Thottal Thodarum

Apr 2, 2009

உலக சினிமா –Leon (1994)

402px-Léon_poster

ஒரு புரபஷனல் கொலைகாரனுக்கும், பன்னிரெண்டு வய்து சிறுமிக்கும் நடக்க்கும் இமோஷனல், திரில்லர். லியோன் ஒரு ஹிட்மேன் அவன் நியுயார்கில் ஒரு ப்ளாட்டில் வசிக்கிறான். எந்த விதமான பந்த பாசத்துக்கும் அடிபணியாதவன். அவனுகென்று அவன் வளர்க்கும் செடியை தவிர எந்தவிதமான உறவுகளும்  இல்லாதவன்.
799px-Leonoutside2

ஒரு நாள் பக்கத்து வீட்டில் வசிக்கும் மடில்டா என்கிற பெண்ணை சந்திக்கிறான். அவளது அப்பா ஒரு தில்லாலங்கடி டிரக் என்போர்ஸ்மெண்ட் ஆபீஸர் ஸ்டான்பீல்டின்  கையாள் அவர் கொடுக்கும் போதை பொருட்களை ம்றைத்து  சப்ளை செய்யபவன். ஒரு நாள் சரக்குகளை தனக்கு எடுத்து வைத்து விற்க முயற்சிக்க, அது தெரிந்து அவனின் குடும்பத்தையே கொன்றுவிடுகிறான். அந்த நேரத்தில் மளிகை கடைக்கு போயிருந்த மடில்டா மட்டும் தம்பிக்க, லியோனின் ப்ளாட்டி அடைக்கலமாகிறாள். தன்னுடய சின்ன தம்பியை கொன்ற் ஸ்டான்பீல்டை கொல்ல வேண்டும் என்று நினைக்கிறாள். இவர்களுக்குள் உறவு மலர்ந்ததா..? மடில்டா பழிவாங்கினாளா? லியோனுக்கு என்ன ஆயிற்று..? என்ற கேள்விகளுக்கு உயிரோட்டமான திரைக்கதை அமைத்து தந்திருக்கிறார்கள்
t51896eaone

மடில்டாகவரும் 12வயது கருமை கண்களுடய நடில்லாவின் நடிப்பும், அழகும் நம்மை ரொம்ப நாளைக்கு  நினைவில் துறத்தும். லியோனாக வரும் ஜீன் ரினோவின் நடிப்பும் அருமை. படத்தில் அவர் ஒரு வசனம் சொல்வார். மடில்டா லியோனிடம் உனக்கு அந்த செடி ரொம்ப பிடிக்குமா ? என்று தொட்டியில் வளர்க்க படும் செடியை பற்றி கேட்க, அதற்கு லியோன் “ ஆம்.. இந்த  செடி என்னை போல..  இதற்கும் வேர்கள் கிடையாது” எனபது போன்ற அருமையான வசனங்கள் ஆங்காங்கே இயல்பாய் வருகிறது.

225px-Natalie_Portman
அதே போல் லியோனுக்கு மடில்டாவின் மேல் வரும்  தந்தையுணர்வை வெளிபடுத்த தெரியாமல் வெளிபடுத்தும் காட்சிகளும், மடில்டா லியோனிடம் ஏற்பட்டுள்ள உறவை வெளிபடுத்த தெரியாமல், அவனை காதலிப்பதய் சொல்லும் காட்சிகளாகட்டும்,  ஜீன் கெல்லியை தவிர வேறு யாரையும் தெரியாத லியோனிடம் மடோனா போல் வேடமணிந்து கொண்டு விளையாடும் காட்சிகளாகட்டும், க்ளைமாக்ஸில்  நடக்கும் சண்டைகாட்சிகளாகட்டும் இவர்களின் நடிப்பும், Theirry Arbocastன் ஒளீப்பதிவும், Luc Bessonனின் இயக்கமும் superb..
180px-Luc-Besson-Taken

இயக்குனர் நிகிதா, டிரான்ஸ்போர்டர், லேட்டஸ்டாய் டேக்கன் போன்ற படங்களை இயக்கிய பிரபலம்.

