அருந்ததீ -திரைவிமர்சனம்

 arunthathee

   
லாஜிக் இல்லாத பல உட்டாலக்கடி மாயாஜால ஆங்கில படங்களை அதனுடய பரபரப்பான திரைக்கதைகாக பார்பவரா..? கிராபிக்ஸ் அட்டகாசத்துக்காக பார்பவரா..? அப்படியென்றால் இதோ உங்களுக்காக.. ஒரு அட்டகாசமான படம் “அருந்ததீ”

ராஜ குடும்பத்தின் ஓரே பெண் வாரிசான அருந்ததிக்கு அவளுடய காதலனுக்கும் திருமணம் நிச்சயிக்க படுகிறது. திருமணத்துக்கு முன்னால் தங்களுடய பாரம்பரிய அரண்மனைக்கு வருகிறாள். அங்கு சில நாட்கள் தங்கி இருந்துவிட்டு போக இருக்கும் போது, அங்கே அவளைபோலவே உருவம் கொண்ட அவளது பாட்டியின் உருவ படத்தை பார்த்து அவளை பற்றி கேட்கிறாள். அதே சமயத்தில் அந்த கோட்டையின் அருகில் உள்ள ஒரு பாழடைந்த கோட்டையில் உள்ள ஒரு கெட்ட சக்தி அவளை அடைய நினைக்கிறது. மூன்று தலைமுறைகளுக்கு முன்னால் ஜெக்கம்மா என்கிற அருந்ததியினால் கொல்லப்பட்ட அவளது மாமன் பசுபதியின் ஆவீ, தற்போது இருக்கும் அருந்த்தி பழைய அருந்ததியின் மறுபிறவி என்பதால் பூர்வ ஜென்மத்தில் அடைய முடியாதவளை, பசுபதி அரூப ரூபத்தில் அடைய துடிக்கிறான். இதையெல்லாம் படிக்கும் போது, ஏதோ அம்புலிமாமா கதை போல் இருந்தாலும், படம் ஆரம்பித்ததும் நம்மை கட்டி போட்டு விடுகிறார்கள், அந்த அளவுக்கும் இறுக்கமான திரைக்கதை, ஒளிப்பதிவு, கிராபிக்ஸ் என்று போட்டி போட்டு பின்னி எடுக்கிறார்கள். 

arunthathi-09

அருந்ததியாய் அனுஷ்கா இரட்டை வேடங்களில், மழையிலும், வெளிநாட்டு கடலோரங்களீலும், ஹீரோக்களுடன் உருண்டு புரண்டவரா..? சும்மா அசத்தியிருக்கிறார். அதிலும் அவரது உயரமே பழைய அருந்ததிக்கு “ஜெக்கம்மா” என்று மக்களால் கடவுளை போல வழிபடும் அந்த கேரக்டருக்கு ஒரு கெத்தை கொடுத்திருக்கிறது. சோனு சூட்.. மாமன் பசுபதியாய்.. அவருடய நடிப்பு படத்திக்கு மிகப்பெரிய பலம்.. சரியான வில்லன். அதே போல் முஸ்லிம் மந்திரவாதியாய் வரும் ஷாயாஜி ஷிண்டே.. சரியான தேர்வு.. அவரும் அவருடய பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். இம்மாதிரியான படங்களில் எல்லாம் என்னத்தை நடிக்க இருக்கிறது என்பதை, மோசமான நடிப்பு, மற்றும் திரைக்கதை, டெக்னிகல் அம்சங்கள் உள்ள படஙக்ளை பார்த்தால் புரியும். முதல் பாதியில் திரைக்கதை பேய் வேகம்.. பழைய அருந்ததியின் கதையை ஒரேயடியாய் சொல்லாமல், பிரித்து, பிரித்து, படம் முழுவதும் வருவது போல் சொல்லி, படத்தின் வேகத்தை கூட்டியிருப்பது நல்ல உத்தி. என்ன க்ளைமாக்ஸை இன்னும் கொஞ்சம் யோசித்திருந்தால் பிரமாதபடுத்தியிருக்கலாம்.  கோட்டியின் இசையில் ஆங்காங்கே பழைய இளையராஜாவின் பாடல்கள் தெரிகிறது. அதிலும் ஒரு பாடலில் பெண் குரலில் “ராஜதீபமே” பாடல். அனுஷ்கா ஆடும் ஒரு டிரம் டான்ஸ் எங்கயோ ஒரு ஜாப்பானோ, சைனீஸ் படத்திலோ பார்த்த மாதிரியிருக்கிறது.. இருந்தாலும் ரொம்ப புவர்.

