சந்தோஷம் பொங்குதே..

இன்றைய தினம் மிக சந்தோஷமாய் பிறந்திருக்கிறது.  நேற்று படுக்க போகும் போதிருந்த முதுகுவலி காலையில் லேசாக குறைந்ததினாலா?  காலையில் எல்லாம் நல்ல படியாய் நடந்ததினாலா?  ரொம்ப நாளாய் வர வேண்டிய பணம் திரும்ப வந்ததினாலா? இல்லை ஆஸ்கர் ரவிசந்திரன் நம்மளை புக் செய்யிற மாதிரி கனவு கண்டதாலா?  என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும்.

காலையில் நம்ம பக்கத்தை திறந்து பார்த்ததும் நம்ம பாலோ செய்பவர்களின் எண்ணிக்கை 150ஐ கடந்திருந்த்து. ஒரு வாரமாய் செஞ்சுரிக்கு முன் தடுமாறும் டெண்டுல்கர் போல 140க்கு அப்புறம் தடுமாறிக் கொண்டிருந்தது தடாலென்று 154 அகி விட்டது. அதுவும் என் சந்தோஷத்திற்கு காரணம். என்னை தொடர்பவர்களுக்கெல்லாம் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். ஏதோ நானும் எழுதுகிறேன் பேர்விழி என்று கடந்த எட்டு மாத காலமாய் தொடந்து எழுதிவருகிறேன்..( அப்படி என்ன எழுதி கிழிச்சிட்டேன்னு… என்பது போன்ற குரல்கள் கேட்கிறது) என்னையும் ஒரு மனுஷனாய் மதித்து தொடர்ந்து ஆதரவு தந்து கொண்டிருக்கும் உங்களுக்கு என் நன்றி மீண்டும் உரித்தாகுக..

சந்தோஷம்னா நம்ம சந்தோஷம் மட்டும்தானா.? நம் நண்பர்களின் சந்தோஷம் கூட நம் சந்தோஷம்தானே..?  நம்ம லக்கிலுக் என்கிற யுவகிருஷ்ணாவின் சிறுகதை விக்டனில் வெளிவந்திருக்கிறது. நம் சக பதிவர் எம்.எம்.அப்துல்லா திரைப்படத்தில் பாடியிருப்பது குறித்து ஆதியின் பதிவில் சொல்லியிருந்த்து. மேலும் சில பதிவர்களின் எழுத்துக்கள் ப்ரிண்ட் மீடியாவில் வெளிவர இருப்பதாய் அவர் கிசுகிசுத்திருப்பதும் என் இன்றைய சந்தோஷத்திற்கான காரணங்கள் என்றால் அது மிகையாகாது.

(பதிவெழுத விஷயம் கிடைக்கலைன்றதுக்காக இப்படி மொக்கை போட்டு நம்ம சந்தோஷத்தை கெடுக்கிறானே? என்று புலம்பும் நண்பர்களுக்கு. ஹீ.ஹி. சாரி)

தொடர் ஆதரவுக்கு.. நன்றி. நன்றி.. நன்றி. உஙக்ள் பொன்னான வாக்குகளை தமிழ்மணத்திலும். தமிலிஷிலும் போட்டு என்னை வெற்றி பெற செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன். ( ஒண்ணுமில்ல.. தேர்தல் எபெக்ட்)



Blogger Tips -பெ’ண்’களூரை படிக்க இங்கே அழுத்தவும்

உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

Comments

வாழ்த்துகள் பாஸ்:)
உங்கள் சந்தோஷம் நீடிக்க வாழ்த்துகள்,ஷங்கர்.
தராசு said…
150 ங்கறது வளர்ந்துட்டே போகணும்னு வாழ்த்துகிறேன் தல.
வாழ்த்துக்கள் தல!
விரைவில் 500-ஐ தொட!
Raju said…
தல..அடிச்சு ஆடுங்க தல..!
150 க்கு அப்பறம் ஏகப்பட்ட ஜீரோ ஏறனும்னு வாழ்த்துக்கள் பாஸு..!
உங்கள் பதிவுகளை தொடர்ந்து படிப்பதுண்டு. வாழ்த்துக்கள்
வணக்கம் சார். நானும் ஒரு பிளாக் ஆரம்பிக்கணும் என்கிற எண்ணம் எனக்கு உண்டானதுக்கு முதல் காரணம் உங்க பிளாக்தான். நான் முதலில் படித்த பிளாக்கும் உங்களுடையதுதான். நான் இதுவரையில் பின்தொடருவதும் உங்களுடையதுதான். சரியாக ஒரு 6 மாதகாலமாக படிக்கிறேன். பிடிக்கிறதோ இல்லையோ.ஆனா கண்டிப்பா படிக்கிறேன். சமீப காலமாகத்தான் விமர்சனமும் செய்கிறேன். உங்களோடத படிக்கணும் எண்ணம் மட்டும் அப்படியே இருக்கு. நானும் ஒரு பிளாக்கை ஆரம்பிக்கனும்னு நெனச்சு ஆரம்பிச்சுட்டேன். ஆனா தொடர முடியல. அலுவலக பணிச்சுமை அதிகமா இருக்கரதால. அப்பப்ப இடைவெளி கிடைக்கறப்ப விமர்சனம் செய்வேன். இதுவரையில் ஒரு பிளாக்கை வெற்றிகரமா நடத்துறீங்கண்ணா அது பெரிய வெற்றிதான் சார். வாழ்த்துக்கள் சார். வேலை இருக்கிறது. பிறகு பேசலாம்.
அண்ணாத்தே ரெண்டு நாள் முன்னதான் நான் உங்க பாலோயர் ஆனேன்...!
Ganesan said…
போட்டாச்சு போட்டாச்சு 155 வது ஆளா பின் தொடர என்னையும் போட்டாச்சு.

