உங்கள் மனைவியை புரிந்து கொள்ள, அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள்
மனைவி : நமக்கு வேணும்
அர்த்தம் : எனக்கு வேணும்
மனைவி ; உங்க முடிவு
அர்த்தம் : நான் சொல்றதுதான் கரெக்ட் அதுக்கப்புறம் உங்க இஷ்டம்
மனைவி : உங்களுக்கு என்ன இஷ்டமோ அதை செஞ்சிக்கங்க..
அர்த்தம் : பின்னாடி எப்படியும் என்கிட்டதான் வருவீங்க
மனைவி : தாராளமா.. செய்யுங்க
அர்த்தம் ; எனக்கு இஷ்டமில்லை
மனைவி : எனக்கு ஏதும் வருத்தமில்லை
அர்த்தம் : வருத்த்மாயிருக்கிறேன்
மனைவி : நீங்க ரொம்ப மேன்லியா இருக்கீங்க..
அர்த்தம் : முதல்ல ஷேவ் பண்ணுடா வெண்ணை.
மனைவி : இந்த கிச்சன் ரொம்ப கீக்கிடமாயிருக்கு
அர்த்தம் : வேற வீடு பாக்கணும்
மனைவி : உங்களுக்கு என்னை பிடிக்குமா..?
அர்த்தம் : பெரிசா ஏதோ கேட்க போறேன்
மனைவி : என்னை உங்களுக்கு எவ்வளவு பிடிக்கும்?
அர்த்தம் : உங்களுக்கு பிடிக்காத ஒரு விஷயத்தை செஞ்சிருக்கேன்.
மனைவி : நான் குண்டாயிட்டேனாப்பா?
அர்த்தம் : அப்படியில்லை அழகாயிருகேன்னு சொல்லு
மனைவி : சரி
அர்த்தம் : நோ..
மனைவி : நோ
அர்த்தம் : சரி
மனைவி : உங்களுக்கு புது ரெஸிபில செஞ்ச இந்த டிபன் பிடிச்சிருக்கா?
அர்த்தம் : பழகிக்கங்க
மனைவி ; ஒண்ணுமில்லை
அர்த்தம : நிறைய இருக்கு
மனைவி : நான் அதை பத்தி பேச விரும்பலை
அர்த்தம் : இப்படி ஏத்திவிட்டுத்தான் பேச ஆரம்பிக்கணும்
ஏதோ என்னால முடிஞ்சதை சொல்லியிருக்கேன். உஙக்ளுக்கு தெரிஞ்சதை நீங்களும் சொல்லுங்க..
Post a Comment
56 comments:
இனிமே சொல்ல என்ன இருக்கு???
(நிறைய இருக்கு)
:))
super:))
எல்லாவற்றையும் அதான் நீங்களே புட்டு புட்டு வச்சிட்டீங்களே.
கும்மி அடிங்க. இந்த ரங்கமணிகளே இப்படித்தான்.
::உங்க தங்கச்சிக்கு ஒரு டிரஸ் எடுத்து குடுத்து எவ்வளவு நாளாச்சு,
:::எனக்கு புடவை வேணுண்டா மடையா,
குலதெய்வம் கோவிலுக்கு போகணும்,
( எங்க ஊருக்கு டிக்கெட் வாங்குங்க)
இந்த கம்மல் எண்ணெய் இறங்கின மாதிரி இருக்கு
( புதுசு வாங்கி தாங்க)
இந்த ஷர்ட் நல்லாவே இல்லை
( தொப்பையை குறைடா)
ஆனா உங்களுக்கு ரொம்ப அனுபவம் போல இருக்கு.
மனைவி : நீங்க ரொம்ப மேன்லியா இருக்கீங்க..
அர்த்தம் : முதல்ல ஷேவ் பண்ணுடா வெண்ணை.
சூப்பர் அகராதி.மலிவு விலைப் பதிப்பாக எல்லாக் புது மனைவிமார்களுக்கும் விற்கலாம். அர்த்தம் தெரியாத பதுக் கண்வன்மார்களுக்கு புடவைக் கடை வாசலில் கொடுத்து விட்டுப் போனால், மனைவிகள் வருவதற்குள் அப்ரன்டிஸ் கணவர்கள் இந்த விஷயத்தில் ப்ரமோஷன் அடைவதற்கு ஏதுவாக இருக்கும்.
தங்கமணி :ஏங்க உங்க அப்பா அம்மா நம்ம வீட்டுக்கு வந்து எவ்ளோ நாள் ஆகுது வந்து ஒரு வாரம் இருந்துட்டு போக சொல்லுங்க
(அர்த்தம்) அடுத்த வாரம் எங்க வீட்லேர்ந்து வர்றாங்க
சூப்பர்
அட..என்ன ஒரு Co-Incidence..
