ஹைவேஸில் கார் டிரைவரின் பக்கத்தில் உட்கார்ந்தபடி அவர் கிளட்ச் போடும்போது, நீங்களும் கிளட்ச் போட்டு, அவர் பிரேக் போடும் போது நீஙக்ளும் பிரேக் போடுபவரா..? அப்படின்னா நீங்க காலை மடிச்சு வச்சிகிட்டுதான் படம் பாக்கணும்.
நான் முதல் பாகத்துக்கு அப்புறம் இப்பத்தான் படம் பாக்குறேன். அதனால எதுவும் படம் பாக்கிறதுக்கு பிரச்சனையில்லை. நடுவுல வந்த ரெண்டும் படு சொதப்பல்னு சொன்னாங்க.. இந்த படத்தில் முதல் பாகத்தில் நடிதத முக்கிய நடிகர்கள் விண்டென்ஸல், அந்த ஹிரோயின், டென்சலின் நண்பராக வருபவர் ஆகியோர் மீண்டும் நடித்திருக்கிறார்கள். ஒரு மெல்லீசான கதையை வைத்து உட்டாலக்கடி அடித்திருக்கிறார்கள்.
ஓப்பனிங் காட்சி சேஸிங் படமெடுதிருக்கும் விதமும், ஆக்ஷன் அமைப்பும், எடிட்டிங்கும் நம்மை மயிர்கூச்செரிய வைத்துவிடும். அப்படி ஒரு வெறி பிடித்த சேஸிங். நீங்கள் தியேட்டருக்கு செல்லும் போது படம் ஆரம்பிப்பதற்கு முன் செல்லுங்கள், முதல் காட்சியே இந்த சேஸிங் தான்,
டென்ஸலும் அவனின் காதலியும் விட்ட திருட்டு தொழிலை மீண்டும் செய்துவிட்டு ஆளாளூக்கு பிரிந்துவிட, ஒரு நாள் டென்ஸலுக்கு அவனுடய காதலி கொல்லப்பட்ட விஷய்ம் தெரிய வர, கொலைகாரனை கண்டுபிடிக்க மீண்டும் திரும்பி வருகிறான்.
ஒரு போதை மருந்து கூட்டத்தை தேடும் டென்ஸலின் போலீஸ் நண்பனும், தான் தேடுபவனும் ஒருவனே என்று முடிவுக்கு வர, இருவரும் ஒரு ரேஸில் கலந்து கொள்கிறார்கள். அதன் மூலம் அந்த போதை மருந்து கும்பலின் நெட்வொர்க்கில் உள்ளே நுழைய, அவர்களின் டார்கெட் வில்லனை கண்டுபிடித்து, எவ்வாறு டென்ஸல் பழி தீர்க்கிறான் என்பதுதான் க்ளைமாக்ஸ், கடைசியில் டென்சலுக்கு ஜெயில் தண்டனை கிடைத்து போலீஸ் அவனை வேனில் அழைத்து போக, முதல் காட்சியில் வந்தது போல ஒரு சேஸிங் ஆரம்பமாகிறது.
படம் முழுக்க , விர்,விர்ரென காரெல்லாம் பறக்கிறது. குறிப்பாக நகர தெருக்களில் நடக்கும் சேஸிங், மெக்ஸிகன் மலை ஓடு பாதை சேஸிங், அவர்களை பாலோ செய்யும் ஜிபிஆர் எஸ், விஷுவல் என்று ஒரேயடியாய் அதகள படுத்தியிருக்கிறார்கள். சமீபத்தில் நான் பார்த்த நைல் பைட்டிங் சேஸிங்.. படம்
டென்ஸலின் இருப்பு படத்திற்க்கு ஒரு கெத்தை கூட்டுகிறது. கட்டுமஸ்தான பாடியுடன், ஒரு சூப்பர் ஹீரோவை போல அலைகிறார், அவ்வப்போது “Pussy” போன்ற ஒன்றை ஜேம்ஸ்பாண்ட் சொற்களை உதிர்த்து, ஸ்டைலாய் நடக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் வெளுத்து வாங்குகிறார். கதாநாயகியின் நடிப்பைவிட, சேஸிங் காட்சிகளில் தெரியும் மார்பகங்கள், லாரா கம்பெட் போன்ற உடையில், ஏற்கனவே சீட்டின் நுனியில் உட்காரவைத்திருக்கும், சேஸிங்கில், சூட்டை கிளப்புகிறார். ..