LEON – கல்லுக்குள் ஈரம்


Blogger Tips -பெ’ண்’களூரை படிக்க இங்கே அழுத்தவும்

உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..


Post a Comment

35 comments:

பாலா said...

பார்த்தாச்சி சங்கர்.! இந்த படத்து மேல திடீர்ன்னு ஒரு ஈர்ப்பு, சமீபமா எல்லாருக்கும் வந்துடுச்சி. நிறைய சைட்களில் ரீ-ரிலீஸ் ஆகிட்டு வருது.

Suresh said...

அருமையா இருக்கு :-)

Vidhya Chandrasekaran said...

ஒரே உலகப்படமா இருக்கு. ஆஜர்:)

வால்பையன் said...

இந்த படத்தை காப்பி அடிச்சி அர்ஜுனை வச்சி ஒரு படம் எடுத்தார்கள்!
யாராவது சொல்லிங்கன்னு பார்த்தா சொல்லல!

நையாண்டி நைனா said...

Mr.வால்பையன்,
யாரும் "ஆணை" இடாததால், யாரும் அந்தப்படத்தை சொல்ல வில்லை. இதோ நீங்கள் "ஆணை" இட்டுவிட்டீர்கள் நான் சொல்கிறேன் அது "ஆணை" சரியா.

thanjai gemini said...

நேர்த்தியான விமர்சனம் லைப்ரரியில் தேட ஆரம்பிக்கிறேன்
வால் பையன் அது ஆணை இல்லை சூரியபார்வை

யாத்ரீகன் said...

andha arjun padathula scene by scene, makeup by makeup copy adichirupanunga.. vetti pasanga..

நையாண்டி நைனா said...

தஞ்சை ஜெமினி சொன்னது தான் சரி, நான் சிறிது தடுமாறி விட்டேன்.

யூர்கன் க்ருகியர் said...

நன்கு எழுதி உள்ளீர்கள்.
நன்றி.

ராஜ நடராஜன் said...

நானெல்லாம் பதிவைப் படித்து பெருமூச்சு விட்டுக்க வேண்டியதுதான்:(

கிரடிட் கார்டு வச்சுகிட்டு தண்ணிக்கு அலையற மாதிரி காசு கொடுத்தாலும் விற்க ஆளில்லை.

Venkatesh subramanian said...

ஆணை கிடையாது சூர்யபார்வை இந்த படம் தான் LEONயை அப்படியே காப்பி அடித்த படம்

Venkatesh subramanian said...

உங்கள் விமர்சனம் மிக அருமை

எம்.எம்.அப்துல்லா said...

ஆயிரம் படம் வந்தாலும் எங்க அண்ணன் ரித்தீஷோட படத்துக்கு ஈடாகுமா???

:))

இட்லி வடைகறி said...

Arjun copied this film and made a film. Film name Surya

Cable சங்கர் said...

நன்றி
இட்லி வடைகறி,
வெங்கடேஷ் சுப்ரமணியம்
ராஜநடராஜன்
ஜுர்கேன் க்ருகேர்
யாத்ரீகன்,
நையாண்டி நைனா,
ஆகியோரின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி

Cable சங்கர் said...

//ஆயிரம் படம் வந்தாலும் எங்க அண்ணன் ரித்தீஷோட படத்துக்கு ஈடாகுமா???

:))//

வர வர ரொம்பதான் குசும்புண்ணே..

Cable சங்கர் said...

நன்றி பாலா, வித்யா, தஞ்சை ஜெமினி.. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்

Cable சங்கர் said...

நன்றி சுரேஷ்.. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.

King Viswa said...

சங்கர்,

இந்த படம் பின்னர் ஹிந்தியில் கூட எடுக்கப் பட்டது,

பாபி தியோல் நடிப்பில் பிச்சூ என்ற பெயரில் ஜூலை மாதம் 2000'ம் ஆண்டில் வந்தது.

