Thottal Thodarum

May 4, 2009

நியூட்டனின் 3ஆம் விதி - திரைவிமர்சனம்

newtonin-moondram-vidhi

For every Action there will be a  Equal and Opposite  Reaction. இதுதான் படத்தின் அடிப்படை. இதை வைத்து மிக அருமையாய் திரைக்கதை அமைத்து விளையாடியிருக்கிறார்  இயக்குனர் தாய் முத்துசெல்வன்.

குருவும் பிரியாவும் காதலிக்கிறார்கள், குரு ஒரு ஆடை வடிவமைப்பாளன், ப்ரியா ஈகிள் டிவி காம்பையர். இருவருக்கும் தனியாட்கள், திருமணம் செய்ய விரும்பி நாள் அன்று, ப்ரியா தூக்கிலிட்டு செத்திருக்கிறாள். தன் சாவுக்கு காரணமான வில்லனை வீடியோ கேமரா மூலமாய் அடையாளம் காட்டிவிட்டு போயிருக்க.. அவள் இறந்த அதே நாளில் அவளின் சாவுக்கு காரணமான  ஈகிள் டிவி ஓனர் ஜேப்பியை கொல்ல நாள் குறிக்கிறான்.  அதை அவனுக்கும் சொல்லி விடுகிறான். அவன் குறித்த நேரத்தில் ஜேப்பியை கொன்றானா..? இல்லையா ஜேப்பி குருவிடமிருந்து தப்பிக்க  என்ன செய்தான் என்பதுதான் கதை.
newtonin-moonram-vidhi-12

வழக்கமான பழிவாங்கும் கதையை திறமையான திரைக்கதையாலும், மிகைபடுத்தாத சூர்யாவின் நடிப்பாலும் அனல் பறக்க விட்டிருக்கிறார்கள். ஜேப்பிக்கும், குருவுக்கும் நடக்கும் கேட் அண்ட் மவுஸ் கேம் அசத்தல் ரகம். அதிலும் முதல் பாதி பூராவும் ஜேப்பியை பொறைக்கு அலையும் நாயை போல .. ஓட விட்டே பீதியை கிளப்புவதும், அவன் மூலமாகவே அவனின் கருப்பு பக்கத்தை மீடியாவுக்கு வெளியிட வைப்பதும்,  தன்னை அலைக்ழிப்பவன் யார் என்று தெரியாமல் நொந்து போயிருக்கும் நேரத்தில் தெரிந்தத்வுடன் ஜேப்பி ‘டேய் பர்ஸ்ட் ஆப் உன்னோடதா இருக்கலாம்.. செகண்ட் ஹாப் என்னுது” என்று உறுமும் இடத்தில்  நம்மை அடுத்த கட்டத்திற்கு கொண்டு போகிறது திரைக்கதை.
newton-02

இயக்குனரின்  நடிகராய் எஸ்.ஜெ.சூர்யா..  ஒரு ஹீரோவாய் பறந்து பறந்து சண்டை போட ஆயிரம் காரணங்கள் இருந்தாலும் அடக்கி வாசிக்க வைத்திருக்கும் திரைகதையால் உணர்ந்து செய்திருக்கிறார். க்ளைமாக்ஸ் காட்சியில் ஜேப்பியை கட்டி போட்டு அவர் பேசும் சில வசனங்கள் அருமை..  அட எஸ்.ஜே.சூர்யாவா இது.

புது இந்தி நடிகை.. சாயாலி ஓகே. கண்களை அகல விரித்து பயப்படுகிறார். பாடல்களில் கவர்ச்சி காட்ட பிரயத்தனபடுகிறார்.  பாவம் இருந்தால்தானே. சிரிக்கிறார், ஆடுகிறார், இறக்கிறார். 
newtonin-moonram-vidhi-08
வில்லன் ஜேப்பியாய் ஆஹா படத்தின் கதாநாயகன் ராஜீவ் கிருஷ்ணா.. டிபிகள் கார்பரேட் வில்லனாய் வலம் வருகிறார். அருமை. முதல்லேர்ந்து அவரோட பல்லுதான் அவருக்கு பிராப்ளம்.

