக்கும் காட்சியிலாகட்டும், மீண்டும் மனைவியிடம் மன்னிப்பு கேட்கும் காட்சியிலாகட்டும், மகனுடன் தண்ணியடித்துவிட்டு அவன் காதலியை பார்பதற்காக அவனை அவளிடம் கூட்டி போகும் காட்சியிலாகட்டும் மனுஷன் பின்னுகிறார்.
ரம்யாகிருஷ்ணன் அம்மா என்றால் மூளைக்கு புரியுது.. ஆனா மனசுக்கும், கண்ணுக்கும் புரியலையே.. ம்ஹூஹூம்ம்.. அளவான நடிப்பு. சித்தார்த் தன் பெற்றோருடய ப்ழைய ஆல்பத்தை வெளியே எடுத்து வைத்து அம்மாவை பார்க்க வைக்க.. அப்போது அங்கே வரும் தம்ன்னா ரம்யா கிருஷணனிடம் உங்களுக்கு யார் மேல கோபம் இருக்கோ அவங்க போட்டோ மேல பேனா வச்சு அடிச்சா கோபம் போயிரும்ன்னு சொல்ல ரம்யா சந்தோஷமாய் பிரகாஷின் முகத்தின் மீது அடிக்க, அது தெரியாமல், அந்த ஆல்பத்தை பிரகாஷிடம் சித்தார்த் காட்ட, தன் முகத்தில் அடித்திருப்பதை பார்த்து அவரும் அவர் பங்குக்கு ரம்யாவின் முகத்தில் அடிக்க.. ஓரே கூத்துதான் போங்கள்.
வழக்கம் போல பிரம்மானந்தம் கலக்குகிறார். வேணு மாதவ் அவர் பங்குக்கு வந்து கலாய்த்துவிட்டு போகிறார். சித்தார்த்துக்கு லட்டு மாதிரியான கேரக்டர். க்ளைமாக்ஸ் காட்சியில் நன்றாக நடித்திருக்கிறார். தம்ன்னா பற்றி சொல்ல தேவையில்லை.. வந்து நின்னாலே சில்லுனு இருக்கு ஏற்கனவே சொல்லிட்டேனோ..?
அழகான பளிச்சென்ற ஒளிப்பதிவு. அதிலும் அந்த விண்ட் மில் வயல்வெளியில் எடுக்கப்பட்ட ஷாட்களும், இடைவேளை பிரிட்ஜ் காட்சிகளிலும் ஒளிப்பதிவாளர் விஜய் சக்ரவர்த்தி பளிச்.
படத்துக்கு மிகப்பெரிய பலமும், பலவீனமும் ஷங்கர்-இஷான் - லாயின் இசை.. மிக இனிமையான, துள்ளலான இசை.. பல சமயங்களில் தேவையில்லா இடங்களில் பாட்டை போட்டு நல்ல பாட்டுக்களையும் கேட்க முடியாமல் இம்சை படுத்துகிறார்கள்.
திரைக்கதையை விக்ரம் சிரி, தீபக்ராஜூம் இணைந்து எழுதியிருக்கிறார்கள். தமிழ், தெலுங்கு, இந்தி என்று பல படங்களின் காட்சிகளை ஒன்று சேர்த்திருந்தாலும், இண்ட்ரஸ்டிங்காக செய்திருக்கிறார்கள்.
ஸ்ரீகர் பிரசாத்தின் எடிட்டிங் நச். கதையில் பெரிசாக இல்லாவிட்டாலும் திரைக்கதையினால் தப்பியிருக்கிறார் புது இயக்குனர் கிஷோகுமார்.
கொஞ்சம் இஷ்டம்.. கொஞ்சம் கஷ்டம் - நிறைய இஷ்டம்.. ரொம்ப கொஞ்சமே கஷ்டம்..
உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Post a Comment
33 comments:
Free pass கிடைச்சா எல்லா படமும் பார்க்கலாம்..ம்..ம்.
//Free pass கிடைச்சா எல்லா படமும் பார்க்கலாம்..ம்..ம்.//
சார்.. நான் பாக்கிற முக்கால்வாசி படம் காசு கொடுத்து டிவிடிலயோ.. தியேட்டர்லயோ.. பாக்கிறேன்.. ஓசியில இல்ல சார்.
இது மாதிரி படங்களை பார்க்க நிறைய இஷ்டம்.. கொஞ்சம் கஷ்டம்.
இஷ்டம் ஆர்வத்துல இருக்கு.. கஷ்டம் நேரத்துல இருக்கு..
கேபிள் மாதிரி காலைக் காட்சிக்கே தியேட்டருக்கு போய் படம் பார்க்குற மாதிரி சிச்சுவேஷன் எனக்கும் அமைஞ்சா எப்படியிருக்கும்..?
மச்சானுக்கு மச்சம் எங்கிட்டிருக்குன்னு தெரியல?
