பத்து வருடங்களுக்கு முன்னால் பாட்ரிக் சுசண்ட் ஆல் எழுதபட்ட நாவல். பிரபல இயக்குனர்கள் ஸ்டன்லி க்யூப்ரிக், மார்டின் சாசரஸ், ரிட்லி ஸ்காட் போன்றவர்கள் இயக்க ஆசைப்பட்ட நாவல். கடைசியாய் ரன் லோலா ரன் இயக்குனர் டாம் டிவியுக்கர் வெற்றி பெற்றார்.
ஜீன் பேப்டிஸ்ட் கெரொனொலிக்கு மரண தண்டனை பொதுமக்கள் முன்னிலையில் அறிவிக்க படும் காட்சியிலிருந்து ஆரம்பிக்கிறது. ஊரே திரண்டு வந்திருந்து அவனை எப்படியெல்லாம் கொல்ல வேண்டுமென்ற வெறியுடன் கூச்சலிட்டு கொண்டிருக்க, மெதுவாய் கேமரா அவனுடய மூக்குக்குள் போக.. ப்ளாஷ் பேக்.
மீன் மார்கெட்டில் நாற்றத்தின் நடுவே பிறந்து தன் முதல் சுவாசத்தை ஆரம்பிக்கிறான் ஜீன் பேப்டிஸ்ட் கெரொனொலி. கெரொனொலியின் தாய் இல்லீகல் கர்பத்தால், குழந்தையை விட்டு போக முயற்சித்ததால், காவலர்களால் தூக்கிலடப்படுகிறாள். ஒரு அனாதை ஆசிரமத்தில் வளரும் அவனுக்கு ஒரு ஸ்பெஷல் திறமை நுகர்வது.. எவ்வளவு தூரத்திலுள்ள விஷயமாய் இருந்தாலும் துல்லியமாய் நுகரும் தனித்திறமையுடவனாக வளர்கிறான். ஒரு முறை முதல் முறையாய் மார்கெட்டுக்கு போகும் ஒரு பெண்ணின் வாசனையை பிடித்து போய் அவளை தொடர்கிறான். அவள் அவனை பார்த்து பயந்து போய் கத்த முயற்சிக்க, அவனின் முதல் கொலை ஆரம்பமாகிறது.
பின்பு ஒரு சிறந்த வாசனை திரவியஙகள் தயாரிப்பாளர் ஒருவரிடம் தனக்கு வாசனை திரவியம் தயாரிக்க கற்று கொடுக்க சொல்ல, அவரிடமிருந்து கற்றுக் கொண்டு, ஒவ்வொரு பெண்ணையும் கொன்று அவர்களின் உடலை பதப்படுத்தி அதிலிருந்து சில சொட்டு வாசனை திரவியத்தை உருவாக்குகிறான். அரசு அவனை கைது செய்து, மரன தண்டனை கொடுக்கிறது.
கதையை கேட்டால் ஏதோ ஒரு சீரியல் கில்லர் படம் போல தோன்றும், பதினெட்டாம் நூற்றாண்டு காலத்தை கண் முன்னே கொண்டு வந்திருக்கிறார்கள். படத்தின் பெரிய வெற்றியே படம பார்க்கும் நமக்கு அவன் நுகரும் விஷயங்களை உணர வைப்பதே. அவனுக்கு வாசனை திரவியததை தயாரிக்கும் நுட்பத்தை சொல்லி கொடுப்பவராக, டஸ்டின் ஹாப்மேன்.
அருமையான ஒளிப்பதிவு, அழகு , அழகான பெண்கள், அவர்க்ளை கொன்று அவன் பதப்படுத்தும் அழகு இருக்கிறதே…. இதுவரை எக்ஸ்டஸி என்கிறா நுண் உணர்வை திரையில் கொண்டுவர முயற்சி செய்தவர் தமிழில் எனக்கு தெரிந்து கமல்ஹாசன் தன்னுடய ஆளவந்தான் திரைபடத்தில் போதையின் உச்சத்தில் உள்ள ஒருவனின் உணர்வை காட்சியாக்கியிருப்பார்.
