சினிமா டுடே – ஒரு பார்வை.
சென்ற வருடம் சினிமா டுடே கண்காட்சிக்கு போனபோது எப்படி இருந்ததோ அதே போல் எந்தவித பெரிய மாற்றங்கள் இல்லாமல் இந்த வருடமும் இருந்தது. வழக்கம் போல் சினிமாவுக்கு சம்மந்தமில்லாத, சாப்ட்வேர், ஸ்டால்களும், பாப்கார்ன், காபி, போன்றவை உள்ளே, வெளியே என்று நிறைய இடத்தில் வைத்திருதார்கள்..
ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்க்கு உபயோகித்த SL.-2K டிஜிட்டல் கேமரா டொமோவுக்காக வைக்க பட்டிருந்தது. இந்த கண்காட்சியின் ஹீரோ அந்த கேமராதான். நிறைய கேமராமேன்கள் அதை சுற்றியிருந்தார்கள். ARRIயின் டிஜிட்டல் சினிமா கேமராவான D21 வந்திருந்தது. RED ONE ஐ விட என்ன சிறப்பம்சம் என்று கேட்டபோது, இது இந்திய சீதோஷ்ணநிலைக்கு ஏற்றவாறு வடிவமைக்க பட்டுள்ளது என்றார். ஹார்ட்டிஸ்கில் ரிக்கார்ட் ஆவ்தற்கு பதிலாய் HD டேப்பில் பதிவாகும் என்றார். ARRIயில் 3டியில் ஒளிப்பதிவு செய்யும் டிஜிட்டல் கேமராகூட இருந்தது.. வியூபைண்டரில் பார்க்கும் போது சூப்பர்.. ஆனால் அதை பற்றி விளக்கத்தான் ஆளில்லை.
ARRIயின் ஸ்டாலிலும் நல்ல கும்பல். REDONEக்கு ஆப்ஷன் வந்துவிட்டது. RED ONE சீதோஷ்ணநிலை பிரச்சனையை கிட்டத்தட்ட சரி செய்துவிட்டார்கள் என்று சொல்கிறார்கள். எனக்கென்னவோ.. ரெட் ஒன் பெஸ்ட் என்று தோன்றுகிற்து. ஏனென்றால் அது 4K Resolution. ARRI-D21 –2K.
பிலிம் நியூஸ் ஆனந்தன் அவர்கள் ஒரு ஸ்டால் போட்டிருந்தார். பல பழைய போட்டோகள் டிஸ்ப்ளேயில் வைக்கபட்டிருந்தது.. அந்த ஸ்டால் முழுவதும் பார்த்த போது ஆனந்தன் அவர்களின் வாழ்கை தெரிந்தது. இன்னும் கொஞசம் அழகாய் பிரசண்ட் செய்திருக்கலாம். கார்ட்போர்டு பேப்பர்களிலும், வெறும் பேப்பர்களிலும் ஓட்டி வைத்திருந்தது. கொஞ்சம் அழகாய் இல்லை. யாராவது நல்ல ஸ்பான்ஸர்கள் உதவலாமே..?
ஸ்டாலின் உள்ளே.
கவிதாலயா ஸ்டாலில் பாலசந்தர் அவர்களின் படஙக்ளை பற்றிய விஷயங்களை லிஸ்ட் பண்ணியிருந்தார்கள். ஸ்டால் நன்றாக இருந்தது.. கீதா கைலாசமும், கைலாசம் சாரும் இருந்தார்கள். அவர்களின் அடுத்த படங்களை பற்றிய விபரங்களும், விளம்பரங்களும் இருந்தது.
ஒரு இடத்தில் சரியான் கும்பல் இருந்தது என்னடா இது என்று பார்த்தால் ஒரு ஸ்டேஜ் லைடிங் செய்யும் கம்பெனி இரண்டு ஜில்பான்ஸுகளை மானாட, மயிலாட ஸ்டைலில் ”ஆட” விட்டிருந்தார்கள்.. கூட்டம் அங்கு இங்கு நகராமல் பாட்டு முடியும் வரை நின்றிருந்தது.
