Thottal Thodarum

Apr 3, 2009

கொத்து பரோட்டா –03/04/09

நண்பர்கள் சிலரை ரொம்ப நாள் கழித்து சந்தித்த வேளையில், வழக்கம் போல் ஒரு ஃபுல்லை காலி செய்த பிறகு,  நமிதா, தமிழ் சினிமா, உலகசினிமா,  எல்லாம் தாண்டியவுடன், நம் நண்பர்குழாமில் இருந்த ஒரு இலக்கியவாதி, 

”உங்கள்ல யாராவது  ப்ரமிள் இல்ல நகுலனை படிச்சிருக்கீங்களா..?”

அடுத்த டாபிக் கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில் எல்லோரும் இருக்க, ஒருவர் மட்டும்  தொண்டையை கனைத்து

“நீங்க ப்ரமிள்னு செல்லமா சொல்றது அரகேற்றம் பிரமிளாவைதானே. நகுலன்ங்கிறது ‘நாக்க மூக்க’ நகுல தானே?” என்றதும் விழுந்தது அடி.

ஏன் சார்.. ப்ரமிள்னா, அது அரகேற்றம் பிரமிளா இல்லையா..? நகுலன்னா நம்ம நாக்க மூக்க நகுல் இல்லியா..? என்ன கெரகம்டா சாமி.. உடம்பெல்லாம் வலிக்குது.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

சமீபத்தில் கேட்ட திரை பட பாடல்களில் ‘குங்குமபூவும், கொஞ்சுபுறாவும் படத்தின் பாடல்கள் என்னை மிகவும் கவர்ந்தது. சின்னசிறுசுங்க ஆரம்பிக்கிற பாட்டின் ஆரம்பத்தில் வரும் கிடார் நம்மை மொத்த பாட்டிற்கும், கட்டியம் கூறி அழைத்து செல்கிறது. அடுத்து  கடலோரம் என்கிற s.p.b.saran பாடும் பாடல் ஸ்லோவாக இருந்தாலும், கண்டிப்பாய் மறுக்கா, மறுக்கா கேட்க வைப்பது டியூனில் உள்ள எளிமைதான். பாடல்கள் படம் பார்க்கும் ஆவலை தூண்டுகிறது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

A- ஜோக்

பெண் தன் காதலனுடன் இருக்கும் போது அவளின் கணவன் திடீரென வந்துவிட வேறு வழியில்லாமல் அவனை ஒரு பிரோவில் ஒளித்திருக்க சொல்ல, உள்ளே அந்த பெண்ணின் மகனும் ஒளிந்திருக்க, 

பையன்: இங்க ஒரே இருட்டா இருக்கு

ஆள் ; ஆமா

பையன்: என்கிட்ட கிரிகெட் பால இருக்கு

ஆள் ; அப்படியா குட்

பையன் : வாங்குகிறயா?

ஆள் ; வேண்டாம்

பையன் : எங்கப்பா வெளிய இருக்காரு..

ஆள் : சரி எவ்வளவு?

பையன் : ஆயிரம் ரூபா

 

அடுத்த சில வாரங்கள் கழித்து மறுபடியும் அதே போல பையனும் ஆளும் அதே பீரோவில் இருக்க,

பையன் : ஓரே இருட்டா இருக்கு

ஆள் : ஆமா

பையன்: என்கிட்ட கிரிகெட் பேட் இருக்கு

ஆள் எவ்வளவு

பையன்: 1500 ரூபா

ஒரு நாள் பையனின் அப்பா மகனை அழைத்து வா கிரிகெட் விளையாடலாம்னு கூப்பிட அதற்கு பையன் நான் அதை 2500 ருபாய்க்கு வித்துட்டேன் என்று சொன்னவுடன் அப்பா ”நீ அநியாயமாய் உன் நண்பர்களை ஏமாற்றி வித்துருக்கே அதனால் கண்டிப்பா பாவ மன்னிப்பு கேட்டே ஆகணும் என்று சொல்லி பாவமன்னிப்பு கேட்டும் அறையில் உட்காரவைத்துவிட்டு போனார்.,

பாதிரியார் வ்ந்து பாவம்ன்னிப்பு ரூமில் அமர்ந்து கதவை மூட,

பையன் : இங்கெ ஒரே இருட்டா இருக்கு

பாதிரியார் : ஓ ஷிட் மறுபடியும் ஆரம்பிக்காதே என்றார்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


Blogger Tips -பெ’ண்’களூரை படிக்க இங்கே அழுத்தவும்

உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..


Post a Comment

34 comments:

Cable சங்கர் said...

test

Anonymous said...

ரொம்ப நல்ல ஜோக்...

Raju said...

