உலக சினிமா – Death Proof

Death_Proof_%28Netherlands%29 அர்லின், ஷானா, ஜங்கிள் ஜூலியா மூவரும் ஜங்கிள் ஜூலியாவின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக டெக்ஸாஸை நோக்கி செல்கிறார்கள். இவர்களை பாலோ செய்யும் ஸ்டண்ட்மேன் மைக் தன்னுடய டெத்புரூப் காரில பயணிக்கிறான். அவன் ஒருவிதமான சைக்கோ.. இந்த மூன்று பெண்களை பற்றிய விஷயங்களை முன்பே அறிந்திருக்கிறான்.

மைக் பாலோ செய்வதை முன்பே கவனித்திருந்த ஜங்கிள் ஜூலியானா. அவள் ஒரு ரேடியோ ஆர்.ஜே. பெண்கள் மூவரும் ஒரு பாரில் அமர்ந்திருக்க, அங்கே மைக் வர, அவனின் கட்டுமஸ்தான உடலையும், அவனுடய ஆண்மையையின் காரணமாய் அவன் தொடர்ந்து வந்த விஷயம் தெரிந்தாலும், அவனுடன் பழகுகிறாள். அப்போது ஜூலியானாவின் தோழி பாம் பார்ட்டி முடிந்ததும், அவளை தான் ட்ராப் செய்வதாய் கூறி தன்னுடய டெத்புருப் காரில் அழைத்து சென்று அவளை காரை படு வேகமாய் ஓட்டி சென்று, திடீரென ப்ரேக் போட்டே கொன்று விடுகிறான். ஜூலியானாவையும் அவள் தோழிகளையும் தனியே துரத்தி, அவனுடய காரை நேருக்கு நேராய் மோதி அவர்கள் மூவரையும் கொல்கிறான்.

அந்த விபத்தில் சிறிய காயமடையும் அவன் மீண்டும் பதினான்கு மாதம் கழித்து வேறு ஒரு செட் ஆப் பெண்களை பாலோ செய்கிறான். லி, ரோஸ், மற்றும் மேத்திஸ் இவர்கள் மூவரும் அவர்களுடய ஸ்டண்ட் தோழி ஜோபெல்லை பிக்கப் செய்கிறார்கள்.

வழக்கம் போல் மைக் இவர்களை காரில் துரத்தியே அவர்களை கொல்ல முயற்ச்சிக்க,  அதிலிருந்து தப்பிய நால்வரும் எவ்வாறு மைக்கை கொல்கிறார்கள் என்பதே கதை.

வழக்கமாய் Quentin Tarantinoவின் படங்களை போல பெரிதாய் கதையில்லை என்றாலும் அப்நார்மல் காட்சியமைப்புகள், நீள, நீளமான் வசனங்கள் என்று அவருடய அக்மார்க் சீன்கள். அருமையான சேஸிங் காட்சிகள், மயிற்கூச்செரியும் ஆக்ஸிடெண்ட் காட்சிகள, இளமை துள்ளும் பெண்களிடயே நடக்கும் டைலாக்குள் பல சமயம் நம் காதுக்ளை மூடிக் கொள்ள செய்யும், முதல் ஆக்ஸிடெண்ட் செய்யும் காட்சியும், அதை படமெடுத்த விதமும் சிம்பிளி சூப்பர்ப். அதே போல் ஜூலியானா மைக்கை ஒரு பாரில் வைத்து அவனின் முன்பாய் செக்ஸியாய் நடனமாடும் காட்சி, என்று காட்சிக்கு Quentin Tarantinoவின் முத்திரை. இரண்டாவது செட் பெண்கள் மைக்கை துரத்தி, துரத்தி சேஸ் செய்யும், காட்சிகளில் நாமே வண்டியோட்டுவதை போன்ற உணர்வை ஏற்படுத்தியிருக்கிறார் இயக்குனர்.

படத்தின் ஒளிப்பதிவும் Quentin Tarantinoதான். மிகவும் அருமையான ஒளிப்பதிவு, அதிலும் முதல் கேங்கை நேருக்கு நேராய் புயல் போன்ற் வேகத்தில் மோதுவதை காரில் இருந்த மூன்று பெண்களின் பாயிண்ட் ஆப்வியூவில் அவர்களின் மீது கார் மோதிய இம்பாக்டை படமெடுத்திருக்கும் காட்சி ஒன்றே சான்று. இதே போன்ற ஒரு காட்சியை நம் தமிழ்  சரோஜாவில் முயற்சித்திருப்பார்கள்.