சினிமா நண்பர்களை மீண்டும் நீண்ட நாட்களுக்கு பிறகு சந்திக்க முடிந்தது. புதிய நம்பர்களை பரிமாறி கொண்டோம். ஜிம்மிஜிப், அகேலா போன்ற கிரேன்கள் டிஸ்ப்ளேக்கு வைக்க பட்டிருந்தது, வினைல் பிரிண்டிங்காரர்கள் தரையெல்லாம் பிரிண்ட் செய்து போட்டிருந்தார்கள். சவுண்ட் மற்றும் லைட்டிங்கில் நிறைய புதிய அயிட்டங்கள். பலூன் லைட்ஸும் பார்த்தேன். ம்ஹூம்..
இந்த ஆண்டு முதல் குறும்பட தியேட்டரும் விழா நடத்தியிருந்தார்கள். என் படங்களை பார்த்திருந்த சில நண்பர்கள் அங்கே என்னை பார்த்ததும் ஏன் கலந்து கொள்ளவில்லை என்று கேட்டு வெறுப்பேற்றினார்கள். முன்கூட்டியே தெரியாததால் கலந்து கொள்ள முடியவில்லை என்றேன். அடுத்த ஆண்டாவது படஙகளை அனுப்ப வேண்டும்.
வெளியே அவுட் கேட் அருகே ஒரு ஆடியோ சம்பந்தபட்ட ஸ்டாலில் ஒரு குஜிலி நன்றாக இருந்ததால் தேவையேயில்லாமல் போய் கார்டு வாங்கி வந்து, கொஞ்ச நேரம் அளவளாவிவிட்டு வந்தேன். ம்ஹூம்.. நமக்கில்லை.
வெளியே மூன்று எக்டீரியர் சவுண்ட் ப்ரொஜக்ஷன்காரர்கள் போட்டி போட்டு கொண்டு மாத்தி, மாத்தி அதிரிபுதிரி செய்து கொண்டிருந்தார்கள்.
சொல்ல மறந்துவிட்டேன். எண்டரன்சில் ஒரு ஏர் கட்டரிலிருந்து டிரை ஐஸ் புகையை திரையாக்கி அதன் பிண்ணனியிலிருந்து ப்ரொஜெக்டர் மூலம் ஹாலோகிராம் போல காற்றில் திரை அமைத்திருந்த உத்தி நன்றாக இருந்தது. சுஜாதாவின் கொலையுதிர்காலம் ஞாபகம் வந்தது.
என் கூட வந்திருந்த நண்பர்கள் பலருக்கு ஏதோ சினிமா கண்காட்சி என்றவுடன், பரபரப்பாக வந்தவர்கள், உள்ளே வந்து அரை மணி நேரத்தில் சொங்கி விட்டார்கள். ஆனால் நான் கிளம்பும்போதே சொன்னேன் இது துறை சார்ந்த கண்காட்சி.. அதனால் உங்களுக்கு பிடிக்காமல் போக வாய்ப்புண்டு என்று..
பதிவுலக நண்பர்கள் யாராவது வருவார்கள என்று நினைத்திருந்தேன். யாரையும் காணவில்லை. ஆனால் தாமிரா அவர்கள் நேற்று காலை கண்காட்சியிலிருந்து தொலைபேசினார். நானும் அங்கு இருக்கிறேனா என்று.. இல்லை தலைவா நான் நேற்றே போய் வந்து விட்டேன் என்றேன். அவருடயை அன்புக்கு நன்றி..
அடுத்த ஆண்டாவது இன்னும் மெருகேறலாம் என்ற நம்பிக்கையுடன் சினிமா டுடே…
உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், தமிலிஷிலும்,Nதமிழ்லேயும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Comments
இப்போதைக்கு RedOne-ற்கு மாற்று இல்லை என்றே நினைக்கிறேன்.
8K கேமரா வரும் வரை..!!
இதுக்கே இன்னும் நம்மாளுங்க ஒண்ணும்புரியாம இருக்காங்க.. பாலா.. ரொம்ப பேருக்கு மாற்றங்களை ஏத்துக்க முடியல..
இவங்க ‘டிஜிடல்’-ன்னு எதை மீன் பண்ணுறாங்கன்னு ஒரு பதிவு போட முடியுமா?