//கேபிள் மாதிரி காலைக் காட்சிக்கே தியேட்டருக்கு போய் படம் பார்க்குற மாதிரி சிச்சுவேஷன் எனக்கும் அமைஞ்சா எப்படியிருக்கும்..?//
தலைவரே நான் இந்த படத்தை போனவாரம் நைட் ஷோ பார்த்தேன்.
జ్ఫ్స్కోదజ్ఫ్క్ల్ క్జేఒప్రి ఇకొఇఎర్వొన్క్ల్ర్జ్జేర్ప్క్ శాదోఫ్జస్ల్క్జ్ప్ల్ జల్ద్జ్ పావుజ్పోఇక్
சங்கர் காரு, பாக உந்தி மீரு விமர்சினாலு
//జ్ఫ్స్కోదజ్ఫ్క్ల్ క్జేఒప్రి ఇకొఇఎర్వొన్క్ల్ర్జ్జేర్ప్క్ శాదోఫ్జస్ల్క్జ్ప్ల్ జల్ద్జ్ పావుజ్పోఇక్ //
சால சந்தோஷமண்டி.. நிலாண்டிவாலு ஆசீர்வாதாலு நாக்கு சால சந்தோஷங்கா உந்தி பாபு.. உன்னானண்டி.
டப்பிங் செய்தாலே தமிழ் படம் போலத்தான் இருக்கும் போல? எல்லோரும் தமிழ் படங்களில் நடித்த நடிகர்களாக இருக்கிறார்கள்.
நேத்து தான் happy days பார்த்தேன். டிவிடி வந்தப்புறம் இதையும் பார்த்துடலாம்:)
சூப்பர் விமர்சனம், சங்கர் சார். It is a feel good film, isn't it?
//டப்பிங் செய்தாலே தமிழ் படம் போலத்தான் இருக்கும் போல? எல்லோரும் தமிழ் படங்களில் நடித்த நடிகர்களாக இருக்கிறார்கள்.//
இப்போதெல்லாம் தமிழ், தெலுங்கு என்று நடிகர்களிடம் பெரிய வித்யாசம் இல்லை. தமிழில் இருக்கும் பல நடிகர்கள் தெலுங்கில் பிரபலமானவர்களே..
//நேத்து தான் happy days பார்த்தேன். டிவிடி வந்தப்புறம் இதையும் பார்த்துடலாம்:)//
இவ்வளவு சீக்கிரமா பாத்துட்டீங்களா..?
நான் நான்கு தடவை தியேட்டரிலும், பல தடவை டிவிடியிலும் பார்த்து கொண்டேயிருக்கிறேன்.
//சூப்பர் விமர்சனம், சங்கர் சார். It is a feel good film, isn't it?//
ஆமாம் அருண் its a feel good movie only. மிக்க நன்றி அருண்.. உங்க்ள் எதிர்பார்பை பூர்த்தி செய்திருக்கிறேனா..?
//ஆமாம் அருண் its a feel good movie only. மிக்க நன்றி அருண்.. உங்க்ள் எதிர்பார்பை பூர்த்தி செய்திருக்கிறேனா..?//
படமும் சூப்பர், உங்க விமர்சனம் அதைவிட சூப்பர்.
/*கொஞ்சம் இஷ்டம்.. கொஞ்சம் கஷ்டம் - நிறைய இஷ்டம்.. ரொம்ப கொஞ்சமே கஷ்டம்..*/
ஐயா... சாமியோ... உங்க விமர்சனம் பார்த்தா, "கொஞ்சம் மேட்டர் நிறைய ஜொள்" என்றல்லவா தெரியுது.
/*நம்ம தமன்னா இருக்கும் போது என்ன் குறை. பொண்ணு ஸ்டாபரரி ஐஸ்கிரீம் மாதிரி சும்மா பார்த்தாலே.. சில்லுன்னுகுது.*/
/*ரம்யாகிருஷ்ணன் அம்மா என்றால் மூளைக்கு புரியுது.. ஆனா மனசுக்கும், கண்ணுக்கும் புரியலையே.. ம்ஹூஹூம்ம்..*/
/*தம்ன்னா பற்றி சொல்ல தேவையில்லை.. வந்து நின்னாலே சில்லுனு இருக்கு ஏற்கனவே சொல்லிட்டேனோ..?*/
# # # # # # # # # # # # # # # # #
/*புதுசான கதை கிடையாது*/
என்ன சாமி சொல்ல வாறீங்க?
இந்த படமும் வழக்கம் போல கதை இல்லாம தான் எடுத்திருக்காங்க. புதுசா இதுலே மட்டும் கதை வச்சி எடுத்திருக்காங்க அப்படி யாரும் நெனச்சிற வேண்டாம் என்று சொல்ல வாறீங்களா?
ஒரே தமாசு தான் உங்களோட...
