இண்டர்வெல் முடிந்து பரபரப்பாய் போய் கொண்டிருந்தது அயன் திரைப்படம், திடீரென்று படம் கட் ஆகியது. மெலொடி தியேட்டரில் டிஜிட்டல் புரொஜெக்ஷன் என்பதால் படம் திரும்ப வருவதற்கு சற்று நேரம் ஆனது. (ஏன் என்பதற்கான காரண்ம் பின்னால்). நொந்து போன ரசிகர்கள்களின் விசிலும், சத்தமுமாய் தியேட்டரே அல்லோல கல்லோலபட, திடீரென படம் முதலில் இருந்து ஆரம்பித்தது, திரும்பவும் கட் ஆகி, பாதியிலிருந்து ஆரம்பிக்கபட்டு, கட், மீண்டும் ஸ்டார்ட். ஆனால் இப்போது ஆரம்பித்ததோ நாங்கள் பார்த்து கொண்டிருந்த காட்சியிலிருந்து அரை மணி நேரம் கழித்து வரும் காட்சியிலிருந்து. ஏற்கனவே முதல் காட்சியில் படம் பார்த்திருந்த ரசிகர்கள் காட்சிகளில் ஜம்ப் ஆகிவிட்டது எதிர்த்து புரொஜெக்டரில் துணியை வைத்து மூடி, கலாட்டா செய்ய ஆரம்பித்தார்கள்.
தியேட்டர்காரர்களோ, அப்படியே ஓட்டினால் சரியாகிவிடுவார்கள் என்று நினைத்து மேலும் படத்தை ஓட்ட நினைக்க, உயரமான ஒருவர் சீட்டின் மீது ஏறி தன்னுடய டவலால் முழு புரொஜெக்ஷன் திரையையும் மறைக்க, தியேட்டர் மேனேஜர் ஆட்களுடன் வந்து, மிரட்ட, மக்களும் ஒன்று சேர்ந்து கத்த, வேறுவழியில்லாமல் மறுபடியும் கட் ஆகி கரெக்டான இடத்திலிருந்து பட்ம் ஆரம்பித்தது.
படம் ஆரம்பித்து ஒரு பாடல் காட்சியின் போது திடீரென தியேட்டருள் ஒரு இன்ஸ்பெக்டர், கான்ஸ்டபிள் சகிதமாய் திரையை மறைத்த உயர இளைஞரை அழைத்து கொண்டு போனார்கள், இதை பார்த்த மக்களூம் நமக்காக போராடிய ஒருவரை போலீஸை வைத்து அழைத்து போவதை பார்த்து கொதித்து எழுந்து மேலும் பலர் அவர்களின் பின்னே போக, வெளியே போனவுடன், அவரை போலீஸார் அடிக்க முற்பட, அதற்குள் வெளியே சென்ற ரசிகர்கள் உள்ளே புகுந்து மேனேஜர் நோக்கி கத்த, ஒருகிணைந்த மக்கள் ச்க்திக்கு முன்னால் ஒன்றும் செய்ய முடியாமல் மேனேஜர் தன் தவரை ஒத்துக் கொண்டு, வெளியேறினார்.
இதே போல பல தடவை சத்யம் திரையரங்கில் நடைபெற்றிருக்கிறது. அப்போதெல்லாம் லோக்கல் ஸ்பிக்கர் மூலமாய் தியேட்டரின் உள்ளே வ்ந்து இத்தனை நிமிடங்களுக்குள் பிரச்சனை சரி செய்யப்படும் என்று அறிவிப்பர்கள். மீறி நேரம் ஆகும் என்றால் உங்கள் பணம் திரும்ப வாங்கிக் கொள்ளலாம். பார்க்கிங்க் சார்ஜ் உட்பட், இதுவல்லவா நிர்வாகம்.
அநியாயத்துக்கு எதிராய் எழும் மக்கள் சக்தியின் பவர் இது. இதே போல் மக்கள் அனைவரும் தங்களுக்கு எதிராய் நடக்கும் எல்லாவிதமான அநியாயங்களுக்கும் பொங்கியெழுந்தால் கண்டிப்பாய் நியாயம் கிடைக்கும்.
