எவ்வளவுதான் ரிசஷனில் இருந்தாலும் பெரிதாய் பாதிக்கபடாத சில தொழில்களில் சினிமாவும் ஒன்று. மக்கள் பொழுது போக்கிக்கிற்காக, செலவு செய்வதை பெரிதாய் கருதுவதில்லை. அவர்கள் கொடுக்கும் காசுக்கு தகுதியானது கிடைக்கும் வரை. அப்படி கடந்த 90 நாட்களில் அதாவது ஜனவரி 1 முதல் மார்ச் வரையில் வெளியான திரைப்ப்டஙக்ளை பற்றிய ஒரு கண்ணோட்டம்.
ஜனவரி 2009
இம் மாதத்தில் ஏவி.எம். குமரனின் அ.ஆ.இ.ஈ, வில்லு, காதல்னா சும்மா இல்லை, படிக்காதவன், என்னை தெரியுமா, சற்று முன் கிடைத்த தகவல், வெண்ணிலா கபடிக் குழு ஆகியவை வெளியானது.
இதில் அ…ஆ….இ…ஈ மிக்ப் பெரிய தோல்வியை சந்தித்த படம். தெலுங்கிலிருந்து ரீமேக் செய்யப்பட்டு மிகவும் எதிர்பார்க்க பட்ட படம்.
காதல்னா சும்மா இல்லை திரைப்படமும், தெலுங்கில் கம்யம் என்ற திரைப்படத்தின் ரீமேக் தான் ஏனோ தெரியவில்லை தெலுங்கில் பெரிய ஹிட்டான இந்தபடம். தமிழில் வேலைக்காகவில்லை. முக்கியமாய் பாதி படத்தை தெலுங்கிலிருந்து டப் செய்துவிட்டு, ரவிகிருஷணா வரும் காட்சிகளை மட்டும் தமிழில் எடுத்து வெளியிட்டது ஒரு மைனஸ்..
வில்லை பற்றி நாம் சொல்தற்கு ஏதுமில்லை உலகமறிந்ததே. தெலுங்கிலும், தமிழிலுமாய் எடுக்கபட்ட என்னை தெரியுமா படம் யாருக்கும் தெரியாமலே தியேட்டரை விட்டு ஓடிவிட்டது. அதே நிலைதான் சற்று முன் கிடைத்த தகவலுக்கும். படிக்காதவன் படத்தை பற்றி பெரிசாய் சொல்ல ஏதுமில்லாவிட்டாலும், சன் பிக்சர்ஸின் மார்கெட்டிங், விவேக் காமெடி எல்லாம் சேர்ந்து ஒரு பெரிய ஹிட். மாத கடைசியில் வந்தாலும், மெகா பட்ஜெட் படங்களுகிடையே குறைந்த செலவில் நிறைந்த இன்பம் என்பது போல் வந்த வெண்ணிலா கபடிக் குழு அருமையான ஓப்பனிங்கோடு வெற்றி பெற்றது..
ஹிட் லிஸ்ட் : படிக்காதவன், வெண்ணிலா கபடிக் குழு
பிப்ரவரி
நான் கடவுள், சிவா மனசுல சக்தி, லாடம், த.நா.அல.4777
இதில் நான் கடவுளுக்கு பெரிய ஓப்பனிங் கிடைத்தது. ஆனால் அந்த படத்துக்கான செலவு செய்தது ரிட்டர்ன் கிடைத்ததா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். விமர்சகர்களிடம் பெறும் பாராட்டையும், திட்டையும் வாங்கிய படம்.
சிவா மனசுல சக்தி மிக சுமாரான படம. விகடன் குழுமத்திடமிருந்து, வந்த படம், சன் வாங்குவதாய் இருந்து, பின்பு அவர்கள் விலகிவிட, டிஸ்ட்ரிபூஷன் முறையில் வெளீயான படம். சந்தானத்தின் காமெடிஇளைஞர்களை, கவர்ந்தது, சில சமயம் எதற்கு ஓடுகிறது என்று தெரியாமல் சில படங்கள் ஓடும். அதில் SMSம் அடங்கும். லாடம், த.நா.அல. போன்றவை சுவடே தெரியவில்லை.
ஹிட் லிஸ்ட் : சிவா மனசுல சக்தி,
ஆவரேஜ் : நான் கடவுள்
மார்ச்
தீ, யாவரும் நலம்,1977, காஞ்சீவரம், அருந்ததீ, பட்டாளம்.
