Thottal Thodarum

Apr 1, 2009

உலக சினிமா - Onibus174



ரியோ டி ஜெனிரோவில் ஜூன் மாதம் 12ஆம் தேதி 2000த்தில், முழுவதும் பயணிகளால் நிரம்பியிருந்த பஸ்நெ174ஐ, பட்ட பகலில் ஆயுதம் ஏந்திய சாண்ட்ரோ டோ நாஸிமெண்டோ என்கிற ஓருவனால் கடத்தப்பட்டுகிறது..

பஸ்ஸை ஓரு இடத்தில் நிறுத்தி அதிலிருந்து எவராவது வெளியேற முற்பட்டால், அவர்களையும், போலீஸ் ஏதாவது செய்ய முயன்றால் பஸ்ஸில் உள்ள எல்லா பயணிகளையும் கொன்று விடுவதாய் மிரட்டுகிறான்..

இவை அனைத்தும் இதை அங்குள்ள பிரேசிலியன் தொலைக்காட்சி நேரலை நிகழ்சியாக தன்னுடய சேனலில் ஓளிபரப்புகிறது.. அந்த கடத்தல்காரனிடம் மாட்டிய பயணிகளின் நிலைமை, பயணிகளை தப்பிக்க வைக்கும் முயற்சியில் போலீஸ் நடத்தும் போராட்டம் என்று எல்லா விஷயங்க்ளும் நேரலையாய் தொலைக்காட்சியில் ஓளிபரப்பாகி கொண்டிருப்பதால் ஏற்படும் பதட்டம்.. என்று போகிற இந்த படம் அதை மட்டும் காட்டவில்லை..

பஸ்ஸை கடத்திய சில நிமிடங்களில் அவன் யாரென்று கண்டுபிடிக்க முயற்சித்து அதை கண்டுபிடித்து, அவன் ஏன் இப்படி ஆனான்? அவனுடய குடும்ப பிண்ணனி, என்று அவனின் வேறு முகத்தையும் தேடி, தேடி காட்டுகிறது.. ஏழ்மையும், படிப்பில்லாததால் சம்பாதிக்கும் திறன் இல்லாத அவன் மிக சாதாரணமான ஓருவனாய் தான் வாழ்ந்து வந்திருக்கிறான்.. அவனை எது இந்த மாதிரியான ஓரு கடத்தலுக்கு தள்ளியது என்று அவனை பற்றிய இன்வெஸ்டிகேடிவ் முறையில் காட்டபட்டு, இடையில் இங்கே நடக்கும் நேரலை நிகழ்வையும், மாற்றி மாற்றி காட்டி நம்மை நெகிழ வைக்கிறார் இயக்குனர்..ஜோஸ் பதில்லா..


அவனினி தந்தை அவன் தாய் கருவுற்றிருக்கும் போதே அவளிடமிருந்து பிரிந்துவிட..அவனை வளர்க்க மிகவும் கஷ்டப்படும் அவனின் தாய், அவன் ஆறு வயதிருக்கும் போது அவன் கண்முன்னே தாய் கொல்லபடுவதை பார்க்கிறான்.. அதன் பிறகு அவனை வளர்க்கும் பாட்டி, பின் வேலையில்லமை, வீடில்லாமல் திரியும் பல பிரேசிலிய இளைஞர்களின் போதை பழக்கங்கள் போன்றவற்றை தீவிரமாய் விவரிக்கிறது இந்த ஆவண படம்..

போலிஸ் அவனிடமிருந்து பயணிகளை காப்பாற்ற அவனை சுட முற்பட, அவனோ தான் சரணடய ஓத்து கொள்ளும் நேரத்தில் அவ்வளவு நேர நிகழ்வின் அயர்ச்சியில் போலீஸ் சுட, அதில் அவனுக்கு பதிலாய் வேறு ஓரு பயணி இறக்கிறார்.

