1977 - திரைவிமர்சனம்
ஒரு கிராமமே கொண்டாடும் பெரியவர் ஒருவர், அந்த கிராம மக்களுக்கு தெரிந்து ஊரை விட்டு வெளியே போகாதவர், ஒரு நாள் திடீரென ஒரு தினசரியில் வந்த படங்களை பார்த்துவிட்டு ஊரை விட்டு போக நினைக்கிறார். ஆனால் இறந்து போகிறார். அவர் எங்கே போக நினைத்தார்?, எதனால..? என்பதை தேடி அலைய ஆரம்பிக்கிறான் மகன். போக, போக தெரிகிறது தன் தந்தை 108 பேரை கொன்ற ஒரு கொலை குற்றாவாளியென்றும், தூக்கு தண்டைனையிலிருந்து தப்பித்துவிட்டவர் என்றும். தன் தந்தையின் கடந்த காலத்தை கண்டுபிடித்து, அவர் மீது உள்ள பழியை தீர்பதே கதை.
இதை படிக்கும் போது அட பரவாயில்லையே ஒரு மசாலா படத்துக்கு தேவையான எல்லா விஷயங்களும் உள்ள கதைதானே என்று நினைப்பவர்களுக்கு.. கதையாய் சொல்லும் போது நல்லாத்தானிருக்கு.. படம்.. ம்ம்ம்..ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..
பாவம் சரத்குமார் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார், ரொம்ப நாளாக, சொந்த படமே எடுக்க கூடாது என்று நினைத்து கொண்டிருந்த போது, இயக்குனர் தினேஷ் குமார் சொன்ன கதை என்னை படமெடுக்க வைத்துவிட்டது என்று. என்ன பண்றது..? விதி அப்படிதான் சொந்த செலவில சூனியம் வச்சிக்க சொல்லும்..
இந்த கதைக்கு எதுக்கு மலேசியா போகணும்?. எதுக்கு டபுள் ஆக்ஷன்? எதுக்கு மூணு கெட்டப்,?.எதுக்கு இவ்வளவு செலவு? எதுக்கு டாவின்ஸி கோட் சிலுவை மாதிரி கையில ஒரு கத்தி மாதிரி சிலுவையை வச்சிகிட்டு அலையணும்?
விவேக்குக்கு வர, வர, செல்ப் எடுக்க மாட்டேங்குது.. பத்மஸ்ரீ வாங்குன ராசியோ.?
பாவம் சரத, ஏதோ இவ்வளவு பணம் செலவு செஞ்சு ஒரு பாட்டு பூரா தன் கட்சி கொடிய காத்தில பறக்கவுட்டு எடுத்திருக்காரு. இந்த செலவுக்கு, பேசாம ஒரு கட்சி மாநாடு நடந்தியிருந்தாலாவது பிரயோஜ்னமா இருந்திருக்கும்.
வித்யாசகரின் இசை பெரிதாய் எடுபடவில்லை. திரைகதை பெரிய லெட்டவுன்.
படத்தில் நல்ல விஷயமே இல்லையா என்று கேட்பவர்களுக்கு.. படத்தை விட கடைசியில் டைரக்டர் பங்கு பெறும் மேகிங் காட்சிகள் நன்றாக இருக்கிறது. அப்புறம் மிக..மிக. அருமையாய், அற்புதமாய், சூப்பராய்.. அதிரி புதிரியாய்.. டக்கராய் .. இதுக்கு மேல எங்க தஙக்தலைவி, அழகு டயனோசர், நமிதா நன்றாக குளித்துள்ளார் என்பதை சொல்லவும் வேண்டுமோ..?
1977 நடந்து என்ன? – அதான் கேட்கிறேன் என்ன. நடந்திச்சு?
உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், தமிலிஷிலும்,Nதமிழ்லேயும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Comments
படத்தை பார்த்து ரண்டு நாளாச்சு.. எழுதலைன்னு வச்சிக்கங்க.. மறந்துரும் அதான்.. அதுதவிர.. நமிதா போட்டோவெல்லாம் கிடைச்சுதா.. அதான்.. ஹீ..ஹீ.
// 1977 நடந்து என்ன? – அதான் கேட்கிறேன் என்ன. நடந்திச்சு? //
என்னாச்சு... ஒன்னுமே புரியல.
கவர்ச்சியை வைத்து படத்தை ஓட்ட நினைத்து இருக்கின்றார்கள் என நினைக்கின்றான்.
தங்க தலைவி , அழகு டயனோசர், நமிதா நன்றாக குளித்துள்ளார் என்பதை சொல்லவும் வேண்டுமோ..? (இப்போதான தெரியுது எத நீங்க பார்த்திகன்னு ...)
ஒண்ணு இல்லாட்டா இன்னொண்ணு.. மனசை தேத்திக்கணுமில்ல..
அப்படியில்லை ராகவன் சார்.. அவர்கள்நினைத்தது ஒன்று, வந்தது ஒன்று.
நேரே.. இன்னமும் நல்லாருக்கும் அறிவிலி..
எதுக்கு?? ஓ.. நமிதாவை பார்த்தா நல்ல ஜெர்சி பசு போல இருக்குதா..?
ஹி..ஹீ.. நல்லா இருக்கிறதை சொல்லாம இருக்கமுடியல. ஜமால்.
அப்ப நமீதாவுக்காக படம் பாக்கலாம்னு சொல்றீங்களா????
- பழூர் கார்த்தி
ஆனாலும், இவ்வளவு வேகமா விமர்சனம் எழுதி எங்களை காப்பற்றியதற்கு நன்றி. சீக்கிரமே, இந்திய தொலைக்காட்சிகளில் பார்த்துவிடலாம்....
http://valibarsangam.wordpress.com
நீங்க பட்ட கஷ்டத்துக்கு இன்னும் விரிவா விமரிசனம் பண்ணலாம்னு நினைக்கிறேன்..பட இயக்குனரோ..சரத்தோ படிச்சா எங்கெல்லாம் மிஸ் பண்ணாங்கன்னு புரியும்??
இது ‘புரியாம’ இவ்ளோ நல்லவரா இருக்கீங்களே சங்கர்..!!! பச்ச புள்ள... சங்கர் நீங்க.
////உங்களுக்கு ‘பால் பண்ணை’ வைக்கிற ஐடியா எதாவது இருக்கா சங்கர்? :-)//
எதுக்கு?? ஓ.. நமிதாவை பார்த்தா நல்ல ஜெர்சி பசு போல இருக்குதா..?//
ஹலோ.. யார பாத்து வயசாயிருச்சுன்னு சொல்றீங்க.. எங்க மாதிரியான யூத்துக்கு புரியறப்புல பேசுங்க.. என்ன..
அது சரி .. நீங்க நான் சொன்னதைதானே சொல்றீங்க..
//
திருமங்கலத்துல ஓட்டு போட்ட அந்த 800 பேராவது வந்திருப்பாங்க :))
நமீதாவை பார்த்து என் நடு நிலை வேணும்னா மாறுமே தவிர.. படத்துக்கான நடு நிலைமையை மாறாது..தலைவரே
அட ஆமாண்ணே. சொன்னா யார் கேட்குறாய்ங்க..? அது சரி.. என் இளமையை பத்தி என்ன அப்ப்டி முரளியோட ப்ளாக்குல கேட்டுபுட்டீக..?
shame shame puppy shame...
shame shame puppy shame...//
புரிஞ்சிருச்சா..