சேது வந்து ஹிட்டான காலத்தில் பல உதவி இயக்குனர்கள் அதே போன்ற கதைகளை வைத்துக் கொண்டு, சேது மாதிரி ஒரு சப்ஜெக்ட் சார் என்று சொல்லி அலைவது ஒரு காலமாய் இருந்த்து.
அதற்கு அப்புறம் காதல் வந்தது. அதற்கு அப்புறம் யாரை பார்த்தாலும் லைவாய் ஒரு ஸ்கிரிப்ட் காதல் மாதிரின்னு சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க. அவங்களை சொல்லி தப்பில்லை.. அதுக்கு அப்புறம் வந்த பருத்தி வீரன், சுப்ரமணியபுரம், வெண்ணிலா கபடிகுழு போன்ற படஙகள் ஹிட் ஆக, தமிழ் சினிமாவே லைவ் கதைக்காகவே படைச்சா மாதிரி ஆயிருச்சு.
இப்போதைய தமிழ் சினிமா உலகமே ஒண்ணு பெரிய ஆர்டிஸ்டுகளை வைத்து தெலுங்கு பட உலகமே மறந்து போன கதைகளை பண்ணிட்டுருக்க, இன்னொரு பக்கம் ஷூ ஸ்டிரிங் பட்ஜெட்லனு சொல்லி ஹவாய் செப்பல் பட்ஜெட்ல படம் பண்ணிரலாம்னு சுத்திட்டிருக்கு. அதனால லைவ் படம் பண்ணுவதற்கான வழிமுறைகளை பற்றி ஏதோ என்னாலான ஒரு யோசனை.
கண்டிப்பா உங்க படத்தோட கதை மதுரை பக்கத்தில ஏதாச்சும் ஒரு கிராமத்துல நடக்கிறதா இருந்தாகணும். அடுத்து படத்து ஹீரோ கேரக்டர் பழைய வடிவேலு ரேஞ்சுக்கு அறுவது நாள் தாடி மீசையோட பார்த்தா வாந்தி வர லெவல்ல இருக்கணும். ஹீரோயின் மட்டும் கொஞ்சம் அழகா, லைட்டா மேக்கப் போட்டு விட்டுரணும். படம் பூராவும் வட்டார மொழியை ‘அங்கிட்டும்.. இங்கிட்டுமில்லாம படம் பூராவும் பேசவுடணும். கண்டிப்பா, மசுரு, குண்டி, போன்ற வார்த்தைகளை ஆங்காங்கே படத்துல வர ஹீரோ, சைடு கேரக்டர்களை பேச வைக்கணும். எக்காரணத்தை கொண்டும் ஹீரோயின் இம்மாதிரி வசனம் பேசக் கூடாது. அப்பத்தா, மதனி, மாப்ள, என்பது போன்ற உறவுகளை சொல்லி பேசும் டயலாக்குகள் கண்டிப்பாய் தேவை.
ஹீரோ ஒரு வேலைக்கும் போகாம தண்ணிய போட்டுட்டு, கூட பெரிசுமில்லாம, சிறுசுமில்லா ஒரு ஆளை வச்சிட்டு அலம்பல் செய்யணும். ரவுடித்தனம் செஞ்சிட்டு திரிஞ்சாலும் அவனை ஒரு வீரன் ரேஞ்சுக்கு பேசணும். கண்டிப்பா கேமரா ஒரே இடத்துல வச்சு எடுக்க கூடாது, ஊருக்கு ஊடாலே சும்மா அலையிற நாய் கணக்கா ஒரு இடத்திலயும் நிக்காம அலைஞ்சிகிட்டே இருக்கணும். அவைலபிள் லைட்டுல படமெடுக்கணும். பட்ஜெட் படம் பாருங்க. உத்து பார்த்தாதேன் யார் எவருனு தெரியணும்
கண்டிப்பா ஒரு அஞ்சாறு என்பது வயது கிழவன் கிழவி்ங்களை வச்சு ஒரு பத்து இடத்தில நடக்க விடணும். முடிஞ்சா அப்பத்தா கேரக்டர் ஒண்ணை எங்கிட்டாவது சொருவிவிட்டு, பேசிட்டே இருக்குறாப்புல சீன் வச்சிரணும். அப்பத்தான் நேட்டிவிட்டு பிச்சி எகிறும். ஸ்டில் செசன்ல நல்ல தந்தட்டி மாட்டின கிழவி, சுருட்டு பிடிக்கிறாப்புல இருக்கிற கிழவன்களை நல்ல க்ளோசப்புல எடுத்து வச்சிகிட்டா ரொம்ப நல்லது. உலக தரத்துல ஒரு லைவ்படத்துக்கான பில்டப் ரெடி. எப்ப எங்க பார்த்தாலும் அட்மாஸ்பியர்ல ஒரு நாலு கேரக்டர் பேசிட்டே இருக்கணும். அதை தவிர ஏதாவது ஜாதியை உசத்தி வச்சு ”நாங்கெள்லாம் வீரய்ங்க தெரியுமா” என்பது போன்ற் டயலாக் வச்சாகணும்.