கடைசியில் சரணடைந்த அவனை போலீஸார் கைது செய்து அழைத்து போகிறார். இதில் நடந்த ஓரு விஷயம் என்னவென்றால் அவன் சரண்டைந்த பிறகு அவனை அழைத்து போகையில் அவன் இற்ந்து விட்டான்.. போலீசார் அவனை அடைத்து அழைத்து சென்ற வண்டியில் அவன் மூச்சு அடைத்து இற்ந்துவிடுகிறான்..என்று சொல்லபட்டாலும், போலீசாரால் அவன் கொல்லப்பட்டான் என்றும் பரவலாய் பேசப்படுவதாய் காட்டபடுகிறது..

படத்தில் வரும் பஸ் கடத்த்ல காட்சிகள் அனைத்தும் பிரேசிலியன் டிவியில் காட்ட்பட்ட ஓரிஜினல் புட்டேஜையே எடுத்தாண்டு இருக்கிறார்கள்.. அவனை பற்றிய தேடலும், அவனை பற்றி அவனுடய் பாட்டி போன்ற்வர்களின் பேட்டியும், உங்கள் மனதை உருக்கும்.. எந்த சமுதாயம் அவனை இப்படி துறத்தியது என்கிற போது நம் மனது கனக்கத்தான் செய்யும்..

இந்த படம் பெருபாலும் பிரேசிலை தவிர பல நாட்டு படவிழாக்களில் பரிசுகளை வென்றிருக்கிறது...

டிஸ்கி..
சென்ற ஆண்டு பம்பாயில் ஓரு பிகாரி இளைஞன் பஸ்ஸை கடத்த முயற்சித்து அதில் அவனை போலீஸார் கொன்றதும், அதை பற்றிய லைவ் கவரேஜூம்.. அதை பார்த்தும்.. எனக்கு இந்த படம் தான் ஞாபகம் வந்தது..எது அந்த பிகாரி இளைஞனை இப்படி துரத்தியது.. நம் அரசியல்வாதிகளின் அட்டூழியத்தினால் தானே...அரசியல்வாதிகளே யோசியுங்கள்.. உங்களின் சுய அரசியல் லாபத்துக்காக மக்களை தூண்டிவிட்டு அதில் குளிர் காயாதீர்கள்..

Blogger Tips -தமிலிஷில் பதிவுகளை இணைக்கலாமா பதிவை படிக்க இங்கே அழுத்தவும்

உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..


Post a Comment

23 comments:

தராசு said...

//சென்ற ஆண்டு பம்பாயில் ஓரு பிகாரி இளைஞன் பஸ்ஸை கடத்த முயற்சித்து அதில் அவனை போலீஸார் கொன்றதும், அதை பற்றிய லைவ் கவரேஜூம்.. அதை பார்த்தும்.. எனக்கு இந்த படம் தான் ஞாபகம் வந்தது..எது அந்த பிகாரி இளைஞனை இப்படி துரத்தியது.. நம் அரசியல்வாதிகளின் அட்டூழியத்தினால் தானே...அரசியல்வாதிகளே யோசியுங்கள்.. உங்களின் சுய அரசியல் லாபத்துக்காக மக்களை தூண்டிவிட்டு அதில் குளிர் காயாதீர்கள்..//

அண்ணே,

என்னமோ சொல்ல வர்றிங்கன்னு தெரியுது, ஆனா என்ன சொல்றீங்கன்னு,,,,!!!!!

ஓஹோ, தேர்தல் வருதா, சரி.., சரி...

thanjai gemini said...

இது மாதிரி நேரத்துல தான் வெள்ளகாரனுக்கே அடிமையா இருந்துருகலாம்னு தோணுது . இங்க இந்த அரசியல்வாதிகள் கிட்டயும் நம்ம பொழப்பு அப்டிதான ஓடுது - தஞ்சை ஜெமினி

thanjai gemini said...

சாரி நான் படத்த பத்தி எதுவும் சொல்லல.நான் இந்த படம் பாக்கல ஆனா உங்க விமர்சனம் படிச்சதில படம் பார்த்த உணர்வு. நேர்த்தியான விமர்சனம் உலக சினிமாவையும் உள்ளூர் நிகழ்வையும் ஒருசேர சொல்ல உங்களால்தான் முடியும்

Vidhya Chandrasekaran said...

present sir:)

வால்பையன் said...