arunthathi-06

ஒளிப்பதிவு செந்தில்குமார்.. இம்மாதிரியான படங்களுக்கு ஏற்ற ஒளிப்பதிவு. அதே போல் எடிட்டிங்கும் அருமையாக இருக்கிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு, அம்மன் படத்தை தந்த கோடி ராமகிருஷ்ணாவின் இயக்கத்தில் வெளிவந்திருக்கிற படம். ஆந்திராவில் சுக்கை போடு போட்ட படம். சுமார் 200 கோடி  வசூலாம். சமீப காலத்தில் நேரடி தமிழ் படத்துக்கு கூட இவ்வளவு செலவு செய்து விளம்பர படுத்தியிருக்க மாட்டார்கள். படம் கிரிகெட் மேட்சையும் மீறி நல்ல ஓபனிங்காம்.

டிஸ்கி: இது டப்பிங் விமர்சனம்.
 

உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

Comments

Xavier said…
Nice Review and me the first
படத்தை ஒரு தடவை பார்க்கலாம்
Raju said…
இந்த படத்துக்கெல்லாம் விமர்சனம் எழுதுறீங்க..!
"எங்கள் அரசனுக்கு" எழுத மாட்டீங்களா தல....?
//"எங்கள் அரசனுக்கு" எழுத மாட்டீங்களா தல....?//
அதெல்லாம் ஹிந்தியில அப்பவே பார்த்து நொந்து போன படம் டக்ளஸ்.. வேணாம் அழுதுருவேன்.
//படத்தை ஒரு தடவை பார்க்கலாம்/
நிச்சயமாய் பார்க்கலாம் ஷங்கர்.
தல

இதே மாதிரி விமர்சனம் கொஞ்ச நாளைக்கு முன்பு எங்கோ படித்து இருக்கிறேன்( Telugu Version )
மிக்க நன்றி சேவியர், சுரேஷ். உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.
//தல

இதே மாதிரி விமர்சனம் கொஞ்ச நாளைக்கு முன்பு எங்கோ படித்து இருக்கிறேன்( Telugu Version )//

சூப்பர் கவுதம்.. கீழே டிஸ்கி படிக்கலையா..?
அண்ணா! வாரவாரம் படங்களின் தரவரிசை பட்டியல் sidebarஇல் இடலாமே !
puduvaisiva said…
சங்கர் நல்ல விமர்சனம் படத்தில காமடி சீன் இல்லையா?

டிஸ்கி
திரை படத்திற்கு நடிக்க வருபதற்கு முன்னால் அனுஷ்கா ஒரு சிறந்த யோக டீச்சர்.
sarul said…
: இது டப்பிங் விமர்சனம்.

nice suffix
kishore said…
தலைவா உங்க தெலுங்கு விமர்சனத்த கொஞ்சம் டிங்கர் வேலை பார்த்து திரும்ப போஸ்ட் பண்ணி இருக்கீங்க... ஆனா இது திரும்ப போஸ்ட் பண்ண வேண்டிய படம் தான்.. நேத்து தான் பார்த்தேன்.. ரொம்ப நாளைக்கு அப்பறம் தியேட்டர்ல எண்டு கார்ட் போடுற வரைக்கும் வெளில போகாத மக்களை பார்த்தேன்... அனுக்ஷா, சோனு சுட் ரெண்டு பெரும் மிரட்டி இருகாங்க.. ஹாட்ஸ் ஆப் டு டப்பிங் ஆர்டிஸ்ட்ஸ்... டிவிடில பாக்குறத விட தியேட்டர்ல பார்த்தா நல்லா ரசிக்க (பயப்பட ) முடியும் ..
தராசு said…
நல்ல விமர்சனம், ஆமா, இந்த டிஸ்கி அவசியமா?

