எ.வ.த.இ.மா.படம்? – Mumbai Meri Jaan
11-7-2006ல் மும்பையில் நடந்த தொடர் ரயில் குண்டுவெடிப்பு ஓவ்வோரு
மும்பைகாரர்களுக்கும் தனிப்பட்ட முறையில் நடந்த ஓரு அதிர்சியே. கொஞ்சம் நினைத்து பாருங்கள் அந்த நேரத்தில் அதே ரயிலில்களில் நீங்கள் இருந்திருந்தால் அதிலிருந்து தப்பியிருந்தாலும், உங்கள் மனநிலை என்னவாக இருந்திருக்கும். எப்படி அதிலிருந்து மீள்வீர்கள். அதை பற்றி படம் தான் நிஷிகாந்த காமத என்கிற இயக்குனர் இயக்கிய ஹிந்தி படம். "மும்பை மேரி ஜான்".
இன்னும் சில நாட்களில் ரிட்டைய்ர் ஆக போகும் பாடில்(பரேஷ் ராவல்), அவரின் வாழ்க்கை தத்துவம் "எப்பவுமே ஓரமாய் நின்று பார்க்க பழகிக்கொள், அந்த படத்தில் நடிக்க ஆசைபடாதே" என்றும், தன் வாழ்கையில் எந்த ஓரு நேரத்திலும், மிகப் பெரிய திருடனையோ, தீவிரவாதியையோ, பிடித்ததில்லை. என்பதில் எந்த வருத்தமும் இல்லாதவர். பரேஷ் ராவலுக்கு ஓரு லைப் டைம் கேரக்டர்.மனுஷன் சும்மா பின்னியிருக்கிறார்.
அவருடய அசிஸ்டெண்டாக வரும் கதம் (விஜய் மெளரியா) தனது புது பெண்டாட்டியுடன் ஹனிமூன் போகயிருந்த நேரத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததால், அவருடய லீவ் கேன்சலாகி, குண்டுவெடிப்பு நிகழ்ந்த நாளன்று பாரில் லஞ்சம் வாங்க மறுப்பதும், இந்த உலகையே மாற்ற நினைத்து அவரின் செய்கிற செய்கைகள் நீர்த்து போவதும், அந்த கோபத்தை கையாலாகாத ரோட் சைட் டீ விற்பவனிடம் காட்டுவதும், குண்டு வெடிப்பினால் நடந்த பாதிப்பையும், தன்னுடய நிலையையும் நினைத்து மனதுக்குள் புழுங்கி, பாடிலின் ஓரு மழைநாள் பார்டியில் போதையின் உச்சத்தில் தன்னைதானே சுட்டுக் கொள்ள முயற்சிபதும். சிம்ப்ளி சூப்பர்.
நிகில் தன்னால் சொந்தமாய் காரும், டிரைவரும் வைத்துக் கொள்ள அனுமதியிருந்தும், எதற்காக உபயோகபடுத்தி ஏற்கனவே கெட்டிருக்கும் மும்பையின் டிராபிகையும், பொலீயுசனையும் அதிக படுத்த வேண்டுமென, பிளாஸ்டிகை யூஸ் பண்ணாமல் இருக்கும்படி அவ்வப்போது பழம் விற்கும் கடைகாரனிடம் பேசும் ஆக்டிவிஸ்டாக மாதவன். அவருக்கு நிறைமாத கர்பிணி மனைவி. குண்டு வெடிப்புக்கு உள்ளான டிரையினில் எந்த வித பாதிப்பில்லாமல் இருந்தாலும் அந்த அதிர்ச்சியில்,மலங்க, மலங்க விழித்துக் கொண்டு , என்ன செய்வதறியாமல் அங்கே நடக்கும் , நடந்திருக்கும் அவலங்களையேல்லாம் பார்த்து கொண்டிருக்கும் ஓருவனை நம் கண் முன்னே நிறுத்துகிறார்.மாதவன்.
ருபாலி ( சோஹா அலி கான்) ஓரு நியூஸ் சேனல் ரிப்போட்டர். பரபரப்பான ஓரு ரிப்போட்டர்.மற்றவர் சோகங்களை எல்லாம் பரபரப்பான நியூஸாக ஆக்குவதில் வல்லவர். திருமணம் நிச்சயக்கப்பட்ட பெண். அவரின் வருங்கால கணவன் அந்த குண்டு வெடிப்பில் இறந்துவிட, அதே நியூஸ் சேனலுக்கு, அவரே நீயூஸாவதும், தான் செய்த அதே வேலையை, அதே கேள்விகளை தன்னிடமே, கேட்கப்படும்போது, அவர் நொறுங்கி போவதும், அதை கொஞ்சம் கூட தனிமனித நோக்கிலிருந்து பார்க்காமல்,ஓரு நியூசாகவே பார்க்கும் அந்த சேனலின் தலைவர்.