தீ சன் டிவியில் மட்டும் வெற்றிநடை போட்ட படம், யாவரும் நலம் யாருமே எதிர்பார்காத ஒரு அர்பன் ஹிட். அருந்த்தீ டப்ப்ங் படமாய் இருந்தாலும், நேரடி தமிழ் படங்களுக்கான ஓப்பனிங் கிடைத்த படம். சரத்குமாரின் 1977 சொந்த செலவில் சூனியம் வைத்து கொண்ட படம், பட்டாளம் ப்டையெடுப்பு தோல்வியே. காஞ்சீவரம் தமிழிலிருந்து ஒரு உலக சினிமா.. வழக்கம் போல் நல்ல சினிமா ஓடாது. அதற்கு இப்படமும் விலக்கல்ல..
ஹிட் லிஸ்ட் : யாவரும் நலம், அருந்ததீ
மொத்தம் மூன்று மாதங்களில் வெளியான 17 படங்களில் 5 படங்கள் மட்டுமே ஹிட் லிஸ்டில் இருக்க, ஒரு ஆவரேஜ் படம் இடம் பெற்றிருக்கிறது. கொஞ்சம் ஆரோக்கியமாய்தான் தெரிகிறது. இப்படங்களை தவிர, சின்ன படங்கள் சிலது ரீலீஸ் ஆகியிருக்கலாம். அவற்றை பெரிதாய் எடுத்து கொள்ள ஏதுமில்லாததால் எழுதவில்லை
Post a Comment
53 comments:
மாதம் ஒரு முறையோ அல்லது மூன்று மாதத்துக்கு ஒரு முறையோ இப்படியொரு பதிவை எழுதுங்கள் சங்கர்.
தோழமையுடன்
பைத்தியக்காரன்
பைத்தியக்காரனை வழிமொழிகிறேன்.
இதே தலைப்புகூட ஓகே.
நானும் பைத்தியக்காரனின் கமெண்ட்டை பாலோ பண்றேன். அப்படியே முடிந்தால் லாப நஷ்டக் கணக்கையும் சொல்லுங்க ஜி:)
இதே போல ஒவ்வொரு காலாண்டிற்கும் கணக்கை சப்மிட் செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்.
நல்லாத்தான்யா அலசுறாங்க!
இது கலக்கல் பதிவு சங்கர். நிச்சயம்.. இதுமாதிரி எழுதுங்க.. 90 நாட்களுக்கு பதிலா.. 30-ன்னு எழுதினா.. இன்னும் விரிவா எழுத முடியுமே...! :) :)
குட் கம்பைல்
//
பைத்தியக்காரன் said...
மாதம் ஒரு முறையோ அல்லது மூன்று மாதத்துக்கு ஒரு முறையோ இப்படியொரு பதிவை எழுதுங்கள் சங்கர்.
//
Repeat...
Sir,
Good Review . Try to review bollwood & Hollywood Movies
ரிப்போர்ட் சூப்பரு...
தலை. இதைதான் கார்ப்ப்ரேட்ல Q 1 அப்படின்னு சொல்றாங்க.
முதல் காலாண்டு ரிப்போர்ட்.
ஆனா அது ஏப்ரலில் இருந்து ஆரம்பிக்கும்.
சினிமாவில் புத்தாண்டிலிருந்து நல்ல தொடக்கம்.
இதை உங்களை விட சிறப்பா யாராலும் எழுத முடியுமா.??
சந்தேகம் தான்.
Q 1 = டெபாசிட் இழக்கவில்லை.
நன்றி.
தொடருங்கள்.
உண்மை தமிழனை மிகவும் கேட்டதாக சொல்லவும்.
//எவ்வளவுதான் ரிசஷனில் இருந்தாலும் பெரிதாய் பாதிக்கபடாத சில தொழில்களில் சினிமாவும் ஒன்று.//
இந்த வருடம் ரிசஷனினால் டிவிடி விற்பனை வேண்டுமானால் குறையும் :) :) இது (ரிசஷன்) இந்தியாவில் இருக்கும் 100 கோடி பேரில் 1 கோடி பேரை கூட பாதிக்கவில்லை !!!