டிஜிட்டல் புரொஜக்ஷன் பிரச்னை
டிஜிட்டல் புரொஜக்ஷனில் படம் ஓடிக் கொண்டிருக்கும் போது சில சமயம் ஹாங் ஆகி படம் கட் ஆகிவிடும், நாம் திரும்பவும் கம்யூட்டரை ரீபூட் செய்து படத்தின் டைம் கோடை தெரிந்திருந்தால் சரியாய் அந்த கோடுக்கு வரவைத்து படத்தை ஆரம்பிக்கலாம். முக்கால் வாசி தியேட்டர்களில் சாதாரண ப்ரஜெக்ஷன் தியேட்டர்களில் எப்பவுமே இரண்டு புரெஜெக்டரில் மாறி, மாறி படம் ஓட ஒரு அசிஸ்டெண்டாகவது, இருப்பார். ஆனால் ப்ளாட்டர், டிஜிட்டல் புரொஜக்ஷன் வந்த பிறகு அசிஸ்டெண்ட் கட், ஆப்பரேட்டர் ஒருவர் மட்டுமே சுவிட்சை ஆன் செய்தவுடன் அது பாட்டுக்கு ஓட ஆரம்பித்து விடும், சரியாக இண்டர்வெல் சமயத்தில் வந்து ஆப் செய்தால் போதும். அதனால் இருக்கும் ஒரு ஆப்பரேட்டரும் படம் கட் ஆனது, ரசிகர்கள் சத்தத்தினால் தெரியவந்து அத்ற்கு பிறகு உள்ளே வருவதால் டைம் கோட் தெரியாமல் தேட வேண்டிவருகிறது.
உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Post a Comment
32 comments:
மெலொடி-ன்னு சொல்லியிருக்கீங்க? சத்யம் தியேட்டரில் இன்னொரு தியேட்டர் ஓப்பன் பண்ணியிருக்காங்களா? இல்லை நாந்தான் மறந்துட்டேனா? :(
------
போலீஸ் அடிக்க போனாங்களா? ஹா.. ஹா.. இங்க மட்டும் அது நடந்தா... நாம மில்லியனர் ஆய்டலாம். :) :)
பாலா மெலொடி தியேட்டர் சத்யம் பக்கத்தில இருக்கிற் ஒரு சிங்கிள் ஸ்கிரின் தியேட்டர்.
சத்யமில் இந்த மாதிரியான நடவடிக்கைகளே நடந்து நான் பார்த்ததில்லை. அருமையான் கஸ்டமர் கேர்... நல்ல குவாலிடி புரொஜெக்ஷன், சவுண்ட்,
ஒவ்வொரு யுகத்திலும் ஒரு பிரச்சினை. ஸ்க்ராலிங் டெக்ஸ்டில் அப்டேட் செய்யும் போது Blogger Tips என்பதை நீக்கி விடுங்கள்.
//ஸ்க்ராலிங் டெக்ஸ்டில் அப்டேட் செய்யும் போது Blogger Tips என்பதை நீக்கி விடுங்கள்.//
செய்துவிட்டேன் தமிழ்ப்ரியன். உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி..
//சத்யம் தியேட்டரில் இன்னொரு தியேட்டர் ஓப்பன் பண்ணியிருக்காங்களா? இல்லை நாந்தான் மறந்துட்டேனா? :(//
சத்யம், சாந்தம், ஸிக்ஸ்டிகிரீஸ், செரீன், ஸ்டுடியோ5, சுபம் தியேட்டருக்கு வேறு புது பெயர் வைத்துள்ளார்கள் சட்டென்று ஞாபகம் வரவில்லை..
அதுதவிர, புட்கோர்ட், பவ்லிங் எரேனா, கன்சோல் கேமிங், மூன்று ப்ளோர்களுக்கு என்று பின்னி பெடலெடுக்கிறார்கள்.
மக்கள் சக்திய அண்ணே எங்க கவனிச்சிருக்காப்ல...
நல்ல ஒப்பீடு....!
ஆனா, தமிழன் திருந்த மாட்டானே!
//மக்கள் சக்திய அண்ணே எங்க கவனிச்சிருக்காப்ல...//
கிடைக்கிற இடத்துலதானே சக்தியை தெரிஞ்சிக்கிடணும்
௨000 க்கு வாங்கற டிவிடி player லையே resume option இருக்கறப்ப டிஜிட்டல் புரெஜெக்டரில் இன்னும் ஈசியா இருக்கனுமே. அந்த உயர இளைஞரை போலிஸ் கூட்டிட்டு போறப்ப மக்கள் கொந்தளிச்சது. அந்த பையனோட தைரியம் ரெண்டுக்கும் ராயல் சல்யுட்
//௨000 க்கு வாங்கற டிவிடி player லையே resume option இருக்கறப்ப டிஜிட்டல் புரெஜெக்டரில் இன்னும் ஈசியா இருக்கனுமே//
ஆப் ஆகி நின்றுவிட்டால் ரெஸ்யூம் ஆப்ஷனும் சில சமயம் ப்ராப்ளம் ஆவதாய் சொல்கிறார்கள். போக போக இதற்கெல்லாம் கூட பக்ஸ் சரிபண்ணிவிடுவார்கள். ஜெமினி வருகைக்கும், கருத்துக்கும், நன்றி
//அநியாயத்துக்கு எதிராய் எழும் மக்கள் சக்தியின் பவர் இது. இதே போல் மக்கள் அனைவரும் தங்களுக்கு எதிராய் நடக்கும் எல்லாவிதமான அநியாயங்களுக்கும் பொங்கியெழுந்தால் கண்டிப்பாய் நியாயம் கிடைக்கும்.//
பதிவர் சந்திப்புக்கு போனதுக்கப்புறமும், இன்னமும் பதிவர் சந்திப்பைப் பற்றிய பதிவையோ, படங்களையோ வெளியிடாத அண்ணன் கேபிள் சங்கருக்கெதிராக பொங்கியெழுகிறொம்.
