Thottal Thodarum

Apr 7, 2009

ரமேஷும்.. ஸ்கூட்டி பெண்ணும்..



ஓசியில் பினாயில் கொடுத்தாலும், சந்தோஷமாய் குடிப்பவன் ரமேஷ். உலகமகா கஞ்சன். அதைப்பற்றி சொல்லி அவனை கிண்டலடித்தால் வேறு யாரையோ கிண்டல் செய்வதாய் பாவித்து, அவனும் சிரிப்பான். யாருக்காவது ஏதாவது உதவி தேவையென்றாலும் கூட என்ன ஏதென்று கேட்க மாட்டான்.. ஏன் என்று கேட்டால், “அத கேட்கபோய்..அவங்க நம்ம கிட்டயே எதாவது கேட்டுட்டா..?” என்பான். தலையிலடித்து கொண்டு நகர்வேன்.

அவன் ஏன் இப்படி இருக்கிறான் என்றே தெரியவில்லை.. முடிந்த வரை எனது அலுவலகத்தில் எல்லோரும் அவரை அவாய்ட் செய்வார்கள், அல்லது கிண்டல் செய்வார்கள். அன்று நான் அலுவலகத்திலிருந்து கிளம்புவதற்கே ரொம்ப லேட்டாகிவிட்டது, கிளம்புகையில் பின்னாடி என் பேரை யாரோ கூப்பிடுவது போல இருக்க.. பார்த்தால் ரமேஷ்.

“சார்.. என்னை கொஞ்சம் போற வழியில டிராப் செய்றீங்களா..?”

என்று கேட்டபடி என் பதிலை எதிர்பாராமல் என் பைக்கின் பின்னால் ஏறி உட்கார்ந்து கொண்டான். எனக்கு கொஞ்சம் எரிச்சலாகவே இருந்தது.. என்ன விதமான ஜந்து இவன்.. கொஞ்சம் கூட மற்றவர்களை பற்றி யோசிக்காமல்.. நடந்து கொள்கிறானே.. என்று மனதுக்குள் திட்டினாலும், நான் ஓன்றும் அவனுக்காக ஊரை சுற்ற் போவதில்லை. போகிற வழியில்தான் அவன் வீடு இருக்கிறது. அதனால் ஓன்றும் சொல்லாமல் வண்டியை கிளப்பினேன்.

அவனுக்கும் எனக்கும் பேசிக் கொள்வதற்கு எதுவும் இல்லாததால், அமைதியாகவே வண்டியோட்டி கொண்டிருந்தேன். என்னுடய் வீடு நகரத்துக்கு வெளியே இருக்கிறது.. அதற்கு முன்னால் ரமேஷின் வீடு.. இரவு லேட்டானால் பஸ், ஆட்டோ எதுவும் கிடைக்காது. மணி 11.30 மேல் ஆனதால் டிசம்பர் மாதத்து குளிர் முகத்திலடிக்க, கொஞ்சம் வேகமாகவே வண்டிய செலுத்தினேன்.

“ சார்.. சார்.. கொஞ்சம் வண்டிய நிறுத்துங்க சார்..” என்றான் ரமேஷ் பதட்டமாய்,

“ என்ன ரமேஷ்.. என்னாச்சு.. எதையாவது கீழே போட்டுட்டீங்களா..?” என்று கேட்டபடி வண்டியை நிறுத்தினேன். அவன் பதில் சொல்லாமல் வந்த திசை நோக்கி ஓடினான். அங்கே ஓரு பெண் ஸ்கூட்டியை பிடித்தபடி நிற்க, அவளுடன் அவன் எதையோ பேசி.. அவளுடய வண்டியை ஸ்டார்ட் செய்ய முயன்று கொண்டிருந்தான். நான் வண்டியை திருப்பி அவர்களை அடைந்து,

“என்ன ஆச்சு ரமேஷ்..?”

“ வண்டி ரிப்பேர் ஆயிருச்சு சார்..ஸ்டார்ட் ஆகலையாம்.. அதான் பாக்கறேன்..”

