வர.. வர இந்த பாங்ககாரங்க பண்ற அழிச்சாட்டியம் தாஙக முடியல.. அதிலேயும் கிரெடிட் கார்ட் கேட்கவே வேணாம். சமீபத்தில் என்னுடய பார்கலேஸ் பேங்கின் கிரெடிட் கார்ட் வந்தது.. வழக்கமாய் நான் கார்டை பயன்படுத்தினால் டியூ டேடில் முழு பணத்தையும் கட்டிவிடுவேன். அப்படியே கடந்த செப்டம்பர் மாதம் எனக்கு வந்த பில் பணத்தை முழுசாய் கட்டிவிட்டேன்.
அதற்கு அடுத்த ஒரு முறை பத்தாவது மாதத்தில் ஆன்லைனில் பயன்படுத்த முயன்ற போது Transaction declined என்று வந்துவிட்டது. அந்த மாதம் எனக்கு பில் வரவில்லை. அடுத்த மாதமும் பில் வரவில்லை.. இப்படியாக நான்கு மாதங்களுக்கு பில் வரவில்லை.. நான் என்ன நினைத்தேன் என்றால் எனக்கு ஏதும் பாக்கி இல்லாததால் தான் பில் வரவில்லை என்று.. ஆனால் நான்கு மாதம் கழித்து ஒரு பில் வருக்கிறது. நான் ஆன்லைனில் கார்டை யூஸ் செய்ததாகவும், அதற்கான பில்லை அனுப்பியிருப்பதாகவும், பணத்தை நான் கடந்த நான்கு மாதமாய் கட்டாததால், மாதத்திற்கு லேட் பீஸாக 600 ரூபாய் வீதம் இரண்டாயிரத்தி நானூறும். பயன்படுத்த பட்ட தொகை என எட்டுநூறு ரூபாயும் அதற்கு உரிய டேக்ஸ் வட்டி எல்லாவற்றையும் சேர்த்து, கிட்டத்தட்ட, 4000 ரூபாய் கட்ட சொல்லியிருக்கிறார்கள்.
நான் கால்செண்டருக்கு போன் செய்து நான் பயன் படுத்தவில்லை. என்று ஆன்லைனில் நடந்த விஷய்த்தை சொல்ல, அதற்கு அவர்கள் இல்லை பயன் படுத்தியிருக்கிறீர்கள் என்றும் பில் அனுப்பியிருக்கிறார்கள் என்றும் சொல்கிறார்கள்.. இதுவரை எல்லா மாதமும் கிடைத்த பில், எப்படி சரியாக நாலு மாதம் மட்டும் வரவில்லை என்றால் அதற்கு பதிலில்லை, அனுப்பியதற்கு புருப் கேட்டாலும் அதற்கு சரியான ரெஸ்பான்ஸ் இல்லை. நான்கு மாதமாய் பணம் கட்டாது இருந்த போதிலும், ஒரு போன் கால் இல்லை, இண்டிமேஷன் இல்லை.
இப்படியிருக்க, என்னுடய கிரெடிட் ரேட்டிங் எனப்படும் சிபில் என்னும் லிஸ்டிங்கில் நம்மை டிபால்டர் என்று அறிவித்துவிட்டார்கள். இதனால் என்ன பிரச்சனை என்றால் எதிர்காலத்தில் ஏதாவது லோன், என்று போனால் அதற்கு இந்த ரேட்டிங் காரணமாய் நம்முடய பேப்பர் ரிஜக்ட் ஆக வாய்ப்புள்ளது. இவர்கள் செய்த தவறுக்கு பழியை கஸ்டமர்களிடம் போட்டு பணம் பறிப்பதையே கடமையாய் கொண்டிருக்கிறார்கள் இந்த பாங்க்காரர்கள்.
அப்படியே பேசி ஒரு வழியாய் பணத்தை செட்டில் செய்தாலும் நம்மை டிபாலடர் லிஸ்டிலிருந்து எடுக்கமாட்டார்கள். ஏனென்றால் நாம் செட்டில்மெண்ட்தான் பண்ணியிருக்கிறோம். அவர்கள் கேட்ட பணத்தை கொடுக்கவில்லை அதனால் ரேட்டிங் லிஸ்டில் நாம் இருப்போம்.
