Thottal Thodarum

Apr 23, 2009

போர் நிறுத்தம் அறிவிப்பு

25/04/09 பதிவர் சந்திப்பு அனைவரும் கலந்து கொள்ளுங்கள்


ஈழத்தில் போர் நிறுத்தம் அறிவிக்கபட்டுவிட்டது. தமிழன தலைவர் கலைஞர், தமிழனத்தின் ஒரே காவலர், கடந்த 50 வருடமாய் ஈழத்தமிழர்களை கட்டி காப்பாற்றிவரும் ஒரே தமிழர் தலைவர் எடுத்த கடைசி ஆயுதமான வேலை நிறுத்ததை பார்த்து ஸ்தம்பித்து போனது இலங்கை அரசு.

ஆளாளுக்கு தன்னை தூக்கி போட்டு இலங்கை பிரச்சனையில் பந்தாடுவதை தவிர்க்கவும், தான் தான் இன்னமும் தமிழன் காவலர் தான் என்பதை நிருபிக்க,  அரசு வேலை நிறுத்தம் செய்யவில்லை..? திமுக கட்சி வேலைநிறுத்தத்தை அறிவித்து, மாபெரும் வெற்றி அடைந்த போராட்டம் என்று மார் தட்டி கொள்கிறது சன்னும், கலைஞரும். இம் மாதிரி எதையாவது அறிவித்து மாட்டி கொள்வார் என்றுதான்  மற்ற கட்சிகளும் எதிர்பார்த்தது.

இந்த வேலை நிறுத்தத்தை கொண்டாடும் வகையில் டாஸ்மாக் கடைகள் திறந்திருக்க, உணவகள் எல்லாம் மூடி கிடக்க, ஏதோ ஒரே ஒரு கடை திறந்திருக்க, அதையும் மூடும் படி போலீஸார் சொல்லி மூட வைத்து விட்டார்கள்.

நன்றாக சரக்கடித்துவிட்டு சன் டிவியில் திருடா திருடி, சரவணாவையும்,  கலைஞர டிவியில் முரட்டுகாளையும், வெள்ளித்திரையும்,  பார்த்து மக்கள் எல்லோரும் இலங்கை தமிழர்களின் அவல நிலையை எதிர்த்து இரண்டு சேனல்களீலும் படம் பார்த்தே தங்கள் எதிர்ப்பை உலகிற்க்கு உணர்ந்த,

இவையனைத்தையும் வெளிப்படுத்த வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த தமிழின காவலர், உலக தமிழ் மக்களின் காவலர், டாக்டர் கலைஞர் அவர்களின் தலைமையில் நடந்த வேலை நிறுத்தத்தை கண்டு, பயந்து , அதிர்ந்துபோன ராஜபக்சே அரசு அரண்டு போய் ராவோடு ராவாய் போர் முனையிலிருந்து தஙக்ள் படைகளை வாபஸ் வாங்கிக் கொண்டும் தனி ஈழம் கொடுக்க சம்மதித்து விட்டதாகவும் தெரிகிறது.



தமிழ்சினிமாவின் 90 நாட்களை படிக்க இங்கே அழுத்தவும்

உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..


Post a Comment

39 comments:

SAII said...

WELL SAID.RAJAPAKSE IS BETTER COMPARED TO TAMILINNA TALAIVA? KALAIGNR

Anonymous said...

RAJABAKSE ENEMY/// BUT KARUNANIDHI?????

RJ Dyena said...

nambave mudiyallanga....

பீர் | Peer said...

இந்த படம் எந்த தியேட்டர்லண்ணே ஓடுது???

அக்னி பார்வை said...

வெற்றி.. வெற்றி

இராகவன் நைஜிரியா said...

தமிழனின் நிலையை நினைத்து வேதனைப் படுவதை தவிர வேறு வழியே கிடையாது.

எதை மூடினாலும், சாரயக் கடைகளை மூடாத அரசு, அன்றும் வருமானம் பார்க்கத்துடிக்கும் அரசு..

தமிழனுக்கு இதைவிட அவமானம் வேறு ஒன்றுமில்லை..

sathiri said...

