1954 இத்தாலிய கிராமங்களில் டிவிகூட அவ்வளவாக நுழையாத காலம், ஜோமொரிலி என்பவன் ஓரு பழைய லாரி போன்ற வாகனத்தில், ஊர் ஊராக சுற்றி, தான் ரோமில் இருக்கும் கொலப்பியா பிக்சர்ஸின் ஆள் என்றும், சினிமாவில் நடிக்க ஆட்களை தேர்வு செய்வதற்காக வந்திருப்பதாகவும், உங்களில் யார் வேண்டுமானாலும், திரைப்படங்களில் நடிக்க முடியும், அதற்கான ஸ்கிரின் டெஸ்ட் எடுப்பதற்கு ஆயிரம் லியர் வரை வாங்கி கொண்டு, அவன் திருடி கொண்டுவந்த கேமராவும், எக்ஸ்பயரி ஆகிய பிலிம் ரோலை வைத்துக் கொண்டு ஒவ்வொரு கிராமமாய் போய், டேரா போட்டு, பணத்தை வசூலிக்கிறான். இவன் படம்பிடிக்கும் எல்லாருடைய காட்சிகளையும் போட்டு பார்த்துவிட்டு அவர்களில் ஒருவரை கொலம்பியா பிக்சர்ஸ் தேர்தெடுக்கும் என்று சொல்லி ஏமாற்றுகிறான்.
அப்படி டேரா போட்டிருந்த ஓரு கிராமத்தில் பியாட்டா என்பவள், தன்னை எப்படியாவது பெரிய கதாநாயகியாக்கிவிடுமாறு வ்ந்து கேட்கிறாள். யாருடய ஆதரவில்லாமல் வீடுகளையும், அலுவலகங்களையும், சுத்தம் செய்து பிழைப்பை ஓட்டிக் கொண்டு, ஓரு தேவாலயத்தின் ஆதரவில் இருக்கும் தன்னிடம் அவன் கேட்குமளவுக்கு பணம் இல்லை என்கிறாள். ஓரு கட்டத்தில் அவளின் அழகு அவனை இறங்கி வர செய்கிறது. அவளுக்காக அரை பணத்தில் எடுத்து கொடுப்பதாய் பணத்தை வாங்கி அவளை டெஸ்ட் ஷூட் செய்து முடித்துவிட்டு வேறு ஓரு ஊருக்கு புறபடுகிறான். சினிமாவில் சேர அவள் டெஸ்ட் ஷூட் எடுத்ததால் அவளை தேவாலயத்திலிருந்து துரத்தப்பட, எங்கே போவது என்று தெரியாமல் அவனுக்கு தெரியாமலே அவனுடய வண்டியில் ஏறி பயணிக்கிறாள். உள்ளூரில் ஒரு பெரிய மனிதனின் சவ ஊர்வலத்தை படம்பிடித்து பணத்தை வாங்கி கொண்டு எஸ்கேப்பாகும் அவனால் அவளை இறக்கிவிட முடியாமல், பியட்டாவுடனேயே பயணிக்க ஆரம்பிக்க, அவர்கள் இருவருக்கும் ஓரு புரிதல் ஆரம்பிக்க, அப்போது அவனை இத்தாலிய போலீஸார் கைது செய்கிறார்கள்.
சில மாத சிறை தண்டனைக்கு பிறகு வெளிவரும் ஜோமொரிலிக்கு அவனுடய பழைய வண்டியில் ஏறிய போது அதில் யாரோ வசித்தது போன்று தெரியவர, போலீஸிடம் விசாரிக்க, பியாட்டா அவன் ஜெயிலுக்கு போன பிறகு கூட அவனுடய வண்டியிலேயே தங்கியிருந்தாக தெரிய வர, கொஞம் காலம் கழித்து வேறு வ்ழியில்லாமல் அவளை துறத்தி விடபட்டதாகவும் சொல்ல, ஜோமொரிலி அவளை தேடி அலைகிறான். நெடு நாள் தேடுதலுக்கு பிறகு ஒரு நாள் அவளை ஓரு அசைலத்தில் பார்க்கிறான்.