இந்த சிபில் ரேட்டிங் என்ன வென்றால் நாம் வைத்திருக்கும் கிரெடிட் கார்டுகள், பாங்க லோன்கள், கார் லோன்கள் எல்லாவற்றையும் நம்முடய பெயர், பிறந்த தேதி போன்றவைகளை வைத்து எல்லா பாங்கியிலிருந்து தகவல்களை சேகரித்து எல்லா பாங்கிகளுக்கும், அந்த கஸ்டமர்கள் வேறு ஏதாவது லோன் அப்ளை செய்தால் அவரை பற்றிய விவரங்களை தங்களுடய டேட்டா பேஸிலிருந்து கொடுப்பார்கள். அதற்கு ஒரு குறிப்பிட்ட அளவு சார்ஜும் ஒவ்வொரு பேங்கிலிருந்து வாங்கிக் கொள்கிறார்கள். ஒருவர் டிபால்டர் ஆகிவிட்டால் அடுத்த குறைந்த பட்சம்.. மூன்று வருடங்களிலிருந்து ஏழு வருடங்கள் வரை இந்த ப்ழி பாவம் அந்த கஸ்டமரை தொடரும்.. இதனால் லட்சக்கணக்கில் ஒழுங்காக வியாபாரம் செய்யும் எவ்வளவோ பேர்.. இம்மாதிரியான பாங்கிகளின் பிரச்சனையால் 100 ரூபாய் மேட்டருக்காகவெல்லாம் கிரெடிட் ரேட்டிங்கில் டிபால்டர் என்று அறிவிக்கபட்ட அவலமும் நடந்த் கொண்டுதானிருக்கிறது.
எனக்கு ஏற்கனவே இம்மாதிரியான அனுபவங்கள் ஐ.சி.ஐ.சி.ஐ / ஹெ.டி.எப்.சி /சிட்டி பேங்க் போன்ற வங்கிகளில் நடந்து, போராட்டங்களை சந்தித்து.. வெற்றி பெற்றிருக்கிறேன். அவர்களிடமிருந்தே பணத்தை வாங்கியிருக்கிறேன். இதையெல்லாம் பாதிக்கபட்டவங்க எல்லோரும் எதிர்த்து கேட்டாதான் நியாயம் கிடைக்கும். நான் இன்னொரு போராட்டத்துக்கு தயாராகிட்டேன்பா.. ரெடி ஜூட்...
உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், தமிலிஷிலும்,Nதமிழ்லேயும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Post a Comment
50 comments:
I am here to join with you. Let us boycott Barclays bank. Let us spread this news as much as we can.
kuppan_yahoo
//நான் இன்னொரு போராட்டத்துக்கு தயாராகிட்டேன்பா.. ரெடி ஜூட்...//
ஒகே.. ஸ்டார்ட் மீயூசிக்..
//I am here to join with you. Let us boycott Barclays bank. Let us spread this news as much as we can.
kuppan_yahoo//
கண்டிப்பா செய்யணும் குப்பன்யாஹூ.. யார் வீட்டு காசு.. இவனுங்களுக்கு கொடுக்கறதுக்கு.?
அண்ணா முதல் வோட் நான்தான்
நன்றாக எழுதீருக்கிறீர்கள் அண்ணா.நான் வேலை செய்யும் அலுவலகத்திலும் இதே மாதிரி நடந்தது.என்னுடைய எம்.டி. என்னை அனுப்பி விபரம் கேட்கச் சொன்னார்.நான் ஒரு மாத காலமாக இடைவிடாமல் அலைந்தேன்.ஒரு பயனும் இல்லை
அதனால தான் நான் கிரிடிட் கார்டே வாங்கல....!
இங்க SSN வச்சி கண்டுபிடிப்பாங்க..! அட இந்தியால கூட இந்த மேட்டர் எல்லாம் வந்துடுச்சா...?!!
வுடாதீங்க சங்கர்..!! கோர்ட்டுக்கு இழுத்துட்டு போங்க! இங்க அந்த மாதிரி கிரெடிட்-ல கம்ப்ளெய்ண்ட் போட்டாங்கன்னா.. நாங்க சண்டை போட்டு அதை எடுத்து விட்டுடலாம்.
விடாதீங்க சார்..... விடாதீங்க... அந்த கொள்ளைக்கார (எவ்ளோ கெட்ட வார்த்தைனாலும் /என்ன கெட்ட வார்த்தைனாலும் போட்டுகோங்க) வங்கிகளை...