உங்களிற்கு ஒருநாள் லீவு தந்து படம்வேறை காட்டியிருக்காங்க சந்தோசப்படுவியளா.. இதைவிட தமிழனிற்கு என்னவேணும்????

சிவக்குமரன் said...

ஆனாலும் இவ்ளோ குசும்பு(கோவமோ) ஆவாது!

Venkatesh Kumaravel said...

வெட்கப்படவேண்டிய தருணம். விழலுக்கிறைத்த நீர். நாமெல்லாம் பேசத்தானா லாயக்கு?

Jackiesekar said...

யோவ் இந்த நக்கல்தானே வேனாங்கிறது அவன் அவனும் எரியற கொள்ளியில எண்ணெய் ஊத்துவானுங்க நீ பீர் இல்ல ஊத்தற

Cable சங்கர் said...

வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி சாய்

Cable சங்கர் said...

//nambave mudiyallanga....

//

இன்னும் கூட சின்னபுள்ளையாவே இருக்கீங்களே டயானா..

Cable சங்கர் said...

//இந்த படம் எந்த தியேட்டர்லண்ணே ஓடுது???//

நம்ம ஊர்ல் தான் பீர்

Cable சங்கர் said...

//வெற்றி.. வெற்றி

//

வெற்றி கொண்டாட்டத்தை எங்க வச்சுப்போம்.. அக்னி பார்வை?

Cable சங்கர் said...

//எதை மூடினாலும், சாரயக் கடைகளை மூடாத அரசு, அன்றும் வருமானம் பார்க்கத்துடிக்கும் அரசு..//

அட நீங்க வேற அரசுக்கு வருமானம் வர்றதே அது ஒண்ணுதான் அதையும் மூடிட்டா இலவச டீவீ, கியாஸ் எல்லாத்தையும் யார் கொடுக்கிறது.

Cable சங்கர் said...

//உங்களிற்கு ஒருநாள் லீவு தந்து படம்வேறை காட்டியிருக்காங்க சந்தோசப்படுவியளா.. இதைவிட தமிழனிற்கு என்னவேணும்????

//

அதானே சாத்திரி.. முதல் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி..

Cable சங்கர் said...

//ஆனாலும் இவ்ளோ குசும்பு(கோவமோ) ஆவாது!

//

குசும்போ.. கோவமோ இல்லைன்ணே.. ஆதங்கம்.. சிவக்குமாரன்.

Cable சங்கர் said...

// நாமெல்லாம் பேசத்தானா லாயக்கு?
//

:(

Cable சங்கர் said...

//யோவ் இந்த நக்கல்தானே வேனாங்கிறது அவன் அவனும் எரியற கொள்ளியில எண்ணெய் ஊத்துவானுங்க நீ பீர் இல்ல ஊத்தற

//

ஏதோ நம்மாள முடிஞ்சது சேகர் சார்...

பீர் | Peer said...

//Cable Sankar said...
நம்ம ஊர்ல் தான் பீர்//

நம்ம ஊர் பக்கம் எப்பவாவது எட்டி பாக்கரீங்களா?

Cable சங்கர் said...

//நம்ம ஊர் பக்கம் எப்பவாவது எட்டி பாக்கரீங்களா?
//

உங்க சந்தைபடுத்துதல் பதிவை என்னுடய் பதிவில் லிங்க் கொடுக்கணும்னு நினைச்சிட்டிருக்கேன். அருமையான பதிவு பீர்.. ரொமப் நேரம் சிரித்து கொண்டிருந்தேன்.

தராசு said...

இறைவா,

எங்களை எங்கள் தமிழ் தலைவர்களிடமிருந்து காப்பாற்று,
எங்கள் எதிரிகளை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்.

Anonymous said...

online 15

:):):)

Raju said...