சந்தோசம் தானே
Ganesan said…
போட்டாச்சு போட்டாச்சு 155 வது ஆளா பின் தொடர என்னையும் போட்டாச்சு.

சந்தோசம் தானே
தல நீங்க 150 அடிக்க வேண்டிய இடம் இதுவல்ல..

நீங்க ஆட வேண்டிய கிரவுன்ட் வேற
Anbu said…
வாழ்த்துகள் பாஸ்:)
//. உஙக்ள் பொன்னான வாக்குகளை தமிழ்மணத்திலும். தமிலிஷிலும் போட்டு என்னை வெற்றி பெற செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன். ( ஒண்ணுமில்ல.. தேர்தல் எபெக்ட்) //


சிரிச்சிக்கிட்டே இருக்கேன்.

:)))))
//நானும் ஒரு பிளாக்கை ஆரம்பிக்கனும்னு நெனச்சு ஆரம்பிச்சுட்டேன். ஆனா தொடர முடியல.//

சிந்தனை செய்-ன்னு பேர் வெச்சுகிட்டா இப்படித்தான். பேரை மாத்துங்க..
///இல்லை ஆஸ்கர் ரவிசந்திரன் நம்மளை புக் செய்யிற மாதிரி கனவு கண்டதாலா? ///

இது நிஜமாகவும் நடக்கும், மற்றபடி வாழ்த்துக்கள்.. உண்க்களுக்கும் இந்த பதிவில் நீங்கள் கூறியிருக்கம் மற்ற பதிவர் நண்பர்களுக்கும்
தல! சூப்பர்.. எங்களை மாதிரி புதிய பதிவர்களை உற்சாகப்படுத்த உங்களை முன்மாதிரியாகக் கொள்ளலாம். மேலும் வாசகர்களுக்கு நன்றி சொல்லும் பண்பு ரொம்ப கவர்கிறது. வெற்றிகள் பல குவிய வாழ்த்துக்கள்!
butterfly Surya said…
உங்களுக்கு சந்தோஷம்னா எங்களுக்கும் சந்தோஷம் தான்.

அனைவருக்கும் வாழ்த்துகள்.
மணிஜி said…
நம்ம ஊட்டுக்கு ஒரு தபா வா கேபிளூ..ஒரு கட்டிங்..உட்டுகினு போய்கிணே இரு
Blogger பரிசல்காரன் said...

//நானும் ஒரு பிளாக்கை ஆரம்பிக்கனும்னு நெனச்சு ஆரம்பிச்சுட்டேன். ஆனா தொடர முடியல.//

அது எப்படி சார், இந்த தலைப்பையே 3 நாள் யோசிச்சு வைத்தேன். சிந்திக்க முடியுது ஆனா செயல்படுத்த முடியல. பார்போம்.
//வாழ்த்துகள் பாஸ்:)

//

நன்றி வித்யா..
//உங்கள் சந்தோஷம் நீடிக்க வாழ்த்துகள்,ஷங்கர்.

//

மிக்க நன்றி சார்.. உங்கள் வாழ்த்து பலிக்கட்டும்
//150 ங்கறது வளர்ந்துட்டே போகணும்னு வாழ்த்துகிறேன் தல.