சூர்யாவின் நண்பன், போலீஸ் ஆபீஸர் தலைவாசல் விஜய், தாரிகா, ராஜ்காந்த், வில்லனின் அடியாள் யுகேந்திரன் என்று எல்லோருமே குறையில்லாமல் செய்திருக்கிறார்கள். அதிலும் போலீஸ் ஆபீஸரின் போனை தன் போன் என்று நினைத்து உடைக்க போகும் இடத்தில் “சார்.. அது என் போன் “ என்பது போல படம் பூராவும் இயல்பான நகைச்சுவை கலந்த வசனங்கள்.   மிகையில்லாத ஒளிப்பதிவு. எடிட்டிங். என்று எல்லாமே நிறைவு.

வினயின் இசையில் பாடல்களை விட பிண்ணனி இசை படத்திற்க்கு பெரிய பலம்.

இயக்குனர் தாய்முத்துசெல்வனின் திரைகதைதான் படத்திற்கு பலமே. அதை திறம்பட செய்திருக்கிறார். கொஞ்சம் மெனக்கெட்டிருந்து பாடல் காட்சிகளை தவிர்த்திருந்தால் இன்னும் பரபரப்பான படம் கிடைத்திருக்கும். க்ளைமாக்ஸ் உத்தி புதிது.

உபரி தகவல் இயக்குனர் விஜய் டிவியில் முதலில் வந்த காத்து கருப்பு சீரியலின் இயக்குனர்.

நீயூட்டனின் 3ஆம் விதி -  புயல் வேக திரைக்கதைக்காக.. 





Blogger Tips -நிதர்சன கதைகள் -1 “என்னை பிடிக்கலையா” வை படிக்க இங்கே அழுத்தவும்



உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Post a Comment

48 comments:

Sukumar said...

ஹே ஹே நாந்தான் முதல... ஜெயிச்சேன் .... இருங்க பதிவை படிச்சிட்டு வரேன்

பாலா said...

ஹைய்யா.. இன்னைக்கும் நான் தான் ஃபர்ஸ்ட்..!!!

தமிழிஷ் லிங்க் கொடுக்கலையா சங்கர்?

Raju said...

என்னாது சூர்யாவின் மிகைப்படுத்தாத நடிப்பா?
சூர்யா ஸ்பெஷல் இரட்டை அர்த்த வசனங்கள் இருக்கா?
படம் பாக்கனுமே..!

பாலா said...

இது அழுகுணி ஆட்டம் சுகுமார்.! நான் பதிவு படிச்சிட்டு துண்டு போட்டா.. நீங்க படிக்காமலேயே போட்டுட்டூங்க..!! :( :( :(

Sukumar said...

எஸ்.ஜெ சூர்யா அமைதியா நடிசிருக்காரா ? அப்ப கண்டிப்பா பாக்கணும்.... விமர்சனம் அருமை

Vidhya Chandrasekaran said...

வெறுப்பேத்தறீங்களே:(

Sukumar said...

ஹாலிவுட் பாலா சார்... ரொம்ப சாரி ... என்ன பண்றது இப்டியே பழகிடிச்சு

FunScribbler said...

//அட எஸ்.ஜே.சூர்யாவா இது. //

என் தல, எப்போதுமே தல தான்!!:)

மேவி... said...

இந்த படத்தை உங்க விமர்சனம் படித்த பின் பார்க்க வேண்டும் என்று காத்து இருந்தேன்....
படம் அருமை ன்னு சொல்லிடிங்க .....
நேரம் கிடைத்த உடன் போய் பார்க்கிறேன்.


உங்க பசங்க பட விமர்சனத்தையும் படித்தேன். நல்ல இருக்கு ....

Cable சங்கர் said...

//என்னாது சூர்யாவின் மிகைப்படுத்தாத நடிப்பா?
சூர்யா ஸ்பெஷல் இரட்டை அர்த்த வசனங்கள் இருக்கா?
படம் பாக்கனுமே..!//

ஆமாம் மிகைபடுத்தாத நடிப்புதான். ஆனால் இரட்டை அர்த்த வசனங்கள் இருப்பதாய் யார் சொன்னது..?

Cable சங்கர் said...

//வெறுப்பேத்தறீங்களே:(//

எதை சொல்லி.. படம் நல்லாருக்குன்னு சொன்னதாலயா..? இல்ல...படம் பார்த்துட்டு உங்களுக்கு பிடிக்கலையா விதயா..?

Cable சங்கர் said...