இந்த படமும் உண்மை சம்பவம் தான்!
அதன் வீடியோவை டிஸ்கவரியில் ஒருமுறை காட்டினார்கள்!

Joe said...

அருமையான பதிவு!

அருகாமையில் உள்ள வீடியோ லைப்ரரி-இல் கிடைக்கிறதா என்று பார்க்கிறேன்.

மேவி... said...

appadiya....
udane intha padathin dvd vangira vendiyathu thaan

பாலா said...

லைப்ரரியில் இல்லை சங்கர். வேற எங்கயாவதுதான் தேடணும்! :-(


ஆமா இதென்ன.. புதுசா மெசெஜ் எல்லாம்... அதுவும் நம்ம அரசியல்வாதிகளுக்கு சொல்ல ஆரம்பிச்சிட்டீங்க? :-))

இதெல்லாம் நடக்கிற கதையா?

பாலா said...

அட.. படம் இருக்கு..!! ஆனா இங்லீஸ் டைட்டில் BUS 174.

அக்னி பார்வை said...

இப்போவே போய் பார்த்துடுறேன்

Prabhu said...

நல்லாருக்கு

joe vimal said...

படம் பார்த்துட்டு வாறன் .இந்த மாதிரி நல்ல படங்களை அறிமுகம் செய்வதற்கு நன்றி

ஷண்முகப்ரியன் said...

போதை பழக்கங்கள் போன்றவற்றை தீவிரமாய் விவரிக்கிறது இந்த ஆவண படம்..//
கற்பனைக் கதை இன்டிரஸ்டிங்காக இருக்கிற்தே எனப் படித்துக் கொண்டே வந்தபின்தான் ஆவணப் படம் என்று தெரிந்தது,ஷங்கர்.உண்மையும்,கற்பனையும் இப்போதெல்லாம் ஒன்று போலாகி விட்டது. நல்ல பதிவு.

ஜியா said...

ஆஹா.. நெட்ஃப்லிக்ஸ்ல ப்ரேசில்லியன் மூவிஸ்ல இந்தப் படமும் இருந்துச்சே... பாக்காம விட்டுட்டேனே... இப்ப நெட்ஃப்லிக்ஸ் இல்ல... ம்ம்ம்... வாங்கி பாத்துற வேண்டியதுதான் :))

Cable சங்கர் said...

உங்கள் வருகைக்கும், கருத்துக்கும், நன்றி ஷண்முகப்ப்ரியன், ஜி அவர்களே.

Cable சங்கர் said...

நன்றி
தராசு,
வித்யா,
நையாண்டி நைனா,
ஜெமினி,
ஆகியோரின் வருகைக்கும், கருத்துக்கும்.

Cable சங்கர் said...

//ஆமா இதென்ன.. புதுசா மெசெஜ் எல்லாம்... அதுவும் நம்ம அரசியல்வாதிகளுக்கு சொல்ல ஆரம்பிச்சிட்டீங்க? :-))//

சும்மா நாமும் அரசியலை பத்தி எழுதுவோமில்ல..

Cable சங்கர் said...

நன்றி
ஜோ,
மாயாவி,
பப்பு,
அக்னிபார்வை
உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்

Cable சங்கர் said...

நன்றி
ஜோ,
மாயாவி,
பப்பு,
அக்னிபார்வை
உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்

butterfly Surya said...

நன்றி தல..

கை வசம் டிவிடி இருக்குதா..??

Cable சங்கர் said...

இருக்கு பூச்சியாரே..

உண்மைத்தமிழன் said...

என்னங்க சாமி டெம்ப்ளேட்டை மாத்திக்கிட்டே இருக்கீங்க. அவ்ளோ நேரம் கிடைக்குதா.?

பொறுமைசாலிதான் போங்க..

Indian said...

//லைப்ரரியில் இல்லை சங்கர். வேற எங்கயாவதுதான் தேடணும்! :-(
//

Bala,
torrent-aaya namaha!

I've seen the docu in some disc/nat-geo channel. Touching one.

There is another docu on world's largest heist that happened in Brazil. Very nice one. Don't miss it.