//

நன்றி தராசு..
நன்றி வால்பையன்.
//தல..அடிச்சு ஆடுங்க தல..!
150 க்கு அப்பறம் ஏகப்பட்ட ஜீரோ ஏறனும்னு வாழ்த்துக்கள் பாஸு..!//

நன்றி டக்ளஸ் / முத்து பாலகிருஷ்ணன். உங்கள் தொடர் ஆதரவுக்கும், வருகைக்கும், கருத்துக்கும்
//உங்கள் பதிவுகளை தொடர்ந்து படிப்பதுண்டு. வாழ்த்துக்கள்//

மிக்க நன்றி எட்வின்..
//வணக்கம் சார். நானும் ஒரு பிளாக் ஆரம்பிக்கணும் என்கிற எண்ணம் எனக்கு உண்டானதுக்கு முதல் காரணம் உங்க பிளாக்தான். நான் முதலில் படித்த பிளாக்கும் உங்களுடையதுதான். நான் இதுவரையில் பின்தொடருவதும் உங்களுடையதுதான்.//

நன்றி சிந்தனைசெய்.. உங்கள் வலைப்பூவும் இதே போல் வளர வாழ்த்துகிறேன்.
//அண்ணாத்தே ரெண்டு நாள் முன்னதான் நான் உங்க பாலோயர் ஆனேன்...!

//

நன்றி தமிழ் வெங்கட்..
நன்றி நையாண்டிநைனா..

என்னது இப்பத்தான்பாலோயர் ஆவறீங்களா..? எனிவே மிக்க நன்றி காவேரி கணேஷ்..
//தல நீங்க 150 அடிக்க வேண்டிய இடம் இதுவல்ல..

நீங்க ஆட வேண்டிய கிரவுன்ட் வேற

///
ஆட வேண்டிய கிரவுண்ட் கிடைக்கிற வரைக்கும் கிடைக்கிற கிரவுண்ட்ல ஆட வேண்டியதுதான் கார்க்கி.. மிக்க நன்றி..
மிக்க நன்றி ராதாகிருஷ்ணன் சார்.. அன்பு..
//சிரிச்சிக்கிட்டே இருக்கேன்.

:)))))//

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா.. ந்ன்றி அப்துல்லா..
சந்தோஷம் பொங்குதா ???!!!! பொங்கட்டும் பொங்கட்டும் ..

கணித மேதை , ராத்திரி படுக்கும் போது ப்ராப்ளத்தை நினைச்சுகிட்டே படுத்தார்ன, காலயில சொல்யூஷன் கிடைக்குமாம். !!!!!!!

அது மாதிரி தானே
வாழ்த்துகள் பாஸ்:)
//ஆஸ்கர் ரவிசந்திரன் நம்மளை புக்// செய்யிற மாதிரி கனவு கண்டதாலா?//

கனவு மெய்ப்பட வேண்டுகிறேன்
150க்கு வாழ்த்துக்கள்
சங்கர்,

"நானும் எழுதுகிறேன் பேர்விழி என்று"

பேர்விழி என்பதை "பேர்வழி" என்று மாற்றலாமே..
Thamira said…
ஊறுகா ரொம்ப பாதிச்சிடுச்சு போல.. அது போல யாரையாவது பத்தி எழுதினா லிங்க் குடுக்கணும் தல.. (எல்லாம் ஒரு வெளம்பரம்தான், இதுனால ஒரு 100 ஹிட்ஸ் கெடைக்குமில்ல..)
//சிந்தனை செய்-ன்னு பேர் வெச்சுகிட்டா இப்படித்தான். பேரை மாத்துங்க..
//

:))))))
//இது நிஜமாகவும் நடக்கும், மற்றபடி வாழ்த்துக்கள்.. உண்க்களுக்கும் இந்த பதிவில் நீங்கள் கூறியிருக்கம் மற்ற பதிவர் நண்பர்களுக்கும்
//

உங்கள் வாழ்த்து பலிக்கட்டும் அக்னி.. மிக்க நன்றி.. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.
//தல! சூப்பர்.. எங்களை மாதிரி புதிய பதிவர்களை உற்சாகப்படுத்த உங்களை முன்மாதிரியாகக் கொள்ளலாம். மேலும் வாசகர்களுக்கு நன்றி சொல்லும் பண்பு ரொம்ப கவர்கிறது. வெற்றிகள் பல குவிய வாழ்த்துக்கள்//

மிக்க நன்றி வெங்கிராஜா..
நன்றி வண்ணத்துபூச்சியாரே..
//அது எப்படி சார், இந்த தலைப்பையே 3 நாள் யோசிச்சு வைத்தேன். சிந்திக்க முடியுது ஆனா செயல்படுத்த முடியல. பார்போம்.
//

ஒண்ணும் பிரச்சனையில்லை.. கொஞ்சம் சுகுரா சிந்திச்ச்சீங்கண்னா.. எழுதிடலாம்.. :)
நன்றி அது ஒரு கனாக்காலம்
ச்சின்னப்பையன்.. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்
//கனவு மெய்ப்பட வேண்டுகிறேன்
150க்கு வாழ்த்துக்கள்
//