படம் நெடுகில் எழுபதுகளில் வரும் பிண்ணனி இசை. எடிட்டிங் ஸ்டைல் என்று காட்சிக்கு காட்சி இயக்குனரின் முத்திரை. வித்யாசமான ஆக்‌ஷன் பிரியர்களுக்கு

Death proof -  கல்ட் பட ரசிகர்களுக்கு


கார்த்திக் அனிதா திரைவிமர்சனத்தை படிக்க இங்கே அழுத்தவும்

உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

Comments

வணக்கம் சங்கர்,
ஏற்க்கனவே இந்த படத்தை download செய்து வைத்திருக்கிறேன் ஆனால் இன்னும் பார்க்கவில்லை. இந்த வாரம் கண்டிப்பா பார்த்திட வேண்டியதுதான். ஐ இன்னைக்கு நான்தான் முதல் போல .
Sukumar said…
விமர்சனத்திற்கு நன்றி
Raju said…
இன்னா தலைவா?
அடிக்கடி டெம்ப்லேட்ட, ஆம்லேட்டு கணக்கா சும்மா திருப்பி திருப்பி போட்டுகுனுருக்கியே..!
ஷோக்காகீதுபா?
தராசு said…
கலக்கலா எய்தீக்குரீங்கோ.

ஆனா இன்னாபா இது, நம்ப ஊரு வில்லுவ விடவா இத்து சூப்பராக்குதுன்றீங்க????
Raju said…
\\நம் காதுக்ளை மூடிக் கொள்ள செய்யும், \\
புரிஞ்சாத்தான தல?
தராசு said…
எத்தினி தபாதான் hot spotல ஒரே குட்டிய பாத்துனுக்கறது, நாட்டாம, போட்டோவை மாத்து.
மேவி... said…
"தராசு said...
எத்தினி தபாதான் hot spotல ஒரே குட்டிய பாத்துனுக்கறது, நாட்டாம, போட்டோவை மாத்து."

periye repeat..........
மேவி... said…
pada dvd vangalamnnu sollunga
Ashok D said…
//இளமை துள்ளும் பெண்களிடயே நடக்கும் டைலாக்குள் பல சமயம் காதுக்ளை மூடிக் கொள்ள செய்யும்//
கண்ணையும் காதையும் நம்ம மூடியிருக்கம்
//காரில் துரத்தியே அவர்களை கொல்ல முயற்ச்சிக்க//

நிஜத்தல இவங்கள துரத்தி... ம்ம்ம்... படம் பாத்து திருப்திபட்டுக்க வேண்டியதுதான் ....
Indian said…
//\\நம் காதுக்ளை மூடிக் கொள்ள செய்யும், \\
புரிஞ்சாத்தான தல?//

Download subtitles from
www.free-subtitles.org
www.opensubtitles.org
www.divxsubtitles.net

Copy into the same folder where the movie file (.avi, .mkv, .mp4 etc) is located.
Rename the file exactly as movie file name with the extension .srtPlay the movie in players like VLC player. They will automatically play the subtitles.
பழிக்குப் பழி என்ற ஒரே உணர்ச்சி,ஒரே வரிக் கதை அதை வைத்துக் கொண்டு இவ்வளவு அர்ரஸ்டிங்கான ஒரு ஆக்ஷன் படத்தை நான் எப்போதும் பார்த்ததில்லை,ஷங்கர்.க்வண்டின் டொரன்டினோ க்வண்டின் டொரன்டினோதான்.
விமர்சனத்தை படிச்சா படம் பார்க்கிற மாதிரியே இருக்கப்பா!
எனக்கு மண்டையோட்டுப் படங்கள் பெரும்பாலும் பிடிப்பதில்லை:)

இருந்தாலும் நீங்கள் அதிகமாக திரைப்படம் பேசுவதால் திரைப்படங்கள் குறுந்தகடு அல்லது தரவிறக்கம் செய்வது எங்கே என்பது பற்றி சொன்னால் பயனுள்ளதாக இருக்கும்.
// இந்த வாரம் கண்டிப்பா பார்த்திட வேண்டியதுதான். ஐ இன்னைக்கு நான்தான் முதல் போல .//

கண்டிப்பாக படம் பாருங்கள் முரளி, மிக்க நன்றி உஙக்ள் முதல் பின்னூட்டத்திற்க்கும், வருகைக்கும்
நன்றி சுகுமார் சுவாமிநாதன்.
//ஆனா இன்னாபா இது, நம்ப ஊரு வில்லுவ விடவா இத்து சூப்பராக்குதுன்றீங்க????
//

வில்லெல்லாம் அகில உலக சினிமா
ஹாட் ஸ்பாட் படத்தை மாத்திட்டேன், மாயாவி, தாராசண்ணெ.. சந்தோஷமா..?
//நிஜத்தல இவங்கள துரத்தி... ம்ம்ம்... படம் பாத்து திருப்திபட்டுக்க வேண்டியதுதான் //

ம்.. இப்படியெல்லாம் வேற ஆசையா அசோக்..?
//க்வண்டின் டொரன்டினோ க்வண்டின் டொரன்டினோதான்.
//

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்
//இருந்தாலும் நீங்கள் அதிகமாக திரைப்படம் பேசுவதால் திரைப்படங்கள் குறுந்தகடு அல்லது தரவிறக்கம் செய்வது எங்கே என்பது பற்றி சொன்னால் பயனுள்ளதாக இருக்கும்.
//

குறுந்தகடுகள் சென்னையில் பல இடங்களில் கிடைக்கிறது.. டவுன்லோட் என்றால் டோரண்ட் தான் நடராஜன். மிக்க நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்
//விமர்சனத்தை படிச்சா படம் பார்க்கிற மாதிரியே இருக்கப்பா//

அதுக்காக படம் பாக்காம இருந்திடுடாதீங்க.. பார்த்துடுங்க ஜூர்கேன்.
பாலா said…
படத்தை விட இதோட பிண்ணனிக்கதைகள் இன்னும் பிரபலம் சங்கர்.

