வழக்கமாய் பதிவர் சந்திப்பு முடிந்தவுடன் உடனடியா போய் வந்த சூட்டோடு பதிவுகள் இடப்படுவது வழக்கம். ஆனால் இந்த முறை எனக்கு தெரிந்து இரண்டே இரண்டு பதிவுதான் வந்திருந்தது. ஒன்று வழக்கம் போல டோண்டுவின் பதிவும், இன்னொரு புதிய பதிவர் என்று நினைக்கிறேன். வெறும் படங்களை மற்றும் போட்டிருந்தார். மற்றவர்கள் யாரும் பதிவு போட்டதாய் தெரியவில்லை.
பழைய பதிவர்களூம் பதிவர் சந்திப்பை பற்றி எழுதவில்லை. புதிய பதிவர்களும் எழுதவில்லை. இதற்கு காரணம் இந்த முறை எந்த பிரச்சனையை பற்றியும் பேசாமல் பொதுவாய் புதிய பதிவர்களை வரவேற்று சந்திப்பு நடத்தியதாலா..? அல்லாது நிறைய பேர் உட்கார்ந்து பீச்சில் பேசியது ஒழுங்காய் காதில் விழாததினாலா..? புதிதாய் வந்த ஒரு பதிவர் என்னிடம் சொன்ன விஷயம்.. பதிவர் சந்திப்பு வர்றதுக்கு முன்னாடி எப்படி யாரையும் தெரியாதோ.. அதே நிலைமைதான் வந்த பின்னாடியும் என்றார்.
இனிமேல் நாம் பதிவர் சந்திப்பு நடத்த சில ஆலோசனைகள் பதிவர்களிடமிருந்து சேகரிக்க பட்டது.
1) ஏன் பீச் போன்ற ஓப்பன் இடங்களுக்கு பதிலாய் சின்ன ஹாலில் நடத்த கூடாது..?
2) பழைய, புதிய பதிவர்களுக்குள் ஒரு கலந்துணர்வை, ஏற்படுத்தும் விதமாய் அறிமுக படலம் செய்யக்கூடாது.?
3) ஏன் எல்லா பதிவர் சந்திப்புகளுக்கும் ஒரு பிரச்சனையையோ, அல்லது ஏதாவது ஒரு தலைப்பை முன்னிறுத்தி சந்திப்பை ஏற்படுத்த கூடாது..?
வழக்கமாய் நம் பதிவர் சந்திப்புகள், சிறப்பாய் அமைவது சந்திப்பு முடிந்தவுடன் டீகடையில் நடக்கும் பேச்சுக்களில் தான். இம்முறை புதிதாய் கலந்து கொண்டவர்கள் பல பேர் எழுதாமல் விட்டதற்கு காரணம் கூட என்ன எழுதுவது, யாரை பற்றி எழுதுவது என்பது போன்ற குழப்பங்களினால் கூட இருக்கலாம். இதையே ஒரு ஹாலில் வைத்தால் டீ,காபி எல்லாமே அங்கேயே நடக்கும், பதிவர்கள் கலந்துரையாட வழிவகுக்கும் என்று பலரது எண்ணம். ஹாலுக்கான செலவுகளை நாம் ஒரு சின்ன எண்ட்ரி ஃபீஸ் கலெக்ட் செய்து நடத்தலாமே..?
எழுதிய இரண்டுபதிவில் படஙக்ள் போட்ட பதிவர் என்னை மட்டும் படம் போடாமல் விட்டதற்கு ஏதாவது உள்குத்து, நுண்ணரசியல் இருக்குமோ.. என்று பதிவரசியல் உலகத்தில் பேசி கொள்கிறார்கள். (எப்படியெல்லாம் நம்மள புரொமோட் பண்ணிக்க வேண்டியிருக்கு)
டிஸ்கி
பதிவர் சந்திப்பை பற்றி நான் கூட எழுதவில்லை, ஆணிபுடுங்க நிறைய ஆணியிருப்பதால் நானே மீள்பதிவை நம்பி கடை நடத்தி கொண்டிருக்கிற காரணத்தால் என்னை ஆட்டத்தில் சேர்க்க வேண்டமென கேட்டு கொள்கிறேன்.
உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Post a Comment
38 comments:
சரி இதுக்கெல்லாம் அழுவறதா, விடுங்க அடுத்த முறை பாக்கலாம்.
hi! i'm first.