திடும், திடுமென ஆப் ஆகி போகிறது. லாஜிக் என்கிற வஸ்துவை எல்லாம் கேட்கக்கூடாது. காதில் பூ சுற்றிக் கொண்டும், மூளையை கழட்டி வைத்துவிட்டுதான் படம் பார்க்க வேண்டும். ஆனால் நெருப்பு பொறி பறக்கும் சேஸிங்க், ஆங்காங்கே வரும் முத்த காட்சிகள், அற்புதமான ஓளீப்பதிவு, எடிட்டிங் சி.ஜி, பரபரப்பான திரைக்கதை என்று தொழில்நுட்பங்களை வைத்து விளையாடி நம்மை கட்டி போட்டு விடுகிறது.
Fast & Furious – வேகத்தை விரும்புவர்களுக்கு மட்டும் .
இண்டர்வெலுக்கு முன் படம் நடுவில் திடீரென தொங்கி போய், மாற்றி, ,மாற்றி ஏதோ பேசி கொண்டிருப்பதை பார்த்து வெறுத்து போன இரண்டு பேர்,
‘மச்சான் என்னாடா சொம்மா பேசிட்டேருக்கான், வீட்டுக்கு போலாமா..:
“டேய் இருடா அவங்க எங்கனாச்சும் படத்தோட கதையை சொல்ல வேணாமா.. இனிமே ரேஸ்தான்.. “ என்றபடி பாத்ரூமுக்கு போனார்கள்.
உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Post a Comment
25 comments:
shanker,
mee meee ee the first.
vimarsanam super..!
hasan.
me the first
தல விமர்சனம் சூப்பர் ..!
ஆனா இது ஓவர் ....
( கதாநாயகியின் நடிப்பைவிட, சேஸிங் காட்சிகளில் தெரியும் மார்பகங்கள், லாரா கம்பெட் போன்ற உடையில், ஏற்கனவே சீட்டின் நுனியில் உட்காரவைத்திருக்கும், சேஸிங்கில், சூட்டை கிளப்புகிறார். )
நன்றி ஹசன்ராஜா.. உங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்கும்...
//ஆனா இது ஓவர் ....
( கதாநாயகியின் நடிப்பைவிட, சேஸிங் காட்சிகளில் தெரியும் மார்பகங்கள், லாரா கம்பெட் போன்ற உடையில், ஏற்கனவே சீட்டின் நுனியில் உட்காரவைத்திருக்கும், சேஸிங்கில், சூட்டை கிளப்புகிறார். )
//
படத்தில் பார்த்ததைதானே சொல்ல முடியும். விமர்சனம்னா ஒரு நேர்மை வேணாமா..?
//இண்டர்வெலுக்கு முன் படம் நடுவில் திடீரென தொங்கி போய், மாற்றி, ,மாற்றி ஏதோ பேசி கொண்டிருப்பதை பார்த்து வெறுத்து போன இரண்டு பேர்,//
இங்கிலிபீஜு.. படத்துக்கே.. இண்டர்வெல் விடுறது.. உலகிலேயே.. நாம மட்டும்தான்.! :) :) :) :) :)
பின்ன எப்படி பாப்கார்ன் விக்கிறதாம். அதை நம்பிதான் பல பேர் இன்னமும் தியேட்டர் நடத்துறாங்க.. பாலா..
நம்ம ஊர்ல இங்கிலீஷ் படத்துக்கு இண்டர்வெல் விடுற லட்சணம் தான் தெரியுமே. அவனுங்களா.. ஒன்னரை அவர் படத்துக்கு சுமாரா சம்மந்தமேயில்லாத ஒரு இடத்தில படத்தை ஆப் பண்ணிட்டு.. இண்டர்வெல்லுனுடுவாங்க..
என்னை பொறுத்தவரை முதல்பாகம் சொதபல், (சில தொழில்நுட்ப அற்பங்களை கையண்டிருப்பர்கள்)
இரண்டாவது பாகத்தை நன்றாக எடுத்திருப்பார், இரண்டாவது பாகத்தில் வரும் ரேஸ் காட்சிகள் நன்றாக எடுத்திருப்பார்கள்.