இவங்க ‘டிஜிடல்’-ன்னு எதை மீன் பண்ணுறாங்கன்னு ஒரு பதிவு போட முடியுமா?//
நிச்சயமாய் பாலா.. எழுத வேண்டும் என்று நினைத்திருக்கிறேன்.
நானே சுத்தமா மறந்துட்டேன் தலைவரே.. சாரி.. நானே திடீர்னுதான் போனேன்.
தலைவா முடிஞ்ச பின்னாடி போட்டிருக்கிங்களே. முன்னமே உஷார் படுத்தியிருந்தா நாங்களும் வந்திருப்பமே/
yes shanker
அந்த படத்துல நல்லாத் தேடிப் பார்த்துட்டேன், அவரக் காணோம்.
:))))))))))))
தலைவா முடிஞ்ச பின்னாடி போட்டிருக்கிங்களே. முன்னமே உஷார் படுத்தியிருந்தா நாங்களும் வந்திருப்பமே
//
அண்ணே அவரு வேற ”செட்டப்பா” போய்ருப்பாருண்ணே.
கேபிளாரே... முன்னமே சொல்லியிருக்கலாம்ன்னு நானும் சொல்லணுமா..??
நன்றி பிரேம்ஜி..
கேபிளாரே... முன்னமே சொல்லியிருக்கலாம்ன்னு நானும் சொல்லணுமா..??//
சாரி தலைவரே.. தீடீர்னு ப்ரோக்ராம் ஆயிடுச்சு.. அடுத்த முறை கண்டிப்பாய் ஒன்றாய் போவோம்.
நான் சொன்னது ஸ்டால் உள்ளேண்ணே.. ஆனாலும் குறும்புதான்..
அந்த கொடுமைய ஏன் கேட்குறீங்க.. தடிதடியா நாலு ஆம்பளைங்களோட போனேண்ணே..
சாரி சார்.. நன்றி உஙக்ள் வருகைக்கும்,கருத்துக்கும்
கொஞ்சம் விரிவா அதபத்தி சொல்லுங்க தல நெக்ஸ்ட் டைம் மிஸ் பண்ண கூடாது.
கொஞ்சம் விரிவா அதபத்தி சொல்லுங்க தல நெக்ஸ்ட் டைம் மிஸ் பண்ண கூடாது.//
சாரி அக்னி.. நான் மறந்து போயிட்டேன். அடுத்த முறை கண்டிப்பாய் எல்லோருக்கும் சொல்கிறேன். வருகைக்கும் நன்றி
முன்னமே ஏன் சொல்லவில்லை என்று நான் கேட்கமாட்டேன், ஏன் என்றால் அப்படி கேட்டால், நீங்க அடிக்க வந்துவிடுவீங்கன்னு தெரியும். (நைஜிரியாவில் உட்கார்ந்துகிட்டு இப்படி எல்லாம் கேள்வி கேட்டால் கோச்சிக்க மாட்டீங்க இல்ல)
நீங்க சாரி கேக்கவே ஒரு பதிவு போடனும்னு நினைக்கிறேன். நானும் அதே கேள்விய கேக்க மாட்டேன், ஏன்னா நான் மதுரையில இருக்கேன் இப்போ.
எங்கு நடக்கிறது
எங்கு நடக்கிறது//
முடிந்துவிட்டது.. மார்ச் எட்டாம் தேதியோடு, நந்தம்பாக்கம் டிரேட் செண்டரில் நட்ந்த்து புருனோ..
தானாடாவட்டாலும் தன் சதை ஆடும் !!!
ஆனால், இப்போது சோனி, நிக்கான், கெனான் நிறுவனங்கள் full frame அளவில் அதாவது 36*24 அளவு சென்சார்களைக் கொண்டு 4கே கேமராக்களை வெளியிடுகின்றன.
சென்சார் எவ்வளவு பெரியதோ, அந்தளவுக்கு படங்களில் துல்லியம் கூடும்.
அதனால் ரெட்ஒன், ஆரி பூரியை எல்லாம் full frame கேமராக்கள் சாப்பிட்டுவிடும்.