தலைவா,
பதிவர் சந்திப்பு பற்றி விரிவாக நான் எழுதியிருக்கிறேன். உங்க ஃபோட்டோதான் முதல். படிச்சிட்டு சொல்லுங்க.
ஸ்ரீ....
முதல்படமா என்னையும் படமெடுத்த அண்ணன் ஸ்ரீ.. ஸ்ரீ.. ஸ்ரீ.. ஸ்ரீக்கு நன்றி..
ஹாட் ஸ்பாட்டுக்கு அருகில் இருக்கும் விளம்பரம் பகுதி மிகவும் கிளு கிளுப்பாக இருப்பதால் என்னால் பதிவை படிக்கமுடியவில்லை:)))
பதிவர் சந்திப்பு பற்றி எழுதும் ஆர்வம் ஒரு சில சந்திப்புக்கு பின் குறைந்துவிடுவது இயல்பே!
naan pona sila nerathil santhippu mudinthu vitathu .....
irundhalum athai naan oru thodararga eluthi kondu irukkiren....
"வழக்கமாய் நம் பதிவர் சந்திப்புகள், சிறப்பாய் அமைவது சந்திப்பு முடிந்தவுடன் டீகடையில் நடக்கும் பேச்சுக்களில் தான். இம்முறை புதிதாய் கலந்து கொண்டவர்கள் பல பேர் எழுதாமல் விட்டதற்கு காரணம் கூட என்ன எழுதுவது, யாரை பற்றி எழுதுவது என்பது போன்ற குழப்பங்களினால் கூட இருக்கலாம்"
amanga enakku oru proper intro kidaikka villainga....
வுடுங்க அடுத்த தடவை வீடியோ ஷூட்டே வச்சிடலாம்.
நான் சந்திப்புக்கு வராமலேயே, கற்பனை ப்ணணி
எழுதியிருக்கேனே...!
வந்து பாருங்க தல...
நானும்தெரிந்து பதிவர் சந்திப்பை பற்றி தெரிந்து கொள்ள ஆவலாய் உள்ளேன்.
தல,
அதுல உங்க போட்டோ இல்ல நானும் பார்தேன்..ஆனா அதுக்கு எதுவும் தனிப்பட்ட காரணங்கள் இருக்க வாய்ப்பு இல்லை அப்படிங்கறது என்னுடுய தாழ்மையான கருத்து.
அப்புறம் நீங்க சொன்ன ஐடியா எல்லாம் சூப்பர்.
புது பதிவர்கள் இதே மாதிரி வரப்ப மத்தவங்களுக்கு அறிமுக படுத்தலாம்.
சூப்பர் தல. அருமையான யோசனை.
பட்டி மன்றம் வைக்கலாம்.
தலைப்பு:”சில மொக்கைகள் பதிவாகின்றன.சில
பதிவுகள் மொக்கையாகின்றன”
நல்ல யோசனை அண்ணா..
தலைவரே..அடுத்த பதிவர் சந்திப்பை ஒரு ஓப்பன் டாஸ்மாக்ல வச்சுக்கலாம்னு...
பதிவர் சந்திப்பைப் பற்றிய பதிவு காண எனது வலைக்கு வரவும்!
சங்கர் நாராயணன் சார், கண்டு பிடிச்சிட்டேன் உங்களை... பிளாக் உலகத்தில் நீங்களும் ஒரு ராஜாவா இருக்கீங்க. வாழ்த்துக்கள். அப்படியே என்னையும் கொஞ்சம் 'கைட்' பண்ணுங்க. படம் பண்ணுற முயற்சி என்னாச்சு? நியூ பேஸ் நடிக்கிற படங்கள்தான் ஹிட் ஆகுதே, ட்ரை பண்ணலாமே?
-ஆர்.எஸ்.அந்தணன்
http://www.adikkadi.blogspot.com/
1//சங்கர் நாராயணன் சார், கண்டு பிடிச்சிட்டேன் உங்களை... பிளாக் உலகத்தில் நீங்களும் ஒரு ராஜாவா இருக்கீங்க. வாழ்த்துக்கள். அப்படியே என்னையும் கொஞ்சம் 'கைட்' பண்ணுங்க. படம் பண்ணுற முயற்சி என்னாச்சு? நியூ பேஸ் நடிக்கிற படங்கள்தான் ஹிட் ஆகுதே, ட்ரை பண்ணலாமே?