அப்போதுதான் நான் அந்த பெண்ணை பார்த்தேன். நல்ல உயரம், அளவான உடல், வண்டியை ரொம்ப தூரம் தள்ளிக் கொண்டு வந்திருக்க வேண்டும், முகத்தில் வேர்வை.., முகத்தில் கொஞ்சம் பயம் கலந்ததிருந்தது. இடுப்பில் கைவைத்து ரமேஷ் சைக்கிளுக்கு காத்தடிப்பதை போல எகிறி, எகிறி, கிக்கரை உதைப்பதை பார்த்து கொண்டிருந்தாள். எனககு அவனை பார்க்க ஆசச்ர்யமாகிவிட்டது. இவனா இப்படி உதவுகிறான்.. நாலு உதைக்கு ஓரு முறை அந்த பெண்ணை ஏறிட்டு பார்த்து கொண்டிருந்தான். ஓ..பிகரை மடிக்கிறதுக்காகவா..?

“எங்கே வேலை செய்றீங்க..? “ என்றேன்..

அவளின் பதட்டத்தை குறைப்பதற்காக, அவள் என்னுடய அலுவகத்தின் அருகே உள்ள ஓரு பிரபல கம்பெனியை சொல்ல..

“ எதுக்காக ராத்திரியில ரிஸ்க் எடுக்கிறீங்க.. கம்பெனி கேப் இருக்கில்ல..” என்று கேட்டேன்.

ரமேஷ் இன்னமும் காத்து அடித்து கொண்டிருந்தான்.. மனதுக்குள் சிரித்து கொண்டேன்.. என்ன ஓரு அர்பணிப்பு.. “ரமேஷ்.. வண்டியில பெட்ரோல் இருக்கா பாருங்க.. என்றேன்.”

ரமேஷ் வண்டியின் டாங்கை திற்ந்து பார்த்து, “ அட ஆமா சார்.. சுத்தமா டிரை..” என்று சொன்னவுடன். இங்கே பக்கதில நாலு கிலோ மீட்டருக்கு பங்க் எதும் கிடையாதே.. என்று தனக்குள் பேசியாடி யோசித்தவன் முகத்தில் பல்ப் எறிய, சற்று தூரத்தில் ஓரு பெட்டி கடை தெரிய, பரபர வென்று ஓடி திரும்பி வரும் பொது ஓரு மினரல் வாட்டர் பாட்டிலை வாங்கி வந்திருந்தான். “த..பார்றா..பிகருன்னதும்.. என்ன ஓரு பில்டப்பு..” இதே நமக்கு ஓண்ணுன்னா.. செய்வானா.. என்று யோசிக்கும் போதே..

“சார். கொஞ்சம் தண்ணி குடிங்க..,என்று அவன் கொஞ்சம் குடித்துவிட்டு, எனக்கும் குடித்துவிட்டு, மிச்சத்தை, அந்த பெண்ணிடம் கொடுத்து குடிக்க சொல்லிவிட்டு, பாட்டில் காலியானவுடன் சுத்தமாய் அதிலிருந்த தண்ணியை வெளியேற்றி, என்னுடய் வண்டியிலிருந்து என்னுடய் அனுமதியில்லாமலே..பெட்ரோல் டியூபை க்ழற்றி வண்டியிலிருந்து பெட்ரொலை அந்த பாட்டிலில் பிடித்து, அந்த் பெண்ணின் வண்டியில் ஊற்றி.. வண்டியை ஸ்டார்ட் செய்து, அவளிடம் கொடுத்து “பார்த்து போங்க.. வழியில எங்கயும் நிறுத்தாதீங்க.. பார்த்துபோ..” என்று கரிசனத்துடன் வழியனுப்பினான்.