Zoë Bell (கார்ல தொங்கிட்டு வரும் பெண்) உண்மையிலேயே ஒரு ஸ்டண்ட்வுமன். கில்பில்-லில் உமாவுக்கு டூப்பு போட்டவங்க. இதில் டூப் போடாமலயே அவங்க பார்ட்டை பண்ணியிருப்பாங்க.

இந்த படம் ‘Grindhouse' ங்கற பேர்லதான் வந்துச்சி. ஒரே டிக்கட்டுக்கு ரெண்டு படம் காட்டும் 1970-களின் தியேட்டர் பேரு அது. அதுக்காகவே இன்னொரு படத்தை க்வெண்டினின் நண்பர் ரோட்ரிகஸ் இன்னொரு படத்தை எடுத்து இருப்பார் (Planet Terror). ரெண்டும் 1970-களில் வரும் B-Grade படங்கள் மாதிரி எடுத்து, நடுவில் ‘வெளிவராத மூணு படங்களுக்கு’ ட்ரெய்லர் எல்லாம் இணைச்சிருப்பாங்க. அதுல ஒரு ட்ரெய்லரை டைரக்ட் செஞ்சது HOSTEL எடுத்த ரோத்.

இதை பத்தி ஒரு பதிவே போடலாம்.
Prabhu said…
நான் சொல்ல வந்தேன், பாலா அண்ணே வழக்கம் போல முந்திக்கிட்டார்.

B-க்ரடெ தேவையில்லாம மொட்ட ஆக்சன நம்பி எடுக்கப் படும். சீப்பா நிறைய ஓட்டுறதால, அது தேஞ்சு வெள்ளை வெள்ளையா புள்ளி தெரியுறத பாத்திருப்பீங்க. சில பழைய படங்களில் காணும் போது டிவிலயே அதப் பாக்கலாம். ஆனா, இந்தப் படத்துல வீம்புக்குனே அந்த மாதிரி வெள்ளை புள்ளிகள சேத்து 1970களின் பி கிரேட் மூவி எஃபெக்டை கொண்டு வந்திருப்பாங்க
Prabhu said…
நான் சொல்ல வந்தேன், பாலா அண்ணே வழக்கம் போல முந்திக்கிட்டார்.

B-க்ரடெ தேவையில்லாம மொட்ட ஆக்சன நம்பி எடுக்கப் படும். சீப்பா நிறைய ஓட்டுறதால, அது தேஞ்சு வெள்ளை வெள்ளையா புள்ளி தெரியுறத பாத்திருப்பீங்க. சில பழைய படங்களில் காணும் போது டிவிலயே அதப் பாக்கலாம். ஆனா, இந்தப் படத்துல வீம்புக்குனே அந்த மாதிரி வெள்ளை புள்ளிகள சேத்து 1970களின் பி கிரேட் மூவி எஃபெக்டை கொண்டு வந்திருப்பாங்க
///B-க்ரடெ தேவையில்லாம மொட்ட ஆக்சன நம்பி எடுக்கப் படும். சீப்பா நிறைய ஓட்டுறதால, அது தேஞ்சு வெள்ளை வெள்ளையா புள்ளி தெரியுறத பாத்திருப்பீங்க. சில பழைய படங்களில் காணும் போது டிவிலயே அதப் பாக்கலாம். ஆனா, இந்தப் படத்துல வீம்புக்குனே அந்த மாதிரி வெள்ளை புள்ளிகள சேத்து 1970களின் பி கிரேட் மூவி எஃபெக்டை கொண்டு வந்திருப்பாங்க
//

நானும் இந்த தகவலை எழுதணும்னு நினைச்சேன். ஆனா மறந்துட்டேன். மிக்க நன்றி பப்பு.
Lap dance (Down in a mexicali)ஆடும் பெண் butterfly, அவள் மைக் follow செய்வதை உணர்ந்து பின் அவன் சொன்ன காரணத்தை நம்பி, அவனுடைய பேசும் விதத்தில் தான் lap danceக்கு ஒத்துக் கொள்வாள். subtitle problemத்தால், கதையில் கொஞ்சம் குழம்பிவிட்டீர்கள் என நினைக்கிறேன். கிட்டதட்ட 10 தடவையாது பார்த்திருப்பேன் அதான் கொஞ்சம் மனசு கேக்காம சொன்னேன். தப்பா எடுத்துக்காதிங்க..

Popular posts from this blog

சாப்பாட்டுக்கடை - டி.கே. மாப்பிள்ளை மெஸ். -77km

3 திருநங்கைகளும், 1 வடக்கனும் 100 போலீசும்

பேரைச் சொல்லவா? - மெய்யழகன் தருணங்கள்.