சண்டை போட்டுப் பிரிந்திருக்கும் அப்பா,அம்மாவைச் சேர்த்து வைக்கும் கதையைக்'குழந்தையும் தெயவமும்' காலத்திலிருந்து கேட்டாலும்,பார்த்தாலும் இன்னும் அலுக்காது போலிருக்கிறது.இல்லையா ஷங்கர்?இனிமையான படம் என்று உங்கள் விமர்சனம் சொல்லுகிறது.
சீக்கிரம் SMS விமர்சனம் போடுங்க தல...கலையில இருந்து உங்களுக்காக waiting...
அருமையான விமர்சனம்....ஆமா...யாரும் தியேட்டர்ல போய் படம் பார்க்க மாட்டாகளா....! DVD....ய எதிர்பார்க்கிர மாதிரி இருக்கு..!!!தயவு செய்து சினிமா தியேட்டரில் சென்றூ படம் பார்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன்...நன்றீ...
as usual...!!!
//தம்ன்னா பற்றி சொல்ல தேவையில்லை.. வந்து நின்னாலே சில்லுனு இருக்கு ஏற்கனவே சொல்லிட்டேனோ..?//
தமன்னா ஜுரம் அதிகமா அடிக்குது போல
எனக்கு ரொம்ப பிடிச்ச கதாநாயகியயன் படம்...
நல்ல விமர்சனம்...
பிலிமு சூஸ்தினேனு..... ஹி ஹிஹி..
தமண்ணாவின் ஹேப்பி டேஸ் இத விட நல்லா இருக்கும்ம்ம். வாய்ப்பு கிடைச்சா பாருங்க.
//தமண்ணாவின் ஹேப்பி டேஸ் இத விட நல்லா இருக்கும்ம்ம். வாய்ப்பு கிடைச்சா பாருங்க.//
ஏற்கனவே நாலு முறை பார்த்தாச்சு.. பல முறை டிவிடியில் பார்த்தாசு.. அதுக்கான் பதிவும் போட்டாச்சு.. http://cablesankar.blogspot.com/2008/10/happy-days.html
//தமன்னா ஜுரம் அதிகமா அடிக்குது போல//
ஜூரம் இல்ல அத்திரி ஜன்னி..
//தயவு செய்து சினிமா தியேட்டரில் சென்றூ படம் பார்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன்...நன்றீ...//
நான் தியேட்டரிலதான் படம் பார்ப்பேன். ராமசுப்ரமணியம்.
//சீக்கிரம் SMS விமர்சனம் போடுங்க தல...கலையில இருந்து உங்களுக்காக waiting...//
வந்து கொண்டேயிருக்கிறது. அனானி;
//சண்டை போட்டுப் பிரிந்திருக்கும் அப்பா,அம்மாவைச் சேர்த்து வைக்கும் கதையைக்'குழந்தையும் தெயவமும்' காலத்திலிருந்து கேட்டாலும்,பார்த்தாலும் இன்னும் அலுக்காது போலிருக்கிறது.இல்லையா ஷங்கர்?இனிமையான படம் என்று உங்கள் விமர்சனம் சொல்லுகிறது.//
ஆமாம் சார்.. நீஙக்ள் சொல்வது சரிதான். இனிமையான் படம்தான்.
//ஐயா... சாமியோ... உங்க விமர்சனம் பார்த்தா, "கொஞ்சம் மேட்டர் நிறைய ஜொள்" என்றல்லவா தெரியுது.//
ஹி..ஹி.. உங்களுக்கும் தெரிஞ்சி போச்சா..
விமர்சனம் நன்னா இருக்கு நைனா...
//ரம்யாகிருஷ்ணனும், பிரகாஷ்ராஜும் கணவன் மனைவி ஆனால் பிரிந்து வாழ்கிறார்கள். இவர்களின் மகனான சித்தார்த் காலேஜில் லெக்சரராய் இருக்கும் தாயுடம் ஹைதராபாத்தில் தனியே இருக்க, அவனின் தந்தை வெளிநாட்டிலிருந்தவர் இந்தியா வருகிறார்.//
M.குமரன் S/O மகாலக்ஷ்மி ?
//M.குமரன் S/O மகாலக்ஷ்மி ?//
அதான் சொல்லிட்டேனே தலைவா.. இந்த படக் கதை நாம் பல படஙக்ளில் பார்த்த ஒன்றே.. திரைக்கதை இண்ட்ரஸ்டாக இருப்பதால் தப்பியிருக்கிறது.
Hi
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை www.tamilblogger.com ல் சேர்த்துள்ளோம்.
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.
இதுவரை இந்த www.tamilblogger.com இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.
நட்புடன்
tamilblogger குழுவிநர்
The film is a good weekend watch. I enjoyed the movie.
Thanks,
Sabari
Bangalore
//The film is a good weekend watch. I enjoyed the movie.
Thanks,
//
மிக்க நன்றி சபரி.. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.
Post a Comment