எப்பவுமே சினிமாவை பத்தியே எழுதறீங்களே, கொஞ்சம் மத்ததையும் எழுதுங்க தல.
Anonymous said…
உங்க விமர்சனம் படிச்சுட்டு தான் படம் பாக்கணும்னு இருந்தேன். நன்றி.
இந்தப் படமெல்லாம் பார்த்து ரசிப்பதற்கு.கேட்டு ரசிப்பதற்கு இல்லை.இல்லையா ஷங்கர்?
பாலா said…
மீள்பதிவு போட்டே.. பின்னூட்டம் வாங்க்கும் புலவர்களும் இருக்கிறார்கள்!!!! :-)

சும்மா.. தல..! விமர்சனத்தில கடைசி பாரா அடிக்கும்போது ரொம்ப எமோசனல் ஆய்ட்டேன். கூல் பண்ணிக்கதான் உங்களை கலாய்க்க வந்துட்டேன்.! :-)
நல்ல விமர்சனம்
வணக்கம் அண்ணா..

நேற்று நானும் இந்த படத்தை பார்த்தேன்... உடைகள், நிறம், கதாநாயகியின் கண்கள் இன்னும் நிறையா... என்ன கேட்டா தமிழ் படங்களில் இது வரை வந்த கிராபிக்ஸ் காட்டிலும் இது அருமை...

என்ன ஒன்னு பெண்களிடம் ஆதரவு கிடைக்குமா என்பது சந்தேகமே...
Venkat said…
இங்க ஒரே தியேட்டருல தெலுங்கு, தமிழ்ன்னு ரெண்டு வெர்சனும் ஓடுது.. இந்த வாரம் பார்த்துற வேண்டியதுத்தான்..
அப்படியா கதை?
மேவி... said…
padam sema comedy boss
nethu thaan parthen padathai
பாலா said…
வணக்கம்! இன்றைய முக்கிய செய்திகள்!

கடந்த பதினைந்து மணி நேரமாக ‘சைதையின்’ ஆட்டோ சங்கரை காணவில்லை. கண்டுபிடித்து ‘போடு’பவர்களுக்கு நமீதா ஃபோட்டோ இலவசம்.
Prabhu said…
நான் ஒரு சிறுகதை எழுத ட்ரை பண்ணிருக்கேன். அதப் பாத்து எப்படியிருக்குன்னு சொல்லனும் இயக்குனரே! டயம் இருந்தா ட்ரை பண்ணிபாருங்க!
Sanjai Gandhi said…
வழக்கம் போல் அருமை சங்கர்ஜி. பார்க்கத் தூண்டுகிறது உங்கள் விமர்சனம். :)
Ganesan said…
அங்கிள் நீங்க சத்யராஜை அரெஸ்ட் பண்ணதை டிவில காமிச்சாங்க, அதான் அங்கிள் நீங்க நடிச்ச சுயேட்சை எம்.ல் ஏ படம் K டிவி ல பாத்தேன்.

நிறைய படம் நடிங்க அங்கிள்
Prabhu said…
தலைவா, நீங்க படத்துல நடிச்சிருக்கீங்களா? சொல்லவே இல்ல.
//தலைவா, நீங்க படத்துல நடிச்சிருக்கீங்களா? சொல்லவே இல்ல.//

ஆமாம் பப்பு.. நான் சுமாராய் 90க்கும் மேற்பட்ட திரைபடஙக்ளில் சிறிய கேரக்டர் ரோல்கள் செய்திருக்கிறேன். அது தவிர 100க்கும் மேற்பட்ட டிவி சீரியல்களீல் நல்ல கேரக்டர்களில் நடித்துள்ளேன்.
/அங்கிள் நீங்க சத்யராஜை அரெஸ்ட் பண்ணதை டிவில காமிச்சாங்க, அதான் அங்கிள் நீங்க நடிச்ச சுயேட்சை எம்.ல் ஏ படம் K டிவி ல பாத்தேன்.

நிறைய படம் நடிங்க அங்கிள்//

:):):) அதுசரி.. அட்ரஸ் மாறி பின்னூட்டம் போட்டியளோ..?
//வழக்கம் போல் அருமை சங்கர்ஜி. பார்க்கத் தூண்டுகிறது உங்கள் விமர்சனம். :)//
நன்றி சஞ்சய் காந்தி உங்க்ளுடய முதல் பின்னூட்டத்திற்கும், வருகைக்கும்
/நான் ஒரு சிறுகதை எழுத ட்ரை பண்ணிருக்கேன். அதப் பாத்து எப்படியிருக்குன்னு சொல்லனும் இயக்குனரே! டயம் இருந்தா ட்ரை பண்ணிபாருங்க!//

ஒரு ரெண்டுநாள் டயம் கொடும்மா.. கொஞ்சம் பிஸி..
/வணக்கம்! இன்றைய முக்கிய செய்திகள்!