\\சமீபத்தில் கேட்ட திரை பட பாடல்களில் ‘குங்குமபூவும், கொஞ்சுபுறாவும் படத்தின் பாடல்கள் என்னை மிகவும் கவர்ந்தது. சின்னசிறுசுங்க ஆரம்பிக்கிற பாட்டின் ஆரம்பத்தில் வரும் கிடார் நம்மை மொத்த பாட்டிற்கும், கட்டியம் கூறி அழைத்து செல்கிறது. அடுத்து கடலோரம் என்கிற s.p.b.saran பாடும் பாடல் ஸ்லோவாக இருந்தாலும், கண்டிப்பாய் மறுக்கா, மறுக்கா கேட்க வைப்பது டியூனில் உள்ள எளிமைதான். பாடல்கள் படம் பார்க்கும் ஆவலை தூண்டுகிறது.\\

இப்பதான் கேட்டீங்களா...
அதுல "வெங்கட் பிரபு" பாடுன பாட்டும் நல்லாருக்கும்..கேட்டா டான்ஸ் ஆடத்தோனும்...
SPB பாடுன பாட்டு சுமார்தான்.

எம்.எம்.அப்துல்லா said...

//உடம்பெல்லாம் வலிக்குது.

//

ஹா...ஹா...ஹா....


**********************


சும்மா ஏதோ ஒரு பாத்தப் போட்டுட்டு ஹாட் ஸ்பாட்னு வேற ஏமாத்துறீங்க??? நாட்டாமை படத்த மாத்து :)

thanjai gemini said...

ப்ரமிள்னா, அது அரகேற்றம் பிரமிளா இல்லையா..? நகுலன்னா நம்ம நாக்க மூக்க நகுல் இல்லியா..?

அப்பாவியா இருக்கீங்களே

மேவி... said...

nalla irukku......

ana A joke hot yaga illai .....

பரிசல்காரன் said...

சமீபத்தில் கேட்டதா? ஜி.. அந்த ஒலிப்பேழை வந்து ரொம்ப நாளாச்சுங்களே..

கடலோரம் எஸ்.பி.சரணை விட யுவன் பாடியதில் உயிர்பிருக்கும்.

எல்லாவற்றையும்விட ‘என் ராசாத்தி கிளியே..’ (வேல்முருகன்) பாட்டுதான் டாப். ஒரு சோகப் பாட்டுக்கு என்னா மியூசிக்!

கோவி.கண்ணன் said...

சங்கர், கடைசி ஜோக்குக்கு :))))))

butterfly Surya said...

அட,, நீங்களும் TEST..??

நல்லாயிருக்கு.

கார்க்கிபவா said...

//SPB பாடுன பாட்டு சுமார்தான்/

எனக்கு ஹார்ட் அட்டாக்கே வந்த்டுச்சு

தராசு said...

தல,

ஜோக்கு கலக்கல்.

joe vimal said...

ஜி கொத்து பரோட்ட ல காரம் கம்மி ஏ ஜோக் சுமார் தான் அப்புறம் ஹாட் ஸ்போட் இல் இருபது யார் என்ன இருந்தாலும் நமீதா மாதிரி வருமா

லக்கிலுக் said...

ஏ ஜோக் சூப்பர் :-)

நையாண்டி நைனா said...

/*ஏன் சார்.. ப்ரமிள்னா, அது அரகேற்றம் பிரமிளா இல்லையா..? நகுலன்னா நம்ம நாக்க மூக்க நகுல் இல்லியா..? என்ன கெரகம்டா சாமி.. உடம்பெல்லாம் வலிக்குது.*/

ஆஆவ்வ்வ்வ்வ்வ் அது தப்பா....?

ஆமா இப்படி அடிவாங்கி வேதனையிலே இருக்குறதுனாலே, பரோட்டாவிற்கு மாவு நெறையா போடலியா....
இல்லே..... பந்த் நேர பரோட்டா கடை மாதிரி சரக்கு கம்மியா இருக்கேன்னு கேட்டேன்.

பாலா said...

ஜோக்கு அசத்தல்! ஹா.. ஹா..!

இன்னும் வலியிருக்கா? :(

பாலா said...

OFF TOPIC:
==========

சங்கர் 2-3 மெஸேஜ் போட்டும், எந்த ரெஸ்பான்ஸும் இல்லை. இங்கதான் இருக்கீங்களா.. இல்லை திரும்ப பெங்களூரா?

எனக்கு இன்னும் மெயில் வரலையே! நாளைக்கு போகனும்! Please!

பாலா said...

வேற ஃபோட்டோ போடுங்க சங்கர். ஹாட் ஸ்பாட்ல.

shortfilmindia.com said...