ஆனால் இப்படத்தில் க்ளைமாக்ஸ் காட்சியில் கொலை வாள் தன் கழுத்துக்கு தயாராய் இருக்க, ஒரே ஒரு முறை தான் இவ்வளவு பேரை கொன்று, தயாரித்த வாசனை திரவியத்தை, ஒரு தடவை கர்சீப்பில் நினைத்து வெட்ட வெளீயில் வீச.. ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருக்கும் இடமே மொத்த எக்ஸ்டஸியின் உச்சத்தில் கிறிஸ்துவ போதகர் உட்பட,யார் யாருடன் என்று பாராமல் அந்த வாசனையின் தூண்டுதலால் செக்ஸில் ஈடுபடும், காட்சியை துளி கூட வக்கிரமில்லாமல் எடுத்த இயக்குனரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அதே போல் கடைசி காட்சி தான் கண்டுபிடித்த திரவத்தை வைத்து தான் பிறந்த மீன் மார்கெட்டில் தன் அழித்து கொள்ளும் காட்சி நம்மை ஸ்டன் ஆக்கிவிடும்..
சுமார் பண்ணிரெண்டு விருதுகளை அள்ளிய படம். காட்சிகளாய் பார்த்தை என்னால் முயன்ற வரை விமர்சனம் என்கிற எழுத்தில் கொண்டு வர முயற்சித்திருக்கிறேன். நான் எழுதியதை விட எழுதாத காட்சிகள் படத்தில் அதிகம், படம் பாருங்கள் இதை விட அதிகம் உணர்வீர்கள்.
Perfume – வாசனை பிரியர்களுக்கு ( வாசனையை பிடிக்காதவர்கள் உண்டோ.?)
உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், தமிலிஷிலும்,Nதமிழ்லேயும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Post a Comment
36 comments:
மிக சிறப்பான ஒளிப்பதிவும், படம் நெடுக மெல்லிய இசையும் மனதை கொள்ளை கொள்ளும்.இந்த படத்தை Fantasy Thriller என சொல்லலாமா?
ரசனையான படமாய் இருக்கும் போல
//மிக சிறப்பான ஒளிப்பதிவும், படம் நெடுக மெல்லிய இசையும் மனதை கொள்ளை கொள்ளும்.இந்த படத்தை Fantasy Thriller என சொல்லலாமா?//
என்னால் இதை திரில்லர் என்று வகைபடுத்த முடியவில்லை. படம் பார்த்தவங்க.. கண்டிப்பா திரும்ப பார்ப்பாஙக்..
//ரசனையான படமாய் இருக்கும் போல//
ஆமாம் முரளி.. முடிஞ்சா படம் பாருங்க..
படத்தின் கதை நாயகனுக்கு துர்நாற்றமோ நறுமணமோ எல்லாம் ஒன்றுதான்.. ஒருவாசனை விரும்பி.. தற்செயலாக ஒரு பெண்ணின் வாசனையை நுகரும் அவனுக்கு முதல்முதலாக ஒரு வாசனை மற்ற வாசனைகளை விஞ்சுவதை அறிகிறான்... துரதிஷ்டதால் அந்த பெண் இறக்க வாசனை போய் விடுகிறது.. எனவே வாசனையை பாதுகாக்கும் வித்தையை பல ஆராய்ச்சிக்குப்பின் கற்று கொ(ல்)ள்கிரான். ஒவ்வொரு ஊரிலும் உள்ள மிக சிறந்த அழகிகளை கொன்று அவர்களது வாசனையை சேகரித்து யாரையும் சொக்க வைக்கும் திரவியத்தை தயாரிக்கிறான்....
