\படத்தின் பூஜையின் போது வெளியிட்ட டிசைன் கண்டிப்பாய் வித்யாசமாய் ஒரு படமாய் இருக்கும் என்று கட்டியம் கூறியது. அதன் பிறகு படத்தின் போஸ்டர் டிசைன் மேலும் வா,, வா… என்று அழைக்க, தியேட்டரில் நான்.
கார்த்திக்கும் அனிதாவும் எதிர் எதிர் வீட்டில் வசிப்பவர்கள், சிறு வயதிலிருந்தே சேர்ந்தே எலியும் பூனையுமாய் இருப்பவர்கள். கார்த்திகின் அப்பா கோட்டா சீனிவாசராவ் எதிர்வீட்டு அனிதாவின் அம்மாவை தங்கையாய் பாவிக்க, இருவர் குடும்பமும் உறவு முறை சொல்லி அழைக்கும் அளவுக்கு ஒற்றுமையான குடும்பம்.
கார்த்திக் அனிதா இருவருக்கும் இடையே நடக்கும் போட்டி சண்டைகளில், ஒருவரை ஒருவர் வாரி விட்டு கொண்டிருக்க, ஒரு நிலையில் அனிதாவால் கார்த்திக் காலேஜில் ச்ஸ்பெண்ட் செய்யப்படுகிறான். இந்த இடைப்பட்ட நிலையில் அனிதாவுக்கு கார்த்திக்கின் மேல் காதல் வர, கார்த்திக் அவளை காதலித்தானா.. அனிதாவுக்கு நிச்சயத்த திருமணம் நடந்ததா.? கார்த்திக்கின் அப்பா ஏன் திடீரென்று இற்ந்து போனார் என்பதை வெள்ளிதிரையில் காண்க.
கார்த்திக்காக வரும் ரத்தன் நல்ல எதிர்காலம் இருக்கிறது. ஆனந்த தாண்டவம் சித்தார்த்தைவிட நன்றாகவே எக்ஸ்பிரஷ் செய்கிறார். அனிதாவாக மஞ்சு கேரள வரவு. பக்கத்து வீட்டு பெண்ணை போல இருக்கிறார். கொஞ்சம் நடிக்கவும் முயற்சி செய்கிறார்.
கார்த்திக்கின் அப்பாவாக வரும் கோட்டாவின் நடிப்பு ஆர்பாட்டமில்லாதது. அதே போல் ராஜன் பி.தேவின் நடிப்பும் மிகையில்லாதது.
கார்த்திக் தன் அப்பாவுக்கு பதிலாய் காலனி லூசு மனோகரை காலேஜுக்கு அழைத்து சென்று, அடிக்கும் லூட்டி நிஜமாகவே ரசிக்கலாம். மற்றபடி திரும்ப, திரும்ப இவர்கள் இருவருக்கும் நடக்கும் போட்டியில் மாற்றி, மாற்றி போட்டு கொடுப்பதையே எவ்வளவு நேரம்தான் காட்டுவார்கள்.
புதிய இசையமைப்பாள்ரின் ஜாக் ஆனந்தின் இசை ஸோ..ஸோ.. கேமரா பல இடங்க்ளில் அவுட் ஆப் போகஸாய் இருக்கிறது.
புதிய இயக்குனர் ஸ்ரீ ஹரியின் திரைக்கதை ஏற்கனவே பிரியாத வரம் வேண்டும் படத்தை நினைவூட்டுகிறது. ஸ்டில் செஷனுக்கும், போஸ்டர் டிசைனுக்கு மெனக்கெட்டிருந்ததை, திரைக்கதையிலாவது கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம்.
மொத்ததில் கார்த்திக் – அனிதா –உலக் தொலைக்காட்சிகளில் விரைவில்
உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Post a Comment
26 comments:
கதை ஏற்கனவே அஜித் - ஜோதிகா, சிவ குமார், சாயாஜி சிண்டே நடித்து எழில் இயக்கத்தில் வந்த ... படம் பேரு மறந்துட்டு.
மாதிரி இருக்கே
பூவெல்லாம் உன் வாசம்.. இது போல பல படங்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று வந்திருக்கிறது.
present sir
//present sir
//
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் நைனா..
விமர்சனம் படிக்க வந்தா, படத்தோட ஸ்டில்ஸ போட்டு ஒப்பேத்துறீங்களா?
இனிமே இப்புடி நடந்துச்சு அவ்ளோதான் சொல்லிப்புட்டேன்...ஆமா!
தமிழ் புத்தாண்டு நல்வழ்த்துக்கள் அண்ணே...!