சூரிய பார்வை படத்தில் கமர்ஷியலாக இயக்குனர் செய்த தவறை செய்யாமல் (ஒரு சிறுமியை வைக்காமல்) ஹிந்தி படத்தில் ராணி முகேர்ஜியை (சிறுமியின் உடையை கொடுத்து) நடிக்க வைத்து வெற்றி பெற செய்தனர்.

கிங் விஸ்வா.
தமிழ் காமிக்ஸ் உலகம்

குசும்பன் said...

தங்கள் பதிவில் லேபிள் வசதியை வைத்தால் பழய உலகதிரைப்பட பதிவுகளைலேபிளை கொண்டு படிக்க எளிதாக இருக்கும்

K.S.Muthubalakrishnan said...

Good Review. i will try to see .

i dont know where to get this DVD.

குளோபன் said...

வால் பையன்...

உங்களது பார்வை...

"சூர்ய பார்வை"!

- குளோபன்

குளோபன் said...

நேற்று தான் 5-வது முறையாக யு.டி.வி. வோர்ல்ட் மூவி சேனலில் லியோன் பார்த்தேன். உங்களுடைய திறனாய்வு அருமை. இயன்றால் இப்படத்தின் தொடர்ச்சியாக கருதப்படும் , 'மெடில்டா' பற்றியும் எழுதுங்கள்.

- குளோபன்

குளோபன் said...

நேற்று தான் 5-வது முறையாக யு.டி.வி. வோர்ல்ட் மூவி சேனலில் லியோன் பார்த்தேன். உங்களுடைய திறனாய்வு அருமை. இயன்றால் இப்படத்தின் தொடர்ச்சியாக கருதப்படும் , 'மெடில்டா' பற்றியும் எழுதுங்கள்.

- குளோபன்

MSK / Saravana said...

அட.. இப்போதான் நானும் இந்த திரைப்படத்தை பற்றி எழுதி போஸ்ட் பண்ணிட்டு பார்த்தா, நீங்களும் போட்டு இருக்கீங்க.. same pinch.. :)

Cable சங்கர் said...

//அட.. இப்போதான் நானும் இந்த திரைப்படத்தை பற்றி எழுதி போஸ்ட் பண்ணிட்டு பார்த்தா, நீங்களும் போட்டு இருக்கீங்க.. same pinch.. :)//

:):) நம்ம டெம்ப்ளேட் கூட.. same pinch

Cable சங்கர் said...

மெடில்டா இன்னும் பார்கவில்லை.. பார்த்துவிட்டு எழுதுகிறேன். சரவணன்

Cable சங்கர் said...

என்னாப்பா.. யாரும் இன்னைக்கு ஓட்டு போடல.. ??

சிரவணன் said...

மன்னிக்கணும் அது மெடில்டா இல்ல. நிகிடா

ஷண்முகப்ரியன் said...

இந்தப் படத்தைதான் அர்ஜுன் தமிழில் ஏற்கனவே எடுத்து விட்டாரே ஷங்கர்.நீங்கள் பார்க்க வில்லையா?

அத்திரி said...

படம் நல்லாயிருக்கும் அண்ணனே சொல்லிட்டாரு..

Cable சங்கர் said...

//இந்தப் படத்தைதான் அர்ஜுன் தமிழில் ஏற்கனவே எடுத்து விட்டாரே ஷங்கர்.நீங்கள் பார்க்க வில்லையா?//

தெரியும் சார்.. இருந்தாலும் ஒரிஜினல் ஒரிஜினல்தானே.. தமிழில் சொதப்பியிருப்பார்கள்.

Cable சங்கர் said...

/./படம் நல்லாயிருக்கும் அண்ணனே சொல்லிட்டாரு..//

நன்றி அத்திரியண்ணே. உங்க ஞாயத்துக்கும், வந்ததுக்கும்.

rajeshblack said...

transporter directed by corey yuen and taken directed by pierre morel, not by luc besson. but he wrote screenplays for both the movies.

Anyway reviews are good and also your intention to introduce world movies to our people. keep going,

Good luck

asker said...

all world movies available at dvd world burma bazzar