பெண்ணின் மேனிக்கு இயற்கையிலே வாசனை உண்டு என்று கூறி நக்கீரர்க்கு சவால் விடுகிறார்கள்!!
நல்ல படம்.. நல்ல விமர்சனம்
செண்ட் ஆஃப் வுமன் பார்த்துவிட்டீர்களா?
இன்னும் இந்த படம் பார்க்கலைங்க சங்கர்..! நாளைக்கே டிவிடி வாங்கிட்டு வந்துடுறேன்.
அப்புறம்... யாஹூல ‘buzz' பண்ணுறீங்களா? ஒரு மேட்டர்.!!
நாவல் வந்த புதிதில் படித்துப் பார்த்து விட்டு மிரண்ட நாவல் இது.படமாக இன்னும் பார்க்கவில்லை.ஹைய் மேலே சொன்னதைப் போல அவ்னுக்கு வாசனையை நுகரும் ஆற்றல் போன பின்புதான் வாசனைத் திரவியங்களையே புதிது புதிதாகக் கண்டு பிடிப்பான்-பீதோவன் செவிடர் ஆன பின் உலகப் புகழ் பெற்ற கம்போசிங்குகளைச் செய்ததைப் போல.ஆழமான, அதிர்ச்சியான,முற்றிலும் புதுமையான இந்த நாவலைப் படமாக்குவது எளிதல்ல.நீங்கள் ரசித்து,ரசித்து எழுதியிருப்பதைப் படிக்கும் போது உங்கள் ரசனையிய்ன் தரம் புரிகிறது,ஷங்கர்.வாழ்க,வளர்க உங்கள் ரசனை.
படத்தை நோட் பண்ணிக்கிறேன் கிடைத்தால் பார்த்துவிடுகிறேன்
போனில் பெயரைச் சொன்னால் டி.வி.டிக்காரன் என்கிட்ட இல்ல சார் பக்கத்துக் கடையிலதான் பெர்பியூம் விக்கிறாங்கன்னு சொல்கிறான்.எங்கேயாவது மாட்டுதான்னு பார்க்கிறேன்.பெயர் அறிமுகம் செய்ததற்கு நன்றி.
இந்த வாரயிறுதில் பார்த்துவிடுகிறேன்.. நன்றிங்க்னா பகிர்வுக்கு.
இன்னும் பார்க்கவில்லை. பார்த்துவிட்டு வருகிறேன்.
பார்க்க வேண்டிய லிஸ்ட் கூடிகிட்டே போகுதே .. ??
இதற்கு ஒரு வழி சொல்லுங்கண்ணா.. ?
இன்னும் பார்க்கவில்லை. பார்த்துவிட்டு வருகிறேன்.
பார்க்க வேண்டிய லிஸ்ட் கூடிகிட்டே போகுதே .. ??
இதற்கு ஒரு வழி சொல்லுங்கண்ணா.. ?
பல பேருக்கு நிஜமாலே இந்த கொலை, வன்புணர்ச்சி போன்ற விஷயங்கள்தான் செக்ஸ் உணர்ச்சிகளைத் தூண்டுமாம். இது ஒரு வகையான psychosis னு தான் சொல்லனும். ஒரு உபரித் தகவல்- உலகின் psycho killers ல 25% அமெரிக்காதானாம். அதிக வளர்ச்சி, consumerism ஆகியவற்றின் side effect. பாலா என்ன சொல்றார் இதப் பத்தி?
no pappu இந்த படத்துல செக்ஸ்காக செய்யற கொலைங்க இல்ல சொல்லபோன இந்த படத்துல கொல செய்யபடுற பெண்கள் எல்லோருமே வாசனைக்காக தான் கொல்லபடுறாங்கதவிர செக்ஸ்காக இல்ல. படத்தை ஒரு மாதத்திற்கு முன்பு பார்த்து நெனகுறேன்.. பிஷ் மார்கெட்ல பிறந்த குழந்தைய அம்மா மீன் வெட்ற கத்தியால அதோட தொப்புள் கொடிய வெட்டு திரும்பவும் வியாபாரத்த கவனிகுற காட்சிலேயே எதோ இந்த படத்துல இருக்குனு முடிவு பண்ணிட்டேன்.. குழந்தை மீன் வாசனைய நுகர ஆரம்பித்ததுல இருந்து நம்மையும் ஒவ்வொரு வாசனையாக நுகர வைத்தது டைரக்டர்கு கிடைத்த வெற்றி...