//படம் அருமை ன்னு சொல்லிடிங்க .....
நேரம் கிடைத்த உடன் போய் பார்க்கிறேன்.//
கண்டிப்பா தியேட்டர்ல போய் பாருங்க.

//உங்க பசங்க பட விமர்சனத்தையும் படித்தேன். நல்ல இருக்கு ....//
படம் நல்லாருக்கா.. விமர்சனம் நல்லாருக்கா..?

.

Cable சங்கர் said...

வருகைக்கும், கருத்துக்கும், மிக்க நன்றி பாலா.. சுகுமார்

தராசு said...

வணக்கம்,

வழக்கமா விமர்சனங்களில் டெக்னிகல் சமாச்சாரங்களை ஒரு பிடி பிடிப்பீங்களே!!!!!!!

வினோத் கெளதம் said...

உண்மைய தான் சொல்ரிங்கள எஸ்.ஜே. சூர்யா படம் தான இது..ஒரே கன்பியூஷன்..

kalil said...

தல நானும் நேத்து தான் பாத்தேன் தல .நீங்க சொன்ன மாதிரி படம் நல்ல தான் இருக்கு . என்ன அந்த கிளைமாக்ஸ் time change trick எந்த தமிழ்
படத்துல யோ பார்த்த மாதிரி இருக்கு .ஒரு பைட் கூட இல்லாது ரொம்ப ஆறுதல் ..சூர்யா ரொம்ப அடக்கி வாசிச்சு இருக்கார்

K.S.Muthubalakrishnan said...

Shankar Sir,

I will this and Pasang Movie Quickly.

K.S.Muthubalakrishnan said...

Shankar Sir,

I will see this and Pasang Movie Quickly.

Anonymous said...

லக்கியும் ஆகா ஓகோவென்று புகழ்ந்து இருக்கிறார். இப்போது நீங்களும். ரெண்டு பேரும் சேர்ந்து பேசிக்கிட்டு எழுதறீங்களா?

butterfly Surya said...

நேற்றுதான் கேட்டேன் .. பார்க்கவில்லையான்னு..??

அட.. வழக்கம் போல் நச் விமர்சனம்...

பல திறமையான தொழில் முறை நடிகர்கள் இருக்கும் போது எஸ்.ஜே ஏன் தேர்ந்தெடுக்கிறார்கள்..??

ரேட் கம்மியாலா சங்கர்..??

ஜியா said...

ரெண்டு மூனு விமர்சனம் நல்லா இருக்குதுன்னு வாசிச்ச உடனே இந்தப் படத்தப் பாக்கனும்னு தோனுது.. ஆனா, இங்க ரிலீஸ் ஆகலையே :((

விமர்சனம் சூப்பர்...

Ashok D said...

என்னது S.J.சூர்யா நடிச்ச படம் நல்லாயிருககா நம்பமுடியில்லையே?
சரி நீங்க சொல்லிரீங்க நம்பாம இருக்கவும் முடில.

UYIRNANBAN.BLOGSPOT.COM said...

இன்னிக்கே படத்த பார்த்துர வேண்டியதுதான் !!!விமர்சன நடை அருமை !

முரளிகண்ணன் said...

பார்த்துடுவோம்

இராகவன் நைஜிரியா said...

மீ த 25வது பின்னூட்டம்.

நல்ல அருமையான விமர்சனம். படத்தை போலவே விமர்சனம் ரொம்ப நல்லா இருக்கு

பிராட்வே பையன் said...

NHM not working..

Anyway I like ur review.
Name of the director is Thai
Muthu selvan not thai tamil selvan.

Hassan Raja.

பிராட்வே பையன் said...

NHM not working..

Anyway I like ur review.
Name of the director is Thai
Muthu selvan not thai tamil selvan.

Hassan Raja.

அக்னி பார்வை said...

திருஷ்ட்டி சார் பசங்க, மூன்றாம் வித்யின்னு தமிழ்ல பார்க்க வேண்டிய லிஸ்ட் ஏறிக்கிட்டே போகுது

Cable சங்கர் said...

//திருஷ்ட்டி சார் பசங்க, மூன்றாம் வித்யின்னு தமிழ்ல பார்க்க வேண்டிய லிஸ்ட் ஏறிக்கிட்டே போகுது

//

ஆமாம் அக்னி..