//விமர்சனம் படிக்க வந்தா, படத்தோட ஸ்டில்ஸ போட்டு ஒப்பேத்துறீங்களா?
இனிமே இப்புடி நடந்துச்சு அவ்ளோதான் சொல்லிப்புட்டேன்...ஆமா!
தமிழ் புத்தாண்டு நல்வழ்த்துக்கள் அண்ணே...!
//
எழுதறதுக்கு வேற ஒண்ணுமில்ல.. அதனாலதான் இவ்வளவு போட்டோ.. மிக்க நன்றி டக்ளஸ்.. உங்களுக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
விமர்சனத்துக்கு நன்றி... உங்கள் விமர்சன பதிவுகளால் தண்டத்திற்கு நான் அடாசு படங்களிற்கு செலவு செய்யும் பணமும் நேரமும் மிச்சம். எப்படி அண்ணே எல்லா கொடுமையையும் சலிக்காம பாக்கறீங்க..
தல நல்ல விமர்சனம்...
ரசிகர்கள் வேண்டுகோளுக்கு இனங்கி hotspot டை பெரியதாக மற்றிய உங்கள் பெரிய மனதிற்கு பாராட்டுகள்.
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
(thanks for changing the commentmoderation.. now only I can easily post)
தமிழ் புத்தாண்டு தின நல்வாழ்த்துக்கள்!
எப்படியோ மொக்க படத்திலுருந்து என்னைய காப்பத்திட்டீங்க!
தொடர்ந்து கலக்கறீங்க சாரே
அடிக்க்கடி டெம்ப்ளேட் மாத்துறீங்க. சூப்பர்.
தமிழிஷ் ல ஓட்டும் போட்டுட்டேன்.
தமிழ்மணத்துலயும்தான்
//அதன் பிறகு படத்தின் போஸ்டர் டிசைன் மேலும் வா,, வா… என்று அழைக்க, தியேட்டரில் நான்//
யாராவது வா,வா ன்னு கூப்பிட்டா உடனே போயிர்றதா???
பாத்து சூதனமா இருங்கப்பு,
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
உங்களுக்கும் வாழ்த்துக்கள்.
நம் நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
தலைவா, படம் பாக்க சம்பளம் தர்றாங்களா?
அண்ணே சித்திரை திங்கள் முதல் நாள் வாழ்த்துக்கள் .........
//அண்ணே சித்திரை திங்கள் முதல் நாள் வாழ்த்துக்கள் .........//
அத்திரி உங்களுக்கு தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
//தலைவா, படம் பாக்க சம்பளம் தர்றாங்களா?
//
இப்படி பட்ட படத்தை பார்க்கும் போது யாராவது சம்பளம் கொடுத்தா நல்லாத்தான் இருக்கும். பப்பு.. தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
கொஞ்சம் போல் பார்க்கலாம் போல் உள்ளது
வாழ்த்துக்கு நன்றி நைனா..
//எப்படி அண்ணே எல்லா கொடுமையையும் சலிக்காம பாக்கறீங்க..
//
படம் பார்த்து விமர்சனம் எழுதலைன்னா போன் பண்ணி மிரட்டுறாஙக்ண்ணே.. :(:(
நன்றி அசோக்.. தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கும் ஓட்டுக்கும் மிக்க நன்றி தமிழ் நெஞ்சம்..
தராசு
ஷங்கர்
//கொஞ்சம் போல் பார்க்கலாம் போல் உள்ளது
//
விதி வலியது.
நல்லா விமர்சனம் செய்றீங்க,எனக்கு பணம் மிச்சமாச்சு!!கொஞ்சம் க்ளைமேக்ஸையும் சொல்லிருக்கலாமே.....
//நல்லா விமர்சனம் செய்றீங்க,எனக்கு பணம் மிச்சமாச்சு!!கொஞ்சம் க்ளைமேக்ஸையும் சொல்லிருக்கலாமே.....
//
அது நான் செய்யும் தொழிலுக்கு துரோகமாகிவிடும் அதனால் தான் சொல்லமாட்டேன். மேடம்.
//மற்றபடி திரும்ப, திரும்ப இவர்கள் இருவருக்கும் நடக்கும் போட்டியில் மாற்றி, மாற்றி போட்டு கொடுப்பதையே எவ்வளவு நேரம்தான் காட்டுவார்கள்.//
சிவா மனசுல சக்தி இப்டி தான் சொதப்பி இருந்தாங்க. கோவியார் சொன்ன மாதிரி ”பூவெல்லாம் உன் வாசம்” வாசம் வீசும் போல.
Post a Comment