//
சார் உங்களுக்கு மெயில் அனுப்பியுள்ளேன். உங்கள் வருகைக்கு நன்றி
//பதிவர் சந்திப்பைப் பற்றிய பதிவு காண எனது வலைக்கு வரவும்//
படிச்சிட்டேன் பாஸ்.. பின்னூட்டம் உங்க பதிவில்
//தலைவரே..அடுத்த பதிவர் சந்திப்பை ஒரு ஓப்பன் டாஸ்மாக்ல வச்சுக்கலாம்னு...//
ஐடியா நல்லாருக்கே.. இதைபத்தி ஏன் நாம் ஒரு க்ளோஸ்டு டாஸ்மாக்ல உட்கார்ந்து பேசகூடாது..?
//பட்டி மன்றம் வைக்கலாம்.
தலைப்பு:”சில மொக்கைகள் பதிவாகின்றன.சில
பதிவுகள் மொக்கையாகின்றன//
இந்த பதிவை எந்த வகையினு சொல்றீஙக் ரவிஷங்கர் சார்.
நன்றி அன்பு
//தல,
அதுல உங்க போட்டோ இல்ல நானும் பார்தேன்..ஆனா அதுக்கு எதுவும் தனிப்பட்ட காரணங்கள் இருக்க வாய்ப்பு இல்லை அப்படிங்கறது என்னுடுய தாழ்மையான கருத்து.
அப்புறம் நீங்க சொன்ன ஐடியா எல்லாம் சூப்பர்.
புது பதிவர்கள் இதே மாதிரி வரப்ப மத்தவங்களுக்கு அறிமுக படுத்தலாம்.//
போட்டோ வராதது பத்தி சுமமா கலாய்த்தேன்.. அவ்வளவுதான். வினோத். மிக்க நன்றி
வருகைக்கும், கருத்துக்கும், மிக்க நன்றி, அதிஷா, டக்ளஸ், வித்யா , இனியவன். ஆகியோருக்கு
ஒண்ணுமே புரியல...
கேபிள் அண்ணே, வணக்கம்.
கேபிள் கயிறு இறுக்கறா மாதிரி (யாவரும் நலம் போஸ்டர்ல) என்ன இப்படி இறுக்கிட்டீங்களே... (சும்மா... லுலுலாயிக்குதான்)
மற்றபடி, உங்கள் சந்தேகத்தை தீர்க்க வேண்டியது எனது வேலை.
விரோதி ஆண்டின் (இதுதான் என்) பலன் :
கல கல கல கல
லக லக லக லக-ன்னு பேசும்
ரிஷப ராசி நேயர்களே... (நான்தான்)
பதிவர் சந்திப்பை பற்றி என்னுடன் வந்த பதிவர் ‘தூறல் கவிதை‘ ச.முத்துவேல் எழுதுவதாக கூறியதால் நான் எழுதவில்லை. படத்தில் இருக்கும் சிலரின் பெயர் எனக்கு தெரியாது, எனவே ஒட்டு மொத்தமாக படங்களை மட்டும் பதிவிட்டேன்,
எனக்கு பின்னால நின்னுகிட்டே ரொம்ப நேரம் சீரியசா திரையுலகம் பற்றி பேசிட்டிருந்த கேபிள் அண்ணன என்னால புகைப்படம் எடுக்க முடியல. 55 போட்டோ எடுத்த நான் கேபிள் அண்ணன மட்டும் எடுக்கலையேன்னு வருத்தப்படறேன். அதுக்கு பதிலா கேபிள் அண்ணன் படம் மற்றும் என் படத்தை போட்ட பதிவர் ஸ்ரீ-க்கு நன்றி தெரிவித்து பின்னூட்டம் போட்டிருக்கேன். என் பதிவிலிருக்கும் எனது ஒரு போட்டோவை எடுத்தது அதிஷா.
ஸ்ரீ அவரது பதிவில் நான் நடந்து வரும்போது எடுத்த போட்டோவை அவரது பதிவில் போட்டிருக்கிறார்.
சும்மா கலாய்ப்பதற்காக கேபிள் அண்ணன் கேட்டாலும் பதில் சொல்ல வேண்டியது என் கடமை.