படத்துல அரிவாளை தூக்கிட்டு ஹீரோவோ யாரோ ஒருத்தர் ஒரு சீன்லயாவது ஓடணும் ஒரு கட்டத்துக்கு அப்புறம் பாதி படத்துல காதல் வந்து எல்லா கிரகத்தையும் வுட்டுபுட்டு லவ் பண்ண ஆரம்பிக்கணும். கண்டிப்பா ஹீரோ திரும்பவும் தண்ணியடிச்சுபுட்டு தன் காதலியை பத்தி மாத்தி, மாத்தி புலம்புறா மாதிரி சீன் இருக்கணும். திருவிழா சீன் இல்லாம நீங்க கதை ரெடி பண்ணவே கூடாது. ஏன்னா அப்பத்தான் நீங்க லைவ் படம் பண்ணுறீங்கனு சொல்லிக்க முடியும்.
கண்டிப்பா படத்து பாட்டுல ஒரு திருவிழா பாட்டு இருந்தே ஆகணும். சின்னப் பொண்ணு, கொல்லங்குடி கருப்பாயி மாதிரி ஆட்களை விட்டு ஒரு பாட்டு பாடியே ஆகணும், அட்லீஸ்ட் பேக்ரவுண்டுலயாவது அந்த பாட்டு வந்தாகணும். ரீரிக்கார்டிங்க்ல கண்டிப்பா ஒரு உறுமி மேளமோ, ஒரு ஒப்பாரியோ ஓடிட்டேயிருக்கணும். இன்னொரு விஷயம் அருமையான மெலடியான ஒரு பாட்டை போட்டு ஊருக்குள்ள இருக்கிற ஒரு சந்தில்லாம, வெள்ளையடிச்சி, ஹீரோவையும், ஹீரோயினையும் ஓட விடணும். இது நெம்ப முக்கியம்.
க்ளைமாக்ஸுல ரெண்டு பேரும் சாவுற மாதிரியோ. இல்ல ரெண்டு பேர்ல யாரோ ஒருத்தர் சாவற மாதிரி இருக்கணும் அந்த சாவுக்கு காரணமா இவங்க ரெண்டு பேர்ல ஒருத்தரா இருந்தா படம் ஹிட்டுக்கு ஒரு கேரண்டி நிச்சயம். எப்பாடு பட்டாவது விகடன் போன்ற பத்திரிக்கைகளில், நல்ல கலர் போட்டோ கவரேஜோட, கரிசல் மண்ணின் வாசம், அவர்களோட வாழ்கை, திடீர்னு மன்சுக்குள்ள மொட்டு வெடிச்சா மாதிரியான நேட்டிவிட்டியோடு பேட்டி கொடுக்கணும்.
இதையெல்லாம் படிச்சிட்டு உங்கள்ல யாருக்காச்சும் லைவ் படம் பண்ணனுமின்னா என் கிட்ட கூட காதல், பருத்திவீரன், சுப்ரமணியபுரம் மாதிரி லைவா ஒரு சப்ஜெக்ட் இருக்கு சார். ரொம்ப சின்ன பட்ஜெட்டுதான் ஒருவாகுள்ள முடிஞ்சுரும். ரெட் ஒன்ல பண்ணிறலாம். கேட்குறீங்களா..?
உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Post a Comment
39 comments:
I am the first?? :-)
அருமையான பதிவு !!
மேலோட்டமாக பருத்தி வீரன் படத்தைப் பற்றி அதிக reference இருந்தாலும்..அனைத்து லைவ் சுப்ஜெக்ட் படங்களும் இப்படித் தான் உள்ளன..
// ரொம்ப சின்ன பட்ஜெட்டுதான் ஒருவாகுள்ள முடிஞ்சுரும்.
இந்த ஒருவாங்கறது.. ஒரு "C"-ங்கள?? :-)
கார்க்கி தான் ஹீரோவா??
//இந்த ஒருவாங்கறது.. ஒரு "C"-ங்கள?? :-)//
ஆமாங்க.. ஹய்யா.. எனக்கு புரொடியூசர் கிடைச்சிட்டாரு..?
How Did u Say like this?
Chennai-28 is also hit..!
//கார்க்கி தான் ஹீரோவா??//
போட்டுட்டா போச்சு.. வித்யா
படத்து ஹீரோ கேரக்டர் பழைய வடிவேலு ரேஞ்சுக்கு அறுவது நாள் தாடி மீசையோட பார்த்தா வாந்தி வர லெவல்ல இருக்கணும்.
கார்க்கி உங்களுக்கும் வித்யாவுக்கும் எதுனாச்சும் பிரச்சனையா..?:)
//How Did u Say like this?
Chennai-28 is also hit..!//
அதுமாதிரியும் ஒரு கதை நம்மகிட்ட இருக்கு டக்ள்ஸு.. ஒரு ஒன்சி யிருந்தா போதும் ஆளிருக்கா..?:)
அதுமாதிரி இதுமாதிரி இல்லாம,ஏதாவது புதுமாதிரியா இருந்தாக்கா நான் ரெடி அண்ணே..!
//வித்யா said...
கார்க்கி தான் ஹீரோவா??
//
வித்யா உன் காமெடி சென்ஸ்சுக்கு அளவேயில்லை. கார்க்கியும் நீயும் ஈகோயின்றி இயல்பாக ஒருவரை ஒருவர் வாரிக்கொள்வது....அழகு :)
தொடரட்டும் உங்கள் இருவர் சேவை :))
யதார்த்தம் கேபிள் அண்ணா.
\\வித்யா உன் காமெடி சென்ஸ்சுக்கு அளவேயில்லை. கார்க்கியும் நீயும் ஈகோயின்றி இயல்பாக ஒருவரை ஒருவர் வாரிக்கொள்வது....அழகு :)
தொடரட்டும் உங்கள் இருவர் சேவை :))\\
யாருங்க அது, எறியிர தீயில எண்ணெய ஊத்துறது..?
// Cable Sankar said...
//இந்த ஒருவாங்கறது.. ஒரு "C"-ங்கள?? :-)//
ஆமாங்க.. ஹய்யா.. எனக்கு புரொடியூசர் கிடைச்சிட்டாரு..? //
என்கிட்டே ஒரு "C" இருந்தா நீங்க தான் டைரக்டர் and கார்க்கி தான் ஹீரோ ;-)
நீங்க வேற மாச கடைசில உண்மையான ஒரு ரூபாயிக்கே வழிய காணும் :-(
// //How Did u Say like this?
Chennai-28 is also hit..!//
அதுமாதிரியும் ஒரு கதை நம்மகிட்ட இருக்கு டக்ள்ஸு.. ஒரு ஒன்சி யிருந்தா போதும் ஆளிருக்கா..?:) //
ஒரு முடிவோட தான் இருக்கீங்க போல, எந்த மாதிரி கதை வேணும்னாலும் ரெடி..ஒருவாதான் உங்க requirement போலிருக்கு :-)
நெத்தியடியான கருத்துகள். ஒரு காலத்துல ரவுடி படமா வந்துச்சு.. இப்போ காதல் படமா வருது... எல்லாம் கொஞ்சம் ஆடுகள் கூட்டம் மாதிரி தான் இருக்கோம்.. என்ன செய்ய? நீங்க ஒரு படம் எடுத்தா தான் உண்டு...