கொடுமைக்கு ஒரு அளவே இல்லையா? இப்படியெல்லாமா படமெடுக்கிறார்கள். மனம் பிறழ்ந்தவனின் கதை என்று வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம்.
//கொடுமைக்கு ஒரு அளவே இல்லையா? இப்படியெல்லாமா படமெடுக்கிறார்கள். மனம் பிறழ்ந்தவனின் கதை என்று வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம்.//
பாலகிருஷ்ணா.. தயவு செய்து படம் பார்த்துவிட்டு கருத்தை சொல்லுங்கள்.. நிச்சயம் இது மனம் பிற்ழ்ந்தவனின் கதையல்ல
//குழந்தை மீன் வாசனைய நுகர ஆரம்பித்ததுல இருந்து நம்மையும் ஒவ்வொரு வாசனையாக நுகர வைத்தது டைரக்டர்கு கிடைத்த வெற்றி...//
சரியா சொன்னீங்க கிஷோர்.. நன்றி
//இதற்கு ஒரு வழி சொல்லுங்கண்ணா.. ?//
வேற வழி தேடி பிடிச்சு பார்த்துட வேண்டியதுதான்.. நன்றி வண்ணத்து பூச்சியாரே..
//இந்த வாரயிறுதில் பார்த்துவிடுகிறேன்.. நன்றிங்க்னா பகிர்வுக்கு.//
கண்டிப்பாய் பாருங்க நன்றி சரவணக்குமார்.
//எங்கேயாவது மாட்டுதான்னு பார்க்கிறேன்.பெயர் அறிமுகம் செய்ததற்கு நன்றி.///
கொஞ்சம் நாளாச்சு படம் வந்து அதனால நிறைய பேருக்கு தெரியாது.. நேரே போய் தேடி பாருங்க.. ராஜ நடராஜன். உங்கள் முதல் வருகைக்கு நன்றி..
//ஆழமான, அதிர்ச்சியான,முற்றிலும் புதுமையான இந்த நாவலைப் படமாக்குவது எளிதல்ல.நீங்கள் ரசித்து,ரசித்து எழுதியிருப்பதைப் படிக்கும் போது உங்கள் ரசனையிய்ன் தரம் புரிகிறது,ஷங்கர்.வாழ்க,வளர்க உங்கள் ரசனை.//
ஆமாம் சார் இது போன்ற கதைகளுக்கு திரைகதை அமைப்பதே சிரமமான காரியம். உங்கள் வாழ்த்துக்கு நன்றி சார்.
//செண்ட் ஆஃப் வுமன் பார்த்துவிட்டீர்களா?//
பாத்துட்டேன்னுதான் நினைக்கிறேன். வால்பையன்.
//இன்னும் இந்த படம் பார்க்கலைங்க சங்கர்..! நாளைக்கே டிவிடி வாங்கிட்டு வந்துடுறேன்.//
உங்களுக்கென்ன டொரெண்ட் இருக்கவே இருக்கு..
//பெண்ணின் மேனிக்கு இயற்கையிலே வாசனை உண்டு என்று கூறி நக்கீரர்க்கு சவால் விடுகிறார்கள்!!