எனக்குள் கோபமும், ஓரு பக்கம ரமேஷை பார்த்து நகக்லும் எட்டி பார்த்தது.. எதையும் காட்டிக் கொள்ளாமல் வண்டியை ஸ்டார்ட் செய்து கிளப்பினேன். ரமேஷும் ஏறிக் கொண்டான்..வழியில் எதுவுமே..பேசவில்லை.. நான் இந்த விஷயத்தை அதும் ரமேஷ் தன் கை காசிலிருந்து பத்து ரூபா செலவு செய்து ஓரு பெண்ணிக்கு கொடுத்ததை பரப்ப வேண்டும் என்று நினைத்தப்டியே.. வண்டியை ஓட்ட..அது..ஓரு ரெண்டு கிலோ மீட்டர் தாண்டியவுடன் திக்கி..திக்கி ஓடி நின்று போனது. என்னவென்று பார்த்தால் வண்டியில் பெட்ரோல் இல்லை.. நான் ரமேஷை பார்த்தேன்.. “ சாரி சார்..உங்க வண்டியில பெட்ரோல் இருக்கும்னு நினைச்சு புல்லா எடுத்திட்டேன்.. கொடுங்க சார் பகக்த்துல ஓரு கிலோ மீட்டர் தூரத்துல பங்க இருக்கு நான் தள்ளீகிட்டு வரேன்..” என்று என்னிடமிருந்து வண்டியை தள்ளி கொண்டு வர, அவனை திட்ட முடியாமல் அவனை ஆச்சர்யமாய் பார்த்தபடி..

“ ஏன்..ரமேஷ் உங்க கையிலேர்ந்து பத்து பைசா கூட செலவு பண்ணமாட்டீங்க.. இன்னைக்கு என்னடானா.. ஓரே தாராளமா பின்னி பெடலெடுக்கிறீங்க..? பிகர்ன்னதும் என்னமா உதவுறீங்க..?” என்றேன் கிண்டலாய்..

ரமேஷ் எதுவும் பேசாமல் கொஞ்சம் தூரம் வண்டியை தள்ளிக் கொண்டே.. “ பிகருக்காக, இல்லசார்.. நாலு வருஷம் முந்தி இதே ஏரியாவுல ஓரு பொண்ணு ஆபீஸ் விட்டு லேட்டா வரும் போது அந்த பொண்ணை மடக்கி ரேப் பண்ணி கொன்னுட்டானுங்க.. அது வேற யாருமில்ல... என் லவ்வர் தான்.. இன்னொரு பொண்ணுக்கு அந்த மாதிரி ஆயிரகூடாதுன்னுதான்..” என்று கண்கள் பனிக்க சொல்லிவிட்டு..

‘ இதோ.. பங்க் பக்கத்துல வந்திட்டோம் சார்.. ” என்றபடி வண்டியை வேகமாய் தள்ளி சென்றான்.

நான் அவன் போவதையே பார்த்து கொண்டிருந்தேன்..

அயன் திரைவிமர்சனத்தை படிக்க இங்கே அழுத்தவும்

உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..


Post a Comment

44 comments:

Xavier said...

உங்கள் எழுத்து நன்றாக உள்ளது. விமர்சனங்களும் ரொம்ப அருமை.

Xavier said...

நான் தான் முதல் கமெண்ட்.

ஷங்கர் Shankar said...

கதை நல்ல இருக்கு!

Cable சங்கர் said...

//உங்கள் எழுத்து நன்றாக உள்ளது. விமர்சனங்களும் ரொம்ப அருமை//

நன்றி சேவியர். உஙக்ள் முதல் வருகைக்கும், கருத்துக்கும்

Cable சங்கர் said...

//கதை நல்ல இருக்கு!//

நன்றி ஷங்கர்..

thanjai gemini said...

கதை சொல்லும் பாங்கு நல்லா இருக்கு . பட் முடிவு தான் கொஞ்சம் காமிக் டைப். (யூகிக்க முடிந்த முடிவு.)

Raju said...

எப்படிண்ணே இப்படி கலக்குறீங்க....!

Cable சங்கர் said...

//எப்படிண்ணே இப்படி கலக்குறீங்க....!

//

அப்படியே தானா வருது.. டக்ளஸூ

Cable சங்கர் said...

//கதை சொல்லும் பாங்கு நல்லா இருக்கு . பட் முடிவு தான் கொஞ்சம் காமிக் டைப். (யூகிக்க முடிந்த முடிவு.)//

நன்றி தஞ்சை ஜெமினி.. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்

Busy said...

I read This Story Before............., but i dnt no from where i read it

Raju said...

