இந்த ஐ.பி.எல் ஆரம்பிச்சாலும் ஆரம்பிச்சிது, எல்லாருமே பிஸியாட்டாங்க.. இந்த போட்டிய நடத்திறதுனால இந்திய கிரிக்கெட் போர்டுக்கு ஆயிரம் கோடி கிட்ட வருமானம் வருதுங்கிறாஙக், இங்க இந்தியாவில நடத்த முடியாட்டாலும் சவுத் ஆப்ரிக்காவிலாவது நடத்துறாங்க வருமானம் போயிருமென்னு.
இந்த ஐ.பி.எல். எதுக்கு ஆரம்பிச்சிதுன்னா, கபில் தேவ் தலைமையில் ஜீ டிவிக்காரஙக.. இந்தியன் கிரிகெட் லீக்னு ஒன்ணை ஆரம்பிச்சாங்க. ஏன் ஆரம்பிச்சாங்கன்னு அவங்க சொன்ன காரணம் இளம் கிரிக்கெட் வீரர்களை ஊக்குவிப்பதற்க்காகன்னு சொன்னாங்க. ஆனா நிஜ காரணம் அது இல்ல.. இவங்களுக்கு கிரிக்கெட் போர்டுக்கும் இவங்க ஜீ ஸ்போர்ட்ஸ் சேனல் ஆரம்பிச்சதும் கிரிக்கெட் போட்டி ரைட்ஸ் வாங்க முயற்சி செய்ய, அது ஏதோ பிரச்சனை வந்ததும், ஆஸ்திரேலியாவில சேனல் 9 ஆரம்பிச்ச மாதிரி ஒரு கிரிகெட் லீக் டீமை ஆரம்பிச்சாங்க.. இவங்க ஏன் இப்படி கிரிகெட், கிரிகெட்ன்னு அலையுறாங்கன்னா.. அதன் மூலமா வர்ற காசு. கொஞ்ச நஞ்சமில்ல..
இவங்க ஆரம்பிச்ச ஐ.சி.எல்.ல விளையாடுற வீரர்களுக்கு, லட்சக்கணக்குல பணம் கொடுக்க, நிறைய வீரர்கள் ஐ.சி.எல் பக்கம் சாய, முதல் ஐ.சி.எல் ப்ரபரப்பை பார்த்து மிரண்டு போன கிரிக்கெட் போர்டு, உடனடியா ஆரம்பிச்சதுதான் இந்த ஐ.பி.எல்.
ஸ்டார் இந்திய வீரர்களோ, புதிய இளம் வீரர்களோ ஐ.சி.எல்ல விளையாடினா எந்த காலத்திலேயும் இந்திய கிரிக்கெட் டீமில் விளையாட இடம் கிடையாது, போட்டிகள் நடத்த ஸ்ட்டேடியம் கொடுக்காமல் இழுத்தடிப்பது. அப்படி கொடுத்தால் அந்த ஸ்டேடியத்தில் இந்திய கிரிக்கெட்டின் விளையாட்டுக்கள் நடத்த மாட்டோம் என்று மறைமுக மிரட்டல்கள் என்று எல்லாம் சேர்ந்து ஐ.சி.எல் மவுசை டம்மியாக்கி விட்டார்கள்.
ஒரு காலத்தில் இ.எஸ்பி.என் மட்டுமே ஸ்போர்ட்ஸ் சேனலாய் இருக்க, பின்பு ஸ்டார் ஸ்போர்ஸ் ஆரம்பிக்க பட்டது. அந்த நேரத்தில் ஷார்ஜா ஒன்டே மேட்சுக்கள் பிரபலமாக, அந்த போட்டிக்கான இந்திய ஒளிபரப்பு உரிமைக்காக போட்டியிட்டது இந்த இரு நிறுவனங்கள் தான். ஒரு கட்டத்தில் இவர்கள் இருவரை தவிர யாருமில்லாத காரணத்தினால். இவ்ர்கள் இருவருமே சேர்ந்து ஈ.எஸ்.பி.என். ஸ்டார் என்று ஒரே கம்பெனியாக்கி, அடிமாட்டு விலைக்கு ஒளிபரப்பு உரிமை கேட்க, நொந்து போன ஷார்ஜா ஆர்கனைசர் புகாதிர் கோபத்தில் ஆரம்பித்ததுதான் டென் ஸ்போர்ட்ஸ்.
இவர்கள் எல்லாம் இப்படி கோடி கணக்கான பணத்திற்காக ஆளுக்கொரு சேனல் ஆரம்பித்து கல்லா கட்ட, நேற்று மாலை மார்கெட்டே வெறிச்சோடியிருக்க, இரண்டு கடை பெண்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்.