நினைத்தால் கெட்ட, கெட்ட வார்த்தை தான் வருது.... அதனாலே நான் இப்போதைக்கு நிறுத்திக்கிறேன்.
Enakum athe Prachanai than. Ennoda aatharavu ungalauku eppothum undu. Itharkaga neengal oru iyakkam aarambikavenum.
please choose online access to your credit cards and also e-mail statements. this is what i have done to circumvent these thugs saying they have sent me the statement and later, i proving it. Also, i keep an eye on my transactions at least once every week.
//இப்படியிருக்க, என்னுடய கிரெடிட் ரேட்டிங் எனப்படும் சிபில் என்னும் லிஸ்டிங்கில் நம்மை டிபால்டர் என்று அறிவித்துவிட்டார்கள். //
How did you found that CIBIL has declared you a defauler? I couldn't search my name.
//please choose online access to your credit cards and also e-mail statements. //
I second you.
ஜெய் ஹோ:)
நம்மோட மேட்ட்ர் ஒன்னு இருக்குதுன்னே,நம்ம icici பேங் இருக்குதுல்ல அண்னே,அது நம்ம பிரண்டு ஹவுசிங் லோன் வாங்கியிருந்தாருன்னே,அவரு எல்லா
டியுவையும் லோனயையும் க்ளோச் பண்ணிட்டு , டாக்குமென்ட் கேட்டா , 10 நாள்ல வ்ந்திரும், வெயிட் செசண்டி ண்னான்.10 நாள் கழீச்சு போய் கேட்டா டாக்குமெண்ட் காணாம்னு கூலா சொல்ரான்.
ஓரு 5 நாள் கழிச்சு கேட்டா நீங்க இந்த பிரான்ச்ல கேட்க கூடாது , அந்த பிரான்ச்க்கு போங்கன்னான்.அங்க போனா ஒரு 5 நாள் பொறுங்க, நாங்க ஓரு sr போடுரொம் பாம்பேக்கு நு அந்த அக்கா சொல்லிச்சு.
நம்ம பிரண்டு, ஏற்கனெவே ரொம்ப கோவ காரு,ஓரே இங்கிலிஷ்ல வாங்கு, வாங்குகிட்டாரு.
அப்புறம் ஓருத்தன் ஓடி வந்தான், மீதி பேரல்லாம் ஓன்னுமே நடக்காத மாதிரி அவன், அவன் வேலையை செஞ்சுகிட்ருக்கான்.வந்தவன்ட்ட நம்ம பிரண்டு ஓரு கேள்வி கேட்டார், இப்போ என் பிரச்சனையை சொன்ன, நீ தான் பொருப்பு எடுத்து செய்யுனும்,என்னய அங்க போய் பாரு, இங்க போய் பாரு அலய விட கூடாது ந்னா, அவன் நம்ம பொறுப்பா , வேனாம் பா போய்டான்.
அப்புரம் அந்த பொண்ணு ரிட்டன்ல தேதி போட்டு லெட்டர் கொடுக்க சொல்லி வாங்கிபுட்டொம்.அந்த தேதில்ல டாக்குமென்ட் வரல,.0k.
நாலைக்கு வக்கிலையும், போலிஷ் கம்ளேயீண்டும் கொடுத்துட்டு, மீடியாவுடன் வர்றோம் சொன்னவுடன் அடுத்த நாள் டாக்குமென்ட் கைக்கு வருது.
மொத்தம் 30 நாள் ஆச்சு டாக்குமென்ட் வாங்க
//நான் இன்னொரு போராட்டத்துக்கு தயாராகிட்டேன்பா.. ரெடி ஜூட் //
போராளி வாழ்க்கைன்னு வந்துட்டா இதெல்லாம் சகஜம்தான
:)
Check this blog http://www.technosolutions.in/2009/02/personal-loan-credit-card-defaultors.html may be it will help us
தல,
கண்டிப்பா போராடணும். சொல்லுங்க என்ன செய்யலாம்.
நானும் உங்க கூட இந்த போராட்டத்தில் தோள் கொடுக்க தயாராக இருக்கின்றேன்.
இவங்க எல்லோருக்கும் நம்ம பாத்தா கிள்ளு கீரை அப்படின்னு நினைப்பு.