ஆகவே இதனால் சகலருக்கும் அறிவிப்பது என்னவென்றால்,
//எழுதிய இரண்டுபதிவில் படஙக்ள் போட்ட பதிவர் என்னை மட்டும் படம் போடாமல் விட்டதற்கு ஏதாவது உள்குத்து, நுண்ணரசியல் இருக்குமோ.. என்று பதிவரசியல் உலகத்தில் பேசி கொள்கிறார்கள்//
“இதுல உள்குத்து, வெளிக்குத்து, நடுக்குத்து, பின்குத்து, நுண்ணரசியல், பின்னரசியல், நடுஅரசியல், உள்அரசியல், வெளி அரசியல் அப்டியெல்லாம் ஒண்ணும் இல்லீங்கோ....“
பரிகாரம் :
ஓப்பன் டாஸ்மாக்கிலோ... மூடிய டாஸ்மாக்கிலோ (குடிச்சப்பறம் ஓப்பனாவது, மூடுனதாவது) நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ள அடுத்த பதிவர் சந்திப்பில் அண்ணன் கேபிள் சங்கர் அவர்களின் படங்கள் அதிகமாக எடுத்து பதிவிடுகிறேன் என்பதை சொல்லிக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். (சீக்கிரம் ஏற்பாடு பண்ணுங்னா...)
- பொன். வாசுதேவன்
ஒரு பெரிய கவிஞனான D.R.அஷொக்கை அழைக்காது முதல் குற்றம்.
எழுத தூண்டிவிட்டு எனது குட்டி!? கவிதை!?களை படிக்காமல் இருப்பது இரண்டாவது குற்றம்
//ஒரு பெரிய கவிஞனான D.R.அஷொக்கை அழைக்காது முதல் குற்றம்.
எழுத தூண்டிவிட்டு எனது குட்டி!? கவிதை!?களை படிக்காமல் இருப்பது இரண்டாவது குற்றம்//
யாரை பார்த்து சொன்னீங்க.. உஙக்ளை அழைக்கலைன்னு.. எல்லா புது பதிவர்களையும் அழைச்சிருந்தோம். அத விடுங்க.. உஙக் கவிதைகளை பற்றி பின்னூட்டமிட்டிருந்தேனே..?
/
//ஒண்ணுமே புரியல//
:):):) என்னாது பிரியலையா..? அப்பாலிக்கா போன்ல சொல்றேன்.
//சும்மா கலாய்ப்பதற்காக கேபிள் அண்ணன் கேட்டாலும் பதில் சொல்ல வேண்டியது என் கடமை//
நம்ம ஆளுங்க ரொம்ப அநியாயமா எமோஷன் பார்ட்டிங்களா இருக்காங்களே.. லுல்லுலாயிக்குன்னு தெரிஞ்சாலும் ரிப்ளை கொடுக்கிறாங்ய்களே அவரு ரொம்ப தான் நல்லவரு...அவ்வ்வ்வ்வ்வ்வ்
நன்றி மயில்
இதோ தயாராகிக் கொண்டிருக்கிறது...
காலையிலே, இடுகையை இட்டுவிடுகிறேன்.
வந்து பாத்துட்டு உங்க கருத்தையும் சொல்லுங்க.
பதிவர் சந்திப்பு பற்றி எங்கும் அறிவிப்பை இந்த முறை நான் காணவில்லையே... இல்லை காண நான் தவறி விட்டேனா..... நான் படித்து ரசிக்கும் பதிவுகளின் கர்த்தாவை அடுத்த முறையாவது சந்திக்க ஆவல்...
//நுண்ணரசியல் இருக்குமோ...//
நுண்பொருளாதாரம் கேள்விபட்டு இருக்கிறேன்... இது என்ன புது வார்த்தை பிரயோகம்.... சங்கரே உங்கள் பதிவின் மூலம் பல வார்த்தைகளை என்னை கற்க வைத்து கொண்டிருக்கிறீர்கள். :)
காமிக்கியல் & ராணி காமிக்ஸ்
உள்ளேன் ஐயா
தல, தல,
வெளியில வா தல. நம்ம சங்கத்து அபியோட கல்யாணம் நின்னு போச்சு தல.
வந்து என்ன மேட்டருன்னு கேளு தல.
வெங்கட்,
வெடிகுண்டு வெங்கட்.
//உள்ளேன் ஐயா//
அது சரி.. நேத்து ஏன் வரல.. லீவு லெட்டர் கொண்டுவந்தீஙக்ளா..?
arumai
:)
தல
இந்த வாரம் சனி (25-04-2009) சந்திப்பு இருக்கிறது
Post a Comment