Cable சங்கர் said...

//NHM not working..

Anyway I like ur review.
Name of the director is Thai
Muthu selvan not thai tamil selvan.

Hassan Raja.//
நன்றி ஹஸன்.. மாற்றிவிட்டேன்..

Cable சங்கர் said...

//மீ த 25வது பின்னூட்டம்.

நல்ல அருமையான விமர்சனம். படத்தை போலவே விமர்சனம் ரொம்ப நல்லா இருக்கு

//

மிக்க நன்றி இராகவன்.. உஙக்ள் வருகைக்கும், கருத்துக்கும், 25வ்துக்கும்

Cable சங்கர் said...

//பார்த்துடுவோம்

//

என்ன முரளி ஊர்லதான் இருக்கீங்களா..?

Cable சங்கர் said...

//இன்னிக்கே படத்த பார்த்துர வேண்டியதுதான் !!!விமர்சன நடை அருமை //

கண்டிப்பாய் பாருங்கள் உயிரன்பன்.. உங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி..

Cable சங்கர் said...

//என்னது S.J.சூர்யா நடிச்ச படம் நல்லாயிருககா நம்பமுடியில்லையே?
சரி நீங்க சொல்லிரீங்க நம்பாம இருக்கவும் முடில//

நிஜமாத்தான் சொல்றேன் அசோக்.. நல்லா இருக்கு படம்..

Cable சங்கர் said...

//ரெண்டு மூனு விமர்சனம் நல்லா இருக்குதுன்னு வாசிச்ச உடனே இந்தப் படத்தப் பாக்கனும்னு தோனுது.. ஆனா, இங்க ரிலீஸ் ஆகலையே :((

விமர்சனம் சூப்பர்//

நன்றி ஜியா.. உங்கள் முதல் வருகைக்க்கும், கருத்துக்கும்...

Cable சங்கர் said...

//நேற்றுதான் கேட்டேன் .. பார்க்கவில்லையான்னு..??

அட.. வழக்கம் போல் நச் விமர்சனம்...

பல திறமையான தொழில் முறை நடிகர்கள் இருக்கும் போது எஸ்.ஜே ஏன் தேர்ந்தெடுக்கிறார்கள்..??

ரேட் கம்மியாலா சங்கர்..??//

ஒரு வேளை அவருக்கு மார்கெட் இருக்கும் போது டேட் வாங்கி வைத்திருப்பார்கள்..

Cable சங்கர் said...

//லக்கியும் ஆகா ஓகோவென்று புகழ்ந்து இருக்கிறார். இப்போது நீங்களும். ரெண்டு பேரும் சேர்ந்து பேசிக்கிட்டு எழுதறீங்களா?

//

இதென்னடா வம்பா போச்சு.. நல்லாருக்குங்கிறதை .. நல்லாருக்குனுதானே சொல்லணும்..?

Cable சங்கர் said...

//Shankar Sir,

I will see this and Pasang Movie Quickly.

//

பாருங்க முத்துபாலகிருஷ்ணன்.

Cable சங்கர் said...

//தல நானும் நேத்து தான் பாத்தேன் தல .நீங்க சொன்ன மாதிரி படம் நல்ல தான் இருக்கு . என்ன அந்த கிளைமாக்ஸ் time change trick எந்த தமிழ்
படத்துல யோ பார்த்த மாதிரி இருக்கு .ஒரு பைட் கூட இல்லாது ரொம்ப ஆறுதல் ..சூர்யா ரொம்ப அடக்கி வாசிச்சு இருக்கார்//

அதுக்கென்ன.. ஒரு சில குறைகள் இருக்கத்தான் செய்கிறது.. ஆனால் மொத்ததில் பார்த்தால் நல்ல படம்.. அதனால் அதையெல்லாம் சொல்லவில்லை..அவ்வளவுதான்

Cable சங்கர் said...

//உண்மைய தான் சொல்ரிங்கள எஸ்.ஜே. சூர்யா படம் தான இது..ஒரே கன்பியூஷன்..//

குழப்பமே வேண்டாம்.. அவரு படமேதான்.. ஆனால் அவரு படமாதிரி இருக்காது..

Prabhu said...

என்னடா இன்னும் நம்ம இயக்குனரோட விமர்சனத்த காணோம்னு நெனச்சேன், வந்திருச்சு.