“பாருக்கா மூணு நாளா மார்கெட்டுல ஆள் நடமாட்டமேயில்லை”
“ஏதொ கிரிக்கெட் மேட்ச் நடக்குதாம் அஞ்சலை, அதான் சனங்க எல்லாம் சாயங்காலம் ஆனா வீட்டிலேயே அடைஞ்சிர்றாங்க..”
“ ஒரு வாரம் நடக்குமா கிரிக்கெட்டு.?
” என்னது ஒரு வாரமா..? அம்பது நாளாம்”
“அய்யோ அம்பது நாளா.? என் பொழைப்பு நாறிருமே. நான் தெனம் தண்டல் கட்டறது எப்படி? சாப்பாட்டுக்கு என்ன செய்வேன்?. ரெண்டு நா த்ண்டல் கொடுக்காட்டி எங்கனாச்சும் படுத்தாவது தண்டல கட்டுனு கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம சொல்றான்.. அம்பது நாளைக்கு நான் என்ன பண்ணுவேன்: என்று புலம்பியபடி தலையில் கை வைத்தாள்.
ஐ.பி. எல் கிரிக்கெட்.. கோடிக்கணக்கான பணம் புரளும் இந்தியர்களின் விளையாட்டு
டிஸ்கி:
இந்த பதிவை எழுதியதால் நான் என்னவோ கிரிக்கெட் எதிர்பாளன் என்று நினைக்க வேண்டாம். ரிலையன்ஸ் கோப்பை நடந்த போது மேட்ச் பார்பதற்க்காக வேலையை ரிசைன் செய்த கிரிக்கெட் காதலன் நான். இப்போ கல்யாணமாயிருச்சு.. அதனால ?????
Post a Comment
42 comments:
டப்பு அண்ணே டப்பு:)
கிரிக்கெட்டுக்கு சம்பந்தமே இல்லாத எனக்கே புரியும் படி எழுதியிருக்கிறீர்கள் ஷங்கர்.
3rd
/*ரிலையன்ஸ் கோப்பை நடந்த போது மேட்ச் பார்பதற்க்காக வேலையை ரிசைன் செய்த கிரிக்கெட் காதலன் நான். இப்போ கல்யாணமாயிருச்சு.. அதனால ????? */
அதனாலே... இப்ப லீவு போட்டு வீட்லே இருந்து இம்சை அனுபவிக்க நான் என்ன? கூமட்டையா என்று சொல்லவாறீங்க. புரியுது... புரியுது.
படித்து விட்டு வருகிறேன் அண்ணா
No comments..
தகவலுக்கு நன்றி.
தேவையில்லாத டிஸ்கி. கிரிக்கெட் எதிர்பாளனாக இருப்பது ஒண்ணும் தெய்வ குற்றம் இல்லை சங்கர்.
தவிர, இந்த IPL ICL எல்லாம் கிரிக்கெட்டா..??
அவனுங்க சம்பாதிக்கவும் கொழுத்து திளைக்கவும் ""மோடி"" மஸ்தான் வேலை.
ஒரு விளையாட்டை இதை விட கேவல படுத்த முடியாது.
அண்ணே சங்கர் அண்ணே...
இன்னிக்கு நேரத்தோட வந்துட்டேன் அண்ணே. வேலை பெண்டு நிமிருதுன்னே.
உங்க பதிவு எல்லாத்தையும் படிச்சுடுவேங்க. ஓட்டும் போட்டுடுவேன்.
இந்த கிரிகெட்ட வச்சு நம்ம ஆளுங்களை ஏமாத்திகிட்டு இருக்காங்க.
இளம் வீரர்களை ஊக்குவிக்க என்று சொல்லப்பட்டாலும், விளையாடுவது என்னமோ, பழைய ஆளுங்கதாங்க..
finesse அது இதென்று அம்பிகள் மடமாக இருந்த கிரிக்கெட்டில் ஐபிஎல் வரவைச் சில அரசியல் காரணங்களுக்காக ஆதரிக்கிறேன்.
அண்ணே,
அரிய தகவல்கள். அப்படியே நம்ம கடைக்கும் ஒரு நடை போயிட்டு வாங்க, நானும் ஒரு குமுறு குமுறி இருக்கேன்.
நல்ல அலசல்
என்ன சொல்லி என்னாத்த சொல்றது... நாமளும் டிவி பொட்டி முன்னாடி மேட்ச் ஆரம்பிச்சவுடன் குந்திக்கினு உக்காந்திருரோமே...