ம்..ம்..வரட்டும்..வரட்டும்...
கலக்குங்க அண்ணே...

Cable சங்கர் said...

//I read This Story Before............., but i dnt no from where i read it//

இது மீள் பதிவு பிஸி

Prabhu said...

ரொம்ப பிடிச்சது. ரீசண்டா எழுதுனதுலயே சூப்பர் இதுதான்!

பாலா said...

நல்லா போச்சி சங்கர். முடிவுதான்... என்னமோ மாதிரி ஒட்டலை.

தராசு said...

//மணி 11.30 மேல் ஆனதால் டிசம்பர் மாதத்து குளிர் முகத்திலடிக்க,//

//நல்ல உயரம், அளவான உடல், வண்டியை ரொம்ப தூரம் தள்ளிக் கொண்டு வந்திருக்க வேண்டும், முகத்தில் வேர்வை..,//

[அந்தக் குளிரிலும் அவளுக்கு வேர்த்திருந்தது, பயத்தினாலா அல்லது வண்டியை தள்ளிக்கொண்டு வந்ததினாலா என்று தெரியவில்லை]

இப்படி எழுதியிருந்தா நல்லாருக்குமோன்னு தோணுதண்ணே.

Cable சங்கர் said...

//அந்தக் குளிரிலும் அவளுக்கு வேர்த்திருந்தது, பயத்தினாலா அல்லது வண்டியை தள்ளிக்கொண்டு வந்ததினாலா என்று தெரியவில்லை//

அப்படி எழுதியிருந்தா பின்னாடி ரமேஷ் சொல்ல போற விஷயத்தை முன் கூட்டியே சொன்னமாதிரி ஆகியிருக்கும் தராசு. அதனாலதான் அந்த மாதிரியான வர்ணனைகளை தவிர்த்தேன்.. எனினும் உங்கள் கருத்துக்கும், வருகைக்கும் மிக்க் நன்றி நைனா. சோக்கா காலாய்ச்சிருக்கா நைனா உன் கடயாண்டே...

shortfilmindia.com said...

கதை பிடிக்கலையா பாலா.. இல்லை க்ளைமாக்ஸ் பிடிக்கலையா..?

Cable சங்கர் said...

//ரொம்ப பிடிச்சது. ரீசண்டா எழுதுனதுலயே சூப்பர் இதுதான்!

//

நன்றி பப்பு.. உஙக்ள் ஆதரவுக்கும், வருகைக்கும், கருத்துக்கும்

ஷண்முகப்ரியன் said...

ஹாலிவுட் பாலா said...
நல்லா போச்சி சங்கர். முடிவுதான்... என்னமோ மாதிரி ஒட்டலை.//

நானும் பாலாவுடன் உடன்படுகிறேன் ஷங்கர்.

Venkatesh subramanian said...

//ரொம்ப பிடிச்சது. ரீசண்டா எழுதுனதுலயே சூப்பர் இதுதான்!.// ரிப்பிடுகுறேன்

Vidhya Chandrasekaran said...

:(

Venkatesh Kumaravel said...

அணுகுமுறை நல்லா இருந்துச்சு... ஆனா முடிவு எனக்கும் நெருடலாத் தான்ணே இருந்துச்சு.. அப்புறம் ஒரு சின்ன வேண்டுகோள். அந்த அம்மணி போட்டோ சைட்பார்-ல இருக்கே... அதை க்ளிக்கினா பெருசா காட்டுறாப்ல போட்டுவைங்க... ;)

இராகவன் நைஜிரியா said...

மிக அருமையான கதை. ஓவ்வொரு மனிதன் உள்ளேயும் மர்மங்கள் புதைந்து இருக்கும் என்று அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.

(ரொம்ப நாளா உங்க கடைப் பக்கம் வரவில்லை என்று திட்டக்கூடாது. வேலை கொஞ்சம் அதிகம் அதான் பின்னூட்டம் இடவில்லை.. ஆனா ஓட்டு போட்டுட்டேன்)

பாலா said...