//சங்கர் 2-3 மெஸேஜ் போட்டும், எந்த ரெஸ்பான்ஸும் இல்லை. இங்கதான் இருக்கீங்களா.. இல்லை திரும்ப பெங்களூரா?

எனக்கு இன்னும் மெயில் வரலையே! நாளைக்கு போகனும்! Please!
//
bala ive already sent the mail to your gmail. account powerbala.. see that

Venkatesh subramanian said...

ஏன் சார்.. ப்ரமிள்னா, அது அரகேற்றம் பிரமிளா இல்லையா..? நகுலன்னா நம்ம நாக்க மூக்க நகுல் இல்லியா..? என்ன கெரகம்டா சாமி.. உடம்பெல்லாம் வலிக்குது.*/

அப்புறம் அந்த ஜோக் 2ம் சான்ஸே இல்லை பின்னிடிங்க

shabi said...

அயன் விமர்சனம் என்னாச்சு படம் பாக்கலியா நான் பாத்தாச்சு

வினோத் கெளதம் said...

சூப்பர் ஜோக் தல..

ஹாட் ஸ்பாட் போட்டோ கிக் இல்லை.

மோனி said...

என்ன கொடுமை சங்கர் இது ?
முக்காவாசி பேரு முதல்ல
ஹாட் ஸ்பாட்-ஐ டான் பாக்குறாங்க போலிருக்கு ...
அப்புறம்தான் பதிவா ... ?

அதனால போட்டோவை மாத்திடுங்க ...
ஹி ஹி ஹி

Anbu said...

அண்ணா அயன் விமர்சனம் எங்க?????

புரோட்டா சூப்பர்

அத்திரி said...

//“நீங்க ப்ரமிள்னு செல்லமா சொல்றது அரகேற்றம் பிரமிளாவைதானே. நகுலன்ங்கிறது ‘நாக்க மூக்க’ நகுல தானே?” என்றதும் விழுந்தது அடி.//

ஹிஹிஹிஹி-.............அண்ணாச்சி ஜோக்கு சூப்பரு அண்ணாச்சி.... பொட்டல்புதூர் ஏஒன் ஹோட்டலில் பரோட்டா சாப்பிட்ட மாதிரி இருக்கு....

sriram said...

தல
ஜோக் ரொம்ப பழசு, hotspot ரொம்ப சுமார், உங்களுக்கு ரொம்ப வயசாயிடுச்சின்னு நினைக்கிறேன்...
என்றும் அன்புடன்
ஸ்ரீராம் Boston USA

Cable சங்கர் said...

நன்றி ஸ்ரீராம்..
அத்திரி, அன்பு, ஆகியோரின் அன்புக்கும், கருத்துக்கும் ந்ன்றி.

Cable சங்கர் said...

நன்றிவிஜய் கவுதம், மோனி ஆகியோரின் அன்புக்கும் கருத்துக்கும்

Anonymous said...

//நன்றிவிஜய் கவுதம், மோனி ஆகியோரின் அன்புக்கும் கருத்துக்கும்//

என்ன தல, தமிழ்மணத்தப் புடிச்சுக்கிட்டு இப்பத்தான் இங்க வற்றேன். நீங்க என்னடான்னா முன்னாடியே நன்றியப் போட்டு வச்சிருக்கீங்க. நீங்க ஹாட் ஸ்பாட் படத்த மாத்தாதீங்க. முடிஞ்சா அதே புள்ள நல்லா துணி உடுத்திருக்க மாதிரி படமா போடுங்க. (நம்ம ஆளுங்க எல்லாம் செய்யாதேன்னு சொன்னாதான் செய்வாங்க.) ஹிஹி....

ஏ-ஜோக்க விட இலக்கிய ஜோக்குதான் நெனச்சு நெனச்சு சிரிக்கிற மாதிரி இருக்கு.

அது சரி(18185106603874041862) said...

//
பாதிரியார் : ஓ ஷிட் மறுபடியும் ஆரம்பிக்காதே என்றார்.
//

இது சூப்பர்!!!

அது சரி(18185106603874041862) said...

இன்னொரு பாவ மன்னிப்பு ஜோக் இருக்கு...அது அனேகமா உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்...இல்லாட்டி நான் அப்புறம் சொல்றேன்...

Ganesan said...

இருக்கட்டும். இருக்கட்டும்

ஷங்கர் Shankar said...

சங்கர் அண்ணா!
அயன் திரை விமர்சனம் எப்ப போடுவீக !

Cable சங்கர் said...

//அயன் திரை விமர்சனம் எப்ப போடுவீக //

வருது வருது விலகு விலகு அய்ன் விம்ர்சனம் வருது.

Prabhu said...

ஜோக்கு சூப்பர்...