தாமஸ் ( இர்பான் கான்) அவரின் இன்னொரு மிகச் சிறந்த நடிப்புக்கு இந்த படம் ஓரு உதாரணம்.பம்பாயில் டீ விற்கும் தமிழன். தன்னால் தனது மகள், மனைவியை மிகப் பெரிய மால்களூக்கு,அழைத்துபோய் அங்கே இருக்கும் செண்ட் கடையில் இருக்கும் செண்ட்களையெல்லாம் ஓசியில் போட்டு பார்க்க, அங்கே இருந்தவர்கள் அவனை அடித்து விரட்டுவது, அந்த மாதிரி மால்களையேல்லாம் பழிவாங்குவதாக நினைத்து, ஓரு ரூபாய் காய்ன் போனில் எல்லா மால் களிலும் பாம் இருப்பதாக போலீசூக்கு போன் செய்து அவர்கள் வியாபரத்தை குழப்புவதால் மன சந்தோஷமடையும் ஓரு , பாமரனை கண்முன்னே காட்டியிருக்கிறார். தான் செய்த ஓரு போனால் பாதிக்கப்பட்ட ஓரு வயதானவரின் பாதிப்பை கண் முன் பார்த்த பின் அவர் பிழைத்துவிட்டாரா? என்று அலைபாய்வதும், அவர் டிஸ்சார்ஜ் ஆகி,வரும் வரை தினமும் அந்த ஹாஸ்பிடலின் வாசலில் காத்திருப்பதும், அவர்கள் டாக்ஸிக்காக காத்திருக்கும்போது, ஓரு டாக்ஸியை பிடித்து கொடுத்து, அது நகர்கையில் கையில் ரோஜா கொடுப்பதும், கவிதை.
ஓரு டீக்கடையில் தினமும் உட்காரும் நண்பர்கள், ஓரு கம்ப்யூட்ட்ர் கம்பெனியில் சேல் மேனாக இருக்க்கும் சுரேஷ்(கே.கே.மேனன்) இம்மாதிரியான குண்டுவெடிப்புக்கெல்லாம் காரணம் முஸ்லிம்கள் தான் என்றும், தன்னை போலவே தினமும் அந்த டீக்கடைக்கு வரும் ஓரு முஸ்லிம் இளைஞனை குண்டுவெடிப்பு நிகழ்விலிருந்து காணாததால், அவர் வீடு வரைக்கும் சென்று விசாரித்து, அவர் ஏன் இதற்கு காரணமாய் இருக்கக் கூடாது என்று எல்லா முஸ்லிம் கலையும் சந்தேகப்படும் ஓரு கோபக்கார இளைஞர்.
இவர்களை வைத்து பின்னப்பட்ட ஓரு எமோஷனலான, அருமையான் திரைக்கதை படத்திற்கு பலம்
படத்தை இயக்கிய இயக்குனருக்கு இது மூன்றாவது படம், அவரின் முதல் படமான "டோம்பிவில்லி பாஸ்ட்" என்கிற மராத்தி படம் மிகப் பெரிய ஹிட், பல சர்வதேச விருதுகளை வாங்கிய படம், ஏனோ தமிழில் செய்தபோது "எவனோ ஓருவன்" வரவேற்கபடவில்லை. ஓரு தரம் வாய்ந்த இயக்குனருக்கான அத்தனை அம்சங்களும் இவரிடம் இருக்கிறது.
டெக்னிகலாக, கேமரவாகட்டும், எடிட்டிங்காகட்டும், பிண்ண்னி இசையாகட்டும், எந்த வித குறையும் கிடையாது.
சிம்ப்ளி சூப்பர்ப்..
எ.வ.த.இ.ம.படம்?= எப்ப வரும் தமிழில் இந்த மாதிரி படம்?
Comments
கலக்கல் விமர்சனம் தல.
அப்பாலிக்கா எ.வ.த.இ.மா.படம்?
டாக்டர்கள், தல, சொம்பு,பல்லி,வருங்கால எம்.பி னு நெறய பேர் செய்யற கலைச்சேவையை பார்த்ததுக்கு அப்புறமும் இப்படி கேட்டுபுட்டீங்களே, இந்த கேள்வி உங்களுக்கே இது கொஞ்சம் ஓவரா தெரியல....