நல்ல படம்.. நல்ல விமர்சனம்//
ஹா..ஹா.. நல்ல கம்பேரிசன் ஹை.. நன்றி உங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்கும்
நல்ல படம் ஷங்கர். ஆனால் அவன் பெண்ணின் வாசத்தை முதன் முதலில் நுகர்ந்து பின்பு அதை தேடி அலையும் காட்சியை வார்த்தைகளால் வர்ணிக்கமுடியாது. அதை நீங்கள் முடிந்த வரை எழுத்தில் கொண்டு வர முயற்சித்திருக்கிறீர்கள். வாழ்த்துகள்
நானும் விமர்சனம் எழுத முயற்சி செய்திருக்கிறேன் இயக்குனரே, காலையில் வெளியிட்டிடுவேன். அதுல குறை நிறைகள நீங்கதான் சொல்லனும். எனக்கே சரியா எழுதலயோனு தோணுது. ஆனா முதல் முயற்சினால இத வெளியிட்டுப் பார்க்கிறேன்.
utv worldmovies காண்பித்தார்கள். ஆனால் நீங்க சொன்ன செக்ஸ் சீன் எல்லாம் கட் பண்ணிவிட்டு குழைந்தைகள் பாக்கிற ரேஞ்சுக்கு போட்டான்
அப்பப்பா... நான் பார்த்த படம்.
பார்த்து பிரமித்துவிட்டேன். விமர்சனம் சற்று சாதாரணமாகவே தெரிகிறது. படத்தை பார்த்தபோது ஏற்பட்ட அளவுக்கு படிக்கும் போது அழுத்தம் தோன்றவில்லை.
//விமர்சனம் சற்று சாதாரணமாகவே தெரிகிறது. படத்தை பார்த்தபோது ஏற்பட்ட அளவுக்கு படிக்கும் போது அழுத்தம் தோன்றவில்லை.//
நான் தான் ஏற்கனவே சொல்லிவிட்டேனே ஊர்சுற்றி.. ஏதோ என்னாலானவரை முயற்சி செய்து இம்பாக்டை கொண்டுவர முயற்சி செய்திருக்கிறேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
//utv worldmovies காண்பித்தார்கள். ஆனால் நீங்க சொன்ன செக்ஸ் சீன் எல்லாம் கட் பண்ணிவிட்டு குழைந்தைகள் பாக்கிற ரேஞ்சுக்கு போட்டான்//
படத்தில் செக்ஸ் காட்சிகளே கிடையாது. க்ளைமாக்ஸ் காட்சியை தவிர.. அதை கட் செய்திருந்தால் படம் பார்த்த உணர்வே இருந்திருக்காது.. டிவிடியே சரணம்.
//நல்ல படம் ஷங்கர். ஆனால் அவன் பெண்ணின் வாசத்தை முதன் முதலில் நுகர்ந்து பின்பு அதை தேடி அலையும் காட்சியை வார்த்தைகளால் வர்ணிக்கமுடியாது. அதை நீங்கள் முடிந்த வரை எழுத்தில் கொண்டு வர முயற்சித்திருக்கிறீர்கள். வாழ்த்துகள்//
நன்றி ஆதவன்.. உங்கள் பாராட்டுக்கும், வருகைக்கும்
நான் விமர்சனம் எழுதியேவிட்டேன், the illusionist படத்திற்கு. எப்படியிருக்குன்னு சொல்லுங்க. நிறைகளோ குறைகளோ எதுனாலும் சொல்லுங்க.
தல,
உங்களுக்கு வேற வேலையேகிடையாதா, எந்நேரமும் சினிமா பாத்துட்டேதான் இருப்பீங்களா,
ஹி, ஹி சும்மா டமாசுக்கு
//உங்களுக்கு வேற வேலையேகிடையாதா, எந்நேரமும் சினிமா பாத்துட்டேதான் இருப்பீங்களா,//
நம்ம இப்ப என்ன பாக்கணுங்கிறீங்களா. ? வேணாங்கிறீங்களா..?
கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம். ஒளிபதிவு பிரமாதம்
Post a Comment