ஒரு வழி பண்ணாம விடாதீங்க.
நானும் இது போல் பல முறை மோதி வெற்றி பெற்றிருக்கிறேன்.
கடன் அட்டை (அட்டை பூச்சி மாதிரி காலில் ஒட்டி கொண்டிருந்தால்கூட தெரியாது ஆனால் ரத்தம் மட்டும் உறிஞ்சும்)
super thala :)
கிரெடிட் கார்டுன்னா என்ன அண்ணே
CIBIL Helpdesk : 1800 - 224 - 245
Tel : +91 -22 6638 4600 / 2281 7788
Fax : +91 -22 6638 4666
Email : info@cibil.com
http://www.cibil.com/art06_04_06.htm
Please pass on these information to people. can u please write a blog on this.
In us and uk... there is an option fo checking ur creidt score for a fee, likewise it is same in india, but people are not aware of it. we can get the report and clear the discrepancy with the bank befoer applying with any loan.
லட்சக்கணக்கில் இந்த வங்கிகளால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். முதலில் காலில் விழாத குறையாக கெஞ்சி உங்களை கிரெடிட் கார்டு வாங்க வைத்து விட்டு, பின்னர் அவர்கள் வசூலிக்கும் முறை இருக்கிறதே...சொல்லி மாளாது...அதுவும், அவர்களின் போன் கால்ஸ் நினைத்தாலே, மனிதனை எரிச்சல் அடைய வைக்கும்.
என்ன தான் நிறைய விதிகள், வழிமுறைகள் உண்டு என்றாலும், வங்கிகள் அதை ஒரு பொருட்டாக நினைப்பது இல்லை...
ஒரே ஒரு தீர்வு, நாம் அவர்களின் மார்க்கெட்டிங் வலையில் விழாமல் இருப்பது தான்.
சரவணன்
http://valibarsangam.wordpress.com
உங்கள் கோபம் 100% நியாயமானது ஷங்கர்.இந்த பார்க்லேய் பேங்குக்கு இங்கு கிளைகளும் கிடையாது. உங்கள் கோபத்தை எல்லாம் முகம் தெரியாமல் எங்கோ மும்பையில் உட்கார்ந்து கொண்டிருக்கும் ஒருவரிடம்தான் காட்ட வேண்டும்.யாருக்கும் ஒன்றும் தெரியாது.சிபிலை நேராக அணுகுவதைத் தவிர வேறு வழி இல்லை என நினைக்கிறேன்.
வணக்கம் கேபிலார்
காலம் தாழ்தாமல் நுகர்வோர் நல நீதி மன்றத்தில் மான நஷ்ட வழக்கு தொடரவும்.
மன உலச்சல் அடைந்தற்போல்
மருத்துவ சான்றிதழ் வைத்து கேசு போடவும்
வெற்றி நமதே!!!
இது ஒரு பெரும் தலைவலி தரும் சமாச்சாரம் தான். அமெரிக்காவில் இந்த மாதிரி ஏதாவது நடவடிக்கை எடுக்கும் முன் பல முறை டெலிபோனில் பேசி அதன் பிறகே செய்வார்கள். ஆனால் இந்தியாவில் வழக்கம் போல அரசாங்கமோ அல்லது வங்கி போன்ற பொது நிறுவனங்களோ என்ன தவறு செய்தாலும் அதை சரி என்று நினைக்கும் மற்றும் குடி மக்களை மூன்றாந் தரமாக நடத்தும் மனநிலை இருக்கிறது.
////நான் இன்னொரு போராட்டத்துக்கு தயாராகிட்டேன்பா.. ரெடி ஜூட்...//
ஒகே.. ஸ்டார்ட் மீயூசிக்// என்னது ஸ்டார்ட் மீஜிக்கா? தயாரானது போராட்டதுக்கு, குத்தாட்டத்துக்கு இல்லை.
hi Sankar
this is Sriram from Boston who met you at the bloggers meet last month at Natesan park, hope you still remember me, my cousin Rajesh is the credit manager at Barclays and his email ID is raajesh.barclays@gmail.com. Write and speak to him once and give my refence. see if he can resolve your issue, else you should go legal.
regards
Sriram, Boston USA
சரியான முறையில் எடுத்து சென்று வெற்றி பெற்று, அந்த நடவடிக்கைகளை ஒரு நல்ல பதிவாகவும் போட்டால் மற்றவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
பதிவுலகில் இந்த மேட்டரில் விஷய ஞானம் உள்ளவர்கள் அனைவரும் இதற்கு உதவி செய்ய வேண்டும்.