அருமையான விமர்சனம்,ஷங்கர்.நான் இன்னும் படம் பார்க்கவில்லை.ஆனால் பார்த்தே தீர வேண்டும் என்னும் ஆர்வத்தைத் தூண்டி விட்டீர்கள்.நன்றி.
-----do -------
எனக்கு ஹிந்தி தெரியாம பாத்தே, லயிச்சுப் போயி ஒரு பதிவு போட்டேன்!!!
மக்களின் மன உணர்வுகளை வெளிப்படுத்துற அருமையான படம்
நரேஷ்
http://nareshin.wordpress.com/2008/10/01/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D/
அண்ணே விமர்சனம் சூப்பர்.
அதே நேரம் மும்பை மேரி ஜான், ஒரு அற்புதமான கவிதை. ஒவ்வொரு மனிதனின் தனி பட்ட வாழ்க்கையில் அந்த ஒரு குண்டு வெடிப்பு சம்பவம் எப்படி பாதித்தது, அதில் இருந்து அவர்கள் எப்படி மீழ்கிறார்கள், என்று கதையின் போக்கோடு, போரடிக்காமல் சொல்வதிலேயே டைரக்டர் சாதித்து விட்டார். நல்ல கதை என்று சமீபத்தில் இந்த படம் பிலிம்ஃபேர் விருது வாங்கியதாக நியாபகம். சரியான தேர்வுதான்.
டீ விற்கும் இர்பான் ரோஜா பூவை பரிசளிப்பது, தன் வருங்கால கனவன் செய்திகளை வியாபாரமாக்காதீர்கள் என்று கூறுவதை சட்டை செய்யாமல் இருந்தது, கடைசியில் தானே அதற்கு பலி ஆகும் சோஹா, மற்றும் கடைசி காட்சியில் மொத்த ஊரும் மவுனம் அனுஷ்டிக்கும் போது, மாதவன் முகத்தில் தெரியும் அந்த பெருமை, கவுரவம், இது தான்டா இந்தியா என்று அடித்து கூறும் காட்சிகள்.
தமிழில் இப்படிபட்ட படம் வெளிவர வேண்டும் என்பது தான் என் அவா கூட. இதே கருத்தை சற்று கமர்ஷியலாக கூறிய த வெட்னஸ்டே படத்தை எடுத்து கொண்டிருக்கும் கமல்ஹாசன் மனது வைப்பாரா....? காலம் பதில் சொல்லட்டும
நல்ல ஒரு படத்திற்கான, அருமையான விமர்சனம் சங்கரே. உங்கள் எல்லா கருத்தையும் வழி மொழிகிறேன்.
हिन्दि मे कहे तो, नुगम्बो खुश हुआ :)
காமிக்கியல் & ராணி காமிக்ஸ்
//
நன்றி அக்னிபார்வை.
நன்றி பிரேம்ஜி.. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்
//
கண்டிப்பாக பார்த்துவிடுங்கள் ஷண்முகப்பிரியன் சார்.. அருமையான படம்
கலக்கல் விமர்சனம் தல.
//
நன்றி தராசு.. நன்றி வண்ணத்து பூச்சியாரே.. ஷண்முகப்பிரியனை வ்ழிமொழிந்ததற்க்கு..
//
மிக்க நன்றி அனானி.. உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும்
மக்களின் மன உணர்வுகளை வெளிப்படுத்துற அருமையான படம்
//
நல்ல படத்துக்கு மொழி தேவையில்லை நரேஷ் குமார்.. வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி
அனானி அதற்கு அர்த்தம் எப்ப வரும் தமிழில் இந்த மாதிரி படம்.
நன்றி காமிக்கியல்.. உங்கள் நீண்ட பின்னூட்டத்திற்க்கும்,, வருகைக்கும்.
அண்ணே நீங்கெல்லாம் சினிமாவுல இருக்கீங்க. எனக்கு நம்பிக்கை இருக்குன்ணே. சீக்கிரமே தமிழ் சினிமா மாறும்.
ஹி..ஹி...ஹி....
ஹா..ஹா.. ஹா...
இந்த சிரிப்பு எல்லாம் உங்களோட நகைச்சுவை உணர்வை நெனச்சித்தான்.
என்னைக்கு வரும்?