மொட்டை அடிக்க பட்டு,ஓரு அடிபட்ட பறவையாய் சுய சிந்தனை இழந்து, தன் அருகிலிருப்பவன் தன்னுடய் காதலன் என்பதை கூட உணர முடியாமல்.. அவனிடமே ஜோமொரிலி வருவான் தன்னை இத்தாலியில் உச்ச நாயகியாய் ஆக்குவான் என்று திரும்ப, திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறாள் பியட்டா..
சினிமாவின் தாக்கம், சினிமாவில் நடிக்கும் ஆர்வம் சிறுவர்கள் முதல் கிழவர்கள் வரை, ஏன் செவிடு, ஊமைகள் கூட ஆசைபடுவதை, டெஸ்ட் ஷூட்டுக்கு வரும் பல விதமான மனிதர்களின் உணர்வுகளை வைத்தே சொல்லியிருக்கும் விதமும், அதிலும், எல்லாருக்கும், லெப்ட், ரைட், ப்ரொபைல், ஆக்ஷன், என்றவுடன் ஒவ்வொருவரும் டயலாக் பேசுவதும், அந்த காட்சிகள் மீண்டும், மீண்டும் வந்தாலும், புதிதாய் தெரிவது இயக்குனரின் திறமை. அதுமட்டுமில்லாமல் சினிமா என்கிற மீடியத்தின்ஆளுமை நம்மை மட்டுமல்ல உலகில் உள்ள எல்லாருடய மனதிலும் அந்த ஆர்வமும்,பாதிப்பும் இருக்கிறது என்பதை காட்டுகிறது.
அதிலும் ஓரு பெண் தன்னுடய 15 வய்து மகளை எப்படியாவது கதாநாயகி ஆக்க தன்னையே கொடுப்பதாகட்டும், அவளுடன் புணரும் போது அவள் ஓயாமல் லொட,லொடவென தன்னால் ஓரு கதாநாயகியாய் வரமுடியாமல் போனதை பற்றியே புலம்பிக் கொண்டிருப்பதும், அதை கேட்டு எரிச்சலாகி போய் ஜோமொரிலி அவளை திட்டியபடியே புணர்வதும்,போன்ற காட்சிகள் நம் மனதை பிசையத்தான் செய்யும்..
ஜொமொரிலியாக வரும் செர்ஜியோ காஸ்டிலிட்டோவின் நடிப்பு மிக இயல்பு.
பியட்டா.. அசத்துகிற் அழகி.. பல கோணங்களில் அச்சு அசலாய், நம்ம சார்மி போலிருக்கிறார். அவருடய இன்னொசென்ஸும், அழகும், நம்மை கட்டி போடாமல் இருக்காது. டெஸ்ட் ஷூட்டுக்கு பணம் சம்பாதிக்க, ஒரு கனவானுடய அலுவலகத்தில் பெருக்க, போய் அவளை கண்ணாலேயே படம் பிடிப்பதை பார்த்து, முழுசாய் பாக்க வேண்டுமானால் இவ்வளவு பணம் என்று சொல்லி, தன்னுடய் உடைகளை பரபரப்பாக கலைய, கனவான் பதட்டத்துடன் ‘மெதுவா..மெதுவா..” என்று சொல்வது, பார்க்கும் நமக்கும் பொருந்தும் பியடாவின் அழகு அப்படி அசத்தும். அதே போல் பியட்டாவும், ஜோமொரிலியும் அந்த மலைக் குகையில் இணையும் காட்சியில் இருவருக்கும் உளள ரொமான்ஸும், ஓளிப்பதிவு சூப்பர். க்ளைமாக்ஸ் காட்சியின் ஒளிப்பதிவும், காட்சியின் தாக்கமும் நம்மை விட்டு வெகுநாள் அகலாது.
இயல்பான நடிப்பு, வசனங்கள், சீரான திரைக்கதை,அற்புதமான ஓளிப்பதிவு, சிறந்த இயக்கம்,என்று எல்லா விதத்திலும் நம்மை கவரும் இந்த ”ஸ்டார் மேக்கர்”.
1995ஆம் ஆண்டு சிறந்த வெளிநாட்டு படத்துக்கான ஆஸ்கர் நாமினேஷன் பெற்ற படம். “சினிமா பாரடைசோ” புகழ் திரைப்பட இயக்குனர் குசுப்பே டோர்னடோரே இயக்கிய படம்.
உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Post a Comment
24 comments:
//தன்னுடய் உடைகளை பரபரப்பாக கலைய, கனவான் பதட்டத்துடன் ‘மெதுவா..மெதுவா..” என்று சொல்வது, பார்க்கும் நமக்கும் பொருந்தும் பியடாவின் அழகு அப்படி அசத்தும். அதே போல் பியட்டாவும், ஜோமொரிலியும் அந்த மலைக் குகையில் இணையும் காட்சியில் இருவருக்கும் உளள ரொமான்ஸும், ஓளிப்பதிவு சூப்பர். க்ளைமாக்ஸ் //
ம்ம்ம்ம்ம்ம்ம்,....படம் நல்லாயிருக்கும் போல டிவிடி இருந்தா கொடுங்களேன்
இந்தப் படம் வந்த போது ஆர்வத்துடன் வாங்கிப் பார்த்தேன்.பரவாயில்லை,உங்களுக்காவது பிடித்திருக்கிறதே.
நல்ல விமர்சனம்.. இதுக்கான டிவிடி எல்லாம் எங்க தல கிடைக்குது உங்களுக்கு?
//நல்ல விமர்சனம்.. இதுக்கான டிவிடி எல்லாம் எங்க தல கிடைக்குது உங்களுக்கு?//
நம்ம கிட்டயே இருக்குது வெண்பூ.. வேணுமா..?
//இந்தப் படம் வந்த போது ஆர்வத்துடன் வாங்கிப் பார்த்தேன்.பரவாயில்லை,உங்களுக்காவது பிடித்திருக்கிறதே.//
எனக்கு மிகவும் பிடித்த படம் சார்.. அதிலும், டெஸ்ட் ஷூட் செய்யும் போது வரும் மனிதர்களின் முக பாவங்கள்.. சூப்பர். அந்த ஹீரோயினை என்னால் அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியவில்லை. பார்த்து பல வருடங்கள் ஆனாலும் கூட.. நன்றி சார்.
/super///
நன்றி முரளி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்
//ம்ம்ம்ம்ம்ம்ம்,....படம் நல்லாயிருக்கும் போல டிவிடி இருந்தா கொடுங்களேன்//
நல்லாத்தானிருக்கு வேணுமா..? எப்ப வ்ந்த் வாங்கிக்கிறீங்க..?
அஹா... சூப்பர் படம், சூப்பர் பதிவு
படத்தை ஒவ்வொரு ப்ரேமாக ரசித்து இருக்கின்றீர்கள் என்று தெரிகின்றது. ஒரு இயக்குனரின் பார்வை படத்தைப் பற்றி எப்படி இருக்க வேண்டும் என்றும் புரிகின்றது.
உங்கள் விமர்சனங்களைப் படிக்கும் போது, ஒரு படத்தை எப்படி பார்க்க வேண்டும், அதில் எதை எல்லாம் விவரமாக பார்க்க வேண்டும் என்று புரிகின்றது.
நன்றி சங்கர். நீங்கள் விரைவில் இயக்குனாராக எல்லாம் வல்ல ஆண்டவனிடம் வேண்டுகின்றேன்.
ஆங்கிலம் தவிர வேறு மொழிப்படங்களை பார்க்கும் தைரியம் உங்களை/வண்ணத்துபூச்சி மாதிரி யாராவது எழுதினாதான் வருது.
தயவு செய்து, வாரம் ஒன்று, இதுபோல எழுதி, எங்களுக்கு உலக சினிமாவை அறிமுகப்படுத்துங்க ’கேபிள்’ சார்.
இயக்குனரே,
//தயவு செய்து, வாரம் ஒன்று, இதுபோல எழுதி, எங்களுக்கு உலக சினிமாவை அறிமுகப்படுத்துங்க ’கேபிள்’ சார்.//
வழி மொழிகிறேன்.
சினிமா பாரடைஸோ கதையும் இதே போல ஆனந்த விகடன் 'உலக சினிமா'வில் பார்த்தேன். கடைசியில் ஓடும் முத்தக் காட்சிகளின் தொகுப்பைப் பற்றிக் கூறும் பொழுது இருந்த அதே போன்ற ஒரு தொலைந்த உணர்வு இதிலும் முடிவில் ஏற்பட்டது.