கலைஞரை ஓவரா கலாய்ச்சா இப்படி தான் நடக்கும்
//http://www.cibil.com/art06_04_06.htm
Please pass on these information to people. can u please write a blog on this.
In us and uk... there is an option fo checking ur creidt score for a fee, likewise it is same in india, but people are not aware of it. we can get the report and clear the discrepancy with the bank befoer applying with any loan.//
மிக்க நன்றி ராஜா.. கண்டிப்பாய் நான் ஒரு பதிவு எழுதுகிறேன்.
//கலைஞரை ஓவரா கலாய்ச்சா இப்படி தான் நடக்கும்//
எனக்கு இது புதிசில்ல அனானி.. இதையெல்லாம் நான் தட்டி மேல கொண்டு வந்திருக்கேன்.. இப்படியெல்லாம் பூச்சாண்டி காட்ட கூடாது..
//சரியான முறையில் எடுத்து சென்று வெற்றி பெற்று, அந்த நடவடிக்கைகளை ஒரு நல்ல பதிவாகவும் போட்டால் மற்றவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
பதிவுலகில் இந்த மேட்டரில் விஷய ஞானம் உள்ளவர்கள் அனைவரும் இதற்கு உதவி செய்ய வேண்டும்.//
கண்டிப்பாக அறிவிலி.. செய்கிறேன். ஏற்கனவே இதை பற்றி நான் எழுதியிருக்கிறேன். மக்களை சுரண்டும் வங்கிகள் என்கிற தலைப்பில்
//hi Sankar
this is Sriram from Boston who met you at the bloggers meet last month at Natesan park, hope you still remember me, my cousin Rajesh is the credit manager at Barclays and his email ID is raajesh.barclays@gmail.com. Write and speak to him once and give my refence. see if he can resolve your issue, else you should go legal.
regards
Sriram, Boston USA//
ஹாய்,ஸ்ரீராம், எனக்கு ஞாபகம் இருக்கு.. எப்படி இருக்கீங்க.. கண்டிப்பா நான்மெயில் பண்ணி பாக்கறேன். உங்களுக்கும் தகவல் சொல்றேன். மிக்க நன்றி..
//ஒகே.. ஸ்டார்ட் மீயூசிக்// என்னது ஸ்டார்ட் மீஜிக்கா? தயாரானது போராட்டதுக்கு, குத்தாட்டத்துக்கு இல்லை.//
அமரபாரதி.. எனக்கு இதுமாதிரி நிறைய தடவைகள் நடந்து போராடி பல முறை வெற்றி பெற்றிருக்கிறேன். இந்த முறை புது பேங்க்.அவ்வளவுதான். அதனால்தான் ஸ்டார்ட் மீஜிக்...
//இது ஒரு பெரும் தலைவலி தரும் சமாச்சாரம் தான். அமெரிக்காவில் இந்த மாதிரி ஏதாவது நடவடிக்கை எடுக்கும் முன் பல முறை டெலிபோனில் பேசி அதன் பிறகே செய்வார்கள். ஆனால் இந்தியாவில் வழக்கம் போல அரசாங்கமோ அல்லது வங்கி போன்ற பொது நிறுவனங்களோ என்ன தவறு செய்தாலும் அதை சரி என்று நினைக்கும் மற்றும் குடி மக்களை மூன்றாந் தரமாக நடத்தும் மனநிலை இருக்கிறது.//
நீங்கள் சொன்னது சரிதான்.. அமரபாரதி.. அதிலிருந்து மக்கள் தங்கள் உரிமைகளை கண்டிப்பாக கேட்டு பெற வேண்டும்..என்பதே என் விருப்பம்.
//வணக்கம் கேபிலார்
காலம் தாழ்தாமல் நுகர்வோர் நல நீதி மன்றத்தில் மான நஷ்ட வழக்கு தொடரவும்.
