Sasirekhaa Parinayam- Telugu Film Review

sasirekha parinayam_Techsatishtelugujpgjpg வழக்கமாய் கிருஷ்ணவம்சி படமென்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும். சாதாரண கதையை மேக்கிங்கில் அசத்துவார்.  அதிலும் ஜெனிலியா என்றவுடன் ஏகப்பட்ட ஆர்வத்துடன் பார்த்தேன்.
shasirekhaparinayam-0015

கண்டிப்புக்கும், முட்டாள்தனமான கோபத்துக்கும் சொந்தக்காரரான சசிரேகாவின் தந்தை அவருக்கு திடீர் என்று திருமணம் ஏற்பாடு செய்ய, அமெரிக்க மாப்பிள்ளையின் தந்தை வரதட்சணை, அது இது என்று பிரச்சனை செய்ய திருமணம் பிடிக்காமல் வீட்டை விட்டு வெளியேறுகிறார், வழியில் ஆனந்தை சந்திக்கிறார்.  அவர்கள் இருவருக்கும் நடக்கும் சம்பவஙக்ள தான் கதை.. இறுதியில் அவர்க்ளூக்குள் காதல் மலர்ந்ததா இல்லையா என்பதை ஒரு சின்ன சஸ்பென்ஸையும் வைத்து முடித்து இருக்கிறார்கள்.
14794571_6

படம் முழுக்க ஜெனிலியா, அழுகிறார், சிரிக்கிறார், குதிக்கிறார், குதூகலிக்கிறார். அவருடன் நாம் அதே உணர்வுகலை உணர்கிறோம்.  சசிரேகாவாக வாழ்ந்திருக்கிறார் ஜெனிலியா.

ஆனந்தாக தருண், படம் முழுவதும் வியாபித்திருக்கும் ஜெனிலியாவுடன் ஈக்குவலாய் போட்டி போடுகிறார். விஜயவாடா பற்றி கேவலமாய் ஜெனிலியா பேசுமிடத்தில், அதன் பெருமைகளை சொல்லும் காட்சிகளிலும், க்ளைமாக்ஸ் காட்சியிலும் கலக்குகிறார்.
sasirekha-parinayam

எப்போதும் சிரித்தபடியே கழுத்தறுக்கும் ஆனந்தின் அப்பா,  சசிரேகாவை தேடி அலையும் ரகுபாபு, ஜெனிலியாவின் மருண்ட விழி அம்மா, என்று பல கேரக்டர்கள் இண்ட்ரஸ்டாக இருக்கிறது. திரைக்கதையில் தான் ஆங்காங்கே தொங்கி விட்டிருக்கிறார் இயக்குனர் கிருஷ்ணவம்சி.

இம்மாதிரியான படங்களுக்கு முக்கியமான தேவை இயல்பான காட்சிகளும், அருமையான இசையும், அந்த ஜோடிகளுக்குள் இருக்கும் ரொமான்ஸும் தான்.  இதில் முதல் விஷயத்திலும், கடைசி விஷயத்திலும், கொஞ்சம் மிஸ் செய்துவிட்டார்கள்..
shasirekhaparinayam-audio-0002

க்ளைமாக்ஸ் காட்சியில் தலையில் அடிபட்டு, ஜெனிலியாவை ஆட்டோவில் கூட்டி போகையில் அவர் பேசும் காட்சி அருமை, அதை படமாக்கியவிதமும் சூப்பர். கிருஷ்ணவம்சி.

மணிசர்மாவின் இசையில் இரண்டு பாடல்கள் இதம், பிண்ணனி இசையும் அருமை. பாஸ்கர் சமலாவின் ஒளிப்பதிவு நச். கொஞ்சம் திரைக்கதையில் கவனம் செலுத்தியிருந்தால் ஒரு ஜப் வி மெட் கிடைத்திருக்கும்.

Sasirekhaa Parinayam -  A Feel good OK Movie




Blogger Tips -கொத்து பரோட்டாவை படிக்க இங்கே அழுத்தவும்


உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், தமிலிஷிலும்,Nதமிழ்லேயும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

Comments

பாலா said…
லிங்க்.. கொடுங்கோ... ஓட்டு போடனும்..!! :)
butterfly Surya said…
தெலுங்குல இப்பவெல்லாம் நல்ல படமும் வருகிறது.. தமிழ் மட்டுமே திருந்தவதாய் காணோம்.

