எவ்வளவு நாட்களுக்குதான் நாம் வேற்று மொழி படங்களையே பார்த்து உலக் சினிமா என்று பெருமைபட்டு கொண்டிருப்பது. இதோ இப்போது நம் மொழியில், நம் தமிழ் மொழியில். ஊருக்கெல்லாம் பட்டு சேலை நெய்யும் ஒரு நெசவாளியின் வாழ்கை போராட்டத்தை உள்ளம் உருக, நெகிழ்வாக சொல்லியிருக்கிறார்கள்.
வேங்கடம் ஜெயிலிலிருந்து பரோலில் வருவதிலிருந்து ஆரம்பிக்கிறது படம். பெரும் மழையினூடே ஓடும் அந்த கால பஸ்ஸில் தன் வாழ்கையை நினைத்து பார்க்கிறான் வேங்கடம்.
தனக்கு பெண் குழந்தை பிறந்த நாளில் அவளின் திருமணத்துக்கு பட்டு புடவை தருவதாய் சொன்னதை ஊரே பேராசை என்று சொல்லும்போதே அந்நாளைய நெசவாளர்களின் வாழ்கை நிலையை கண் முன்னே விஸ்தாரமாய் விரிகிறது.
குறைந்த கூலி, அந்நாளின் வேலை செய்யும் முறை. முதலாளிகளீன் அடக்குமுறை. ஏழை நெசவாளிகளின் வாழ்க்கை. என்று ஒவ்வொரு காலகட்டத்தையும் விரிக்கிறார்கள் இயக்குனரும், ஒளிப்பதிவாளரும்.
தன் பெண்ணின் பட்டுபுடவைக்காக வைத்திருக்கும் பணம் தன் தங்கையின் வாழ்க்கை பிரச்சனைக்கு செலவாகி போக, வேறு வழியில்லாமல் தறியிலிருந்து வாயினுள் பட்டு நூலை அடக்கி வருடங்களாய் கொஞ்சம், கொஞ்சமாய் சேர்த்த பட்டு நூலை கொண்டு அவன் தன் மக்ளுக்காக நெய்ய ஆரம்பிக்கிறான்.
இதன் நடுவே கம்யூனிஸ்ட் கட்சிகளின்பால் ஈடுபாடு ஏற்பட்டு, அதனால் ஏற்படும் நெசவாளர்களின் உரிமை பிரச்சனை, தெரு நாடகம், போன்றவற்றில் ஈடுபாடு, கம்யூனிஸ்ட் கட்சியின் லோக்கல் தலைவராக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு போராட்டம் நடக்கையில், தன் பெண்ணின் திருமணம் நிச்சயம் செய்யப்பட, மகளுக்கான சேலையை நெய்வதற்க்கு பட்டு நூல் வேண்டும் என்பதற்காக, மூன்று மாதமாய் நடந்த போராட்டத்தை கைவிட்டு வேலைக்கு திரும்புவதும், வெளியே வரும் போது தன் நண்பனாலேயே பேச முடியாமல் திருட்டில் மாட்டி கொள்வதும், அதன் பிறகு நடக்கும் நிகழ்வுகள் நிதர்சனம்.
தான் நெய்த சேலை தன் மகளின் பிணத்துக்கு கூட முழுசாய் மூட முடியாத அளவிற்க்கு இருப்பதை தன்நிலை மறந்த நிலையில் மறுபடி, மறுபடி மூட எத்தனிக்க, டயம் ஆச்சு கிளம்பலாம் என்று குரலை கேட்டு மனம்பிறழ்ந்த ஒரு சிரிப்போடு படம் நிறைவடைகிறது.
வேங்கடமாய் வாழ்ந்திருக்கிறார் ப்ராகாஷ்ராஜ், இதைவிட அவரை பாராட்ட வார்த்தையிருக்குமா என்று தெரியவில்லை. ஸ்ரேயா ரெட்டி குறையொன்றுமில்லை. அளவான நடிப்பு, முதலாளியா வரும் அந்த குண்டு மனிதர், துபாஷாக வருபவர், வேங்கடத்தின் நண்பன், அந்த கம்யூனிஸ்ட் தோழர், என்று எல்லோரும் த்ங்கள் பங்குக்கு நிறைவாய் செய்திருக்கிறார்கள்.