ஆமாங்க!
தமிழ் நாட்டுல நடந்த பந்த பாத்து பாகிஸ்தானும் ஒசாமாவ ஒபாமாக்கிட்ட ஒப்படைச்சுட்டாங்களாம்..!
இஸ்ரேல் பால்ஸ்தீனம் பிரச்சனையும் முடிவுக்கு வந்துருச்சு..!
கர்நாடக‌த்தில் இருந்து காவிரி வந்துருச்சு..!
கேரளா வேற முல்லை பெரியாறை விட்டுக் கொடுக்கப் போவுதாம்..!
ஒபாமாவத் தூக்கிட்டு கலைஞரை அங்க ஒக்கார வைக்க ஐ. நா. கடும் முயற்சி மேற்கொண்டுள்ளதாம்..!
இவை அனைத்திற்கும் காரணமான கலஞரையும் அவரது குடும்பத்தையும் நாம் வாழ்த்துவீமாக..!

கண்ணா.. said...

// நன்றாக சரக்கடித்துவிட்டு சன் டிவியில் திருடா திருடி, சரவணாவையும், கலைஞர டிவியில் முரட்டுகாளையும், வெள்ளித்திரையும், பார்த்து மக்கள் எல்லோரும் இலங்கை தமிழர்களின் அவல நிலையை எதிர்த்து இரண்டு சேனல்களீலும் படம் பார்த்தே தங்கள் எதிர்ப்பை உலகிற்க்கு உணர்ந்த,

இவையனைத்தையும் வெளிப்படுத்த வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த தமிழின காவலர், உலக தமிழ் மக்களின் காவலர், டாக்டர் கலைஞர் அவர்களின் தலைமையில் நடந்த வேலை நிறுத்தத்தை கண்டு, பயந்து , அதிர்ந்துபோன ராஜபக்சே அரசு அரண்டு போய் ராவோடு ராவாய் போர் முனையிலிருந்து தஙக்ள் படைகளை வாபஸ் வாங்கிக் கொண்டும் தனி ஈழம் கொடுக்க சம்மதித்து விட்டதாகவும் தெரிகிறது.

//


:))))))))))

K.S.Muthubalakrishnan said...

வெட்கப்படவேண்டிய தருணம்

க.பாலாசி said...

இந்திராகாந்தியை கொன்றதற்காக சீக்கிய இனத்திற்கு எதிராக அடக்குமுறையை கையாண்ட அதே அரசு தான் இப்போதும், ராஜீவ்காந்தியை கொன்ற காரணத்திற்காக ஒட்டுமொத்த தமிழ் இனத்தையே அழிக்கிறது. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு காரணம். ஆனால் அழிவது என்னமோ நம் சகோதரர்கள்தான்.

க.பாலாசி said...

இந்திராகாந்தியை கொன்றதற்காக சீக்கிய இனத்திற்கு எதிராக அடக்குமுறையை கையாண்ட அதே அரசு தான் இப்போதும், ராஜீவ்காந்தியை கொன்ற காரணத்திற்காக ஒட்டுமொத்த தமிழ் இனத்தையே அழிக்கிறது. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு காரணம். ஆனால் அழிவது என்னமோ நம் சகோதரர்கள்தான்.

ஷண்முகப்ரியன் said...

காலையில் இருந்து கமன்ட் போட முயன்று கரன்ட் இப்போதுதான் வந்தது,ஷங்கர்.கண்ணெதிரே எத்தனை கொடுமைகள்!
முதியவர்களிடமிருந்து நாட்டைக் காப்பாற்றி தென் சென்னை வேட்பாளரான சரத்பாபு போன்ற படித்த இளைஞர்களிடம் நாட்டை ஒப்படைத்தால்...கனவு பலிக்குமா,ஷங்கர்?

Sanjai Gandhi said...

//இந்த வேலை நிறுத்தத்தை கொண்டாடும் வகையில் டாஸ்மாக் கடைகள் திறந்திருக்க, உணவகள் எல்லாம் மூடி கிடக்க, ஏதோ ஒரே ஒரு கடை திறந்திருக்க, அதையும் மூடும் படி போலீஸார் சொல்லி மூட வைத்து விட்டார்கள்.//

அவங்க ஊட்ல ஊட்டம்மணிக்கு வக்கனையா ஆக்கி வச்சிருப்பங்க இல்ல.. அடுத்தவனை பத்தி என்ன கவலை.. டாஸ்மாக்ல குடிச்சிட்டு ஊட்ல போய் கறிவிருந்து திண்ணிருப்பாங்க போல்ஸ்காரங்க. இந்த மாதிரி நேரங்கள்ல பேச்சிலருங்க பாடு தான் பாவம். பந்த நடத்தறவ்ங்களை காலணியால அடிக்கனும்.