உடம்பை கவனிங்க சார். Take Care Plz..
//லிங்க்.. கொடுங்கோ... ஓட்டு போடனும்..!! :)//
லிங்க் கொடுத்தாச்சு..
//தெலுங்குல இப்பவெல்லாம் நல்ல படமும் வருகிறது.. தமிழ் மட்டுமே திருந்தவதாய் காணோம்.

உடம்பை கவனிங்க சார். Take Care Plz..//

ஆமாம் வண்ணத்து பூச்சியாரே.. இப்போ உடம்பு பரவாயில்லை. நல்லாருக்கேன். உங்க விசாரிப்புக்கு ரொம்ப ந்ன்றி.
பாலா said…
உடம்புக்கு என்ன ஆச்சி சங்கர்? அதான்.. ச்சேட் பக்கமா வரலையா? :(

டேக் கேர்.!
Raj said…
உங்க படத்துக்கு தலைவிய புக் பண்ணுங்க தல.
தல

தருண் எல்லாம் இன்னும் Fieldல இருக்காரா..சமிப காலமா அவர பாக்க முடியறதே இல்ல..
//தருண் எல்லாம் இன்னும் Fieldல இருக்காரா..சமிப காலமா அவர பாக்க முடியறதே இல்ல..//
இது சமீப படம் தான் கவுதம்
இன்னொரு தெலுங்கு படமா?
அண்ணே ...கேபிள் அண்ணே...
கொஞ்சம் பிசியா இருக்கேன்.
கொஞ்சம் நேரம் கழிச்சு வந்து, இங்கே என்னோட வேலைய ஆரம்பிக்கிறேன்.
(இப்பதான் சாப்பிட விட்டாங்க)

/*இறுதியில் அவர்க்ளூக்குள் காதல் மலர்ந்ததா இல்லையா என்பதை ஒரு சின்ன சஸ்பென்ஸையும் வைத்து முடித்து இருக்கிறார்கள். */

காதல் இல்லாமே இருக்காது என்பது எனது கணிப்பு.

/*படம் முழுக்க ஜெனிலியா, அழுகிறார், சிரிக்கிறார், குதிக்கிறார், குதூகலிக்கிறார்.*/

அப்புறம், என்னதான் செய்யனும்னு நெனச்சி நீங்க போவீங்க?
தராசு said…
//*படம் முழுக்க ஜெனிலியா, அழுகிறார், சிரிக்கிறார், குதிக்கிறார், குதூகலிக்கிறார்.*/

அப்புறம், என்னதான் செய்யனும்னு நெனச்சி நீங்க போவீங்க?//

நச்சுனு கேட்டீங்க நைனா,

தல, உடம்புக்கு என்ன ஆச்சு,
//இன்னொரு தெலுங்கு படமா?///

நான் தெலுங்கு படம் பார்த்தே கொஞ்ச நாளாயிருச்சு..வித்யா
//காதல் இல்லாமே இருக்காது என்பது எனது கணிப்பு. //

அது சரிதான்.. நைனா..

//அப்புறம், என்னதான் செய்யனும்னு நெனச்சி நீங்க போவீங்க?//

ஸ்..அப்ப்பாஅ.. இப்பவே கண்ண கட்டுதே.. நான் நல்லாருக்குன்னுதானேய்ய்யா சொன்னேன்..
How is your health,Shankar?Now alright?
Prabhu said…
உடம்புக்கு என்ன ஆச்சு, இயக்குனரே? இப்போ எப்படி?
//உடம்புக்கு என்ன ஆச்சு, இயக்குனரே? இப்போ எப்படி?//
//How is your health,Shankar?Now alright?//

இப்போ பரவாயில்லை ஷண்முகப்பிரியன் & பப்பு.. வெளியே போக ஆரம்பிச்சிட்டேன்.

Popular posts from this blog

100 போன்கால்களும், கெட்ட வார்த்தை மெசேஜுகளும்.

3 திருநங்கைகளும், 1 வடக்கனும் 100 போலீசும்

பேரைச் சொல்லவா? - மெய்யழகன் தருணங்கள்.