மன உலச்சல் அடைந்தற்போல்
மருத்துவ சான்றிதழ் வைத்து கேசு போடவும்
வெற்றி நமதே!!!//
கண்டிப்பாய் அவர்கள் ஒத்துவ்ரவில்லையென்றால் அதுதான் வழி.. நன்றி சிவா..
//சிபிலை நேராக அணுகுவதைத் தவிர வேறு வழி இல்லை என நினைக்கிறேன்.//
நேற்று உங்கள் வீட்டிலிருந்து கிள்மபிய போது ஆரம்பித்த விஷயம் சார்.. கண்டிப்பாக சிபிலை அணுகத்தான் போகிறேன். மிக்க நன்றி சார்.
//என்ன தான் நிறைய விதிகள், வழிமுறைகள் உண்டு என்றாலும், வங்கிகள் அதை ஒரு பொருட்டாக நினைப்பது இல்லை...//
நினைக்க வைக்க வேண்டும் சரவணன்.. அதிலிருந்து நாம் கொஞ்சமும் இறங்கி வரக்கூடாது..
//கிரெடிட் கார்டுன்னா என்ன அண்ணே//
அத்திரி போன்ற ஆட்களுகெல்லாம் அது கிடையாதாம்.. என்னை போலயூத்துக்குதான்..
நன்றி குகன்..
//கடன் அட்டை (அட்டை பூச்சி மாதிரி காலில் ஒட்டி கொண்டிருந்தால்கூட தெரியாது ஆனால் ரத்தம் மட்டும் உறிஞ்சும்)//
உறிஞ்ச விட்கூடாதுல்ல,, நெருப்பை வச்சு தீய்க்கணும் ஆகாய மனிதன்.
//நானும் இது போல் பல முறை மோதி வெற்றி பெற்றிருக்கிறேன்.//
முயற்சி செய்தால் கண்டிப்பாய் நம் உரிமையை பெற முடியும் புருனோ.. என்ன கொஞ்சம் மெனக்கெடணும்.. அவ்வளவுதான்
வருகைக்கும், ஆதரவுக்கும் நன்றி அப்துல்லாண்ணே.. இராகவன், தராசு.. அவர்களுக்கும்
உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி, வித்யா, இந்தியன், அன்பு.. யுவராஜ், இபவரெக்ஸ் அவர்களுக்கு
//இங்க SSN வச்சி கண்டுபிடிப்பாங்க..! அட இந்தியால கூட இந்த மேட்டர் எல்லாம் வந்துடுச்சா...?!!
வுடாதீங்க சங்கர்..!! கோர்ட்டுக்கு இழுத்துட்டு போங்க! இங்க அந்த மாதிரி கிரெடிட்-ல கம்ப்ளெய்ண்ட் போட்டாங்கன்னா.. நாங்க சண்டை போட்டு அதை எடுத்து விட்டுடலாம்.//
கண்டுபிடிக்கறதெல்லாம் அமெரிக்காவுல இருக்கிற மாதிரி வச்சிருப்பானுங்க.. ஆனா சர்வீஸ் ???
விடமாட்டேன் பாலா..
வாழ்த்துக்கள் காவேரி கணேஷ்.. இப்படித்தான் போராடணும்..
நான் வெளியில் இருந்து ஆதரவு தருகிறேன்..
ஏனெனில் நானே இந்தச் சிக்கலில் மாட்டிக் கொண்டு தப்பிக்க முடியாமல் முருகா சரணம் என்று சொல்லி அவனிடம் விட்டுவிட்டேன்..
எது நடந்தாலும் அது நன்மைக்கே என்று காத்திருக்கிறேன்..
நீங்கள் போராளி.. மோதி ஜெயிப்பீர்கள்.. என்னை மாதிரி பாவப்பட்டவர்களால் முடியாது அல்லவா..? அதுதான் வெளில இருந்து ஆதரவு தர்றேன்னு சொல்றேன்..
Naanum idhu madhiri matiyiruken... thappika yena vazhi... sollunga???
வருகைக்கு நன்றி உண்மைதமிழன்.. அசோக்..
Dear sankar sir,
After paying Credit card bill before due date, have you verified the balance ?
Please confirm your card's due date with bank again and also make a habit of paying bill before 5 days of due date.
Credit cards are like Batteries . you have to verify the balance and limit everyday.
Also, if you are charging (paying bill) properly, it will give you good power (next month usage) in nice manner
Regards
Kannan S
Post a Comment