தல
அது எல்லாம் இருக்கட்டும் நேத்து Chennai super kings Vs Bangalore royal challengers மேட்ச் பாத்திங்களா..
இன்னாது கிரிகெட்டு பாக்க வேலைய வுட்டிங்களா? அந்த கதையை கொஞ்சம் விளக்கி கூறுக..
//இங்க இந்தியாவில நடத்த முடியாட்டாலும் சவுத் ஆப்ரிக்காவிலாவது நடத்துறாங்க வருமானம் போயிருமென்னு.//
ஆப்ரிக்காவில் நடத்தினாலும் இதேஅளவு வருமானம் வருமா? சரியாக திட்டமிட்டு இந்திய இரசிகர்களுக்காக இந்தியாவில்தானே நடத்தியிருக்க வேண்டும்? (நான் கிரிக்கெட் இரசிகன் அல்ல)
எல்லாமே பணம்னு ஆயிடுச்சி :(
அப்பால இந்த 20-20 ஆட்டங்கள் எந்த அளவுக்கு ஆட்டக்காரர்களின் திறமையை வெளிக்கொணரும் என்பதும் கேள்விக்குறியே.
ICL என்னமோ one day, டெஸ்ட் மேட்ச் எல்லாம் வைக்கப்போறதா கேள்வி?
//இவங்க ஆரம்பிச்ச ஐ.சி.எல்.ல விளையாடுற வீரர்களுக்கு, லட்சக்கணக்குல பணம் கொடுக்க, நிறைய வீரர்கள் ஐ.சி.எல் பக்கம் சாய, முதல் ஐ.சி.எல் ப்ரபரப்பை பார்த்து மிரண்டு போன கிரிக்கெட் போர்டு, உடனடியா ஆரம்பிச்சதுதான் இந்த ஐ.பி.எல்.//
சரிதான் சார்.
எல்லாம் பணம் படுத்தும் பாடு... ஐசிஎல், ஐபிஎல், டென்ஸ்போர்ட்ஸ், சோனி, ஜீ, பிசிசிஐ, நீயோடிவி, என்று நடந்து கொண்டு இருக்கும் கூத்தை பார்த்து மனம் நொந்து கொண்டுதான் இருக்கிறேன்.
பணக்காரர்கள், பணத்தை போட்டு அள்ளுகிறார்கள்... அப்பாவி பொதுஜனம் மேட்சை பார்த்து தூங்கி போய் ஓட்டு போடாமல் இருந்து விட கூடாது என்பதே என் பிரார்த்தனை
இன்னொன்று கவனித்தீர்களா, இந்த சீஸேனில் முன்பு போல ஆர்வம் இல்லாமல் அடங்கி போய், விளம்பர வருமானம் கூட 20 சதவிகிதம் குறைந்ததாக தகவல்..... தாய் நாட்டை விட்டு பணத்துக்காக இன்னொரு நாட்டுக்கு ஓடி போனதற்கு வேண்டும் இவர்களுக்கு. :)
ரஃபிக் ராஜாகாமிக்கியல் & ராணி காமிக்ஸ்
//டப்பு அண்ணே டப்பு:)
//
ஆமாம் வித்யா..
//டப்பு அண்ணே டப்பு:)
//
ஆமாம் வித்யா..
//கிரிக்கெட்டுக்கு சம்பந்தமே இல்லாத எனக்கே புரியும் படி எழுதியிருக்கிறீர்கள் ஷங்கர்.
//
மிக்க நன்றி சார்..
//அதனாலே... இப்ப லீவு போட்டு வீட்லே இருந்து இம்சை அனுபவிக்க நான் என்ன? கூமட்டையா என்று சொல்லவாறீங்க. புரியுது... புரியுது.
//
:):)
நன்றி ஆதி மூல கிருஷ்ணன்
அன்பு.. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்..
//அவனுங்க சம்பாதிக்கவும் கொழுத்து திளைக்கவும் ""மோடி"" மஸ்தான் வேலை.//
ஆமாம் வண்ணத்துபூச்சியாரே..
///இந்த கிரிகெட்ட வச்சு நம்ம ஆளுங்களை ஏமாத்திகிட்டு இருக்காங்க.
//
:):):(:( ஆமாம் இராகவன்..
//finesse அது இதென்று அம்பிகள் மடமாக இருந்த கிரிக்கெட்டில் ஐபிஎல் வரவைச் சில அரசியல் காரணங்களுக்காக ஆதரிக்கிறேன்.