அத்திரி said...

இந்த படத்தையும் பாத்துர வேண்டியதுதான்

Sanjai Gandhi said...

//பாடல்களில் கவர்ச்சி காட்ட பிரயத்தனபடுகிறார். பாவம் இருந்தால்தானே. //

என்ன தல இப்டி பொசுக்குன்னு சொல்லிட்டிங்க? :(

புருனோ Bruno said...

சமீபத்தில் தான் தலைப்பிற்கும் கதைக்கும் பொருத்தமில்லாத திரைப்படங்கள் வந்து கொண்டிருக்கிறது என்று முரளியின் பதிவின் எழுதியிருந்தேன்

தலைப்பிற்கு மிகவும் பொருத்தமான படம்

கார்த்திகேயன் said...

For every Action there will be a Equal and Same Reaction.(ஏன் என்றால் எனது நண்பர் என்னை அருந்ததி படம் பார்க்க கூடி சென்று பலி எடுத்தார்.அவருக்கு நான் இந்த படத்துக்கு). ''சங்கர் தாதா'' விமர்சனம் செய்த "பசங்க" படம் போலவே சரியாக இருக்குமுன்னு "நம்பி" போய் ஏமர்ந்தோம்.படம் தொடங்கிய 35 நிமிடம் வரை "நியூ" படம் போலவே பிளேடு வசனங்கள். "நியூ" படம் பார்த்தவர்கள் (பார்காதவர்களும்) 35 நிமிடம் வரை பார்க்காமலே இருப்பது மிக்க நன்று.படமே மிகவும் ஆமை வேகம்,பாடல்கள்(!) படத்தின் வேகத்தை நத்தை ஆக்குகின்றது. இயக்குனர் தாய்முத்துசெல்வனின் முயல் வேக திரைகதைதான் படத்திற்கு பலவீனமே. அதை திறம்பட செய்திருக்கிறார். அவருடன் இணைந்து பாடல் இசை முலம் இசைஅமைப்பாளர் நமது காதுகளை பதம் பார்க்கிறார்.ஜேப்பிக்கும், குருவுக்கும் நடக்கும் கேட் அண்ட் மவுஸ் கேம் சொதப்பல் ரகம். இதை வைத்து மிக அருமையாய் திரைக்கதை அமைத்து நம் வாழ்கையில் 2 1/2 மணிநேரம் விளையாடியிருக்கிறார் இயக்குனர் தாய் முத்துசெல்வன்.தன்னை அலைக்ழிப்பவன் யார் என்று தெரியாமல் நொந்து போயிருக்கும் நேரத்தில் தெரிந்தத்வுடன் ஜேப்பி ‘டேய் பர்ஸ்ட் ஆப் உன்னோடதா இருக்கலாம்.. செகண்ட் ஹாப் என்னுது” என்று உறுமும் இடத்தில் இனியாவது படம் வேகம் எடுக்குமா? என என்ன வைக்கிறது திரைக்கதை.என் சொந்த செலவில் எனக்கு மட்டுமல்ல என் உடன் திரைப்படத்தை ''நம்பி'' பார்க்க வந்த நண்பர்கள் இருவருக்கும் சூனியம் வைத்தது போல் இருந்தது.உபரி தகவல் இயக்குனர் விஜய் டிவியில் முதலில் வந்த காத்து கருப்பு சீரியலின் இயக்குனர்.மிக விரைவில் உங்கள் இல்லங்களில் உலக தொலைகாட்சி வரலாற்றில் முதன் முறையாக "சூப்பர் ஹிட் சஸ்பென்ஸ்" திரைப்படமாக வெளிவரும். வரும்.இனிமேலாவது விமர்சனத்தை படித்ததும் படம் பார்க்காமல் பின்னுட்டங்களையும் படித்த பின்பே படம் பார்க்க செல்வது நலம்,இந்த உண்மையை தெரிவதற்கு 150 ரூபாய் இன்று செலவானது.(இந்த நீண்ட பதிவு படம் காசு கொடுத்து மூட்டைபூச்சி கடியுடன் பார்த்ததன் விளைவு).

நீயூட்டனின் 3ஆம் (நம் தலை)விதி - முயல் வேக திரைக்கதைக்காக...

sanker said...