நேத்துதான் "உன்னாலே உன்னாலே" படம் DVDல பாத்தேன்..
அண்ணனும் பாத்துருப்பார் போல...
நாங்கள்ளாம் யூத்துமா..
கல்யாணம் ஆனப்பறம் இந்தப் பக்கம் வர்றோம்...
பை..பை..
வீட்ல என்ன ப்ரச்னை சங்கர்ஜி?
:-)))))))))))))))
அசத்தலான பதிவு சங்கர். அடிக்கடி இப்படியும் எழுதுங்க....
யம்மாடியோவ்
இவ்வளௌ இருக்கா
நான் இது தெரியாமா இருந்துட்டனே
தம்பியின் அனுபவம் ரொம்பவே பேசுது இங்கு
Kalakkal..
நான் பார்த்ததிலே இந்த அகராதியைத்தான் நல்ல அகராதி என்பேன். சூப்பர் சங்கர்.
கீப் இட் அப்.
மனைவி ஸ்பெஷலா சமைச்சுகிட்டிருந்தா..என்ன விஸேஷம்னு கேட்டேன்..உங்க சொந்தகாரங்க வர்ராங்க ..அதான்..என்றாள்..வந்தது என் மாமனாரும் ,மாமியாரும்???
இந்த ட்ரெஸ்ல நான் குண்டா இருக்கேனா?
நாம சண்டை போட்டு நாளாச்சு
சொல்றதைக் கேக்கவே மாட்டேங்கிறீங்க
சொல்றதைக் கேக்கவே மாட்டேங்கிறீங்க
எனக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை அண்ணா..
ஆனபின் பார்ப்போம்..
//எனக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை அண்ணா..
ஆனபின் பார்ப்போம்//
புது அகராதி அப்ப உங்களுக்கு பிரசண்ட் பண்றேன்.அன்பு..
//(நிறைய இருக்கு)
:))
//
இதுக்கே எவ்வளவு பயந்து பயந்து எழுத வேண்டியிருக்கு..இல்லண்ணே..
//super:))//
நன்றி இளமாயா..
//எல்லாவற்றையும் அதான் நீங்களே புட்டு புட்டு வச்சிட்டீங்களே.//
நன்றி கும்மாச்சி.. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்
//கும்மி அடிங்க. இந்த ரங்கமணிகளே இப்படித்தான்.//
என்னா ஒரு கோபம்.. தங்கமணிங்களோட பேச்சு ரகசியத்தை சொன்னதுக்கா.. வித்யா.. உங்களுக்கு தெரியாத புது டிரிக்கா..
//::உங்க தங்கச்சிக்கு ஒரு டிரஸ் எடுத்து குடுத்து எவ்வளவு நாளாச்சு,
:::எனக்கு புடவை வேணுண்டா மடையா//
இது கூட நல்லாருக்கு தராசண்ணே..
//குலதெய்வம் கோவிலுக்கு போகணும்,
( எங்க ஊருக்கு டிக்கெட் வாங்குங்க)
இந்த கம்மல் எண்ணெய் இறங்கின மாதிரி இருக்கு
( புதுசு வாங்கி தாங்க)
இந்த ஷர்ட் நல்லாவே இல்லை
( தொப்பையை குறைடா)
//
இதையும் என் அகராதில சேர்த்துக்கிறேன். நன்றி மயில்
//சூப்பர் அகராதி.மலிவு விலைப் பதிப்பாக எல்லாக் புது மனைவிமார்களுக்கும் விற்கலாம். அர்த்தம் தெரியாத பதுக் கண்வன்மார்களுக்கு புடவைக் கடை வாசலில் கொடுத்து விட்டுப் போனால், மனைவிகள் வருவதற்குள் அப்ரன்டிஸ் கணவர்கள் இந்த விஷயத்தில் ப்ரமோஷன் அடைவதற்கு ஏதுவாக இருக்கும்//
இது கூட நல்ல ஐடியாதான். என்ன இந்த புத்தகத்தை ரகசியமா கொடுத்தாதான் நம்மள போல ஆண்களுக்கு உதவியா இருக்கும். இல்லாட்டி அவஙக் படிச்சிட்டு புது அகராதி ரெடி பண்ணிருவாஙக். ம்ஹூம்.. இத கண்டுபிடிக்கிறதுக்கே .....