மிக்க நன்றி அத்திரி.. உஙக்ள் மேலான தொடர் ஆதரவுக்கும், வருகைக்கும், கருத்துக்கும்
பேர்விழியை மாத்திடலாம் பிரசன்னா. மிக்க நன்றி உங்கள் மேலான கருத்துக்கும், வருகைக்கும்.
//ஊறுகா ரொம்ப பாதிச்சிடுச்சு போல.. அது போல யாரையாவது பத்தி எழுதினா லிங்க் குடுக்கணும் தல.. (எல்லாம் ஒரு வெளம்பரம்தான், இதுனால ஒரு 100 ஹிட்ஸ் கெடைக்குமில்ல..)

//

ஆமா ஆதி... சாரி.. மறந்துட்டேன்..
வாழ்த்துக்கள் தல..;) மேலும் சகா பதிவர்களின் தகவலுக்கு நன்றி ;)
Anonymous said…
I like your film reviews much.
It a deciding factor for me to watch a movie.
Prabhu said…
உங்க போதைக்கு ஊறுகாய் ஆக்கிட்டீங்களே!
//வாழ்த்துக்கள் தல..;) மேலும் சகா பதிவர்களின் தகவலுக்கு நன்றி ;)

//

நன்றி கோபிநாத..
//I like your film reviews much.
It a deciding factor for me to watch a movie.

//

மிக்க நன்றி அனானி.
//உங்க போதைக்கு ஊறுகாய் ஆக்கிட்டீங்களே//

விடியற்காலையில 5.35 மணிக்கு போதைக்கு ஊறுகாய் சாப்பிடற உன்னை என்ன சொல்லி பாராட்டுறதுன்னே தெரியல்.. அதனால் உடனடியாய் மதுரையில் உள்ள நல்ல ஏசி தியேட்டரில் மரியாதை படத்துக்கு ஒரு டிக்கெட் கொடுக்கலாம்னு நினைக்கிறேன்.
Rafiq Raja said…
சங்கரே, மீள் பதிவு என்றாலும் படிக்கும் வாசகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பதிவு அல்லவா... அதுவே பெரிய விஷயம் ஆயிற்றே. இந்த காலத்தில் பிரபல பதிவர்கள் யார் இந்த காரியம் செய்கிறார்கள்?

அதிகம் பதிய தொடங்கிய பாதி வருடத்திலேயே இமாலய சாதனை புரிந்திருக்கிறீர்கள். தொடருங்கள் உங்கள் அதிரடியை, இரட்டை சதத்தை எதிர்நோக்கி.

ரஃபிக் ராஜா காமிக்கியல் & ராணி காமிக்ஸ்
எனக்கும் சந்தோஷம் பொங்குதே..
இலக்கை வரைவில் எட்டிட வாழ்த்துக்கள், அந்நற்செய்தியுடன் மீண்டும் சந்தோஷம் பொங்குதே மீள் பதிவை எதிர்பார்க்கிறேன்.
///சங்கரே, மீள் பதிவு என்றாலும் படிக்கும் வாசகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பதிவு அல்லவா... அதுவே பெரிய விஷயம் ஆயிற்றே. இந்த காலத்தில் பிரபல பதிவர்கள் யார் இந்த காரியம் செய்கிறார்கள்?

அதிகம் பதிய தொடங்கிய பாதி வருடத்திலேயே இமாலய சாதனை புரிந்திருக்கிறீர்கள். தொடருங்கள் உங்கள் அதிரடியை, இரட்டை சதத்தை எதிர்நோக்கி.
//

தலைவரே..இது மீள் பதிவு இல்லை.. புதிய நன்றி நவிலல் பதிவுதான்.. உங்கள் வாழ்த்துக்கும், வருகைக்கும் மிக்க நன்றி
//எனக்கும் சந்தோஷம் பொங்குதே..
இலக்கை வரைவில் எட்டிட வாழ்த்துக்கள், அந்நற்செய்தியுடன் மீண்டும் சந்தோஷம் பொங்குதே மீள் பதிவை எதிர்பார்க்கிறேன்//

மிக்க நன்றி பீர்.. உங்கள் வாழ்த்துக்கும், கருத்துக்கும்.

Popular posts from this blog

சாப்பாட்டுக்கடை - டி.கே. மாப்பிள்ளை மெஸ். -77km

3 திருநங்கைகளும், 1 வடக்கனும் 100 போலீசும்

பேரைச் சொல்லவா? - மெய்யழகன் தருணங்கள்.