இரண்டு வருடம் தொடர்ந்து ம்ழை பெய்யாவிட்டால் பாருங்கள் அப்புறம் தெரியும் தியேட்டரில் ஈயாடுவதை
//தீ சன் டிவியில் மட்டும் வெற்றிநடை போட்ட படம், யாவரும் நலம் யாருமே எதிர்பார்காத ஒரு அர்பன் ஹிட். அருந்த்தீ டப்ப்ங் படமாய் இருந்தாலும், நேரடி தமிழ் படங்களுக்கான ஓப்பனிங் கிடைத்த படம். சரத்குமாரின் 1977 சொந்த செலவில் சூனியம் வைத்து கொண்ட படம், பட்டாளம் ப்டையெடுப்பு தோல்வியே. காஞ்சீவரம் தமிழிலிருந்து ஒரு உலக சினிமா.. வழக்கம் போல் நல்ல சினிமா ஓடாது. அதற்கு இப்படமும் விலக்கல்ல..//
சூப்பர்
//சூப்பர்//
நன்றி புருனோ..
//மாதம் ஒரு முறையோ அல்லது மூன்று மாதத்துக்கு ஒரு முறையோ இப்படியொரு பதிவை எழுதுங்கள் சங்கர்.
தோழமையுடன்
பைத்தியக்காரன்//
கண்டிப்பாக எழுதலாம்னுதான் நினைச்சுகிட்டிருக்கேன். பைத்தியக்காரன்.. மிக்க நன்றி
//Q 1 = டெபாசிட் இழக்கவில்லை.
நன்றி.
தொடருங்கள்//
மிக்க நன்றி வண்ணத்துபூச்சியாரே..
//ரிப்போர்ட் சூப்பரு...//
நன்றி சரவணகுமாரன்.
very super anna....
//Sir,
Good Review . Try to review bollwood & Hollywood Movies//
முயற்சி செய்கிறேன் முத்து பாலகிருஷ்ணன்.
நன்றி லோகு, ஜுர்கேன்.. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்
//இது கலக்கல் பதிவு சங்கர். நிச்சயம்.. இதுமாதிரி எழுதுங்க.. 90 நாட்களுக்கு பதிலா.. 30-ன்னு எழுதினா.. இன்னும் விரிவா எழுத முடியுமே...! :) :)
//
முப்பதுன்னு போட்டா ஒரு முடிவான ரிசல்ட் தெரியாம போகறதுக்கான வாய்ப்பு இருக்கு பாலா.. அதனால தான் 90 நாள் போட்டேன். இருந்தாலும் ட்ரை பண்ணறேன்.
//நல்லாத்தான்யா அலசுறாங்க!
//
பின்ன யாரு நாங்க.. டக்ளசு... விட்டு பின்னிரமாட்டோம்...
//இதே போல ஒவ்வொரு காலாண்டிற்கும் கணக்கை சப்மிட் செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்//
கண்டிப்பாய் செய்கிறேன் தமிழ் நெஞ்சம்..
//அப்படியே முடிந்தால் லாப நஷ்டக் கணக்கையும் சொல்லுங்க ஜி:)
//
கொடுக்கலாம்னுதான் நினைச்சேன். ஆனா அவ்வளவு கரெக்டா இருக்குமான்னு தெரியல..
மிக்க நன்றி பைத்தியக்காரன்.. பரிசல்.. தொடர்கிறேன்.
//very super anna....//
நன்றி அன்பு உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.
நல்லா அலசி ஆராய்ந்து இருக்கீங்க.
தொடரட்டும் இப்பணி.
//தீ சன் டிவியில் மட்டும் வெற்றிநடை போட்ட படம்//
சன் டிவில செய்திக்கு இடையில தீ படம் பற்றி சிறப்பு செய்தினு 15 நிமிடம் ஒட்டுனாங்க....
100 வது நாளும் கொண்டாடுவாங்க போல...
நல்லாவே அலசியிருக்கீங்க..... தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறேன்
நல்ல அலசல்..
//பைத்தியக்காரன் said...
மாதம் ஒரு முறையோ அல்லது மூன்று மாதத்துக்கு ஒரு முறையோ இப்படியொரு பதிவை எழுதுங்கள் சங்கர்.//
பைத்தியக்காரனை வழிமொழிகிறேன்!
படம் வேலை எவ்ளோ தூரத்துல இருக்கு சார்?
நல்ல பதிவு.. தொடரவும்.
நல்ல பதிவு, அலசல்... 90 நாட்களுக்கு ஒருமுறை என்பதே சரியான இடைவெளி..
நல்லா எழுதிருக்கிங்க சகோதரரே!!.இந்த மாதிரி பாலிவுட்,ஹாலிவுட் பத்தியும் எழுதுங்க.