//தங்கமணி :ஏங்க உங்க அப்பா அம்மா நம்ம வீட்டுக்கு வந்து எவ்ளோ நாள் ஆகுது வந்து ஒரு வாரம் இருந்துட்டு போக சொல்லுங்க
(அர்த்தம்) அடுத்த வாரம் எங்க வீட்லேர்ந்து வர்றாங்க//
அகராதி அடுத்த பதிப்பில் வெளிவரும்
நன்று தஞ்சை ஜெமினி
நன்றி டக்ளஸ், தியாகராஜன். உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்
//அசத்தலான பதிவு சங்கர். அடிக்கடி இப்படியும் எழுதுங்க....
//
நன்றி பரிசல் கண்டிப்பாய் எழுதுகிறேன்.
//தம்பியின் அனுபவம் ரொம்பவே பேசுது இங்கு//
நன்றி மோனிஅம்மா.. உங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்கும்.
மிக்க நன்றி ஆதிமூல கிருஷ்ணன், நைஜீரியா இராகவன்.
//மனைவி ஸ்பெஷலா சமைச்சுகிட்டிருந்தா..என்ன விஸேஷம்னு கேட்டேன்..உங்க சொந்தகாரங்க வர்ராங்க ..அதான்..என்றாள்..வந்தது என் மாமனாரும் ,மாமியாரும்???
//
இது சூப்பர்... தண்டோரா..
//இந்த ட்ரெஸ்ல நான் குண்டா இருக்கேனா?
நாம சண்டை போட்டு நாளாச்சு
சொல்றதைக் கேக்கவே மாட்டேங்கிறீங்க
சொல்றதைக் கேக்கவே மாட்டேங்கிறீங்க//
:):):):)
ஒரு அகராதி பார்சேல்ல்ல்ல்ல்ல்....
(ஃப்யூச்ச்ர்ல வரப்போறவர்க்கு இப்போவே புக் பண்ணிக்கறேன்...அப்போ நான் பேசறது புரியாம கஷ்டப்பட(டுத்த)மாட்டார் இல்ல):-))
எனக்கும் ஒரு அகராதி பார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்சல்!!
மெய்யாலுமேவா..? நம்ம பிரண்டெல்லாம் இந்த காலத்து பொண்ணுங்க ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லவங்கன்னு சொல்றானுவ..?
-- ஒரு கல்யாணமாகாத சந்தோஷமான இளைஞன் ( ஹி ஹி ஹி ஹி ஹி)
அண்ணே நீங்க எங்கியோ போய்ட்டீங்க.................
பெரியவங்க பெரியவங்கதான்..................
தல
க்ளிக்கினால் (கிள்ளினால் இல்ல) பெரிசாவுராமாதிரி படம் போடுங்க (hot spot)
என்றும் அன்புடன்
ஸ்ரீராம் Boston USA
LOL!!!
anbudan aruna
sankar
mmmmmm
nadakkattum
நான் கல்யானம் செஞ்சாதானே..
:-))
ரொம்ப அனுபவித்து எழுதிருக்கிங்க போல.அனுபவம் பேசுது.
வயசானவங்களுக்காக இந்த பதிவா? :-)) நடத்துங்க நடத்துங்க......
நெத்தியடி தான் ....ஆனா ...... உங்கவீட்டு கதையை இப்படி புட்டு புட்டு வைபேஹ என்று அவங்க எதிர் பார்த்து இருக்க மாட்டங்க .வீட்ல தெரியுமா ?
நெத்தியடி தான் ....ஆனா ...... உங்கவீட்டு கதையை இப்படி புட்டு புட்டு வைபேஹ என்று அவங்க எதிர் பார்த்து இருக்க மாட்டங்க .வீட்ல தெரியுமா ?
வீட்ல சொல்லிட்டுதானே எழுதினேன்.. நன்றி ஜாஸ், மலர். உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்
//ரொம்ப அனுபவித்து எழுதிருக்கிங்க போல.அனுபவம் பேசுது.//
நன்றி மேனகாசதியா
நன்றி தேவக்கோட்டை ஹக்கீம்
நன்றி விபூஷ், கார்த்திக், டி.வி.ராதாகிருஷ்ணன் சார். உஙக்ள் வருகைக்கும் கருத்துக்கும்>>
நன்றி அன்புடன் அருணா.. இது உங்க முதல் வருகையோ..?
Nice one.
I shared this with my thangamani. She said it is 50% true. It means, it is very close.
//Nice one.
I shared this with my thangamani. She said it is 50% true. It means, it is very close//
மிக்க நன்றி பிஜி..
நான் பேச்சுலர், ஒ காட், மனைவியெல்லாம் டென்ஷ்ன்ஸ் ஆப் இந்தியா
//நான் பேச்சுலர், ஒ காட், மனைவியெல்லாம் டென்ஷ்ன்ஸ் ஆப் இந்தியா//
:) இதுக்கெல்லாம் பயந்தா முடியும.. அக்னி..
Post a Comment