அயன் படத்த பார்த்த எத்தனை தடவ சொல்லி வெறுப்பேத்தப்போறீங்க??
எங்களுகாக, சத்யமில்மட்டுமே படம் பார்க்கும் நீங்கள் மெலோடியெல்லாம் போய் இவ்வளவு கஷ்ட்டபட்டு பார்த்தத நினைச்சா பெருமையா இருக்கு
//மக்கள் அனைவரும் தங்களுக்கு எதிராய் நடக்கும் எல்லாவிதமான அநியாயங்களுக்கும் பொங்கியெழுந்தால் கண்டிப்பாய் நியாயம் கிடைக்கும்//
டிஜிட்டல் புரொஜக்ஷன் - தியேட்டரில் - சமூக நீதி
என்ன இது அடிக்க வராங்களா? ரொம்ப அநியாயமா இருக்கே, இயக்குனரே?
//என்ன இது அடிக்க வராங்களா? ரொம்ப அநியாயமா இருக்கே, இயக்குனரே//
ஆமாம பப்பு.. அநியாயம் தான் அதனால்தான் மக்கள் பொங்கியெழுந்தார்கள்.
நன்றி அசோக் உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்
//எங்களுகாக, சத்யமில்மட்டுமே படம் பார்க்கும் நீங்கள் மெலோடியெல்லாம் போய் இவ்வளவு கஷ்ட்டபட்டு பார்த்தத நினைச்சா பெருமையா இருக்கு/
பாருங்க தலிவா..
//அயன் படத்த பார்த்த எத்தனை தடவ சொல்லி வெறுப்பேத்தப்போறீங்க??
//
என்ன வித்யா இப்படி சொல்லிட்டீங்க.. படம் பாக்க போன இடத்தில படத்துக்கு விமர்சனமும் கிடைச்சிது. இன்னொரு பதிவும் கிடைச்சிது.
//பதிவர் சந்திப்புக்கு போனதுக்கப்புறமும், இன்னமும் பதிவர் சந்திப்பைப் பற்றிய பதிவையோ, படங்களையோ வெளியிடாத அண்ணன் கேபிள் சங்கருக்கெதிராக பொங்கியெழுகிறொம்//
என்னண்ணே.. போட்டோ எதுவும் எடுக்கலைன்ணே.. அதனால்தான் எழுதல.. இதுக்கெல்லாம் வன்மையா கண்டிக்கிறத.. உஙக் தம்பிண்ணே.
சினிமா தியேட்டர், டிஜிட்டல்........ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் பாக்குறேன்
ஆம் நான் அந்நியன் படம் பார்க்கும் பொது இதேபோல் நடந்தது மக்களும் இதே போல் பொங்கி எழுந்தார்கள் .சினிமா பார்க்கும் பொது வர்ற எழுச்சி மத்த இடங்களில் தமிழனுக்கு வர்ரமடிங்குதே ஏன் ?.அயன் பார்த்தேன் it is definitely inspired from catch me if u can
//ஆனால் ப்ளாட்டர், டிஜிட்டல் புரொஜக்ஷன் //
ப்ளாட்டர் என்றால் என்ன ???
//ப்ளாட்டர் என்றால் என்ன ???//
ப்ளாட்டர் என்றால் மொத்த படத்தின் சுருளையும் ஒருங்கிணைத்து ஒரே ரோலாக மாற்றி ஒரு பக்கத்தை புரொஜெக்டரில் விட்டு மறு முணை அடுத்த் தட்டில் ரோல் ஆகிவிடும். ஒவ்வொரு ரீலாக மாற்றி புரொஜெக்டரில் ஏற்ற தேவையில்லை. அடுத்த காட்சிக்கு கீழே ரோல் ஆன பிலிமிலிருந்து உள் முனையை எடுத்து புரொஜெக்டரில் விட்டு மேலே உள்ள தட்டில் சுழல செய்வது.