//நன்றாக சரக்கடித்துவிட்டு சன் டிவியில் திருடா திருடி, சரவணாவையும், கலைஞர டிவியில் முரட்டுகாளையும், வெள்ளித்திரையும், பார்த்து மக்கள் எல்லோரும் இலங்கை தமிழர்களின் அவல நிலையை எதிர்த்து இரண்டு சேனல்களீலும் படம் பார்த்தே தங்கள் எதிர்ப்பை உலகிற்க்கு உணர்ந்த,//

அரசியல்வாதி கருணாநிதி பந்த் நடத்திவிட்டார்.

டிவி அதிபர் கருணாநிதி அதை வைத்து போணி பண்ணிட்டார்.

shortfilmindia.com said...

//அரசியல்வாதி கருணாநிதி பந்த் நடத்திவிட்டார்.

டிவி அதிபர் கருணாநிதி அதை வைத்து போணி பண்ணிட்டார்.
//

சரியா சொன்னீங்க.. சஞ்சய்

shortfilmindia.com said...

//இந்திராகாந்தியை கொன்றதற்காக சீக்கிய இனத்திற்கு எதிராக அடக்குமுறையை கையாண்ட அதே அரசு தான் இப்போதும், ராஜீவ்காந்தியை கொன்ற காரணத்திற்காக ஒட்டுமொத்த தமிழ் இனத்தையே அழிக்கிறது. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு காரணம். ஆனால் அழிவது என்னமோ நம் சகோதரர்கள்தான்//

நீங்கள் சொல்வது சரிதான் சிந்தனை செய்.. மிக்க நன்றி உங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்கும்.

shortfilmindia.com said...

//இறைவா,

எங்களை எங்கள் தமிழ் தலைவர்களிடமிருந்து காப்பாற்று,
எங்கள் எதிரிகளை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்.

//
:)

அத்திரி said...

அண்ணே நல்லாவே கலக்கியிருக்கீங்க................

Rafiq Raja said...

தமிழின தலைவர்கள் என்று கூறி கொண்டு, காசு பார்க்கும் டாஸ்மாக் டிவி அதிபர்களுக்கு சரியான செருப்படி....

அரசியல்வியாதிகள் எப்போது தான் நம்மை விட்டு ஒழியுமோ....

கலக்கிட்டீங்க சங்கர்... பாராட்டுகள்.

காமிக்கியல் & ராணி காமிக்ஸ்

Sukumar said...

தல.... நாம என்ன காட்டு கத்து கத்தினாலும் இவிங்களுக்கு ஒன்னும் வெளங்காது. பொது வேலை நிறுத்தத்தில் கலைஞர் டிவி யை மூடல பாத்தீங்களா....

அப்புறம் பதிவர் சந்திப்பு எங்கேனு சொல்லுங்க பாஸ் .. நாங்கெல்லாம் வரலாமா....

Cable சங்கர் said...

//அப்புறம் பதிவர் சந்திப்பு எங்கேனு சொல்லுங்க பாஸ் .. நாங்கெல்லாம் வரலாமா....
//

என்ன இப்படி கேட்டுட்டீங்க சுகுமார். கண்டிப்பாக நீங்கள் எல்லாம் வரவேண்டும்..

வருகிற சனிக்கிழமை 25ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை பின்புறம் சந்திப்பு நடைபெறுகிறது. அனைவரும் வருக..


உங்கள் வரவை ஆவலுடன் எதிர்பார்க்கும் உங்கள் நண்பன்.. கேபிள் சங்கர்.

Cable சங்கர் said...

வருகைக்கும், பாராட்டுக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி அத்திரி, காமிக்காலஜி..

Anonymous said...

என்னா ஒரு தீர்க்க தரிசனம்.. ஆனாலும் நீங்க ரொம்ப பெரிய ஆளுங்க..