//படம் வேலை எவ்ளோ தூரத்துல இருக்கு சார்?//
இன்னும் சரியா செட் ஆகலை தண்டோரா
//நல்லா எழுதிருக்கிங்க சகோதரரே!!.இந்த மாதிரி பாலிவுட்,ஹாலிவுட் பத்தியும் எழுதுங்க.
//
முயற்சி செய்கிறேன். மேனகாசாதியா.. அவர்களே.
//நல்ல பதிவு, அலசல்... 90 நாட்களுக்கு ஒருமுறை என்பதே சரியான இடைவெளி..//
நானும் அப்படித்தான் நினைக்கிறேன் தமிழ் பறவை.
நன்றி உண்மைதமிழன் உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.. உடம்பு எப்படியிருக்கு.?
நன்றி ஷாப்தா, இராகவன், அத்திரி.. அவர்களின் வருகைக்கும் கருத்துக்கும்
நன்றிங்கோ...!
யாவரும் நலம் பார்த்துட்டேங்க, அருந்ததீ உங்க ஹிட் லிஸ்ட்ல இடம் பிடிச்சதால பார்க்கலாம்னு...
நியாயமான ரிபோர்ட்.நன்று.
அண்ணன் பைத்தியக்காரனை வழிமொழிகிறேன்.
//நானும் பைத்தியக்காரனின் கமெண்ட்டை பாலோ பண்றேன். அப்படியே முடிந்தால் லாப நஷ்டக் கணக்கையும் சொல்லுங்க ஜி:)
//
நட்டமா இருந்தா காம்பென்சேஷன் குடுக்கப்போறியா வித்யா??
:)))
செம்ம ரிப்போர்ட் தல.. தொடர்க பணி..
(என்ன இருந்தாலும்.. அருந்ததீ.. டாப்புதான்..
..நீ அந்த சமாதியிலயிருந்து வெளியவே வரமுடியாதுடா..
மறக்கமுடியாத அனுஷ்கா..இல்ல பாஸ்!)
//மறக்கமுடியாத அனுஷ்கா..இல்ல பாஸ்!)//
ம்ஹூம்ஹூம்.. அனுஷ்ஷ்ஷ்ஷ்காகாகா ..
//அண்ணன் பைத்தியக்காரனை வழிமொழிகிறேன்//
கண்டிப்பாண்ணே..
//நட்டமா இருந்தா காம்பென்சேஷன் குடுக்கப்போறியா வித்யா??
:)))
//
:):)
//யாவரும் நலம் பார்த்துட்டேங்க, அருந்ததீ உங்க ஹிட் லிஸ்ட்ல இடம் பிடிச்சதால பார்க்கலாம்னு...//
அருந்ததீ பாக்கலையா..?
”டேய் உன்னை விடமாட்டேண்டா..”
என்ன பீர் பயந்திட்டீங்களா..? அருந்த்தி வசனம் அவ்வளவுதான்.
//யாவரும் நலம் பார்த்துட்டேங்க, அருந்ததீ உங்க ஹிட் லிஸ்ட்ல இடம் பிடிச்சதால பார்க்கலாம்னு...//
அருந்ததீ பாக்கலையா..?
”டேய் உன்னை விடமாட்டேண்டா..”
என்ன பீர் பயந்திட்டீங்களா..? அருந்த்தி வசனம் அவ்வளவுதான்.
//நன்றிங்கோ...!//
நன்றி தமிழன் கருப்பி.. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்
//நியாயமான ரிபோர்ட்.நன்று.//
மிக்க நன்றி சார்.. உங்கள் ஆதரவுக்கும், கருத்துக்கும்
// Cable Sankar said...
அருந்ததீ பாக்கலையா..?
”டேய் உன்னை விடமாட்டேண்டா..”
என்ன பீர் பயந்திட்டீங்களா..? அருந்த்தி வசனம் அவ்வளவுதான்.//
அடி... ஆத்தீ...இப்பவே பயந்துகெடக்கு...
அருமை சங்கர். பைத்தியக்காரன் முன் மொழிந்து மக்கள் வழிமொழிந்ததை நானும்.
//அருமை சங்கர். பைத்தியக்காரன் முன் மொழிந்து மக்கள் வழிமொழிந்ததை நானும்.
//
மிக்க நன்றி முரளீ.. திரும்பவும் பார்முக்கு வந்திட்டீங்க போலருக்கு..
Post a Comment