கடந்த பதினைந்து மணி நேரமாக ‘சைதையின்’ ஆட்டோ சங்கரை காணவில்லை. கண்டுபிடித்து ‘போடு’பவர்களுக்கு நமீதா ஃபோட்டோ இலவசம்.//

நானே வ்ந்து சரணடைந்ததால் நமீதாஆஆஆஅ போட்டோ எனக்கே கொடுக்கவேண்டுமாறு பணீவன்புடன் கேட்டு கொள்கிறேன்.
//padam sema comedy boss
nethu thaan parthen padathai//

என்னது காமெடியா இருக்கா..?
என் விமர்சனத்தை வச்சி காமெடி கீமெடி பண்ணலியே..?
//உங்க ஐட்டம் மாதிரியே இருக்கு///
மாதிரியில்ல சுரேஷ்.. நம்ம பதிவேதான். அப்படியே கட்& பேஸ்ட் பண்ணியிருக்காரு.. ஒரு நன்றியாவது போட்டிருக்கலாம்.
நன்றி சிம்பா, வெங்கட், வண்ணத்துபூச்சியார் வருகைக்கும், கருத்துக்கும்.
நன்றி ராதாகிருஷ்ணன்சார், அசோசியேட், ஜூர்கேன் ஆகியோரின் வருகைக்கும், கருத்துக்கும்
நன்றி கிஷோர், தராசு, மயில்,கே.எஸ், புதுகை சிவா, ஷண்முகப்பிரியன். ஆகியோரின் வருகைக்கும், கருத்துக்கும்
உங்க வேண்டுகோள் நிறைவேற்றபட்டது ஷங்கர்.
Prabhu said…
ரெண்டு நாள்தானே! உங்களுக்கு இல்லாத டயமா? எடுத்துக்கோங்க!
.....
* * * * * * * * * * * * * * * * * * * * * *
மேலே உள்ள எனது வாயசைப்பிற்கு தக்க டப்பிங் கலைஞரை பயன்படுத்தி, டப்பிங் செய்து கொள்ளவும்..... ஹி... ஹி... ஹி... உங்களுக்கு மட்டும் தான் டப்பிங் விமர்சனம் போட தெரியுமா? நாங்களும் டப்பிங் பின்னூட்டம் போடுவம்லோ?
வணக்கம் சங்கர்,
எனக்கென்னவோ இந்த படம் அவ்வளோ impact கொடுத்ததாய் தெரியவில்லை. பின்னணி இசையில் இன்னும் பயம் கூடியிருக்கலாம் என்பது என்னுடைய கருத்து. வெறும் சப்தம் அல்லது இரைச்சல். படம் பார்த்த நண்பன் சுகுமார் இன்னமும் காபி வேண்டும் என்பதை கூட பத்து பேருக்கு கேட்குமளவிற்கு இரைந்துதான் கேட்டுகொண்டிருக்கிறான்.
// சங்கர் நல்ல விமர்சனம் படத்தில காமடி சீன் இல்லையா? //
//திரை படத்திற்கு நடிக்க வருபதற்கு முன்னால் அனுஷ்கா ஒரு சிறந்த யோக டீச்சர்.//
இதைவிட நல்ல காமெடி, கிழக்கே போகும் ரயில் ராதிகாவை நினைவுபடுத்தும்படியான அனுஷ்கா-வின் நடனம் (பரதநாட்டியம்!?)
எனக்கென்னவோ இந்த படம் அவ்வளோ impact கொடுத்ததாய் தெரியவில்லை


ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒவ்வொரு ஃபீலீங்க் முரளி
நைனா.. நீங்க ரொம்பதான் பாராட்டறீங்க.. லிப் ஸ்ங்க் ஆக்மாட்டேங்குது.. நன்றி..நைனா.. ஐ லைக் யுர் ஸ்பாண்டேனியஸ் ரிப்ளை
I Agree with you "ஒவ்வொரு மனுசனுக்கும் ஒவ்வொரு பீலிங் "
//I Agree with you "ஒவ்வொரு மனுசனுக்கும் ஒவ்வொரு பீலிங் "//

நன்றி முரளி.. ஃபீலீங்க்ஸை புரிஞ்சிகிட்டதுக்கு.

Popular posts from this blog

100 போன்கால்களும், கெட்ட வார்த்தை மெசேஜுகளும்.

3 திருநங்கைகளும், 1 வடக்கனும் 100 போலீசும்

பேரைச் சொல்லவா? - மெய்யழகன் தருணங்கள்.