என்ன கொடுமை கேபிள்?
இது என்ன நமக்கு நாமே திட்டமா?
இது நாங்க போடுகிற பதிவு?
இந்த எலிக்சன் நேரத்திலே உளவுப்படையை வச்சி எங்க ஐடியா மற்றும் யோசனைகளை கேட்டுட்டு இப்படி ஒரு பதிவா?
/ வித்யா said...
கார்க்கி தான் ஹீரோவா?//
ஆவ்.. பதிவ முழுசா படிங்க கொ.ப.செ. அவரு என்ன சச்சின் மாதிரி படமா எடுக்க போறாரு?
சங்கர்ஜி, அந்த தந்தட்டி பாட்டி கேரக்டருக்கு.. பேசி முடிச்சிடலாமா? என்ன ச்ஷூட்டிங் நடுவுல பக்கத்துல இருக்கிற ஹோட்டலுக்கு போய் அப்பப்ப சாப்பிடனும்னு சொல்லுவனக்க.. அவ்ளோதான்.. ஆனா அதுக்கே 1 சி ஆகுமே
கலக்கல் :-)
//@கார்க்கி said...
/ வித்யா said...
கார்க்கி தான் ஹீரோவா?//
ஆவ்.. பதிவ முழுசா படிங்க கொ.ப.செ. அவரு என்ன சச்சின் மாதிரி படமா எடுக்க போறாரு?//
கார்க்கி, இருந்தாலும் இத்தனை சுய விளம்பரம் ஆகாது.
அண்ணே,
இதே மாதிரி நம்மளோட ஒரு பதிவு
http://tharaasu.blogspot.com/2009/04/blog-post_16.html
அப்புறம் லைவ் என்பது 70களில் நடக்கும் கதையாக இருக்கணும்.
அண்ணே.. பருத்தி வீரன், குங்கமப்பூவும்..ரெண்டும் பார்த்த எபக்ட்..
அண்ணே அப்டியே... அந்த ஹீரோயின பொண்ணு பாக்க ஒரு அமெரிக்க மாபிள்ள வர்ற மாதிரி ஒரு சீனு வச்சிடுங்க.....அதுக்கு நம்மள பரிசீலனை பண்ணுங்கண்ணே.... படம் பக்கா ஹிட் ஆயிரும்....
அசத்தல் கேபிளாரே.
புது பரிமாணத்தில் இருக்கிறது பதிவு
ஒரு trend setting படத்தை தொடர்ந்து அதே மாதிரி குப்பைகள் வருவது தான் பிரச்ச்னை..துள்ளுவதோ இளமை தொடர்ந்து, ஸ்கூல் பசங்கள பத்தி படமெடுக்கிறோம்ன்னு வந்த குப்பைகளுக்கு அளவேயில்லை...அந்த் பிரச்ச்னை இப்பொழுது தொடர்கிறது...
பரத்,கார்த்தி,ஜெய் நிஜ வாழ்க்கயில் நகரத்தை ர்ந்த்வர்கள்,சிவப்பானவர்கள் என்பது குறிப்பிடதக்கது..
என் மனதில் நீண்ட நாட்களாக இருந்த விஷ்யங்களை அப்ப்டியே பதிவாக போட்டிருக்கீறீர்கள்..
இருப்பினும் இவை தரமான படங்கள் தானே? சித்தரிப்பு கொஞ்சம் திரைக்காக மாற்றலாயிருந்தாலும் வணிகக் குப்பைகளுக்கு இவை பரவாயில்லை என்பதனால் மன்னித்தருளலாமே?
தல
கொன்னுப்புட்டிங்க...ஆனா கடைசியில சொன்னாதை படிச்சதும் பக்குன்னு ஆகிடுச்சி ;)
//அதுமாதிரி இதுமாதிரி இல்லாம,ஏதாவது புதுமாதிரியா இருந்தாக்கா நான் ரெடி அண்ணே..//
நானும் ரெடி டக்ளஸூ..