//
(:0(
//அரிய தகவல்கள். அப்படியே நம்ம கடைக்கும் ஒரு நடை போயிட்டு வாங்க, நானும் ஒரு குமுறு குமுறி இருக்கேன்//
கடைக்கு நான் நேத்திகே வந்துட்டேன்.
//நல்ல அலசல்
//
நன்றி அபு..
//நல்ல அலசல்
//
நன்றி அபு..
//அது எல்லாம் இருக்கட்டும் நேத்து Chennai super kings Vs Bangalore royal challengers மேட்ச் பாத்திங்களா//
நேத்து ஒரு காலியான பாரில் பீரடித்தபடி பார்த்தேன்.
@ Cable Sankar said...
//கடைக்கு நான் நேத்திகே வந்துட்டேன்.//
வந்துட்டு ஒண்ணும் பேசாம சும்மா போனா எப்படி?????
சரியான பதிவு. சம்பந்தப்பட்டவர்கள் படித்தால் இன்னும் சுவாரசியமான பின்னூட்டங்கள் வரலாம்.
ஸ்ரீ....
விறுவிறுப்பான பதிவு.. தல....20/20 stylla எழுதியிருக்கிங்க....
ஆனா matches தான் போரடிக்குது....
//நேத்து ஒரு காலியான பாரில் பீரடித்தபடி பார்த்தேன்//
நம்ள வுட்டீங்கள.... நியமா...
//ரிலையன்ஸ் கோப்பை நடந்த போது மேட்ச் பார்பதற்க்காக வேலையை ரிசைன் செய்த கிரிக்கெட் காதலன்//
ரிலையன்ஸ் ரிசைன் :-)
நான் வேலையை ரிசைன் செய்யல.. ஏன்னா... அப்போ... நான் ஆறாங்கிளாஸ்
என்னவோ போங்கண்ணே... இந்த ஐ.பி.எல் வச்சு காமெடி கீமெடி பண்ணி நமக்கும் கொஞ்சம் பொழுது போகும்....
//வந்துட்டு ஒண்ணும் பேசாம சும்மா போனா எப்படி?????
//
நேத்து பின்னூட்டம் போட அந்த கம்ப்யூட்டரில் தமிழ் வழி இல்லை.. அதனால படிச்சிட்டு போயிட்டேன்..
//சரியான பதிவு. சம்பந்தப்பட்டவர்கள் படித்தால் இன்னும் சுவாரசியமான பின்னூட்டங்கள் வரலாம்.
ஸ்ரீ....
//
மிக்க நன்றி ஸ்ரீ உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.
//விறுவிறுப்பான பதிவு.. தல....20/20 stylla எழுதியிருக்கிங்க....
ஆனா matches தான் போரடிக்குது....
//
ஆமா மேட்ச் எல்லாம் ரொம்பத்தான் போரடிக்குது.
////நேத்து ஒரு காலியான பாரில் பீரடித்தபடி பார்த்தேன்//
நம்ள வுட்டீங்கள.... நியமா...
//
நீங்க ஃப்ரியா இருப்பீங்கன்னு எனக்கென்ன தெரியும் தல. அடுத்த முறை கண்டிப்பா போவோம்.. அசோக்..
//என்னவோ போங்கண்ணே... இந்த ஐ.பி.எல் வச்சு காமெடி கீமெடி பண்ணி நமக்கும் கொஞ்சம் பொழுது போகும்....//
:) :(0(
fyi,
A very intresting blog..
fakeiplplayer.blogspot.com/
//இப்போ கல்யாணமாயிருச்சு.. அதனால ????? //
என்னது யூத்துக்கு கண்ணாலம் ஆயிடிச்சா?????????????
\\
இந்த பதிவை எழுதியதால் நான் என்னவோ கிரிக்கெட் எதிர்பாளன் என்று நினைக்க வேண்டாம். ரிலையன்ஸ் கோப்பை நடந்த போது மேட்ச் பார்பதற்க்காக வேலையை ரிசைன் செய்த கிரிக்கெட் காதலன் நான். இப்போ கல்யாணமாயிருச்சு.. அதனால ?????
\\
இந்த டிவில மட்ச் பாக்குறவங்களை கண்டா கொலை பண்ணணும் போல தோணும்...
:))
//என்னது யூத்துக்கு கண்ணாலம் ஆயிடிச்சா?????????????
//
யூத்தெல்லாம் கல்யாணம் செய்யக்கூடாதுன்னு எவன் சொன்னது..?
//என்னது யூத்துக்கு கண்ணாலம் ஆயிடிச்சா?????????????
//
யூத்தெல்லாம் கல்யாணம் செய்யக்கூடாதுன்னு எவன் சொன்னது..?
Post a Comment