இந்த இயக்குனர் சினிமா பிண்ணனியில் நிறைய படம் எடுப்பாரோ?
கண்டிப்பாக இந்த படம் பார்க்கிறேன். நெட்ல இருந்து இறக்கியாவது- டோரண்டாய நமஹ!
//இந்த இயக்குனர் சினிமா பிண்ணனியில் நிறைய படம் எடுப்பாரோ?
கண்டிப்பாக இந்த படம் பார்க்கிறேன். நெட்ல இருந்து இறக்கியாவது- டோரண்டாய நமஹ!//
முதல் கேள்விக்கு பதில் இலலை. பப்பு.. கண்டிப்பாய் இந்த படத்தை பாருங்கள்.. நீங்கள் மிகவும் விரும்புவிர்கள்.
//ஆங்கிலம் தவிர வேறு மொழிப்படங்களை பார்க்கும் தைரியம் உங்களை/வண்ணத்துபூச்சி மாதிரி யாராவது எழுதினாதான் வருது.
தயவு செய்து, வாரம் ஒன்று, இதுபோல எழுதி, எங்களுக்கு உலக சினிமாவை அறிமுகப்படுத்துங்க ’கேபிள்’ சார்.///
இதபார்றா.. இதுல ஏதும் உள்குத்து இல்லையே..?
இல்லைன்னா நன்றி பாலா
//நீங்கள் விரைவில் இயக்குனாராக எல்லாம் வல்ல ஆண்டவனிடம் வேண்டுகின்றேன்.//
நன்றி இராகவன்.. உங்கள் வேண்டுதலுக்கு இறைவன் விரைவில் செவி சாய்க்கட்டும்.. மீண்டும் நன்றி உஙக்ள் வருகைகும், கருத்துக்கும்
//அஹா... சூப்பர் படம், சூப்பர் பதிவு//
நன்றி அக்னி பார்வை. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.
பின்னூட்ட கயமைத்தனம்
//இதபார்றா.. இதுல ஏதும் உள்குத்து இல்லையே..?
இல்லைன்னா நன்றி பாலா//
அட நெஜமாதாங்க சங்கர். 99% நான் வேகமாக நகரும் ஆங்கிலப்படங்களை மட்டுமே பார்க்க விரும்புவேன். 10 படத்துக்கு 1-ன்னுதான் வேற மொழிப்படம்.. அதுவும் யாராவது சொன்னால் மட்டுமே..!!
சினிமா பாரடைசோ, பார்த்திருக்கீங்களா. பாலா.?
நல்ல விமர்சனம். DVD கிடைக்குதான்னு பாக்குறேன்....
மிகவும் அருமையான விமர்சனம், படம் பார்க்க தூண்டுகிறது ... netla தான் தேடிபார்க்கனும் .....
//நல்ல விமர்சனம். DVD கிடைக்குதான்னு பாக்குறேன்....//
கண்டிப்பா கிடைக்கும் ச்சின்னப்பையன்.. நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.
//மிகவும் அருமையான விமர்சனம், படம் பார்க்க தூண்டுகிறது ... netla தான் தேடிபார்க்கனும் .....//
பாருங்கள் அசோக்.. நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.
வணக்கம் கேபிள் சங்கர்,
Star Maker ஒரு நல்ல படம். உங்கள் விமர்சனமும் கச்சிதமாக இருக்கிறது.
சினிமா பாரடிசோ முதல் முறை பார்த்து முடித்த உடன் மீண்டும் முதலிலிருந்து பார்த்தேன். மறக்க முடியாத திரைப்படம்.
குசாப்பேயின் மெலீனா படத்தையும் பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன். இத்தாலியின் சிசிலிய கடற்கரை கிராமத்தில் நடக்கும் கதை.
//குசாப்பேயின் மெலீனா படத்தையும் பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன். இத்தாலியின் சிசிலிய கடற்கரை கிராமத்தில் நடக்கும் கதை.//
குசுப்பேயின் எல்லா படங்களிலும் ஒரு மெல்லிய சோகம் இழையோடிக் கொண்டே யிருக்கும். மெலினா என்னுடய இன்னொரு ஃபேவரேட் பிரேம்ஜி.. நன்றி
Post a Comment