நான்காம் பாகம் மற்றவற்றை காட்டிலும் வித்தியாசமாய் நிறைய சென்டிமென்டுடன் வந்திருக்கிறது
படத்தை விட உங்கள் விமர்சனம் படு ஸ்பீட் ஷங்கர்!
தினமும் சட்டை மாற்றுவதைப் போல் டெம்ப்ளேட்டை மாற்றுகிறீர்கள்.நான் ஒரு தடவை மாற்றுவதற்கே ஹாலிவுட் வரை போக வேண்டி இருக்கிறது!
கலக்கல் விமர்சனம் சங்கர் இந்தப்படம் இன்னமும் நம்ம ஊரிற்கு வரவில்லை. சில காட்சிகள் டிவிடியில் பார்த்தேன் அபாரம். அதிலும் சேஷிங் காட்சிகள் சூப்பர். அயன் படத்தின் காட்சிகள் ஏனோ வந்து தொலைந்தது மனதில். நாங்களும் இப்போ சில விடய்ங்களில் ஹாலிவூட்டுக்கு சவால் விடத் தொடங்கிவிட்டோம்.
உங்க விமர்சனத்தைப் படித்தவுடன், கற்பனையில் இந்த படத்தை விஜய், பிரபுதேவா ஜோடி எடுத்தா எப்படி இருக்கும் என்று.
அய்யோ பாவம் விஜய் என்று பாதியிலேயே கட் பண்ணி விட்டுட்டேன்.
//நடுவில் திடீரென தொங்கி போய், மாற்றி, ,மாற்றி ஏதோ பேசி கொண்டிருப்பதை பார்த்து வெறுத்து போன இரண்டு பேர்,///
இங்கிலீஷ் படத்தில் இப்படி பேசியே கழுத்தறுத்து போடுவாங்க .
படத்தின் வேகம் காட்டிலும் உங்க விமர்சனம் படு ஸ்பீட் :-) நல்லா இருக்கு
உள்ளேன் ஐயா
Shankar Sir,
Review Super
///“டேய் இருடா அவங்க எங்கனாச்சும் படத்தோட கதையை சொல்ல வேணாமா.. இனிமே ரேஸ்தான்.. “ என்றபடி பாத்ரூமுக்கு போனார்கள்.///
இங்கதான் டச்சே இருக்கு.
//இங்கதான் டச்சே இருக்கு.
//
நன்றி பப்பு.. மூணாரு டூர் முடிஞ்சிருச்சா.?
நன்றி தன்ஸ்.. உங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்கும்..
//தினமும் சட்டை மாற்றுவதைப் போல் டெம்ப்ளேட்டை மாற்றுகிறீர்கள்.நான் ஒரு தடவை மாற்றுவதற்கே ஹாலிவுட் வரை போக வேண்டி இருக்கிறது!
//
நான் தினமும் மாற்றியமைப்பது இன்னும் திருப்தி யில்லாமல் தான். நானும் ஹாலிவுட்டில் கேட்டிருக்கிறேன்.
நன்றி வந்தியத்தேவன்.. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.
//உங்க விமர்சனத்தைப் படித்தவுடன், கற்பனையில் இந்த படத்தை விஜய், பிரபுதேவா ஜோடி எடுத்தா எப்படி இருக்கும் என்று.
//
இராகவன் உங்களுக்கு ஏன் இந்த கொலைவெறி.. ???
//இங்கிலீஷ் படத்தில் இப்படி பேசியே கழுத்தறுத்து போடுவாங்க .//
பின்ன எப்பத்தான் கதை சொல்வாஙக்லாம் மலர்.. நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்
//படத்தின் வேகம் காட்டிலும் உங்க விமர்சனம் படு ஸ்பீட் :-) நல்லா இருக்கு
//
நன்றி சுரேஷ்..
நன்றி அத்திரி, முத்து பாலகிருஷணன்.
படத்தோட வேகத்துக்கு தகுந்த மாதிரி அதிவேக விமர்சனம்.. கலக்குங்க தல..
Post a Comment