//இல்லை க்ளைமாக்ஸ் பிடிக்கலையா..?//

க்ளைமேக்ஸ்-தான் சங்கர்! அதிகபடியான எதிர்பார்ப்பினால் இருக்கலாம். சொன்ன காரணம் மிக சாதாரணமா பட்டது. இன்னும் இன்னும் ‘ஆண்டாளை’ வைத்தே ‘ஜட்ஜ்’ செய்வது இன்னொரு பிரச்சனை.

Cable சங்கர் said...

//க்ளைமேக்ஸ்-தான் சங்கர்! அதிகபடியான எதிர்பார்ப்பினால் இருக்கலாம். சொன்ன காரணம் மிக சாதாரணமா பட்டது. இன்னும் இன்னும் ‘ஆண்டாளை’ வைத்தே ‘ஜட்ஜ்’ செய்வது இன்னொரு பிரச்சனை.
//

:):):)

Cable சங்கர் said...

//மிக அருமையான கதை. ஓவ்வொரு மனிதன் உள்ளேயும் மர்மங்கள் புதைந்து இருக்கும் என்று அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.//

மிக்க நன்றி இராகவன்.

Cable சங்கர் said...

//அணுகுமுறை நல்லா இருந்துச்சு... ஆனா முடிவு எனக்கும் நெருடலாத் தான்ணே இருந்துச்சு.. அப்புறம் ஒரு சின்ன வேண்டுகோள். அந்த அம்மணி போட்டோ சைட்பார்-ல இருக்கே... அதை க்ளிக்கினா பெருசா காட்டுறாப்ல போட்டுவைங்க... ;)

//

முடிஞ்சா செய்கிறேன் வெங்கிராஜா..

Muniappan Pakkangal said...

Nalla pathivu.

அறிவிலி said...

எழுத்து நடை சூப்பர்....

Cable சங்கர் said...

//நானும் பாலாவுடன் உடன்படுகிறேன் ஷங்கர்//

உங்களுக்கும் முடிவு பிடிக்கலையா சார்..

Cable சங்கர் said...

//எழுத்து நடை சூப்பர்....

//

அப்ப கதை நல்லால்ல அப்படித்தானே அறிவிலி..

Cable சங்கர் said...

//Nalla pathivu.//
நன்றி முனியப்பன்.

Cable சங்கர் said...

நன்றி வெங்கடேஷ் சுப்ரமணியம், வித்யா.. உஙக்ள் வருகைக்கும் கருத்துக்கும்

வெடிகுண்டு வெங்கட் said...

அருமை. உங்களின் நடை மெருகேறி வருகிறது.

அத்திரி said...

சுண்டகஞ்சி நல்லா இருக்கு

sankarkumar said...

cable
good story
sankar

Cable சங்கர் said...

//அருமை. உங்களின் நடை மெருகேறி வருகிறது//

நன்றி வெடிகுண்டு வெங்கட்..

Cable சங்கர் said...

//சுண்டகஞ்சி நல்லா இருக்கு//
சுர்ருன்னு ஏறினா சரி..

Cable சங்கர் said...

//cable
good story
sankar//

மிக்க நன்றி சங்கர்..

Menaga Sathia said...

எழுத்து நடை நல்லா இருக்கு!!

Cable சங்கர் said...

நன்றி மேனகாசாதியா.. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்

Unknown said...

இன்றைய டாப் பிரபல தமிழ் வலைப்பதிவுகளை WWW.SINHACITY.COM இல் காணுங்கள்

THOPPITHOPPI said...

இந்த பதிவுகளுக்கு பதில் சொல்லுவது கேபிள் ஷங்கர் சார் தானா? எனக்கு என்னமோ டௌட்டா இருக்கு



கணவன்மார்கள் வேலைக்கு போய்ட்டா மனைவிமார்கள் நன்றிசொல்லுவதை போல் உள்ளது விரைவில் இதுபற்றிய பதிவு என்தளத்தில். ஸ்டிங் ஆபரேஷன் ஸ்டார்டிங்

நிலாமதி said...

கதை அருமை இனிய ஆரம்பம் . எடுத்துகாட்டான் முடிவு. பகிர்வுக்கு நன்றி.