திருவின் அருமையான ஒளிப்பதிவு, படம் முழுவதும் விரவியிருக்கும் செமி செபியா டோன் நம்மை அந்த நாட்களுக்கே இட்டு செல்கிறது.
சாபு சிரிலின் ஆர்ட் டைரக்ஷனுக்கு ஒரு சலாம், அந்த கால மனிதர்களின் உடை, சைக்கிள், கார், வீட்டு சாமான்கள், தறி, உடைகளின் வண்ணங்கள் என்று மனுச்ன பின்னியிருக்கிறார்.
எம்.ஜி.ஸ்ரீகுமரின் இசையில் ஒரு பாடல், அருமை, பிண்ணனி இசை யை தேவையான இடத்தில் மட்டும் பயன்படுத்திவிட்டு மற்ற இடங்களில் எபக்டுகளிலேயே நகர்த்தியிருப்பது அருமை.
இயக்குனர் ப்ரியதர்ஷன் படம் முழுவதும் நிற்கிறார். முக்கியமாய் கொள்கையின் பால் ஈடுபாட்டுடன் தொழிலாளர் ஒற்றுமை குறித்தது பேசும் காட்சியிலாகட்டும், அதே மனிதன் ஒரு கம்யூனிஸ்ட் தகப்பனாய் யோசிக்கும் போது, தன் கொள்கையை இழக்கும் காட்சியில், அவர் பேசும் வசனங்களாகட்டும், தன் மகளுக்கு கல்யாண பரிசாய் பட்டு புடவைக்காக சேர்த்து வைத்திருந்த காசை தன் தங்கையின் வாழ்கை பிரச்சனைக்காக கொடுத்தவுடன், அதை சமாளிக்க அவர் பொய் சொல்வதும், கணவன் மனைவி இருவரும் அந்த சமயத்தில் பேசிக் கொள்ளும் காட்சிகளின் வசனம், அந்த இயல்பு, அதே போல் தன் மகள் பிறந்தவுடன் தன் கையாலே பால் சோறு கொடுக்கும் தகப்பன் கையாலேயே, எலிபாஷாண சோறு கொடுகும் காட்சியில் பால் சோறு கொடுக்கும் போது போடப்பட்ட பாடலை மறுபடி உபயோகப்படுத்தி நம் மனதை நெகிழ வைக்கிறார். . நிஜமாகவே உலக தரத்தில் ஒரு நெசவாள தமிழனின் வாழ்கையை காட்டியிருக்கிறார் இயக்குனர் பிரியதர்ஷன். ஹாட்ஸ் ஆப் ப்ரியதர்ஷன்
உலகம் முழுவதும் இது வரை முன்று இண்டர்நேஷனல் படவிழாக்களில் பங்கு பெற்றிருகிறது.
காஞ்சிவரம் - உலக சினிமா இந்தியாவிலிருந்து.
பார்த்ததில் பிடித்தது.
என்ன வாய்ஸ்பா.. சூப்பர்ப்…. கேட்டு பார்த்து என் கண்களிலிருந்து கண்ணீர் பெருகியது. உங்களுக்கு பிடித்திருந்தால் கண்டிப்பாய் பின்னூட்டமிட்டு, பாராட்டுங்கள். இவ்வளவு சின்ன வயதில் எவ்வளவு பாவம், கேட்டால் உருகாதவர்கள் இருக்கமாட்டார்கள்.. அதிலும் இரண்டாது சரணத்தில் என்ன அழகான மாடுலேஷன், பின்னீட்டே அனாகா.. வாழ்த்துக்கள்
உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், தமிலிஷிலும்,Nதமிழ்லேயும் குத்துங்க.. எசமான் குத்துங்க..