ஜோ,
கிளைமாக்ஸ்ல கஸ்டம்ஸ் அதிகாரியா மாத்தினத வச்சு சொல்லாதீங்க! அந்த சீன் இல்லைனா எப்படி யோசிச்சிருப்போம்?
//ஜோ,
கிளைமாக்ஸ்ல கஸ்டம்ஸ் அதிகாரியா மாத்தினத வச்சு சொல்லாதீங்க! அந்த சீன் இல்லைனா எப்படி யோசிச்சிருப்போம்?
//
அந்த கடைசி சீன் இல்லாட்டியும் இந்த படம் செகண்ட் ஹாப் Catch Me if u can தான்..
நன்றி ஜோ, அத்திரி.. உஙக்ள் வருகைக்கும், கருத்துக்கும்.
தங்களோட ப்ளாகை விட அனுஷ்கா வின் புகைப்படம் அருமையாக வுள்ளது .... மிக்க நன்றி !!!!!!!!!!
//தங்களோட ப்ளாகை விட அனுஷ்கா வின் புகைப்படம் அருமையாக வுள்ளது .... மிக்க நன்றி !!!!!!!!!!//
வந்ததுக்கு ஏதாவது ஒண்ணு பிடிச்சிருந்தா சரி.. மிக்க நன்றி ஸ்கார்பியன் கிங்
நேத்துதான் அயன் படம் பார்த்தேன். படம் செம ஸ்பீடு. நல்லார்ந்துச்சி.
கவுண்டர்ல 10 பேருக்குத்தான் டிக்கெட் குடுத்தான் 40 ரூபா டிக்கெட் 100 ரூபா குடுத்தது கவுண்டர்லயே ப்ளாக்ல வாங்கித்தான் பார்த்தேன். என்னோட சீட்ல ஐஸ்க்ரீம் கொட்டி இருந்தது. சரி வேற சீட்ல உட்காரலாம்னா நம்பர் படிதான் உட்காரனும்னான். சரிய்யா சீட்ட க்ளீன் பண்ணி குடுன்னு சொன்னா பெரியா மைசூர் மகராஜா சீட்ட தொடைச்சி vidanuma னு கேட்டுட்டு தண்ணிய சீட்ல ஊத்தி தொடச்சிட்டு போய்ட்டான். சீட் ஒரே ஈரம் சரி காயுற வரைக்கும் பக்கத்து சீட்ல உட்காரலாம்னா அந்த சீட்டுக்கும் ஆளு வந்துடுச்சி. சரின்னு எழுந்து நின்னா பின்சீட்ல இருக்ரவங்களுக்கு மறைக்குது. அவன்கிட்டயே மறுபடி போய் சீட் ஈரம்னு சொன்னா வேணும்னா வந்து fan போட்டு விடவானு நக்கலா கேக்குறான். தலவிதிய நொந்துகிட்டு அரைமணிநேரம் நின்னுகிட்டே படம் பாத்தோம். அப்ப என் நண்பர் சொன்னாரு வெளில டிவீடி ௨0 ரூபாய்க்கு விக்குது நீ ௨00 ரூபா குடுத்து இவ்வளவு மன உளைச்சளோட படம் பாக்கனுமான்னு? என்ன பதில் சொல்றதுன்னு தெரியல. தியேட்டர்ல போய் படம் பாருன்னு சொல்ற ஜீவாத்மாக்களே இப்ப சொல்லுங்க தியேட்டர்க்கு போய் ஏன் பாக்கணும்?
(ஆனா நான் தியேட்டர்க்கு போய் தான் படம் பார்பேன்)
மக்கள் ஒன்றினைந்தது பாராட்டப்பட வேண்டிய ஒன்று!
ஒருமுறை ஆல்பர்ட்டில் ஸ்கிரீன் கிழித்தவருக்கு வெளியே தர்மஅடி விழந்தது. நான் அடுத்த ஷோவுக்குக்காக நின்றிருந்ததால் ஏன் அடித்தார்கள் என்பதே ஸ்கீரினில் ஒட்டியிருந்த பிட்டு துணியை பார்த்து தான் தெரிந்து கொண்டேன்!
அப்பொழுது நான் சிந்தாதிரிபேட்டையில் கேபிள் தான் காட்டி கொண்டிருந்தேன் என்பது உங்களுக்கு நம்ப கொஞ்சம் கஷ்டமாக இருக்கலாம்!
//அப்பொழுது நான் சிந்தாதிரிபேட்டையில் கேபிள் தான் காட்டி கொண்டிருந்தேன் என்பது உங்களுக்கு நம்ப கொஞ்சம் கஷ்டமாக இருக்கலாம்//
அட நம்மாளூ
Post a Comment