அந்த ஆண்டு எனது 125 வது நினைவு ஆண்டாக அல்லவா இருக்கும். நான் எப்படி பார்குறதாம், சீக்கிரம் பரிசல் அண்ணன்கிட்டே சொல்லி இதற்கு ஒரு ஏற்பாடு செஞ்சி வச்சிட்டுதான் மண்டைய போடணும்.(இப்போ நான் தவழுற, கொஞ்சம் புத்திசாலி கொழந்தை)
//
வித்யா said...
இந்த மாதிரி படமெல்லாம் தமிழ்ல வராம இருக்கிறது தான் பெட்டர். நாஸ்தி பண்ண்ண்ணிடுவாங்க:(
//கண்டிப்பா ஒத்துக்கிறேன்.
இல்லன்னா, விஷால், சிம்பு, விஜய் மாதிரி ஒருத்தரு நடிச்சி நம்மள கொன்னுடுவாங்க.
டாக்டர்கள், தல, சொம்பு,பல்லி,வருங்கால எம்.பி னு நெறய பேர் செய்யற கலைச்சேவையை பார்த்ததுக்கு அப்புறமும் இப்படி கேட்டுபுட்டீங்களே, இந்த கேள்வி உங்களுக்கே இது கொஞ்சம் ஓவரா தெரியல....//
ரிப்பீட்டு.!
//
இப்படி சொல்லும்போதே நமக்கு பயமாஇருக்கண்ணே.. முயற்சி செய்வோம்
//
அப்படியில்லை வித்யா.. நம்மாளுங்க.. நிறைய பேர் இம்மாதிரி படங்களை ஸ்பானிஷ்லேயோ, இங்கிலீஷிலேயோ, மத்த மொழிகள்ல எடுத்தா ஆகா ..ஓகோன்னுவாங்க.. அதையே தமிழ்ல எடுத்தா மரண மொக்கைன்னு எழுதுவாங்க..
சர்ப்ரைசிங்..!!! :) :)
கொஞ்சம் உண்மை...
உங்கள் விமர்சனம்..அருமை...நீங்கள் ரசித்ததோடு மட்டுமல்லாமல்..எங்களையும் பார்க்க தூண்டி விட்டீர்கள்..
நீங்கள் திரைதுறையில் மேலும் பல வெற்றிகளை குவிக்க எனது வாழ்த்துக்கள்...
Good Review
i will see this film very quickly
குறிப்பாக மாதவனின் பயம்! ஒரு நடுத்தர வர்க்க மெட்ரோ செக்சுவல் இளைஞனின் எண்ணம் மிக துல்லியமாக கணிக்கப்பட்டிருக்கிறது.
அதே போல டீவி சேனல்களின் மக்களின் துயரத்தில் இவர்கள் தனது டிஆர்பி ரேட்டிங் பற்றி மட்டுமே சிந்திப்பது அவர்கள் செய்தி தரகர்கள் என்பதை நிரூபிக்கின்றது.
பரேஷ் ராவலின் சராசரி மும்பைக்காரனின் சித்தரிப்பு நம் மனதை விட்டு நீங்கவே நீங்காத ஒரு வேடம். அதன் சாரம் குறையாமல் நூல் பிடித்ததைப்போல அவர் நடித்தவிதம் அபாரம்
இப்படி ஒவ்வொரு ஃபிரேமும் செதுக்கப்பட்ட படம் இது
க்ளிஷே போல தெரியலாம்... பார்த்தால் புரியும்
சர்ப்ரைசிங்..!!! :) :)
//
எவனோ ஒருவன் என்கிற படம் “டோம்பிவில்லி ஃபாஸ்ட்” என்கிற மராத்தி படம். பல நாடுகளில் சுமார் 21 விருதுகளை அள்ளிய படம். ஏனோ தமிழில் செல்ப் எடுக்கவில்லை.. பாலா..
நீங்கள் திரைதுறையில் மேலும் பல வெற்றிகளை குவிக்க எனது வாழ்த்துக்கள்...//
மிக்க நன்றி.. கண்ணா.. உங்கள் வாழ்த்துக்கும், கருத்துக்கும், வருகைக்கும்
Good Review
i will see this film very quickly
//
கண்டிப்பாக பாருங்கள் முத்து பாலகிருஷ்ணன்.
//
எனக்கு வலது சாரி.. இடது சாரியை பற்றி தெரியாது ஸ்ரீ.. ஆனால் வெட்னெஸ்டேவும் ஒரு விதத்தில் அருமையான படமே..
க்ளிஷே போல தெரியலாம்... பார்த்தால் புரியும்
//
க்ளிஷே போல் தெரிந்தாலும் படம் பார்த்து முடிந்தவுடன் நிதர்சனம் புரிய்ம் ஸ்ரீ...