/யதார்த்தம் கேபிள் அண்ணா.//
நன்றி அப்துல்லாண்ணே.. சும்மா ஒரு நகைச்சுவைக்காக..
//நெத்தியடியான கருத்துகள். ஒரு காலத்துல ரவுடி படமா வந்துச்சு.. இப்போ காதல் படமா வருது... எல்லாம் கொஞ்சம் ஆடுகள் கூட்டம் மாதிரி தான் இருக்கோம்.. என்ன செய்ய? நீங்க ஒரு படம் எடுத்தா தான் உண்டு...//
முயற்சி செஞ்சிட்டுதானிருக்கேன். எடுத்துருவோமில்ல..
//என்ன கொடுமை கேபிள்?
இது என்ன நமக்கு நாமே திட்டமா?
இது நாங்க போடுகிற பதிவு?
இந்த எலிக்சன் நேரத்திலே உளவுப்படையை வச்சி எங்க ஐடியா மற்றும் யோசனைகளை கேட்டுட்டு இப்படி ஒரு பதிவா?//
ஏன் நீங்க மட்டும்தான் கிண்டலடிப்பீங்களா..?
யோவ் கேபிள்.. ஏதோ இப்பதான் கொஞ்சம் லைவ்வா படங்கள் வர ஆரம்பிச்சிருக்குது. அது பொறுக்கலையா ஒமக்கு..
// ஆதிமூலகிருஷ்ணன் said...
யோவ் கேபிள்.. ஏதோ இப்பதான் கொஞ்சம் லைவ்வா படங்கள் வர ஆரம்பிச்சிருக்குது. அது பொறுக்கலையா ஒமக்கு..//
ஒரு பெரிய ரிப்பீட்டு..............
ஏன் ஏம்ணே இந்த கொலைவெறி???
அண்ணா, ரொம்ப ரொம்ப ரைட் ணா... அதோட ஈரோயினி கூட நாலஞ்சு பொடி பசங்க சுத்தணும், ஈரோயினி குச்சி ஐஸ் சாப்புடற சீன் இருக்கணும்.
கெட்டவனா இருந்தா பெருசா மீச வச்சிருக்கணும். சின்ன மீச வச்சவன் கெட்டவன் இல்ல..
படம் புல்லா புழுதி பறந்தே ஆகணும். பன மரம் பேக்ரவுண்டுல இருக்கணும்.
இன்னும் எதாச்சும் இருக்கா னு யோசிச்சு சொல்றேன்.
ரொம்ப நாளா மனசுல இருந்துட்டு இருந்த கேள்வி இது...
இப்போ பசங்க படத்துல அந்த மாண்டேஜ் டூயட் எனக்கு தமிழ் சினிமா வித்தியசம்ன்ற பேர்ல ஒரே மாதிரி போற மாதிரி ஒரு ஃபீலிங்...
நீங்க சொல்லிட்டீங்க.. நல்லாவும் இருக்கு.. நம்ம கடக்கி வந்து மொய் வெச்சுடுங்க!!!
//இந்த ஒருவாங்கறது.. ஒரு "C"-ங்கள?? :-)//
ஆமாங்க.. ஹய்யா.. எனக்கு புரொடியூசர் கிடைச்சிட்டாரு..?////
இப்படியாவது உன் உங்களுக்கு ஒரு இளிச்சவாயன் கெடைப்பான்னு பாக்குறீங்க! ஆஆஆஅஆங்..........சிக்குவமா?
உங்க படத்துல ஹீரோ ரோல் வேணுமினா வர்றேன். ஆனா, நான் ஹேண்ட்சம்மால இருப்பேன்? இப்பிடி வாந்தி மாதிரில்லாம் இருக்கமாட்டேனே!
:-):-):-):-):-)!!!
சினிமாவுலையும் பின் நவீனத் துவமாஆஆஆஆஆஆஆஆ? :((
சினிமாவுலையும் பின் நவீனத் துவமாஆஆஆஆஆஆஆஆ? :((
Post a Comment