வணக்கம் சங்கர் ஜி ,
உங்களது பதிவுகள் ஓவன்ரும் அருமை.நான் உங்களது விசிறி.உங்களது திரை விமர்சனம் நீயூட்டனின் 3ஆம் விதி மிக அருமை. இப்பவே படம் பார்க்கணும் போல இருக்கு
.நான் இன்று சென்று படம் பார்த்து நாளை எனது அனுபவங்களை பகரிந்து கொள்கிறான்.
நன்றி

sanker said...

வணக்கம் சங்கர் ஜி ,
உங்களது பதிவுகள் ஓவன்ரும் அருமை.நான் உங்களது விசிறி.உங்களது பசங்க திரை விமர்சனம் படித்தவுடன் படம் பாத்தேன்.மிக அருமை.நன்றி

உங்களது திரை விமர்சனம் நீயூட்டனின் 3ஆம் விதி மிக அருமை. இப்பவே படம் பார்க்கணும் போல இருக்கு
.நான் இன்று சென்று படம் பார்த்து நாளை எனது அனுபவங்களை பகரிந்து கொள்கிறான்.
நன்றி
சங்க்

sanker said...

வணக்கம் சங்கர் ஜி,

உங்க விமர்சனமே படம் பார்த்த திருப்தியா தந்து விட்டது (உங்களுக்கும் நல்ல மனசு சார்).

விமர்சனத்தை படிச்சு பெருமூச்சுவிட்டுக்க வேண்டியதுதான்..

நீயூட்டனின் 3ஆம் விதி படம் பாத்தேன்.உஷ் .முடுயல !
சரி மொக்கை . அதுவும் படத்துல இருக்குற ரோமன்சே சான்ஸ்'ei illai..


இரண்டே மணி நேரத்தில் எதிரியின் இமேஜை காலி செய்து அவனையும் காலி செய்வதுதான் படத்தின் பலம் ஆனால் லாஜிக் உதைப்பதும் இந்த ஏரியாவில்தான்.
இரண்டு மணி நேரத்தில் சூர்யா செய்யும் வேலைகளை இருபது நாட்களில் முடிப்பதுகூட கடினம்.

வில்லன் யார், ஹீரோ யார், பழி வாங்குவதற்கான காரணம் என்ன என்பது தெரிந்த பிறகும் சட்டென்று சபதத்தை முடிக்காமல் சவ்வாக இழுப்பது மைனஸ். என்ன கொடுமை சார் ?

ராஜீவ் கிருஷ்ணா தனது சேனலில் காம்பியரிங் செய்யும் பெண்களை கட்டாயப்படுத்தி அனுபவிக்கும் சென்ஸ் மேனியாக். அதற்காக ஷாயாலியை அடைய துப்பாக்கி, ஒரு டஜன் அடியாள்கள், போலீஸ் பட்டாளம், போன் டார்ச்சர் என அவர் கொடுக்கும் டார்ச்சர், ஓவ‌ர் டோஸ். கொசு அடிக்க கொத்து குண்டா?

பாடல்கள் மகா குப்பையாக இருக்கிறது.
முதல பாடல - பனியன் விளம்பரத்துக்காக !
கடைசி பாடல - பைக் விளம்பரத்துக்காக !
மற்ற பாடல - இருக்கு ஆனா இல்லை?

தமிழ்சினிமாவில் இருந்து விலகி பல நூறு ஆங்கிலப்படங்களின் தாக்கத்தோடு ஒரு தமிழ்சினிமா முயற்சி எனக்கொள்ளலாம்.அனால் பாவம்?

இதில் என்ன புதுமை என்றால் திட்டமிடலும் காதலும் படமல்ல.. பழிவாங்க அவன் எடுத்துக்கொள்ளும் இரண்டு மணிநேரம்.எங்கேயோ கேட்ட கதை போல் இருக்கிறதா கைதியின் டைரி? இருபத்திநாலு மணிநேரம்? நிறைய விடைகள் இருக்கிறது.

நியூட்டனின் மூன்றாவது விதிப்படி சொல்லணும்னா...
எல்லாம் தலைவிதி தான். 'இன்னும் எத்தனை பேர் படம் பார்த்து சாக வைப்பாய் என் மக்க' .
மொக்கையான S.J. சூர்யா படமல்ல என்ற திருப்தி மட்டும் தான்.